தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சங்கீதங்களின் கலைச்சொற்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சங்கீதங்களின் கலைச்சொற்கள் Empty சங்கீதங்களின் கலைச்சொற்கள்

Tue Aug 20, 2013 7:17 am
(சங்கீதங்களில் இடம்பெற்றிருக்கும் (அ) சேலா (ஆ) இகாயோன் (இ) சிகாயோன் (ஈ) மிக்தாம் (உ) மஸ்கீல் (ஊ) ஆரோகணம் போன்ற கலைசொற்கள் எதற்காக இடம்பெற்றுள்ளன. அவை எவற்றை உணர்த்துகின்றன. இக்கட்டுரை அதனை ஆராய்கின்றது. )

எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாடு, கி.மு 2ம் நூற்றாண்டளவில் கிரேக்கத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டபோது, சங்கீதப் புத்தகத்தில் உள்ள இசையோடு சம்பந்தப்பட்ட பல சொற்கள் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்படாமல், அவற்றின் எபிரேய உச்சரிப்பு முறை கிரேக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனால், பிற்கால மொழிபெயர்ப்புகளிலும் இச்சொற்கள் மொழிபெயர்க்கப்படாமல், எபிரேய உச்சரிப்பு முறையிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. கி.மு. 586 இல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போன யூதர்கள் அங்கிருந்த காலத்தில் (70 வருடங்கள்) தங்களுடைய மொழியான எபிரேயத்தை மறந்து, பாபிலோனில் பேசப்பட்ட “அரமிக்“ என்னும் மொழியையே தங்களுடைய பேச்சுமொழியாகக் கொண்டிருந்தனர். இதனால் கிரேக்கத்திற்கு பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்தவர்கள், எபிரேய மொழியில் இசையோடு சம்பந்தப்ப்ட்ட சொற்களின் சரியான அர்த்த்தை அறியாதவர்களாக அவற்றை எபிரேய உச்சரிப்புக்கு ஏற்றவிதத்தில் கிரேக்கத்தில் எழுதியுள்ளனர். இதனால், பிற்காலத்தில் வேதாகமகால எபிரேய மொழியைக் கற்று தேர்ந்தவர்களின் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டே எபிரேய மொழியிலான இக்கலைச்சொற்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. 



(அ) சேலா (selah)


சங்கீதப்புத்தக்தில் 39 சங்கீதங்களில் 71 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ள இசையோடு சம்பந்தப்பட்ட ஒரு எபிரேயப் பதம் சேலா (selah) என்பதாகும். (1) சங்கீதப் புத்தகத்தில் பல தடவைகள் இடம்பெறும் இப்பதம், ஏனைய கலைச் சொற்களைப்போல சங்கீதங்களின் தலைப்புக்களில் சேர்க்கப்படவில்லை. சங்கீதங்களின் வசனங்களுக்கு இடையில் குறிப்பிடப்பட்டிருக்கும்  இப்பதம் '“இசையை மாற்றுவதற்கான ஒரு குறியீடாக“ அல்லது “இடையில் மீட்டப்படும் இசை“ பற்றிய குறிப்பாக உள்ளது. மேலும், பாடப்படும் சங்கீதத்தின் வசனத்திற்கு அல்லது வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக அதை மறுபடியும் பாடும்படி அறிவிக்கும் குறியீடாகவும் இது இருந்துள்ளது. (2)

“சேலா என்னும் பதம் “உயர்த்துதல்“ என்று அர்த்தம் தரும் எபிரேயப் பதத்திலிருந்து உருவாகியுள்ளது. இதன்படி, சேலா என்பது உரத்த சத்தத்துடன் இசையை மீட்டும்படியான குறியீடாக உள்ளது(3). சில வேத ஆராய்ச்சியாளர்கள், இப்பதம் “குனிதல்“ என்று அர்த்தந்தரும் அரமிக் மொழிப் பதத்துடன் தொடர்புற்றுள்ளதாக கருதுகின்றனர். இவர்கள் “மிஷ்னா“ என்னும் யூதர்களுடைய மதநூலில் அன்றாட பலிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டே இத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர் (4) அன்றாட பலிகள் செலுத்தப்படும்போது சங்கீதங்கள் பாடப்படுவதோடு, பாடல் நிறுதப்படும் இடங்களில் எக்காளம் ஊதப்படும் அச்சந்தரப்பத்தில் ஆலயத்தில் கூடியிருக்கும் மக்கள் முகங்குப்புற தரையில் குனிந்து தேவனை வழிபடுவார்கள். இத்தகைய அறிவிப்பைக் குறிக்கும் குறியீடாக “சேலா“ இருப்பதாக சில தேவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்ற போதிலும் (5) இசையை மாற்றும்படியான அல்லது இசையின் சத்தத்தை அதிகரிக்கும்படியான ஒரு இசைக் குறியீடாகவே “சேலா“ என்னும் பதம் சங்கீதப் புத்தகத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது. (6)



(ஆ) இகாயோன் (Hihhaion)


சங்கீதம் 9:16 இல் “சேலா“ என்னும் இசைக் குறியீட்டுக்கு முன் “இகாயோன்“ (Hihhaion) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சங்கீதம் 19:14 லும் 92:2 இலும் “தியானம்“ என்னும் அர்த்தத்துடன் இப்பதம் மொழிபெயர்க்கப்பட்டு சங்கீதத்தின் வசனத்தில் உள்ளது. இதிலிருந்து, இப்பதம் இசைக் குறியீடாக உபயோகிக்ப்படும்போது “தியானத்திற்கு ஏற்ற இசையை மீட்டும்படியான அறிவுறுத்தலாக“ இருப்பதாகக் கருதப்படுகின்றது. (7) எனினும், இச்சங்கீதங்களில் இப்பதம் உண்மையிலேயே இசைக்குறியீடாக உள்ளதா அல்லது சங்கீதத்தின் ஒரு வார்த்தையாக உபயோகிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியமுடியாமல் உள்ளது.


(இ) சிகாயோன் 

ஏழாம் சங்கீதத்தின் தலைப்பில் “சிகாயோன் என்னும் சங்கீதம்“ என்னும் வார்த்தைகள் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இதேவிதமாக ஆபகூக் 1:1இல் “ஆபக்கூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “சிகாயோன் பாடின வி்ண்ணப்பம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “சிகாயோன்“ என்னும் பதம் “தவறுசெய்தல்“ அல்லது“அலைந்து திரிதல்“ என்று அர்ந்தந் தரும் எபிரேயப் பதத்திலிருந்து உருவாகியுள்ளதாகக் கருதப்படுகிறது. எனினும், சிகாயோன் சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் 7ம் சங்கீதமும் ஆபகூக் 3ம் அதிகாரமும் பாவமன்னிப்பிற்காக மன்றாடும் சங்கீதமாக இராதமையினால் உணர்ச்சிகள் அலைமோதும் விதத்தில் பாடப்படும் பாடல்களைப் பற்றிய குறிப்பாக சிகாயோன் இருப்பதாக வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (Cool. அக்கால அரேபிய மற்றும் அசீரிய பாடல்களிலும் இவ்விதமாக மனஉணர்வுகளைத் தூண்டும் விதத்தில் பாடல்கள் இருப்பதை இதற்கான ஆதாரமாக இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். (9)



(ஈ) மிக்தாம்


சங்கீதப் புத்தகத்தில் 56 முதல் 60 வரையிலான சங்கீதங்கள் “மிக்தாம் என்னும் சங்கீதம்“ என்று அவற்றின் தலைப்புகள் அறியத் தருகின்றன. ஆங்கிலத்தில் “ஜேம்ஸ் அரசனுடைய மொழிபெயர்ப்பை“(10) அடிப்படையாகக் கொண்டு 16ம் சங்கீதத்தின் தலைப்பில் மிக்தாம் என்பதோடு “பொற்பணதிக்கீதம்“ என்னும் வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது (11) ஆனால்,மிக்தாம் என்னும் பதம் மூலமொழியில் “பொன்“ (தங்கம்) என்னும் பதத்துடன் அல்ல “மூடுதல்“ என்று அர்த்தந் தரும் அங்காடிய மொழிப்பதத்திலிருந்தே உருவாகியுள்ளது(12). இதனால் சில வேத ஆராய்ச்சியாளர்கள் இச்சங்கீதங்களை பாவத்திற்கான பிராய்ச்சித்தப் பலியோடு சம்பந்தப்பட்ட பாடல்களாக கருதுகின்றனர். (13). ஏனென்றால் அக்காலத்தில் பாவத்திற்கான பலி செலுத்தப்பட்டு பாவங்கள் மன்னிக்கப்படுவதைக் குறிப்பிட “பாவங்கள் மூடப்படுதல்“ என்னும் சொற்பிரயோகத்தையே உபயோகி்த்து வந்தனர் (14) ஆனால் மிக்தாம் என்னும் சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டிருப்பவைகள், பாவத்தைப் பற்றியவையாக இராமல், சங்கீதக்காரன் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில் துயரத்துடன் இருப்பதைப் பற்றிய விவரணங்களைக் கொண்டிருப்பதனால் இவை “உதடுகள் மூடப்பட்ட நிலையில்“ தாவீது மௌனமாகப் பாடிய படல்களாகக் கருதப்படுகிறது. (15) எனவே, “மித்தாம் என்னும் சங்கீதம்“ என்னும் தலைப்பைக் கொண்டுள்ள சங்கீதங்கள் “மௌனமான ஜெபங்களாகவே“ உள்ளன (16) ஜெபங்கள் உரத்த சத்தமாக மட்டுமல்ல மௌனமாகவும் ஏறெடுக்கப்பட்ட முடியும் என்பதை இச்சங்கீதங்கள் அறியத் தருகின்றன. 



(உ) மஸ்கீல் 


சங்கீதப் புத்தகத்தில் 12 சங்கீதங்கள் (அதாவது 32, 42, 44, 52, 53, 55, 74, 78, 88, 89, 142 எனும் சங்கீதங்கள்)  “மஸ்கீல் என்னும் சங்கீதம்“ என்னும் தலைப்பைக் கொண்டுள்ளன. “மஸ்கீல்“ என்னும் பதம் “ஞானவானாக்கு“ அல்லது “புத்திசாலி“ அல்லது திறமையுடனிருத்தல்“ என்னும் அர்த்தங்களைக் கொண்ட பதத்திலிருந்து உருவாகியுள்ளது. (17) இதனால் மஸ்கீல் என்னும் சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள சில சங்கீதங்களின் தலைப்பில் “மஸ்கில் என்னும் போதக சங்கீதம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் “ஞான சங்கீதங்களே“ (18) எபிரேய மொழியில் மஸ்கீல் என்னும் சங்கீதம் என்னும் தலைப்பைக் கொண்டுள்ளது.


(இவ்வாக்கமானது Dr. M.S.வசந்தகுமார் அவர்கள் எழுதிய சங்கீதங்களின் சத்தியங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு : இலங்கை வேதாகமக் கலலூரி)


 நன்றி: ஜீவபாதையில்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சங்கீதங்களின் கலைச்சொற்கள் Empty Re: சங்கீதங்களின் கலைச்சொற்கள்

Tue Aug 20, 2013 7:19 am
(ஊ) ஆரோகணம் 


சங்கீதப் புத்தகத்தில் 120 முதல் 134 வரையிலான சங்கீதங்கள் ஆரோகண சங்கீதங்கள் என்னும் தலைப்புடன் உள்ளன. இச்சங்கீதங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் தனியான ஒரு புத்தகமாகவும் ஆரோகண சங்கீதம் என்னும் தலைப்பு ஆரம்பத்தில் முழுப்புத்தகத்திற்கும் பொதுவான தலைப்பாகவும் இருந்திருக்க வேண்டும் என்றும் பிற்காலத்தில் இச்சங்கீதங்கள் ஏனைய சங்கீதங்களுடன் சேர்க்கப்பட்ட காலத்திலேயே ஒவ்வொரு சங்கீதத்திற்கும் தனித்தனியாக இத்தலைப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (18)

ஆரோகண சங்கீதங்கள் ஆரம்பத்தில் ஒன்றாகத் தொகுக்கப்படதற்கான காரணம் யாது என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. சிலர் இச்சங்கீதங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு இவை ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இச்சங்கீதங்களில் “படிமுறையிலான சமதன்மை' (Step-like Parallelism) காணப்படுவதை கருத்திற் கொண்டே இச்சங்கீதங்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டு ஆரோகண சங்கீதம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்பதே இவர்களின் தர்க்கமாகும். இச்சங்கீதங்களில், ஒரு வரியில் உள்ள வார்த்தையை எதிரொலிக்கும் விதத்தில் இன்னுமொரு வார்த்தை அடுத்த வரியில் உள்ளதாகவும், அதை எதிரொலிக்கும் இன்னுமொரு வார்த்தை மூன்றாவது வரியில் இருப்பதாகவும் கூறும் இவர்கள், இவ்விதமாக ஒரு படிமுறையின் அடி்பபடையில் இச்சங்கீதங்களின் வரிகள் அனைத்தும் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால், இத்தகைய ஒழுங்குமுறையைக் கருத்திற் கொண்டே 15 சங்கீதங்கள் ஆரோகண சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சகல சஙகீதங்களிலும் இல்லை. அத்தோடு, இத்தகைய ஒழுங்கு முறையை நாம் வேறு சங்கீதங்களிலும் அவதானிக்கலாம். 

சில வேத ஆராய்ச்சியாளர்கள் ஆரோகணம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதத்தை “மேன்மைப்படுத்துதல்“ என்னும் அர்த்தத்தில் மொழிபெயர்த்து, இச்சங்கீதங்கள், தேவனை மேன்மைப்படுத்திப் புகழும் பாடல்களாக இருப்பதனாலேயே தனியான ஒரு தொகுப்பாக உள்ளதாகக் கூறுகின்றனர். (19) ஆனால், ஆரோகண சங்கீதங்களாகக் குறிப்பிடப்படிருக்கும் பாடல்களில் 15 சங்கீதங்களும், தேவனை மகிமைப்படுத்தும் பாடல்களாக இல்லை. இவற்றில வேறு விடயங்களும் இருப்பதனால் இவ்விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது. உண்மையில் ஆரோகணம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்படுள்ள பதம் “ஏறுதல்“ என்னும் அர்த்தமுடையது. அதாவது இசையில் “சுரவரிசையில் ஏறுவதைக்“ குறிக்கும் பதமே உபயோகிக்கப்பட்டள்ளது. பூகோள ரீதியாக எருசலேம் நகரம் உயரமான இடத்தில் இருப்பதனால், அந்நகரத்திற்கு வேறிடங்களிலிருந்து வருகின்றவர்கள் தாழ்வான இடத்திலிருந்து ஏறிவர வேண்டியதாயிருந்தது. இதனால் சில வேத ஆராய்ச்சியளர்கள், “ஏறுதல்“ என்பதை அடிப்படையாகக் கொண்டு, யூதர்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து தங்களுடைய சொந்த நாட்டுக“கு வரும்போது பாடிய பாடல்களாக இவற்றை கருதுகின்றனர். ஆனால், ஆரோகண சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் சில சங்கீதங்கள் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போவதற்கு முற்பட்ட காலத்தைய சம்பவங்களோடு தொடர்புற்றிருப்பதனால் இவ்விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. 

யூதர்களுடைய பாரம்பரிய மதநூலான மிஷ்னா இச்சங்கீதங்களை எருசலேம் தேவாலயத்தோடு தொடர்படுத்தியுள்ளது. எருசலேம் தேவாலயத்தில பெண்களின் பிரகாரத்தில் இருந்து இஸ்ரவேலரின் பிரகாரத்திற்குச் செல்வதற்குப் 15 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். இந்தப் படிக்கற்களின் ஏற்றத்தையே ஆரோகணச் சங்கீதங்கள் குறிப்பதாகக் கருதும் மிஷ்னா இச்சங்கீதங்கள் இப்பதினைந்து படிக்கட்டுக்களிலிருந்தும் கூடாரப் பண்டிகையின் முதல்நாள் லேவியர்களினால் பாடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (20) ஆரோகணச் சங்கீதங்களை எண்ணாகமம் 6:24-26 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆரோனின் ஆசீர்வாதத்தோடு தொடர்புபடுத்தும் சில வேத ஆராய்ச்சியாளர்கள், இவ்வாசீர்வாதங்கள் ஆலயத்தின் முன் வாசலில் இருக்கும் படிகளிலிருந்து சொல்லப்பட்டதாக கருதுகின்றனர். (21) எனினும், ஆரோகணச் சங்கீதங்களில் 124ம், 126ம், 131ம் சங்கீதங்கள் எவ்விதத்திலும் ஆரோனுடைய ஆசீர்வாதத்தோடு தொடர்புபடுத்த முடியாத வசனங்களையே கொண்டிருப்பதனால் இவ்விளக்கமும் திருப்தியற்றதாகவே உள்ளது. 

ஆரோகண சங்கீதங்களில் 132ம் சங்கீதத்தைத் தவிரந்த ஏனையவைகள் அனைத்தும் சிறிய பாடல்களாகும். இவை அனைத்தும் சீயோனை (எருசலேமைப்) பற்றிய சிந்தையுடன் எழுதப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். 15 ஆரோகண சங்கீதங்களில் 125, 126, 128, 129, 132, 133, 134 என்னும் 7 சங்கீதங்களில் சீயோனைப் பற்றிய குறிப்பு உள்ளது. 122ம் சங்கீதத்தில் எருசலேம் என்ற பெயர் உள்ளது. சங்கீதங்கள் 121, 123, 124 என்பவற்றில் சீயோனுடைய தொடர்புடைய சொற்பிரயோகங்கள் உள்ளன. 130ம், 131ம் சங்கீதங்கள் எருசலேமிலுள்ள தேவனை வழிபடும் மக்களுக்கான அழைப்பைக் கொண்டுள்ளன. 127ம் சங்கீதங்கீதத்தில் “வீடு“ “நகரம்” என்னும் இரு பதங்களும் பிற்காலச் சேர்க்கையாகக் கருதப்படுகின்றது. இவற்றுக்க்குப் பதிலாக ஆரம்பத்தில் ”ஆலயம்“, எருசலேம் என்னும் பதங்களே இருந்தாக வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதிலிருந்து இச்சங்கீதங்கள் அனைத்தும் சீயோனைப (எருசலேமைப்) பற்றிய பாடல்களாக இருப்பதை அறிந்து கொள்கின்றோம் (22)

ஆரோகண சங்கீதங்கள் சீயோனைப் பற்றிய சங்கீதங்களாக இருப்பதனால் இவை, பண்டிகைகளுக்காக (23) தூர இடங்களிலிருந்து எருசலேமுக்கு வரும் யூதர்கள், வழியில் எருசலேமையும் தேவனையும் பற்றிய சிந்தித்தவர்களாகப் பாடும் சங்கீதங்களாக உள்ளன. (24) சில வேத ஆராய்ச்சியாளர்கள், பண்டிகைக்காக வரும் பக்தர்கள் ஊர்வலமாக எருசலேம் தேவாலயத்திற்கு ஏறிவரும்போது பாடும் பாடல்களாக இவற்றைக் கருகின்றனர். (25) பாடல்களுடனான இத்தகைய ஒரு ஊர்வலம் பற்றி ஏசாயா 30:29 குறிப்பிடப்பட்டுள்ளது. (26) எனவே, ஆரோகண சங்கீதங்கள் பண்டிகைக்காக வரும் பக்தர்கள் பாடும் பாடல்களாகவே இருந்துள்ளதை மறுப்பதற்கில்லை. 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum