தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
துர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Today at 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?Today at 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் !*Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்!!Sun Jan 21, 2018 7:21 pmKavithaMohanதைராய்டு நோயை குணமாக்கும் "கண்டங்கத்திரி"Sat Jan 20, 2018 3:39 pmசார்லஸ் mcகாலக் கொடுமை இதுதானோSat Jan 20, 2018 1:01 pmசார்லஸ் mcஉங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?Sat Jan 20, 2018 10:42 amசார்லஸ் mcவேதத்தில் உள்ள மாடுகள்Sat Jan 20, 2018 10:29 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
3 Posts - 30%
Keywords

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
February 2018
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728    

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பண்டித இரமாபாய்

on Mon Apr 01, 2013 11:21 pm
தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு
வாழும் உரிமை இந்திய பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட
ஒரு காலத்தில், 1858ம் ஆண்டில் பண்டித இரமாபாய் பிறந்தார். பெண்களின்
உரிமைக்காகப் போராடுவதற்காக தேவன் அவரை அழைத்தார்.

பண்டித இரமாபாய் வாழ்ந்து வந்த காலத்தில்
இந்திய சமுதாயத்தில் அநேகத் தீய பழக்கங்கள் பின்பற்றபட்டு வந்தன. அவைகளில்
சில, சிறுவர், சிறுமிகளின் திருமணம். பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுதல்,
பெண்களை அடிமைகளைப்போல் நடத்துதல் போன்றவையாகும். இவைகளில் மிகவும்
மோசமானது சத்தி அல்லது உடன்கட்டையேறுதல் என்ற கொடிய பழக்கமாகும். தங்களது
கணவன்மார்கள் மரித்தபிறகு, உயிரோடு வாழும் உரிமை பெண்களுக்கு
மறுக்கப்பட்டது. பண்டித இரமாபாய் அப்படிப்பட்ட ஒரு காலத்தில் 1858ம்
ஆண்டில் பிறந்தார். பெண்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக தேவன் அவரை
அழைத்தார். அவர்களுடைய தந்தையாகிய ஆனந்தசாஸ்திரி டோங்ரே மஹாராஷ்ராவில், ஒரு
வைராக்கியமான, உயர்குல இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தக் குடும்பம்
அவர்களது பக்தி, மதப்பற்று போன்றவற்றினால் அநேகரால் அறியப்பட்டிருந்தது.
புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்வதும், புனித நதிகளில் ஸ்நானம்
செய்வதும், அவர்களது பழக்கமாக இருந்தது. ஆனந்த சாஸ்திரி சமஸ்கிருத மொழியைச்
சிறந்த முறையில் கற்றிருந்தார். அவர் வேதங்களைச் சிறந்தமுறையில்
கற்றுத்தேர்ந்திருந்தார். இந்துமதத்தைப் பின்பற்றி வருகிறவர்களுக்கு அவர்
வேதத்தைக்குறித்த விளக்க உரைகளை நடத்துவார். தன்னுடைய மனைவிக்கும்,
மகளுக்கும் அவர் வேதங்களைக் கற்றுக்கொடுத்தார். இரமாபாய் மிகுந்த
திறமையுடன் வேதங்களைக் கற்றார்கள்.

ஆனந்த சாஸ்திரியின் குடும்பம்
செல்வச்செழிப்புள்ளதாக இருந்தது. ஆனால் அவர்கள் ஏழையான
நிலையிலிருந்தவர்களுக்கும், பக்தர்களுக்கும் தாராள மனப்பான்மையுடன்
தங்களுடைய பணத்தைக் கொடுத்தால், அவர்களுடைய செல்வம் இருந்த இடம் தெரியாமல்
போய்விட்டது. அந்தக் குடும்பம் மிகவும் ஏழ்மையான ஒரு நிலையை அடைந்தபொழுது
நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. ஆனந்த சாஸ்திரியின் குடும்பத்தினர் தங்களது
அன்றாட செலவிற்காக
ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலை
ஏற்பட்டது. அவர்கள் உயர்குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபடியால் தங்களது
செலவிற்காக கீழ்த்தரமான வேலைகளைச் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
தங்களுடைய வாழ்க்கையை மிகுந்த கஷ்டத்துடன் நடத்துவதற்காக இந்து மத
சம்பந்தமான ஊழியம் செய்யும் அவர்கள் புனித ஸ்தலங்களுக்கு நூற்றுக்கணக்கான
மைல்கள் தூரத்திற்கு நடந்து செல்லவேண்டியதாக இருந்தது. அவர்கள்
கூறுகிறவைகளைக் கேட்கும்படி வருகிறவர்களுக்கு அவர்கள்
சுலோகங்களைக்கூறி, வேதங்களைக் கற்றுக்கொடுத்தனர். தங்களுக்குப் பிச்சையாகவும்,
காணிக்கைகளாகவும் கொடுக்கப்பட்ட பணத்தை வைத்து அவர்கள்
தங்களுடைய வாழ்க்கையை நடத்திவந்தனர். எனினும், பஞ்சத்தினால் அவர்களுடைய
குடும்பத்தில் கொடூரமான விளைவுகள் ஏற்பட்டன. ஒருவர்பின் ஒருவராக,
இரமாபாயின் தந்தை, தாய், சகோதரிகள் ஆகியோரனைவரும் பட்டினியினால்
மரித்துவிட்டனர்.

இரமாபாயும், அவர்களுடைய சகோதரனும் தனிமையில்
விடப்பட்டனர். அவர்களிருவருக்கும் வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருந்தது.
அவர்கள் இருந்த நிலைமை மிகவும் மோசமானதால், தாங்கள் தற்கொலை
செய்யவேண்டுமென்று அவர்கள் இருவரும் எண்ணினர். தேவனுடைய
சுத்தக்கிருபையினால் மட்டுமே, அவர்களிருவரும் மரணத்திலிருந்து
காக்கப்பட்டனர். 1878ம் ஆண்டில் இரமாபாயும், அவர்களுடைய சகோதரனும்
கல்கத்தாவிற்கு வந்துசேர்ந்தனர். இரமாபாய், சமஸ்கிருத மொழியில் விளக்க
உரைகளை நடத்தினார்கள். மிகுந்த ஞானத்துடன் ஒரு வாலிபப்பெண் நடத்திய விளக்க
உரைகளைக் கேட்பதற்காக அநேகர் கூடினர். சமஸ்கிருத மேதைகள்கூட அவர்களுடைய
விளக்க உரைகளைக் கேட்பதற்காக வந்தனர். அவர்கள்
பண்டிதர் என்ற பட்டத்தை இரமாபாய்க்குக் கொடுத்தனர்.

இரட்சிப்பு:
கல்கத்தாவிலிருந்த கிறிஸ்தவ விசுவாசிகளுடன் தொடர்புக்கொள்ளும்படியான ஒரு
வாய்ப்பு, இரமாபாய்க்குக் கிடைத்தது. கிறிஸ்தவ ஆராதனையும், ஊழியமும்
அவர்களை அதிக அளவில் கவர்ந்தன. தனது 22ம் வயதில் வங்காளத்தைச் சேர்ந்த,
சிறந்த முறையில் கல்வி கற்றிருந்த ஒரு வாலிபனை அவர்கள் திருமணம்
செய்துகொண்டார்கள். அவர் ஒரு சட்ட நிபுணராக இருந்தார். தங்களுடைய திருமண
வாழ்க்கையை இவர்கள் அஸ்ஸாமில் ஆரம்பித்தனர். அவர்களது திருமணம் நடைபெற்ற
19வது மாதத்தில் அவர்களுடைய கணவன் காலராவினால் பாதிக்கப்பட்டு,
மரித்துவிட்டார். அவருடைய திருமண வாழ்க்கை முழுவதிலும் அவர் தனது மனைவியின்
கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராகச் செயல்பட்டு வந்தார். இரமாபாய் தனது
மகளாகிய மனோராமாவுடன் கல்கத்தாவைவிட்டுப் புறப்பட்டு, பூனாவிற்குச்
சென்றார்கள். பூனாவில் பாப்டிஸ்ட் மிஷனரியாகிய திரு.ஆலனை அவர்கள்
சந்தித்தார்கள். திரு.ஆலன் கிறிஸ்துவைப்பற்றி இரமாபாய்க்குக் கூறினார்.
ஒருநாள் திரு.ஆலன் ஆதியாகமம் முதலாம் அதிகாரத்திலிருந்து
சிருஷ்டிப்பின் சம்பவங்களை இரமாபாய்க்கு கூறினார். வேதங்களில் தான்
படித்திருந்த சிருஷ்டிப்பின் சம்பவங்கள் இவற்றிலிருந்து எவ்வளவு
மாறுபட்டவைகளாக இருக்கின்றன என்பதை அவர் கண்டார். இது வேதத்தின்மீது
அவர்களுக்கு இருந்த ஆர்வத்தைத் தூண்டியது. ஹர்போர்ட் என்ற இன்னொரு மிஷனரி,
மராத்திய மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை
இரமாபாய்க்கு கொடுத்து, அதை வாசிக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
கிறிஸ்துவைக்குறித்து இன்னும் அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற வாஞ்சை நாளுக்கு
நாள் அவர்களுக்குள் அதிகரித்துக்கொண்டே வந்தது. 1833ம் ஆண்டில்
காலத்திற்குச் சமஸ்கிருத மொழியை கற்றுக்கொடுத்தார்கள். 1886ம் ஆண்டில்
அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

இந்தியாவில் பெண்கள் இருந்த நிலை:
சிறுவர்-சிறுமியர்களின் திருமணங்கள் சமுதாயத்தில் மிகுந்த வேதனையை
விளைவித்தன. சிறுவயதிலேயே திருமணம் செய்திருந்தவர்களின் கணவன்மார்கள்
மரிக்கும்போது, அவர்கள் விதவைகளாகிவிடுகின்றனர். அப்படிப்பட்ட சிறுமிகள்
அநேகக் கஷ்டங்களை அநுபவிக்க வேண்டியதாகி விடுகிறது. இப்படிப்பட்ட
விதவைகளைப் பராமரிப்பதற்காக
சாரதா சதன் என்ற ஸ்தாபனத்தை இரமாபாய் ஏற்படுத்தினார்கள். அந்த இல்லத்தின் தேவைகளுக்காக அவர்கள் கர்த்தரையே முழுவதுமாகச் சார்ந்திருந்தார்கள்.
தாழ்மை, அன்பு, பொறுமை, தன்னலமற்ற மனப்பான்மை
ஆகியவற்றுடன் அவர்கள் மனித சமுதாயத்திற்குச் செய்த தொண்டுகள் அநேகரைக்
கிறிஸ்துவின் பக்கமாகக் கவர்ந்தன. மக்களுடைய இருதயங்களிலிருந்த காயங்களைக்
குணமாக்கும் விதத்தில் அவர்களுடைய தொடுதல் இருந்தது. பல விதமான கைவேலைகளைச்
செய்யும் கலையை அந்த ஸ்தாபனத்திலிருந்த மக்களுக்கு அவர்கள்
கற்றுக்கொடுத்தார்கள்.

முக்தி மிஷன்: கைவிடப்பட்டவர்களின் இல்லமாக இயங்கிவந்த
சாரதா சதன் அநேகப் பெண்களால் நிறைந்திருந்தது.
முதலாவதாக, இரண்டு வாலிபப் பெண்கள், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு,
ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டனர். பிறமதங்களைச் சேர்ந்தவர்கள்
இதைக்குறித்து கேள்விப்பட்ட பொழுது, தாங்கள் அதுவரை அந்த இல்லத்திற்குச்
செய்துவந்த நிதியுதவியை நிறுத்திவிட்டனர்.

மனிதர்களின் மூலமாக வந்த உதவி
நின்றுபோனபொழுது, தேவனை எவ்வாறு சார்ந்திருப்பது என்பதை இரமாபாய்
கற்றுக்கொண்டார்கள். அப்படிப்பட்டவேளைகளில் அவர்கள் ஹட்ஸன் டெய்லர்,
ஜியார்ஜ் முல்லர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை வாசித்து விசுவாசத்தில்
வளர்ச்சியடைந்தார்கள். இல்லத்திற்கு ஒவ்வொரு நாளும் தேவையாக இருந்த
மன்னாவை, தேவன் இடைவிடாமல் கொடுத்து வந்தார். 1895-1896ம் ஆண்டில் அநேகர்
பட்டினியால் மரித்தனர். நாடு முழுவதிலும் மிகக்கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.
ஆனால் தான் நடத்தி வந்த இல்லத்திலிருந்த 300 சிறுவர்-சிறுமிகளைப்
பராமரிப்பதற்கு இரமாபாயால் இயன்றது. எல்லாச் சிறுவர்களும் தங்குவதற்கு
சாரதா சதனில் போதுமான அளவிற்கு இடமில்லாமலிருந்தது. எனவே
பூனாவிலிருந்து 48 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள
கோர்கோன் என்ற இடத்தில் ஒரு நிலம் வாங்கப்பட்டு, ஒரு புதிய இல்லம் அமைக்கப்பட்டது. அதற்கு
முக்தி என்று பெயரிடப்பட்டது. இரண்டு இல்லங்களும்
வளர்ச்சியடைந்தன. விரைவில் இந்த இரு இல்லங்களிலும் 2000 சிறுவர்-சிறுமிகள்
தங்கியிருந்தனர். இங்கிருந்தவர்களுக்கு தையல், நெசவு, பால் பொருட்கள்
தயாரித்தல், கயிறு திரித்தல், கேக் செய்தல், தோட்ட வேலை,
தானியங்களிலிருந்து மாவு தயாரித்து பலவிதமான உணவுவகைகளைச் செய்தல் போன்ற
தொழில்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த இரண்டு இல்லங்களும்
வாலிபப்பருவத்திலிருந்த விதவைகளுக்கு அடைக்கலம் அளித்தன. சிலவேளைகளில் இந்த
விதவைகளின் உறவினர்களின் மூலமாக வந்த பிரச்சனைகளை இரமாபாய் சந்திக்க
வேண்டியதாக இருந்தது. அப்படிப்பட்ட பிரச்சனைகளை தேவனுடைய வழிநடத்துதல்களின்
மூலமாகத் தனக்கு கிடைத்த உதவியுடன் இரமாபாய் எந்த பிரச்சனைகளை
தீர்ப்பார்கள். அவர்கள் 100 பேரை வேலைக்கு நியமித்து, முக்தி மிஷனை
மிகச்சிறந்த விதத்தில் இயக்கிவந்தார்கள். தான் கர்த்தரிடத்திலிருந்து
விசேஷித்த ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ்ந்ததாகவும், தன்னுடைய எல்லா விதமான
தேவைகளுக்கும் தேவனைச் சார்ந்திருப்பது ஒரு சிலாக்கியம் என்றும் இரமாபாய்
கூறினார்கள்.

தன்னுடைய பராமரிப்பின் கீழிருந்த பிள்ளைகளை
அவர்கள் கிறிஸ்தவப் பண்பாட்டில் வளர்த்து, அவர்கள் எளிமையான வாழ்க்கை
முறையைப் பின்பற்றும்படி வழிநடத்தினார்கள். முக்தி மிஷனானது, பெண்களின்
விடுதலைக்கான அக்கினியைப் பற்றியெரியச் செய்து 1922ம் ஆண்டில் பெண்
கல்விக்கான ஆர்வத்தைத் தட்டியெழுப்பியது. இரமாபாய் மரித்தார்கள்.
அவர்களுடைய வாழ்க்கை, பிறருக்காக முழுவதுமாக எரிந்து மறைந்த ஒரு
மெழுகுவர்த்தியைப்போல் இருக்கிறது. இரமாபாய் இறுதியாகக் கூறிய வார்த்தைகள்
"என்னைப் பயன்படுத்திய அவரால் உங்களையும் பயன்படுத்தமுடியும்"
என்பதாகும்.
நன்றி: ஜாமக்காரன் (ஜீலை - 2010)
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum