தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சீர்திருத்தத்தின் முடிவுக்கு இதுதான் ஆரம்பமா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சீர்திருத்தத்தின் முடிவுக்கு இதுதான் ஆரம்பமா? Empty சீர்திருத்தத்தின் முடிவுக்கு இதுதான் ஆரம்பமா?

Thu Aug 22, 2013 11:36 pm
by Pastor Jack Sin, Maranatha Bible Presbyterian Church, Singapore (translated with permission)
சிங்கப்பூர் மாரநாதா பைபிள் பிரஸ்பைட்டேரியன் சபையின் போதகர் ஜாக் ஸின் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து அனுமதியோடு மொழிபெயர்க்கப்பட்டது.
முன்னுரை
ரோமர் 1:15-17, “ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது”.
இந்த நாட்களில் சீர்திருத்தம் முடிந்துவிட்டது என்றும் சீர்திருத்தம் பயனில்லாதது என்றும் அநேகர், விசேஷமாக சபையிலே முற்போக்குவாதிகளும் புதிய சுவிசேஷகர்களும் உரிமையாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் துவங்கிய சீர்திருத்தம் இன்றைய சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாதது என்றும் இந்தக் காலத்துக்கு முரண்பாடானது என்றும் சொல்கிறார்கள். 
ஆனால் உண்மை எப்பொழுதும் வினோதமாகவே தான் இருக்கும். நவீன காலத்திற்கு பின்னான காலமாகிய இந்த நாட்களில் சீர்திருத்தம் என்றும் இல்லாத அளவுக்கு அவசியமாக இருக்கிறது. ஒரே முறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தை பாதுகாக்கவும் பிரசங்கிக்கவும் தைரியமாக போராடவேண்டியது அவசியமாகக் காணப்படுகிறது (யூதா 1:3)
திருச்சபை வரலாற்றிலே மிகப்பெரிய விழுப்புணர்வை ஏற்படுத்தியது இந்த நிகழ்வு தான்(அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள ஆவிக்குரிய எழுப்புதலுக்குப் பின்னர்). இதற்கு நிறைய நன்மையான காரணங்கள் உண்டு.
495 வருடங்களுக்கு முன்பு கடவுளால் துவங்கப்பட்ட இந்த நிகழ்வு இன்றைக்கு முற்றிலும் அவசியமானதும், முற்றிலும் பொருத்தமானதும் ஆகும். அப்படி சீர்திருத்தத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்ன? இதை ஏன் மீட்கப்பட்ட விசுவாசிகள் மறக்கக்கூடாது?இருண்ட காலத்திலே, ரோம சபையின் ஆவிக்குரிய இருளில் இருந்து மனிதர்களை விடுவித்து, அற்புதமான ஒளியாகிய மெய்யான தூய்மையான இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு மனிதர்களை திரும்பவும் அழைத்து வரும் உயர்ந்த நோக்கத்திற்காக 16 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தம் கடவுளால் அனுப்பப்பட்டது. சீர்திருத்தவாதிகள் போராடிய காரணத்தினால் தான் இன்று மெய்யான விசுவாசத்தையும், எல்லா மகிமையான சத்தியங்களையும் நாம் உரிமையாகப் பெற்றுக்கொண்டோம் என்று பார்க்கிறோம். நாம் சீர்திருத்தப்பட்டவர்களாக இருந்தாலும், இன்னும் சீர்திருத்தம் செய்துகொண்டே இருக்கிறோம்.
சீர்திருத்தம், இன்றைய திருச்சபைகளுக்கு கோட்பாடுகளின் ரீதியாக ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? எதற்காக எல்லா பிராட்டஸ்ட்டண்ட் விசுவாசிகளும் சரித்திரப்பூர்வமான 16 ஆம் நூற்றாண்டு புராட்டஸ்ட்டண்ட் சீர்திருத்தத்தை நினைவில் கொள்ளவேண்டும்? எதற்காக இதை தொடர்ந்து நவீன காலத்திற்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்கு நியாயமான காரணங்களை நாம் பார்க்கலாம். 
சீர்திருத்தமும், சரியான இரட்சிப்பின் கோட்பாடும்
கிரியையினால் இரட்சிப்பா அல்லது விசுவாசத்தினால் மட்டுமே இரட்சிப்பா? இது ஒரு முக்கியமான கேள்வி. திருப்பலி, பாவசங்கீத்தனம், மரியாளிடம் ஜெபம் செய்தல், பாதிரியார்களிடம் பாவத்தை அறிக்கையிடுதல், மனிதர்களின் கட்டுக்கதைகள், திருப்பண்டம். மரித்த பரிசுத்தவான்களிடம் ஜெபம் செய்தல், அல்லது நல்ல கிரியைகள் செய்தல் போன்ற எந்த காரியங்களினாலும் நம்முடைய இரட்சிப்பை நாம் சம்பாதித்துக்கொள்ள முடியாது. இரட்சிப்பு என்கிற உடுப்புக்கு ஒரு சிறிய ஒட்டு போடவேண்டியது என்னுடைய பங்காக இருந்திருந்தால் போதும், நான் முற்றிலும் தொலைந்து போயிருப்பேன் என்று சார்லஸ் ஸ்பர்ஜன் சொல்கிறார். இரட்சிப்பு முற்றிலும் பரிசுத்த ஆவியானவரின் புதிதாக்குதலின் கிரியையாகும், அது நம்மால் ஆகும் காரியம் கிடையாது.
 பிராட்டஸ்டண்ட சீர்திருத்தத்தின் ஆவிக்குரிய நெருப்பை சுடர்விட்டு கொளுத்த கடவுள் பெரிதும் உபயோகப்படுத்தியது மார்ட்டின் லூத்தரையே (Martin Luther). அவர் புனித ஆகஸ்டின் என்ற மடத்தைச் சேர்ந்த (Augustinian Monastery) துறவி. அவர் ரோம சபையின் கோட்பாடுகளையும் மரபுகளையும் நன்றாக கற்று, அவைகளை கவனமாக பின்பற்றியும் வந்தவர். ஆனால் தம்முடைய வாழ்வில் மெய்யான சமாதானத்தை உணரவேயில்லை. துறவி வாழ்க்கை முறைகளில் எல்லாவற்றையும் அவர் முயற்சி செய்து பார்த்தார். லாட்டரான் சபையின் (Church of Lateran) படிகளை முழங்கால்களிலேயே நடந்தார். அப்படிச் செய்தால் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது மரபு. அதினாலும் அவருடைய கலங்கிய ஆத்துமாவுக்கு விடுதலை கிடைக்கவில்லை. ஆனால், சுவிசேஷத்தின் ஒளி அவருடைய துயரப்பட்ட இருதயத்தில் வீசியபோது மட்டுமே அவருக்கு சமாதானம் கிடைத்தது, “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” (ரோமர் 1:17). இது அவரை பரலோகத்திலிருந்து வந்த மின்னலைப்போல தாக்கியது. கடைசியாக அவர் இரட்சிப்பின் மெய்யான வழியை கண்டுகொண்டார், “நீதியின் கிரியைகளினால் அல்ல, கிருபையினால் விசுவாசத்தின் மூலமாக மட்டுமே”. அவர் வேதாகமத்தை படித்தார், கடவுளுடைய சர்வாதிகார சித்தத்தினால், பரிசுத்த ஆவியானவரின் புதிதாக்குதலின் கிரியை அவருடைய ஆத்துமாவில் ஒளி வீசியது.    
16 ஆம் நூற்றாண்டில், ரோம சபைக்கு, புனித பேதுருவின் ஆலயத்தை மறுபடியும் கட்ட பணம் தேவைப்பட்டது. போப் 10 ஆம் லியோ (Leo X) அவர்கள் இண்டல்ஜன்ஸ் (Indulgence - மன்னிப்பு சீட்டு – அதாவது கருணை அடிப்படை என்ற சாக்கில் பணம் பெற்றுக்கொண்டு பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குவது) விற்று பணம் திறட்ட யோகான் டேட்ஸல் (Johann Tetzel) என்ற டாமினிக்கன் (Dominican) துறவியை நியமித்தார். டேட்ஸல் சந்தோஷமாக லூத்தர் இருந்த ஜெர்மணி நாட்டிற்கும் வந்தார். இதைக் கேள்விப்பட்ட லூத்தர் மிகவும் வருந்தப்பட்டு, அந்த துறவியின் பிழையான செயலிலே தமக்கு உடன்பாடு இல்லை என்று அறிவித்தார். பின்னர் இதை எதிர்த்து 95 ஆய்வுகளை (95 Thesis) எழுதி  விட்டன்பர்க் (Wittenberg) என்ற தம்முடைய ஊரின் ஆலயத்தின் கதவுகளில் அறைந்தார். இதற்கு அடுத்த நாள் நவம்பர் 1 ஆம் தேதியாகிய சகல பரிசுத்தவான்களின் நாளாக இருந்தது. அந்த நாளிலே மக்கள் ஆலயத்திற்கு வந்து திருப்பண்டங்களை தொழுதுகொள்வார்கள் (மரித்த பரிசுத்தவான்களின் எலும்புகள், அவர்கள் உபயோகப்படுத்திய மற்றும் புன்னிய இடங்களின் பொருள்கள் போன்றவை). கடவுளுடைய சித்தத்தினால் நடந்த இந்த ஆரம்ப நிகழ்வு மெய்யான விசுவாசிகளை ரோம அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து மெய்யான கலப்படமில்லாத சுவிசேஷத்திற்கு வழிவகுத்தது.
வேதாகமம் மட்டுமே, கடவுளுடைய மகிமை மட்டுமே, கிறிஸ்துவினால் மட்டுமே, விசுவாசத்தினால் மட்டுமே, கிருபையினால் மட்டுமே, என்பதே மார்ட்டின் லூத்தர் மற்றும் மற்ற சீர்திருத்தவாதிகள் எல்லோருடைய போர் முழக்கமாக இருந்தது. மறக்கக்கூடாத ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு 1521 ஆம் ஆண்டு வோர்ம்ஸ் என்ற நகரில் நடைபெற்ற அரசு கூடுகை(Diet of Worms). அரசர் 5 ஆம் சார்லஸ் (King Charles V), பல பிரமுகர்கள் நிறைந்த ரோம சபையின் தலைசிறந்த மன்றம்,  அவர்கள் எல்லாருக்கும் முன்பாக விசுவாசத்தை தெளிவாக லூத்தர் வாதம் செய்தார். கிறிஸ்து மட்டுமே மெய்யான இரட்சகர் என்று தாம் போதித்ததையும் எழுதியதையும் அவர்களுக்கு பயந்து அவர் விட்டுக்கொடுக்கவே இல்லை. அவருடைய விசுவாசத்தையும் தைரியத்தையும் அவருடைய ஜீவனையும் கடவுள் சீர்திருத்தத்தின் மகிமையான காரணத்திற்காக பாதுகாத்தார். 
சீர்திருத்தமும், மக்கள் உபயோகப்படுத்தும் மொழியிலே வேதாகமும்
2 தீமோத்தேயு 2:15 சொல்வது, “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு”. சீர்திருத்தம் துவங்கியபோது, வேதாகமம் பாமர மக்கள் பேசும் பாஷைகளிலே மொழிபெயர்த்து உபயோகப்படுத்தப்பட்டது. எல்லாவற்றையும் விட இதுவே ரோம பாதிரியார்களை மிகவும் அதிகமாக பயமுறுத்தியது, கோபமடையச் செய்தது. சீர்திருத்தத்தின் முக்கியமான விவகாரம், முழுமையான அதிகாரம் வேதாகமமா அல்லது முழுமையான அதிகாரம் ரோம சபையா என்பதாக இருந்தது.
ஜெரோம் (Jerome) என்ற பக்திமானால் 4 ஆம் நூற்றாண்டில் லத்தீன் பாஷையில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் மட்டுமே திருச்சபையில் உபயோகப்படுத்தப்பட்டது. அது பாதிரியார்களால் மட்டுமே படிக்கமுடிந்ததாக இருந்தது, பொதுமக்களால் அதைப் படித்து புரிந்துகொள்ள இயலவில்லை. சீர்திருத்தவாதிகளின் காலத்துக்கு சற்று முன்னர் வாழ்ந்த ஜான் விக்கிலிஃப் (John Wycliffe) என்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வேதாகமத்தை லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் 1525 ஆம் ஆண்டு வில்லியம் டிண்டேல் (William Tyndale) என்ற ஆங்கிலேய சீர்திருத்தவாதியினால் புதிய ஏற்பாடின் மூல பாஷையாகிய கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது. இதனால் அவர் 1536 ஆம் ஆண்டு தீயினால் எரிக்கப்பட்டு இரத்தசாட்சியாக மரித்தார். ஆனால் வேதாகமத்தின் வசனங்கள் அந்த நாட்கள் முதல் காட்டுத்தீயாக பரவியது, ரோம செல்வாக்கின் சக்தி குறைய ஆரம்பித்தது. வேதாகமத்தின் வல்லமை மனிதர்களை இரட்சிப்புக்கு ஏதுவாக ஞானமாக்கும் என்பதை திருச்சபை தலைவர்களும் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள் (2 தீமோத்தேயு 3:15). கடவுள் இங்கிலாந்து தேசத்தின் ராஜாவாகிய 8 ஆம் ஹென்றியின் (Henry VIII) கண்களைத் திறந்தார். தன்னுடைய நன்பன் பிலிப்பு என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட வில்லியம் டிண்டேல் மரிக்கும் போது ஜெபித்து விரும்பியபடியே வேதாகமம் ஆங்கில மொழியில் தடைசெய்யப்படவில்லை. அதை ஆங்கிலம் தெரிந்த எல்லாரும் படிக்க முடிந்தது. இன்று ஆங்கில வேதாகமத்தை (மற்ற மொழி வேதாகமங்களும் கூட) கைகளில் வைத்திருக்கும் நாம் அனைவரும் இந்த மிகப்பெரிய சிலாக்கியத்திற்காக சீர்திருத்தத்திற்கே கடமைப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு சிலாக்கியம் அதற்கு முன்பு கிடையாது. வேதாகமம் மட்டுமே என்பதே சீர்திருத்தவாதிகளின் போர் முழக்கம், எந்த திருச்சபை பாரம்பரியமும் வேதாகமத்தின் 66 புத்தகங்களுக்கு எந்த விதத்திலும் நிகர் கிடையாது (குறிப்பாக மயக்கும் உணர்ச்சிகளுக்கு). கனவுகள், தரிசனங்கள், கட்டுக்கதைகள், வேறு சுவிசேஷ புத்தகங்கள், தள்ளுபடி ஆகமங்கள், போன்ற வேதாகமத்திற்கு புறம்பான வெளிப்படுதல்கள் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு எதிராக நாம் வேதாகமத்தை உயர்த்தி போராடவேண்டும். வேதாகமம் மட்டுமே கடவுளுடைய ஏவுதலால் கொடுக்கப்பட்டது, வேதாகமம் மட்டுமே எல்லா அதிகாரமும் கொண்டது, வேதாகமம் மட்டுமே போதுமானது.
1454 ஆம் ஆண்டு யோகான் கூட்டன்பர்க் (Johann Guttenberg) என்பவரால் அச்சடிக்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இது ஐரோப்பா கண்டத்திலே இலக்கியம் பரவுவதை புரட்சிகரமான விதத்தில் மாற்றியது. மனிதகுலத்தின் சரித்திரத்திலேயே முதல் முறையாக, கையினால் ஒவ்வொன்றாக புத்தகங்கள் செய்வதற்கு பதிலாக மிகப்பல பதிப்புகளை ஒரே நேரத்தில் செய்ய முடிந்தது. வேதாகமத்தையும் லூத்தரின் 95 ஆய்வுகளையும் அதிகமான அளவில் அச்சடிக்கவும் விநியோகம் செய்யவும், கடவுள் தான் ஏற்ற நேரத்தில் சீர்திருத்தத்தின் போது அச்சடிக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க கிருபை அளித்தார். இன்றைக்கு நாம் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் வேதாகமத்தை நாம் படித்துக்கொள்ளவும், அதன்படி நடந்துகொள்ளவும் முடிகிறது. ஏனென்றால் அது பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் உருவாக்கப்பட்ட, பிழையில்லாத, என்றும் நிலைத்திருக்கக்கூடிய கடவுளுடைய வார்த்தைகளாக இருப்பதினால் தான்.  
டேவிட் வேல்ஸ் (David Wells) அவர்கள் எழுதியுள்ள ‘புராட்டஸ்ட்டண்ட்டாக இருப்பதற்கு தைரியம்’  (The Courage to be Protestant) என்ற புத்தகத்தில், இந்த காரியத்தை சிறப்பாக அணுகியுள்ளார், 
ஒரு உண்மையான திருச்சபை தன்னுடைய சிந்தனைகளில் கடவுளை மையப்படுத்துவதாகவும், விசுவாசத்திலும் நடத்தையிலும் கடவுளை கனப்படுத்துவதாகவும் இருக்கும் (பக்கம் 242). திருச்சபைகள் கடவுளுடைய வார்த்தைகளை அதிகாரமானதாகவும் போதுமானதாகவும் பார்க்கவேண்டும். வேதாகமம் மட்டுமே என்று இருக்கவேண்டும், கலாச்சாரம் மட்டுமே என்று இருக்கக்கூடாது. திருச்சபைகள் கோட்பாடுகளையும் பிரசங்கத்தையும் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். திருச்சபைகள் சாக்கிரமந்துக்களை சரியாக நிருவகிக்கவேண்டும், அதே நேரத்தில் இரட்சிப்பு கிருபையினால் மட்டுமே விசுவாசத்தின் மூலமாக மட்டுமே என்பதை தெளிவாக அறிவிக்கவேண்டும். திருச்சபைகள் கிறிஸ்துவின் சபையினுடைய புனிதத்தை பாதுகாக்கவும் கடவுளின் பரிசுத்தத்தை பிரதிபலிக்கவும் திருச்சபையின் ஒழுக்கங்களை செயல்படுத்தவேண்டும். திருச்சபைகள் கலாச்சாரத்தின் ஒரு நகலைப் போல இல்லாமல், கலாச்சாரத்திற்கு ஒரு மாற்றமாக நிலைநிற்கவேண்டும். திருச்சபை உண்மையாக வெற்றிபெறவேண்டும் என்றால், இந்த வாழ்க்கையில் கிடைக்காத ஒன்றைப் போல இருக்கவேண்டும் (பக்கம் 224).  
சீர்திருத்தமும், கிறிஸ்து மூலமாக கடவுளை நேராக அணுகுவதும்
ஒரு குற்றம் நிறைந்த இழிவான பாவி ஒருவன் மூன்று முறை பரிசுத்தமான கடவுளுக்கு முன்பாக எப்படி நிற்க முடியும்? சீர்திருத்தம் சபையின் தவறான வழக்கங்களையும் போலியான விசுவாசத்தையும் அம்பலப்படுத்தியது. வேதாகமத்தில் இல்லாத காரியங்களாகிய மரித்த பரிசுத்தவான்கள், திருப்பண்டம், மரியாள் போன்ற மனிதர்கள் மூலமாக கடவுளை அணுக முடியும் என்பது, வேதாகமத்தில் இல்லாத சடங்குகளில் பங்குகொள்வதின் மூலமாக கடவுளை அணுக முடியும் என்பது போன்ற பொய்யான காரியங்கள் அம்பலமாகியது. வேதாகமம் மூலம் நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகள் திறக்கப்பட்டது. “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே” என்பதை மக்கள் அறிந்துகொண்டார்கள் (1 தீமோத்தேயு 2:5-6, அப்போஸ்தலர் 4:12). யோவான் 14:6 யிலே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று சொல்கிறார். இரட்சிப்பிலே மிகவும் முக்கியமான இந்த இறையியல் உண்மையை சீர்திருத்தம் மிகவும் கூர்மையாக மையப்படுத்தியது. இயேசு மட்டுமே இரட்சிக்கிறார், அது விசுவாசத்தின் மூலமாக மட்டுமே! இதுவே விசுவாசிக்கிற எல்லாரையும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம் (யோவான் 1:12. 1 யோவான் 1:9). கிரியைகளின் மூலம் அல்ல, விசுவாத்தினால் நியாயப்படுத்தப்படுகிறோம் என்பதே நம்முடைய பாவத்திலிருந்து நாம் மீட்கப்பட்டதின்  சத்தியம் (தீத்து 3:5, எபேசியர் 2:8-9).
சீர்திருத்தமும், வேதாகமத்தின் அடிப்படையில் மெய்யான கிறிஸ்தவ தொழுகையும்
யோவான் 4:20-24 சொல்லுவது, “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்;ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்”. நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் (யோவான் 4:24), வெளிப்படையான பகட்டான ஆர்ப்பாட்டமான போலியான முறையில் தொழுதுகொள்ளச் சொல்லவில்லை. இன்று புராட்டஸ்ட்டண்ட முறையில் ஆவிக்குரிய பயபக்தியான தொழுகை நடைபெறுகிறது. இதிலே அவருடைய வார்த்தைகளை பிரசங்கம் செய்யப்படுவதும் வேதாகமம் வாசிக்கப்படுவதும் முக்கியப்படுத்தப்படுகிறது. இது அப்போஸ்தலர் காலத்திலே நடந்த்து, பின்னர் 16 ஆம் நூற்றாண்டிலே சீர்திருத்தம் இதை மீண்டும் கொண்டு வந்தது. உயிரில்லாத சடங்குகளும், அர்த்தமில்லாத முறைகளும், மர்மமான நாடகமான நிகழ்ச்சிகளும் இனி ஆராதனையில் இல்லை. ஏதோ சம்பந்தம் இல்லாத கடவுளைச் சேவிப்பது போல இல்லாமல், இனி இது விசுவாசிகளின் இருதயத்திலிருந்து வரும் மெய்யான தாழ்மையான தொழுகையாக இருக்கிறது. ஆராதனையிலே நாம் அவருடையநாமத்தைத்துதிக்கும்உதடுகளின்கனியாகியஸ்தோத்திரபலியைஅவர் மூலமாய்எப்போதும்தேவனுக்குச்செலுத்துகிறோம் (எபிரேயர் 13:15). இப்படிப்பட்ட மெய்யான ஆவிக்குரிய ஆராதனையின் மூலம் கடவுள் மகிமைப்படுவதைக் கொண்டாடுங்கள். கர்த்தருடைய நாளிலே ஒழுங்காக அவருக்கு ஆராதனை செய்ய சபையாகக் கூடுங்கள்.
சீர்திருத்தமும், சாக்கிரமந்துகளின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளுதலும்
வேதாகமம் நமக்கு இரண்டு சாக்கிரமந்துகளின் தோற்றத்தையும் அர்த்தத்தையும் நமக்கு போதிக்கிறது. சீர்திருத்தத்திற்கு முன்பாக சபையானது ஏழு சாக்கிரமந்துக்கள் உண்டு என்று போதித்தது. ஆனால் சீர்திருத்தம் கர்த்தருடைய பந்தி மற்றும் ஞானஸ்நானம் ஆகிய இரண்டு சாக்கிரமந்துக்கள் மட்டுமே உண்டு என்று போதித்தது. திடப்படுத்துதல், திருமணம், உச்சகட்ட அபிஷேகம், திருப்பலி, தவம், ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆணைகள் ஆகியவைகளை பழைய சபை போதித்தது. ஆனால் இவைகள் வேதாகமத்தில் போதிக்கப்படவில்லை. மேலும் கர்த்தருடைய பந்தியிலே உட்கருபொருளில் மாற்றம் கிடையாது என்பதை சபை போதித்தது(அதாவது திருப்பலியின் போது கோதுமை அப்பமும் திராட்சை இரசமும், கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறுகின்றதாக நம்பப்படும் கொள்கை). இதுவே 1215 ஆம் ஆண்டு லாண்டிரான் சபைக் குழு கூடுகையில் (Council of Lanteran) முடிவுசெய்யப்பட்டது. ஆனால் இதைக் குறித்து வேதாகமத்திலே பவுல் 1 கொரிந்தியர் 11:23-30 வசனங்களில் சொல்வது என்னவென்றால், இது கிறிஸ்துவின் மரணத்தை அவர் திரும்ப வரும் வரையில் நினைவுகொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு ஆவிக்குரிய அடையாளம் என்பதே (ஒரு சிலர் சொல்வது போல பலவீனமான உடலின் சரீரப்பிரகாரமான மீட்பு கிடையாது). ஜான் கால்வின்(John Calvin) போதித்த சீர்திருத்த கருத்து என்னவென்றால், கிறிஸ்து ஆவிக்குரிய விதத்தில் விசுவாசிகளோடு இருக்கிறார், சரீரப்பூர்வமாகவோ மாம்சப்பிரகாரமாகவோ கிடையாது. கர்த்தருடைய பந்தியிலே பங்குபெற்று அப்பத்தையும் திராட்சரசத்தையும் மெய்யாக பெற்றுக்கொள்பவர்கள் ஆவியிலே போஷிக்கப்படுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களை கிறிஸ்துவோடு நெருங்கிய ஐக்கியத்திலே கொண்டுவருவார். கிறிஸ்துவே சபைக்கு தலையானவர், அவரே எல்லா மெய்யான சீஷர்களுக்கும் ஆவிக்குரிய உயிரை கொடுப்பவர். அதைப் போலவே ஞானஸ்நானமாகிய சாக்கிரமந்து யாரையும் தங்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்க முடியாது. ஞானஸ்நானம் இரட்சிக்கும் என்று ஒரு சிலர் போதிப்பது தவறு.     
சீர்திருத்தவாதிகளும், வேதாகமத்தின் பாங்கிலே திருச்சபை அமைப்பும் நிர்வாகமும்
தீத்து 1:5 சொல்வது, “நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும்,உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே”. பல மூப்பர்கள் மூலம் சபையின் தலைமைத்துவம் ஏற்படுத்தப்படும் முறைக்கு நாம் ஜான் கால்வின் மற்றும் ஜான் நாக்ஸ் (John Knox) அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். பிரஸ்பைட்டேரியனிஸத்தின் தந்தை (Father of Presbyterianism) என்று கருதப்படக்கூடிய ஜான் கால்வின் தான் திருச்சபையிலே ஒன்றுக்கும் அதிகமான மூப்பர்களால் சபை தலைமை அமைக்கப்படவேண்டும் என்று கற்பித்தார். இப்படி திருச்சபையின் நிர்வாகம் அமைக்கப்படுவதே வேதாகமம் போதிப்பது என்று நாங்கள் நம்புகிறோம் (1 தீமோத்தேயு 3:2-7, தீத்து 1:6-9). இதுவே ஸ்காட்லாந்து (Scotland) தேசத்தின் சீர்திருத்தவாதியான ஜான் நாக்ஸ் அவர்களுடைய போதனையாக இருந்தது. அவர் ஸ்காட்லாந்து தேசத்தை சுவிசேஷத்தினால் எழுப்பி, பிரஸ்பைட்டேரியன் முறைப்படி சபை நிர்வாகத்தை அமைத்தார். ஸ்காட்லாந்து தேசத்தின் இராணியான மேரியின் (Mary Queen of Scots) எதிர்ப்புகளை வெற்றிகரமாக மேற்கொண்டார். திருச்சபையில் ஒரு மனிதன் எல்லாவற்றின் மேலும் அதிகாரம் செலுத்துவதை வேதாகமம் போதிப்பதில்லை (1 பேதுரு 5:1-4). அப்படி அமைக்கப்படும் சபைகள், குறிப்பாக எபிஸ்கோபல் சபைகள் (Episcopal Churches), ஒரு மனிதனுடைய கைகளிலே எல்லா அதிகாரமும் இருப்பதால், சபை தவறாக பாதிக்கப்பட அதிகமான வாய்ப்பு உள்ளது. பிரஸ்பைட்டேரியன் நிர்வாக முறையில், அநேக மூப்பர்கள் இருப்பதால் (அநேக உதவிக்காரர்களும் அவர்களுக்கு கீழாகவும், அவர்களோடும் சேவை செய்வதால்), மேலும் அவர்கள் திருச்சபை மக்களால் தெரிந்துகொள்ளப்படுவதால், இந்த முறையானது, சபையை ஒழுக்கமாக நிர்வாகம் செய்யவும், சுவிசேஷத்தின் பணிகளை சிறப்பாக முன்னேற்றவும், ஏற்ற ஒரு அமைப்பாக இருக்கிறது.
சீர்திருத்தமும், சீர்திருத்த விசுவாச அறிக்கைகளும்
கிருபையின் கோட்பாடுகளைக் கொண்ட வலிமையான இறையியல் போதனைகளின் எழுப்புதலுக்கு நாம் சீர்திருத்தத்திற்கே கடமைப்பட்டிருக்கிறோம். கால்வினஸத்தின் ஐந்து கருத்துகள் (Five Points of Calvinism) 1618-1619 ஆம் ஆண்டிலே, டோர்ட் என்ற நகரத்தின் சினாடிலே எழுதப்பட்டது (Synod of Dordt). இது ஆர்மீனியன் (Armenian) கொள்கைகளைக் கொண்ட ரேமான்ஸ்டிரன்ட்ஸ் (Remonstrants) கூட்டத்தாருக்கு பதிலாக எழுதப்பட்டது. விசுவாச அறிக்கைகள் எழுதப்படுவதற்கு சீர்திருத்தம் ஒரு உகந்த நேரமாக இருந்தது. 1562 ஆம் ஆண்டு ஹாலந்து (Holland) நாட்டிலே ஹைடல்பர்க் காட்டகிஸம் (Heidelberg Catechism) மற்றும் பெல்ஜீக் கண்ஃபெஷன் (Belgic Confession) எழுதப்பட்டது. 1643-1649 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசத்தில், கடவுளுக்கு பயந்த வேத அறிவில் சிறந்த 121 பரிசுத்தவான்களை, ஆங்கில மொழியிலே விசுவாச அறிக்கை மற்றும் சிறிய ஞான வினா விடைகள் மற்றும் பெரிய ஞான வினா விடைகளை ஆலோசித்து தயாரிக்க கடவுள் உபயோகப்படுத்தினார். இதுவே வெஸ்ட்மினிஸ்டர் கண்ஃபெஷன் மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் சிறிய காட்டகிஸம் மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் பெரிய காட்டகிஸம் ஆகும் (Westminster Confession of Faith, Westminster Shorter Catechism, Westminster Larger Catechism). இந்த வெஸ்ட்மினிஸ்டர் பக்திமான்கள் ஆவிக்குரிய விதத்திலும் ஞானத்திலும் அறிவிலும் தலைசிறந்தவர்கள். இன்று பைபிள் பிரஸ்பைட்டேரியன் சபையும் இந்த சீர்திருத்த விசுவாச அறிக்கைகளை பின்பற்றுகிறது. திருச்சபை வரலாற்றிலேயே சிறந்த விசுவாச அறிக்கையாக கருதப்படுவது இதுவே (1689 ஆம் ஆண்டு எழுதப்பட்ட பாப்திஸ்து விசுவாச அறிக்கையும் (Baptist Confession of Faith) இதை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டது). இதை வாசியுங்கள், இதை புரிந்துகொள்ளுங்கள், இது நம்முடைய முற்பிதாக்கள் மூலமாக சீர்திருத்தத்தின் போது நடந்த ஆவிக்குள்ளான போராட்டத்தின் விளைவாக வந்ததே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  
இரத்தசாட்சிகளின் மரணமும், சீர்திருத்தத்தின் போதும் அதற்கு பின்னும் சத்தியத்திற்கான போராட்டமும்
இந்த நூற்றாண்டில், முந்தைய ஐந்து நூற்றாண்டுகளைக் காட்டிலும் கிறிஸ்துவுக்காக அநேகர் இரத்தசாட்சியாக மரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜான் ஃபாக்ஸ் (John Foxe) என்ற பரிசுத்தர் எழுதிய இரத்தசாட்சிகளின் புத்தகம் (Book of Martyrs) என்ற புத்தகத்திலே, சத்தியத்திற்காக போராடி தங்களுடைய ஜீவனையே கொடுத்த மனிதர்களின் விசுவாச அனலைப் பற்றிப் படிக்கிறோம். சீர்திருத்தத்தின் பிள்ளைகள் லாத்திமர், ரிட்லி, கிராண்மர், ஜான் ஹூப்பர், வில்லியம் டிண்டேல், ஜான் ரோஜர்ஸ் (Latimer, Ridley, Cranmer, John Hooper, William Tyndale, John Rogers) போன்றவர்களை மறக்கவேகூடாது. அதைப்போலவே 1572 ஆம் ஆண்டு புனித பர்த்தலோமேயு நாளில (St Bartholomew Day) கருணை இல்லாமல் அநேக பிராட்டஸ்ட்டண்ட் விசுவாசிகள் கொல்லப்பட்டது, 1641 ஆம் ஆண்டு அயர்லாந்து (Ireland)நாட்டிலே நடந்த கூட்டுக் கொலைகள், ஸ்பானியா நாட்டில் நடந்த கடும் விசாரணைகளும் கொலைகளும் (Spanish Inquisition), 1414 ஆம் ஆண்டு போகிமியா (Bohemia) நாட்டின் போதகர் ஜான் ஹுஸ் (John Huss) எரித்துக் கொல்லப்பட்டது, போன்ற சம்பவங்களை எதையும் மறந்துவிடக்கூடாது. சத்தியதிற்காக தங்களுடைய ஜீவனையே விட்ட இப்படிப்பட்ட விசுவாசமான மக்களைப் பற்றி படிக்கும் போது நம்முடைய இருதயம் வைராக்கியத்தோடும் தைரியத்தோடும் விசுவாசத்தோடும் பற்றி எரியட்டும். இங்கிலாந்து தேசத்திலே ராணி இரத்த மேரியின் (Queen Bloody Mary) குறுகிய நான்கு வருட கால ஆட்சியிலே 284 பரிசுத்தவான்கள் தங்களுடைய விசுவாசத்திற்காக மரணத்தினால் தண்டிக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (Henry Charles Moore, Through Flood and Flame [Sussex: Focus Christian Ministries Trust, n.d.]; 90). எபிரேயர் 11:33-34 வசனத்தின் படி வாழ்ந்து மரித்த மனிதர்களின் சரித்திரத்தை எப்பொழுதும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் விசுவாசத்தினாலே ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள்,அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். தங்களுடைய விசுவாசத்திற்காக தங்களுடைய ஜீவனையே கொடுத்து மரித்த விசுவாச சாட்சிகளை நாம் எப்பொழுதும் மறக்கவேண்டாம்.
எதிராளியும், அவனுடைய கோட்பாடுகளும் சூழ்ச்சி முறைகளும்
1 பேதுரு 5:8 சொல்வது, “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில்,உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்”. அவனுடைய சூழ்ச்சிகள் காலத்திற்கு தகுந்த மாதிரி மாறும், இணைந்து செயல்படுவது போல காணப்படும், ஆனால் அவனுடைய கோட்பாடுகளிலே மாற்றம் எதுவும் கிடையாது. மெய்யான விசுவாசிகளை குழப்பி அவர்களுடைய விசுவாசத்தை அழிப்பதே விசுவாச சகோதரர்களின் மீது குற்றம் சுமத்தும் பிசாசினுடைய நோக்கம். நாம் சிறப்பு வாய்ந்த ஆனால் அபாயமான காலங்களிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீர்திருத்தம் நமக்கு ஆவிக்குரிய காரியங்களை சரியான கண்ணோட்டத்தோடு பார்க்க உதவியாக இருக்கிறது. சமாதானம் மற்றும் ஒற்றுமை என்ற பெயரில் நம்முடைய எதிராளி திறந்த கைகளோடு வருகிறதால், அவன் இன்று அதிக கொடூரமாக செயல்படுகிறான். இந்த விட்டுக்கொடுக்கும் உலகத்திற்கு சமரசம் என்ற போர்வையில் வருகிறவனை, ஏற்கனவே சீர்திருத்தம் அம்பலப்படுத்தியது. பலமான கோட்பாடுகள் மற்றும் வேதாகம நம்பிக்கைகளை விட்டுவிட்டு, உலக திருச்சபைகளின் மன்றம் (World Council of Churches) போன்ற உலக ஒற்றுமை சபைகளிலே ஈடுபடாதீர்கள். நாம் எப்பொழுதும் ஜாக்கிரதையாக விழித்திருக்கவேண்டும். அதற்கு ஒரு வழியானது, நம்முடைய புராட்டஸ்ட்டண்ட் சீர்திருத்தத்தையும் அதிலே எழுப்பப்பட்ட கிறிஸ்தவ போதனைகளையும் நாம் நினைவில் கொள்வதாகும். எரேமியா 15:16 சொல்வது, “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது”. கிறிஸ்துவின் மூலம் விசுவாசத்தினால் மட்டுமே நியாயப்படுத்தப்படுகிறோம் என்ற தூய்மையான சுவிசேஷமானது நமக்கு மிகவும் அருமையானது. இதை போலியான சமாதானம் மற்றும் ஒற்றுமைக்கு விட்டுக்கொடுத்து மாற்றிக்கொள்ள முடியாது. இந்தப் போலி தான் விட்டுக்கொடுக்கும் ஆவியிலே நிறைந்து இருக்கும் இன்றைய திருச்சபைக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது, இதுவே பொதுவாக சபைகளிலும் உலகத்திலும் பிரபலமானதாக இருக்கிறது.
மிகுந்த உள்நோக்கத்துடன் இருக்கும் டேவிட் வெல்ஸ் அவர்களின் விமர்சனத்தை இங்கு கவனியுங்கள்:
கடவுள
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum