தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
 தமிழ்நாட்டில் கணினி மயமாக்கப்பட்ட பட்டா பெறுவது எப்படி? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 தமிழ்நாட்டில் கணினி மயமாக்கப்பட்ட பட்டா பெறுவது எப்படி? Empty தமிழ்நாட்டில் கணினி மயமாக்கப்பட்ட பட்டா பெறுவது எப்படி?

on Sun Oct 23, 2016 7:45 am
 தமிழ்நாட்டில் கணினி மயமாக்கப்பட்ட பட்டா பெறுவது எப்படி? Patta_3054265f
பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான உள்ளீடுகள் அடங்கியவை. பட்டா கிராமப் புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. 2008-ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கிராமப் புறச் சொத்துக்களுக்கும் கணினி மூலம் பட்டா வழங்கப்படுகிறது. அதில் தாசில்தார், துணை தாசில்தார், அல்லது மண்டலத் துணை தாசில்தார் கையெழுத்து இடம் பெறும்.

கணினி பட்டா என்பது மாநகராட்சி, நகராட்சி, நத்தம் நிலம் அல்லாத இடங்களுக்கு வழங்கப்படும். மேலும் அதில் கிராமம், தாலுகா கணக்கெடுப்பு எண்கள் குறிப்பிடப்பட வேண்டும். உட்பிரிவு எண்கள் நன்செய் நிலம், புன்செய் நிலம் அளவு மற்றும் பிற நில அளவுகளும் அட்டவனையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் கணினி மயமாக்கப்பட்ட பட்டா பெறுவது எப்படி?
[size]


2008-ம் ஆண்டு முதல் நிலப் பதிவுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ள 3-வது மாநிலம் தமிழகம் (கர்நாடகம், ஆந்திர பிரதேசம் முறையே முதல் இரு இடங்களில் உள்ள மாநிலங்கள்). கணினி மயமாக்கப்பட்ட பட்டாவில் சொத்தின் வரைபடம் இடம்பெறாது.

மேலும் 2011-ம் ஆண்டு முதல் தமிழக அரசாங்கம் நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதன்படி பட்டா விண்ணப்பதாரர் நேரடியாகக் கிராம நிர்வாக அலுவலகரிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துக் கிராம நிர்வாக அதிகாரியிடம் ரசீது பெறலாம்.

ஒருவேளை அந்தப் பட்டா உட்பிரிவுகளில் தொடர்புடையது இல்லையென்றால் விண்ணப்பதாரர் நேரடியாகச் சரிபார்த்து அசல் ஆவணங்களுடன் தாலுகா அலுவலகம் சென்று பட்டா பெறலாம்.

ஒருவேளை உட்பிரிவுகளில் தொடர்புடையதாக இருந்தால் விண்ணப்பதாரர் விண்ணப்பம் பதிவுசெய்ததில் இருந்து நான்காவது வெள்ளிக்கிழமை பெற்றுக்கொள்ளலாம் (சர்வேயர் இடத்தைப் பார்வையிட்டப் பிறகு).

விண்ணப்பதாரர் உட்பிரிவுகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைத் தாசில்தாரிடமிருந்த ஒப்புதல் பெற்ற அன்றே செலுத்த வேண்டும். உட்பிரிவு நடைமுறைகள் 30 நாட்களுக்குள் முடிக்கப்படவேண்டும்.
 தமிழ்நாட்டில் கணினி மயமாக்கப்பட்ட பட்டா பெறுவது எப்படி? Online_3054266a


பட்டா ஆன்லைனில் சரிபார்க்கும் முறை


பட்டா ஆன்லைனில் சரிபார்க்க www.tn.gov.in  என்ற இணையதளத்தில் இ-சேவைகள் பரிவு மாவட்ட அலுவலகங்கள் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். பட்டா அல்லது சிட்டா ஆகியவற்றில் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்களான மாவட்டம், தாலுகா, கிராமம் மற்றும் பட்டா எண் ஆகியவற்றைக் காணலாம். ஒருவேளை பட்டா எண் தெரியவில்லை என்றால் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். சர்வே எண் (ஏதாவது ஒரு சர்வே எண் போதுமானது) உடன் உட்பிரிவுகளும் நிரப்பப்பட வேண்டும்.

சென்னை சொத்துகள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் முறை:
சமீபத்தில் சென்னையிலுள்ள அனைத்துச் சொத்து விவரங்களையும் மேற்படி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் சரி பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு சான்றுகள் கிளிக் செய்ய வேண்டும். பிறகு தாலுகாவைத் தேர்வு செய்ய வேண்டும். பிளாக் நம்பர் மற்றும் தெருவைக் குறிப்பிட வேண்டும். பின்னர் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்களைக் குறிப்பிட வேண்டும். பின்னர் தேடுதலை கிளிக் செய்ய வேண்டும். சொத்தின் முகவரி, சர்வே எண், உட்பிரிவு எண், சொத்தின் அளவு, உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம்.
கட்டுரையாளர், கேரள அரசின் சட்ட ஆலோசகர்[/size]
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum