அஞ்சல் குறியீட்ட சொல்லுங்க... ஊர் பேர தெரிஞ்சுக்குங்க!
Wed Jan 28, 2015 7:57 pm
Posted Date : 15:07 (28/01/2015)Last updated : 15:43 (28/01/2015) ஒரு ஊரின் அஞ்சல் குறியீட்டு எண்ணைச் சொல்லி.. இது எந்த ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் என்று யாராவது உங்களிடம் கேட்டால் என்ன செய்வீர்கள்? தெரிந்ததாக இருந்தால் உடனே சொல்லிவிடலாம். ஒருவேளை தெரியாத ஒன்றாக இருந்தால்? கவலையை விடுங்கள்.. இதோ, அதற்கும் இணையத்தில் மிக சுலபமான வழி ஒன்று இருக்கிறது. என்ன அது? வாங்க பார்க்கலாம்! 'விரல் நுனியில் உலகம்' என்று சொல்லும் இணையத்தின் மூலமாக.. ஒரு ஊரின் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொண்டு வெறும் 5 நொடியில்.. அது எந்த ஊர், எந்த மாநிலம், எந்த நாடு, எந்த தெரு என்பது வரை.. மிக சுலபமாக நம்மால் இப்போது சொல்லிவிட முடியும். எப்படி என்கிறீர்களா? இணைய உதவியோடு முதலில் http://lookup.addressdoctor.com/lookup/default.aspx?lookup=1&lang=en என்ற பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கே, Country என்றுள்ள இடத்தில் நாம் தேடும் அஞ்சல் குறியீடு உள்ள நாட்டின் பெயரை தேர்வு செய்யவேண்டும். ஒருவேளை நாட்டின் பெயர் தெரியாத பட்சத்தில்,Worldwide என்பதை தேர்வு செய்து.. அதன் கீழே உள்ள Postal Code என்ற பெட்டிக்குள் நீங்கள் தேடப்போகும் அஞ்சல் குறியீட்டு எண்ணை டைப் செய்யுங்கள். பின், கீழே உள்ள Search என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.. நீங்கள கொடுத்த அஞ்சல் குறியீட்டு எண் எந்த ஊர், எந்த மாநிலம், எந்த நாடு.. உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடுத்த நொடியில் கண்முன் வந்துவிடும். ஒருவேளை நீங்கள் ஊரின் பெயரைக்கொண்டு அந்த ஊருக்கான அஞ்சல் குறியீட்டு எண் போன்றவற்றை கண்டறிய விரும்பினால்.. அதையும் மிக சுலபமாக இந்த வலைதளம் உங்களுக்கு சொல்லிவிடும். அதற்கு நீங்கள், அஞ்சல் குறியீட்டு எண்ணை டைப் செய்வதற்கு பதிலாக அதற்கு மேலே உள்ள Locality/City என்ற பெட்டியில் தேட விரும்பும் இடத்தின் பெயரை டைப் செய்யவேண்டும். பின், கீழே உள்ள Search என்ற பட்டனை கிளிக் செய்தால்.. நாம் கொடுத்த ஊரின் அஞ்சல் குறியீட்டு எண், நாடு, மாநிலம்.. உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வந்துவிடும். ஒருவேளை, இத்துடன் இன்னும் கூடுதல் தகவல் பெறவிரும்பினால்.. வந்திருக்கும் தகவலின் கடைசியில் உள்ள Select என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். எப்படி? இப்போ சொல்லுங்க உங்க அஞ்சல் குறியீட்ட.. அது எந்த ஊருன்னு ரொம்ப ஈசியா கண்டுபிடிக்கலாம்! - சா.வடிவரசு |
Permissions in this forum:
You cannot reply to topics in this forum