இடுப்பளவு அதிகமாகாமல் இருக்க…
Wed Aug 28, 2013 8:13 am
உடல் எடை சரியாகவும். தொப்பையின்றியும் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.
ஆகவே பசியைத் தீர்க்கவும், அதே சமயம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் இருக்கவும், இந்த ஸ்நாக்ஸ்களை மாலை வேளையில் சாப்பிட்டால், நிச்சயம் உடல் எடை அதிகரிப்பதை தவிர்ப்பதோடு, பசியும் நீங்கி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
கிவிப் பழம்
கிவிப் பழத்தில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. பசிக்கும் பொழுது இரண்டு கிவிப் பழங்களை உண்டால், அது வெறும் 58 கலோரிகளையே தரும். எனவே இதை மாலை நேர உணவாகப் பயன்படுத்துவது நல்லது. கிவிப் பழம் உணவின் செரிமானத்திற்கு உதவுவதோடு, சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுத்து, அழகையும் கூட்டுகிறது.
ப்ளூபெர்ரி
ஒரு கப் ப்ளூபெர்ரிப் பழத்தில் 83 கலோரிகளே உள்ளன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆகவே இவை முதுமையைத் தடுப்பதோடு, இதயத்தையும் பாதுகாக்கிறது.
பேரிக்காய்
பசி எடுக்கும் பொழுது, ஒரு முழு பேரிக்காயை சாப்பிட்டால், வயிறு நன்கு நிறைவதோடு, 100 கலோரிகளையே அது நமக்குத் தருகிறது.
செர்ரி
இந்த சிறிய செர்ரிப் பழங்களில் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் மிகக் குறைந்த அளவே கொழுப்புச் சத்தும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், இதில் வெறும் 100 கலோரிகளே உள்ளன.
தக்காளி சூப்
உணவை அதிகம் விரும்பாதவராக இருந்தால், எளிய முறையில் செய்யக்கூடிய தக்காளி சூப்பை அருந்தலாம். ஒரு சிறிய கிண்ணம் அளவுள்ள தக்காளி சூப்பில் 74 கலோரிகளே உள்ளன.
மெலான் வகைப் பழங்கள்
மெலான் வகைப் பழங்கள் மிகச்சிறந்த சிற்றுண்டிகளாகும். தர்பூசணி, முலாம் பழம் போன்ற மெலான் வகைப் பழங்களில் 88 கலோரிகள் உள்ளன. இதில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், குறைந்த அளவு கலோரிகளையே கொண்டுள்ளது.
திராட்சை
திராட்சைப் பழம் வயிற்றை நன்கு நிரப்புவதோடு, குறைந்த அளவே கலோரிகளை கொண்டது. ஆகவே மாலையில் பசிக்கும் போது 30 திரட்சைப் பழங்கள் சாப்பிட வேண்டும். இதில் வெறும் 100 கலோரிகளே உள்ளன. மேலும் இது இரத்த சோகை, அதிகக் களைப்பு, மூட்டுவலி, கீல்வாதம், வாத நோய் போன்றவைகளையும் போக்கக்கூடியது.
வேர்க்கடலை
வேர்க்கடலையானது ஆரோக்கியமான ஒரு சிற்றுண்டி. எனவே ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலைகளை சாப்பிடும் பொழுது, அது 74 கலோரிகளே தருகிறது. மேலும், இது குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், அது ஆற்றலை மெதுவாக வெளிப்படுத்தி வெகு நேரத்திற்கு வயிறு நிறைந்தது போல உணர வைக்கும்.
ஆப்பிள்
ஒரு ஆப்பிளில் 100 கலோரிகளே உள்ளது. எனவே பசி எடுக்கும் போது ஒரு ஆப்பிளை நன்கு மென்று சாப்பிடும் போது, அதிலுள்ள நார்ச்சத்து உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தினைக் குறைக்கவும், சுற்றுப்புற மாசுக்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து காக்கவும் செய்கிறது.
பாதாம் பருப்பு
பாதாம் பருப்பானது மாலை நேர பசியைத் தீர்ப்பதற்கான சிறந்த சிற்றுண்டியாகும். எனவே மாலையில் 13-14 பருப்புகளை சாப்பிடலாம். இதில் 98 கலோரிகளே உள்ளன. எனவே இது மிகச் சரியான மாலை நேர ஸ்நாக்ஸாக இருக்கும்.
நன்றி: ஆரோக்கியமான வாழ்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum