ஒரு கோப்பைக் காபி
Mon Jun 30, 2014 6:17 am
இத்தாலி நாட்டிலுள்ள ஒளி வெள்ளமும் நீர் வளமும் மிகுந்த அழகிய வெனிஸ் நகரத்தின் ஒரு காபிக்கடையில் நான் எனது நண்பரோடு அமர்ந்திருந்தேன். நாங்கள் காபியை சுவைத்துப் பருகிக் கொண்டிருந்த போது எங்களுக்கருகே காலியாக இருந்த மேஜையருகே ஒருவர் அமர்ந்தார். அவர் சர்வரை அழைத்து, இரண்டு கோப்பை காபி கொடுங்கள், ஒன்று சுவருக்கு என்றார்.
அதைக்கேட்ட எங்களுக்கு வியப்பு மேலோங்கியது. நடந்ததைக் கவனிக்க ஆரம்பித்தோம். சர்வர் ஒரு கோப்பைக் காபியை அவரிடம் தந்து விட்டுச் சென்றார். காபியைக் குடித்தவர் இரண்டு கோப்பைக் காபிக்கு பணம் கொடுத்து விட்டுச் சென்றார். உடனே அந்த சர்வர் சுவரில் ஒரு கோப்பைக் காபி என்று எழுதப்பட்டிருந்த ஒரு துண்டுச் சீட்டை ஒட்டிச் சென்றார்.
அப்போது மேலும் இருவர் காபி குடிக்க வந்தனர். இரண்டு கோப்பை எங்களுக்கு, ஒரு கோப்பை சுவருக்கு என்று சொல்லவே சர்வர் இரண்டு கோப்பை காபி கொண்டு வந்து அவர்களுக்கு தந்தார். அந்த இருவரும் மூன்று கோப்பை காபிக்கான பணத்தை கொடுத்து விட்டு வெளியேறிய வுடன் சர்வர் ஒரு கோப்பை காபி என்று எழுதிய சீட்டை சுவரில் ஒட்டினார். அந்தச் செய்கை எங்களுக்கு மிகுந்த வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. நாங்கள் காபியைக் குடித்து விட்டு அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டுக் கடையை விட்டு வெளியேறினோம்.
சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் காபி கடைக்குச் செல்லும் சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் காபி குடித்துக் கொண்டிருந்த போது மிகவும் ஏழையான ஒருவர் அழுக்கான உடையணிந்து உள்ளே நுழைந்தார். அவர் இருக்கையில் அமர்ந்ததும் சுவரைப் பார்த்தார். சர்வரிடம் சுவரிலிருந்து ஒரு கோப்பைக் காபி என்று ஆர்டர் கொடுத்தார். சர்வர் மரியாதை குறையாமல் அவருக்கு ஒரு கோப்பைக் காபி கொண்டு வந்து கொடுத்தார்.
வந்தவர் காபி குடித்துவிட்டுப் பணம் தராமலேயே வெளியேறினார். எங்களுக்கு அந்தச் செயல் மிகவும் வேடிக்கையானதாக இருந்தது. சர்வர் ஒரு கோப்பைக் காபி என்று எழுதியிருந்த ஒரு சீட்டை சுவற்றிலிருந்து எடுத்து குப்பைக் கூடையில் போட்டார்.
நாங்கள் இருக்கையிலிருந்து விடுபட்டோம். எல்லாமே எங்களுக்கு தெளிவாக விளங்கியது. வெனிஸ் நகர மக்கள் ஏழை எளிய மக்களிடம் காட்டிய பரிவும் பாசமும் எங்கள் கண்களைக் குளப்படுத்தின.
ஏழைகளின் தேவைகளை எண்ணிப் பாருங்கள். ஏழையான அந்த மனிதர் சுயமரியாதையை இழக்காமலே காபிக்கடையில் நுழைந்தார். இலவசமாக அவர் காபி குடிக்கவில்லை. யாரோ சிலர் அவருக்காக ஏற்கனவே பணம் கொடுத்திருந்தார்கள். சுவரைப் பார்த்தார். காபிக்கு ஆர்டர் செய்து சுவைத்துப் பருகினார். வெளியே சென்றார். அவருக்கு எந்தக் கௌரவக் குறைவும் ஏற்படவில்லை.
வெனிஸ் நகர மக்களின் பெருந்தன்மை அந்தச் சுவரில் அழகுடன் மிளிர்கிறது. நாடுகள் தோறும் இது போன்று மனிதாபிமானமும் ஏழைகளிடம் இரக்கமும் உருவானால் உலகமே செழிப்பாகி விடும்.
நன்றிக்குரியவர்கள் = சமரசம், சி. சந்திரசேகரன், Umm Shaykh Kuy Kuy
#சமரசம் |#கடைசிப்பக்கம் |1-15 மே 2014

Permissions in this forum:
You cannot reply to topics in this forum