தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
கருப்பு பணததிற்கு எதிராக - வி.பி.சிங்கின் எண்ணம் Counter

Go down
avatar
charles mc
சிறப்பு கட்டுரையாளர்
சிறப்பு கட்டுரையாளர்
Posts : 167
Join date : 12/11/2016

கருப்பு பணததிற்கு எதிராக - வி.பி.சிங்கின் எண்ணம் Empty கருப்பு பணததிற்கு எதிராக - வி.பி.சிங்கின் எண்ணம்

on Mon Nov 28, 2016 2:21 pm
கருப்பு பணததிற்கு எதிராக - வி.பி.சிங்கின் எண்ணம் 15192773_1372604982758547_7901699071265750324_n


இந்தியாவில் உள்ள பெரிய வணிக நிறுவனங்களிடமிருந்து கார்ப்பரேட் வரியை முறையாக வசூலித்தாலே போதும். வருமான வரித்துறை என்ற துறையே தேவையில்லை என்பது வி.பி.சிங்கின் எண்ணம். அப்போது அவர் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்தார். வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்யும் கறுப்புப் பண முதலைகளின் பட்டியலைத் தயாரித்தார். நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடித்ததுடன், அதைத் தீர்ப்பதற்கான அறுவை சிகிச்சையையும் வி.பி.சிங் மேற்கொண்டார்.

வரி ஏய்ப்புக்காரர்களுக்கு சொந்தமான இடங்களை சோதனையிடுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். அதன் தலைவராக இருந்த பூரேலால் என்ற நேர்மையான அதிகாரி, நிதியமைச்சர் வி.பி.சிங்கின் நடவடிக்கைகளுக்குத் துணை நின்றார். வரி ஏய்ப்பவர்களில் முதலிடத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இருந்தது. அதுபோலவே இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பெயரும் வரி ஏய்ப்புப் பட்டியலில் முன்னணியில் இருந்தது. அமிதாப் அப்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக இருந்தார். ராஜீவ் காந்தியின் குடும்ப நண்பர். 

இந்த செல்வாக்கு பற்றியெல்லாம் கவலைப்படாமல் அம்பானிக்கு சொந்தமான இடங்களிலும் அமிதாப்பச்சனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. கிர்லோஸ்கர் என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டதுடன் அவருக்கு கைவிலங்கும் போடப்பட்டது. 

இந்தியாவின் எளிய மக்கள் தங்களுக்கு சொந்தமாக ஒரு குடிசையில் வாழ்ந்தாலும் கட்டாயமாக சொத்து வரி வசூலிக்கப்படும் நிலையில், கறுப்புப் பண முதலைகளை ஏன் விட்டு வைக்க வேண்டும் என நடவடிக்கை எடுத்த வி.பி.சிங்குக்கு கிடைத்த உடனடிப் பரிசு, இலாகா மாற்றம். அவரை நிதியமைச்சர் பதவியிலிருந்து பாதுகாப்புத்துறைக்கு மாற்றினார் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி. 
பாதுகாப்புத் துறைக்கு வி.பி.சிங் பொறுப்பேற்ற பிறகுதான் போஃபர்ஸ் பீரங்கி ஊழல், நீர்மூழ்கி கப்பல் ஊழல் போன்றவற்றை வெளியே கொண்டு வந்தார். 1989ல் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, 11 மாதங்கள் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். 

தன் அரசியல் வாழ்வில் கிடைத்த பதவிகள் மூலம் எளிய மக்களுக்குத் தோழனாகவும், அரசாங்கத்தை ஏய்ப்போருக்கு சவாலாகவும் விளங்கிய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாள் (நவ.27).

சென்னை ஆவடியில் உண்மை வாசகர் வட்டம் நிகழ்வில் வி.பி.சிங் பற்றி நிகழ்த்திய உரையின் காணொளி இணைப்பு
https://www.youtube.com/watch?v=L5_3oZ3h5xk
https://www.youtube.com/watch?v=26K14lXxKdo


நன்றி: முகநூல் - Govi Lenin
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum