இக்காலத்தில் வாழ்கிற நாம் எப்படி தப்பிக்கப் போகிறோம்?
Sat Feb 21, 2015 9:32 pm
நோவா பேழைக்குள் பிரவேசித்த அந்த நாளில் பெருமழை பெருவெள்ளம் வந்து உலகமுழுவதையும் முழுகி அழிந்துவிட்டது!
லோத் சம பூமியை கடந்து, மலையை நோக்கி சென்றதும் வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வந்து அந்த பட்டனத்தை அழித்துப்போட்டது!
அதேபோல மனுஷகுமாரன் வரும் நாளிலே அப்படியே நடக்கும் என்று சொன்னார்! நாம் வழும் இக்காலத்தில், நீதிமன்களை அக்கிரமக்காரர் நடுவிலிருந்து பிரித்த பிறகு, பதர்களாகிய பாவிகளை சுட்டெரிப்பார்!
நீதிமான்கள் எப்போது பிரிக்கப் படுவார்கள்?
நீதிமான்களின் பிரித்தெடுப்பை கர்த்தர் கூறுகையில் சீஷர்கள் எங்கே ஆண்டவரே என்று கேட்டார்கள்.
அந்த நாளைக் கர்த்தர் மறைமுகமாக"பிணம் எங்கேயோ கழுகுகள்
வந்து கூடும்" என்று குறிப்பிடுகிறார்.
கழுகுகள் கூடுவதற்கு பிணம் எப்போது விழும்?
இதனை வெளி. 19:17,18 சொல்கிறது " பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்க கண்டேன். அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும் சேனத்தலைவர்களின் மாம்சத்தையும் பலவான்களின் மாம்சத்தையும் குதிரைகளின் மாம்சத்தையும் அவைகளின் மேல் ஏறி இருக்கிறவர்களின் மாம்சத்தையும் சுயாதீனர் அடிமைகள் சிறியோர் பெரியோர் இவர்கள் எல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்கு கூடி வாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்!
இந்த யுத்த களத்தின் பெயர் அர்மெகதோன் என்று பெயர் (வெளி 16:16) இதனை எசேக்கியேல் புத்தகத்திலும் 39 ஆம் அதிகாரத்தில் விரிவாக எடுத்து காட்டப் படுகிறது. துன்மார்க்கரோடே நீதிமான்களை அழிப்பாரோ? இல்லை . இல்லவே இல்லை!!
இந்த யுத்ததிற்கு முன்பு தேவன் தமது மக்களை பிரித்தெடுப்பார்!
யார்யாரெல்லாம் யாரால் பிரித்தெடுக்கப்படுவார்கள்?
அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று திட்டமாய் சொல்கிறது. அழைக்கப்பட்டவர்கள் அல்ல!!
இவர்களைப் பிரித்தெடுக்கப் போகிறவர்கள் தேவதூதர்கள். லோத்தின் குடும்பத்தை தேவதூதர்கள் கொண்டுபோய் வெளியே விட்டனர்!! அதுபோல இந்த கடைசி நாளிலும் அப்படியேநடக்கும்!
இதனை உறுதி செய்யும் வசனம் ,
ஒவ்வொரு நீதிமானுக்கும் உரிய தேவதூதர்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள்! (மத்18:10)
இந்த தேவதூதர்கள் முன்பு அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் பெயர்களை அறிக்கையிடுவார். (லூக் 12:8, மத் 10:32)அவர்கள் இவர்களைப் பிரித்தெடுக்க வருவார்கள்!!
நீதிமான் கள் எப்படி பிரித்தெடுக்கப் படுவார்கள்?
மத்24:31 ன்படி " வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை கொண்டு மறுமுனை மட்டும் நாலுதிடைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்!" என்று சொல்கிறது.
மத் 13;49,50ன் படி, " இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தெவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்கள் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்!! என்றும் சொல்கிறது.
இப்படி பிரித்தெடுக்கப் பட்டோரை எங்கே சென்று சேர்ப்பார்கள்?
இந்த கேள்விக்கு பதில் வெளி. 12:9,14
வனாந்திரத்தில் சேர்க்கப்படுவார்கள். அங்கே இவர்கள் 1260 நாள்கள் பராமரிக்கப்படுவார்கள்! இதனை மூன்றரை வருடம் என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மிருகத்தின் முத்திரை வரும். மிகுந்த உபத்திரவம் உண்டாயிருக்கும்!! பின்பறிப்புக்காக உள்ள நீதிமான்கள் இக்காலகட்டத்தில் இருப்பார்கள்! அழைக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் விசுவாச துரோகம் செய்து மிருகத்தின் முத்திரயைப் பெறுவார்கள். அந்த மூன்றரை வருட இறுதியில் இந்த உலகம் (துன்மார்க்கரும் அவர்களது கிரியைகளும்)முற்றிலும் அழிக்கப்படும்!அந்த நாள் தன் கிறிஸ்துவின் நாள்!! அர்மகெதோன் யுத்தம்!!
நன்றி: ரூபன்சாம் - முகநூல்
- ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உறவாக்குவது ( Barcode Scanner ) !!!!
- இழந்து போன தேவ சாயலை நாம் எப்படி பெற்றுக்கொள்வது?
- இரகசிய குறியீடு ( Bar codes) நாம் எப்படி உருவாக்குவது?
- உண்மையான டிஎம்டி கம்பிகளை நாம் எப்படி அறிய முடியும்?
- விமர்சனங்களை நாம் சந்திக்கும்போது நமது பிரதி செயல் எப்படி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum