வருகிறது டிஜிட்டல் இருண்ட காலம்!
Tue Feb 17, 2015 8:24 am
உங்களுக்கு முக்கியமான புகைப்படம் என்றால் தயவுசெய்து அதை அச்சிட்டு வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் வின்சென்ட் செர்ப். அவர் சொல்லும் இந்த ஆலோசனை மிகவும் முக்கியமானது. இது ஏதோ தனிப்பட்ட நலனுக்காக சொல்லப்பட்டது அல்ல. ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்கால நலனுக்காக அவர் இப்படி சொல்லியிருக்கிறார்.
வின்சென்ட் செர்ப் ஒன்றும் சாதாரண மனிதர் அல்ல. இணைய தந்தை என்று பாராட்டப்படும் முன்னோடி அவர். இணையத்தில் தகவல்கள், டேட்டா பாக்கெட்களாக பரிமாறிக்கொள்ளப்படும் முறைக்கு பின்னே உள்ள தொழில்நுட்பம் அவரது பங்களிப்பில் உருவானது. இணையத்துக்கான கட்டுமானத்தை உருவாக்கியதில் அவருக்கு மனித குலம் என்றென்றுக்கும் கடன் பட்டிருக்கிறது.
வின்சென்ட் செர்ப் இப்போது, தேடியந்திர நிறுவனமான கூகுளில் துணைத்தலைவராக இருக்கிறார். டிஜிட்டல் தூதராக செயல்பட்டு வரும் அவர், சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் பேசும்போது நம் காலத்து டிஜிட்டல் போக்கு குறித்து கவலை தெரிவித்து எதிர்கால ஆபத்து குறித்து எச்சரித்தார்.
வரலாற்றின் இருண்ட காலம் என்று சொல்லப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா, எதிர்காலத்தில் இத்தகையை டிஜிட்டல் இருண்ட காலத்தில் மனித குலம் சிக்கிக் கொள்ளலாம் என்கிறார் செர்ப். அதாவது 200 , 300 ஆண்டுகளுக்கு பிறகு நாம் வசிக்கும் இந்த காலத்தை திரும்பி பார்த்து ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர், தரவுகளும் தகவல்களும் இல்லாத டிஜிட்டல் பாலைவனத்தை அவர்கள் எதிர்கொள்ள நேரிடலாம் என்று அவர் எச்சரிக்கிறார்.
டிஜிட்டல் பாலைவனம், டிஜிட்டல் இருண்ட காலம் என்று அவர் குறிப்பிடுவது வெறும் உருவகமோ , வர்னணையோ அல்ல; நம் காலத்து ஆபத்தான நிதர்சனம்!
"நாம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நம்முடைய எல்லா தரவுகளையும், அதை அறியாமலேயே தூக்கி வீசிக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் .
செர்ப் குறிப்பிட்டு சொல்வது என்ன என்றால், டிஜிட்டல் யுகத்தின் சாதகமே எதிர்காலத்தில் நமக்கு பாதகமாக இருக்கலாம் என்பதுதான். அதாவது நாம் புகைப்படங்களை எடுக்கிறோம். டிஜிட்டல் வடிவில் இருக்கும் அவற்றை டிஜிட்டல் வெளியில்தான் சேமித்து வைக்கிறோம். அதே போல இமெயில், மெசேஜிங் என எல்லா பரிமாற்றங்களிலும் டிஜிட்டல் வெளியில் போட்டு விடுகிறோம். எதையும் பெளதீக வடிவில் சேமித்து வைப்பதில்லை. எல்லாவற்றுக்கு பெரும்பாலும் கிளவுட் சேவையதான் நாடுகிறோம்.
அதனால் என்ன என்று கேட்கலாம்? இப்போது எந்த சிக்கலும் இல்லை. ஆனால் இன்னும் பல ஆண்டுகள் கழித்து இந்த தரவுகளை எல்லாம் மீட்டெடுப்பதில் பிரச்னை வரலாம். ஏனெனில் தொழில்நுப்டம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில் இப்போதைய புதிய தொழில்நுட்பம் வேகமான அவுட்டேட்டாகி பழையதாகி வழக்கொழிந்து போய்விடுகிறது.
இந்த நிலையில்தான் ”நாம் எதிர்காலத்தில் 1000,3000 ஆண்டுகள் கழித்து யோசித்தோம் என்றால் , நாம் உருவாக்கும் டிஜிட்டல் பொருட்களை சரியாக புரிந்து கொள்ளும் வகையில் எப்படி டிஜிட்டல் பிட்களை பாதுக்காக்கப்போகிறோம் “ என யோசிக்க வேண்டும் என்கிறார் செர்ப்.
” 22 ம் நூற்றாண்டு மற்றும் எதிர்கால நூற்றாண்டுகளில் நம்மை நினைத்து பெருமிதம் கொள்வார்கள், ஆனால் நம்மைப்பற்றி புரிந்து கொள்ள திணறுவார்கள், ஏனெனில் நாம் விட்டுச்செல்லும் தகவல்கள் அவர்களால் விளங்கி கொள்ள முடியாத வடிவில் இருக்கும் “ என்றும் செர்ப் சொல்கிறார்.
வேறு என்ன செய்வது பழைய செல்போன்களை வெகு வேகமாக மற்ந்துவிட்டோம். இப்போதைய ஸ்மார்ட்போனை கூட ஆறு மாத்திற்கு ஒரு முறை அசால்ட்டாக மாற்றுகிறோம். பிளாப்பி டிஸ்க் எல்லாம் கற்கால சங்கதியாகி ,இப்போது பென் டிரைவை கழுத்து சங்கிலியில் மாற்றிக்கொண்டு சுற்றுகிறோம்.
அடுத்த தொழில்நுட்பம் வந்தால் பென் டிரைவையும் தூக்கி வீசி விட்டு இன்னும் கூலாக வேறு தொழில் நுட்பத்திற்கு மாறிவிடுவோம். ஆனால் நாம் டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்கும் தகவல்கள் எல்லாம் எந்த அளவுக்கு வருங்காலத்திலும் மீட்டெடுக்க கூடியதாக இருக்கும், யோசித்துப்பாருங்கள்?
இது வரலாற்று நோக்கில் மிகப்பெரிய சிக்கலாக முடியும் என்பது வின்செட் செர்ப்பின் அச்சம். இதற்கு ஒரு அழகான உதாரணம் சொல்கிறார். புலிட்சர் விருது வென்ற அமெரிக்க வரலாற்றாசிரியரான டோரிஸ் கியர்ன்ஸ் குட்வின், அமெரிக்காவின் முன்னோடிகளில் ஒருவரான ஆப்ரகாம் லிங்கன் பற்றி Team Of Rivals: The Political Genius Of Abraham Lincoln எனும் அருமையான புத்தகத்தை எழுதினார்.
இது போன்ற புத்தகம் எதிர்காலத்தில் எழுதப்படும் வாய்ப்பு குறைவு என்கிறார் செர்ர்ப். குட்வின், நூலகங்களில் ஆய்வு செய்து, லிங்கன் பயன்படுத்திய குறிப்புகள், கடிதங்கள் ஆகியவற்றை தரவுகளாக கொண்டு ஆய்வு செய்து இந்த புத்தகத்தை எழுதினார்.
இதை சுட்டிக்காட்டிவிட்டு, 22 ம் நூற்றாண்டில் குட்வின் யாராவது 21 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் பற்றி எழுத விரும்பி நம் காலத்து உரையாடல்களை அணுக விரும்பினால், அவர் முன் எந்த டிஜிட்டல் தகவல்களும் இல்லாமல் போகலாம். காரணம் ஒன்று பலரும் அதை சேமித்திருக்க மாட்டார்கள்:. அல்லது அவை 100 ஆண்டு பழைய சாப்ட்வேரால் உருவாக்கப்பட்டவை என்பதால அவற்றை படிக்க முடியாமல் போகலாம்” என்று விளக்குகிறார் செர்ப்.
தகவல்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து நாம் அதிகம் யோசிக்க வேண்டும் என்கிறார் அவர்.
தொழில்நுட்ப வல்லுனர்களும், சாப்ட்வேர் கில்லாடிகளும் இதை மனதில் கொண்டு செயல்பட்டு எதிர்காலத்தி தகவல்கள் டிஜிட்டல் பாலைவனமாக காட்சி தராமல் இருக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
இதனிடையே நாம் நம் பங்கிற்கு செர்ப் சொல்வது போல டிஜிட்டல் புகைப்படம் எடுத்தால் அது முக்கிய வாழ்க்கை ஆவணமாக இருக்கும் என கருதினால் அதை அச்சிட்டு வைத்துக்கொள்வோம்.
வருங்கால தலைமுறைக்கு நம்மாலான டிஜிட்டல் பதிவுகளை சேமித்து கொடுப்போம்! என்ன சொல்கிறீர்கள்?
- சைபர்சிம்மன்

இதன் விளைவாக அடுத்த நூற்றூண்டில் போய் பார்க்கும் போது, நாம் சேமித்து வைத்த தகவல்களை மீட்டெடுப்பது இயலாமல் போயிருக்கலாம். அவற்றில் பயன்படுத்தப்பட்ட சாப்ட்வேர் , இயங்குதளம் போன்ற எல்லாமே மாறிப்போயிருக்கும் என்பதுதான் விஷயம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum