தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
வேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 33%
பார்வையிட்டோர்

Share
Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 803
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://devan.forumta.net

உதவி செய்திடுவோம்

on Sun Dec 17, 2017 8:56 am
அப்பொழுது அவர் (இயேசு) அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். மத்தேயு 25:45

அமெரிக்காவில் 50 ஆண்டுகளாக தனக்கு சொந்தமான பல் மருத்துவ சோதனைக் கூடத்தில் பணி செய்த டேவ் பௌமேன் (Dave Bowman), மனநிம்மதியோடு ஓய்வுத் பெற தீர்மானம் பண்ணினார். எழுபது வயதை நெருங்கியிருந்த அவர் சர்க்கரை நோயாளியாகவும், இருதய அறுவை சிகிச்சை செய்தவருமாக இருந்தபடியினால், வேலையிலிருந்து ஓய்வு பெறுவதே நல்லது என்று எண்ணினார்.


 அந்த நாட்களில் சூடானிலிருந்து அகதிகளாக வந்திருந்த ஐந்து வாலிபர்களைக் குறித்து கேள்விப்பட்டு அவர்களை பராமரித்து ஆதரவளிக்க முன்வந்தார். அந்த ஐந்து வாலிபர்களும் வாழ்வில் ஒருமுறை கூட மருத்துமனைக்கோ அல்லது மருத்துவரிடமோ சென்றது கிடையாது என்பதை அறிந்து கொண்டார்.


ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும் (I கொரி 12:26) என்ற வேத வசனத்தின் மூலமாக டேவ் பௌமேன்-உடன் கர்த்தர் இடைப்பட்டார்.

 சூடானிய நாட்டு மக்கள் மருத்துவ உதவி ஏதுமில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் எப்படி வீட்டில் ஓய்வு எடுப்பது. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யும்படி பௌமேனுடன் தேவன் பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் எப்படி செய்வது? அவரது வயதையும், சுகவீனத்தையும் பொருட்படுத்தாமல் சூடானில் ஒரு மருத்துவமையம் கட்டுவதற்குரிய காரியங்களைக் குறித்து ஆழமாக சிந்திக்கத் தொடங்கினார்.

அநேகரிடம் இந்த காரியத்தைக் குறித்து பகிர்ந்து கொண்டார். அவரைப்போல எண்ணங்கொண்டிருந்த மக்களையும் தேவையான பண வசதிகளையும் தேவன் கொஞ்சம், கொஞ்சமாக அவருக்கு கொடுத்தருளினார். 

1998ம் ஆண்டு தெற்கு சூடானிற்கு சென்று மருத்துவமனை கட்டுவதற்க்கான நிலத்தை வாங்கினார். பின்னர் 2008ம் ஆண்டு 24 பெட் வசதி கொண்ட “மெமோரியல் கிறிஸ்டியன் மருத்துவமனை” (Memorial Christian Hospital) நோயாளிகளுக்கென திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று கடந்த வருடம் வரை ஐம்பது ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இருபது ஆயிரத்திற்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் அந்த மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. 
இந்த வருடத்தில் தீவிரவாதிகளின் தாகுத்தல் காரணமாக அந்த மருத்துவமனை மூடப்பட்டாலும்.. மீண்டும் திறக்கப்படும் என்று விசுவாசத்தில் இருக்கின்றார் டேவ் பௌமேன். 

சில காரியங்களை செய்தால்தான் பாவம். அதுபோல சில காரியங்களை செய்யாமல் போனாலும் அது பாவம் தான். “ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” (யாக்கோபு 4:17) என்று வேதம் கூறுகிறது.

 ஐசுவரியவான் செய்த தவறு என்ன? தன் வீட்டின் வாசலருகே கிடந்து, அவனிடமிருந்து விழும் பருக்கைகளை தின்றுக் கொண்டிருந்த லாசருவிற்கு இரங்காமல் போனான். நரகத்தில் தள்ளப்பட்டான். டேவ் பௌமேன் தனது முதிர் வயதிலும், பலவீனத்தின் மத்தியிலும் கைவிடப்பட்ட சூடான் மக்களுக்கு உதவி செய்கின்றாரே. 

கிறிஸ்மஸ் புத்தாண்டு நாட்களில் உங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் ஏழை மக்களுக்கு ஏதாவது செய்யலாமே. தேவன் நமக்கு கொடுத்திருக்கிற காரியங்களை சரியான முறையில் பயன்படுத்தி மிகவும் சிறியவர்களாகிய மக்களுக்கு உதவ முன் வருவோம். ஆமென். அல்லேலுயா.

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum