முல்லாவும் நங்கூரமும்
Tue Apr 01, 2014 12:08 pm
முல்லாநசுருதீன் ஒரு கப்பல் வேலைக்கு
இண்டர்வியூக்கு சென்றார். அங்கே மூன்று ஆபீஸர்கள் அவனை பேட்டி கண்டனர். ஒருவர்,
மிகப் பெரும் புயல் ஒன்று வருகிறது, அலைகள் மிகவும் பெரிதாக எழும்புகின்றன,
கிட்டத்தட்ட கப்பல் ஆட்டம் காணும் நிலை நீ என்ன செய்வாய் என்று கேட்டார்.
முல்லா, எந்த பிரச்னையும் இல்லை. கப்பலை நிலை
நிறுத்த மிகப்பெரும் நங்கூரம் ஒன்றை நான் இறக்குவேன். என்றார்.
இரண்டாமவர், ஆனால் மறுபடியும் பெரியதாக அலை
கிளம்பி வருகிறது, அதில் கப்பலே முழுகிவிடும் போல இருக்கிறது. அப்போது என்ன
செய்வாய் என்றார்.
அதற்கு முல்லா இன்னும் பெரியதான நங்கூரம் ஒன்றை
கடலில் இறக்கி கப்பலை நிலைநிறுத்துவேன் என்றார்.
மூன்றாமவர், இன்னும் பெரிய அலை வந்தால்….
என்று கேட்டார்.
அதற்கு முல்லா தேவையில்லாமல் என்னுடைய நேரத்தை
வீணடிக்காதீர்கள். எவ்வளவு பெரிய அலை வருகிறதோ அவ்வளவு தேவையான அளவு பாரமான
நங்கூரத்தை கடலில் இறக்குவேன் அவ்வளவுதான் என்றார்.
அதற்கு முதலில் கேட்டவர், எங்கிருந்து அவ்வளவு
பாரமான நங்கூரங்களை பெறுவீர்கள் என்று கேட்டார்.
அதற்கு முல்லா நீங்கள் எங்கிருந்து அவ்வளவு
பெரிய அலைகளை பெறுகிறீர்களோ அங்கிருந்துதான். நீங்கள் கற்பனை செய்ய முடியும்
என்றால் என்னாலும் கற்பன செய்ய முடியுமல்லவா எப்படியும் இந்த கப்பலை காப்பாற்றியாக
வேண்டுமல்லவா ஆகவே எங்கிருந்து என்பதில் பிரச்னையில்லை. நீங்கள் எங்கிருந்து
அவ்வளவு பெரியதான அலைகளை கொண்டு வந்தீர்களோ அங்கிருந்து இதையும் பெற முடியுமல்லவா
என்றார்.
இப்படித்தான் உன் வாழ்க்கை அடுத்தவருக்கு தகுந்தபடியாக மாறிக்கொண்டேயிருக்கிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum