பென்சிலின் உருவான கதை
Thu Feb 12, 2015 9:35 pm
பிளமிங், 1881ல் ஸ்காட்லாந்தில் பிறந்தார். முதலாம் உலகப் போரின் போது படை வீரர்கள் பலர் காயமடைந்து தொற்றுநோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டு இறந்தனர். இதைக் கேள்விப்பட்டு ஹபாக்டீரியாவைக் கொல்லும் மருந்தைக் கண்டுபிடிப்பேன்’ என்று சபதம் கொண்டார் பிளமிங்.
1928ல் லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையில் ஒரு விடுமுறை நாளில் கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அன்று விடுமுறை நாளாக இருந்ததால் ஆய்வுப் பொருட்களை அப்படியே வைத்துவிட்டுச் சென்றார். அதில் ஒரு தட்டு மூடாமல் இருந்தது. சுற்றுப்புறமும் அசுத்தமாக இருந்தது. அப்போது வீசிய காற்றால் மெல்லிய பூஞ்சணம் அந்த தட்டில் படித்திருந்தது.
சில நாட்கள் கழித்து அந்த தட்டை ஆராய்ந்து பார்த்தார் பிளமிங். அப்போது பூஞ்சணம் படிந்த இடத்தில் கிருமிகள் முழுவதும் அழிந்திருந்தன மற்ற பகுதியில் பெருகி இருந்தன, உடனே பிளமிங் அந்த பூஞ்சணத்தைப் பயன்படுத்தி ஒரு மருந்து தயாரித்தார். பூஞ்சணத்தின்பெயர் பென்சிலினா நோடேடம். அதனால், அந்த மருந்துக்கு பென்சிலின் என்று பெயரிட்டார்.
இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் பிளமிங் ஒரு நவீன ஆய்வு கூடத்துக்குச் சென்றார். அங்கே ஆய்வுக் கருவிகள் பளபளப்பாகவும், தூய்மையாகவும் இருந்தன. சுற்றுச் சூழல் தூசியற்றும் குளிரூட்டப்பட்டும் இருந்தது.
அப்போது ஒருவர் ‘உங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை. ஒரு தரமான ஆய்வகம் கூட உங்களுக்குக் கிடைக்கவில்லையே? அப்படி கிடைத்தால் நீங்கள் இன்னும் நிறைய மருந்துகளைக் கண்டுபிடித்திருப்பீர்களே’ என்று சொன்னார். அதற்கு பிளமிங் அமைதியாக, ‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், நிச்சயமாக பென்சிலினைக் கண்டுபிடித்திருக்க மாட்டேன்’ என்றார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum