தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
உங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 50%
பார்வையிட்டோர்

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ எனப்படும் 4G சேவை

on Mon Sep 05, 2016 7:59 pm

நாம் இன்று Wi-fi,datacard,4G வரை இணையத்தில் முன்னேறி விட்டோம் என்று நினைக்கிறோம்.ஆனால் உண்மையில் ஒவ்வொரு நாட்டுக்கும் இணையம் கேபிள்கள் மூலமே வருகிறது.கடலுக்குள் வரும் இந்த கேபிள்கள் முக்கிய துறைமுகங்களில் உள்ள நிலையங்களில்(Stations) இணையும்.

இந்தியாவைப் பொறுத்தவரை நான்கு நகரங்களில்தான் இந்த இணைய கேபிள் இணைப்பு நிலையங்கள் உள்ளன.

அவை

1.மும்பை 
2.சென்னை
3.கொச்சின்
4.தூத்துக்குடி.

இந்த நான்கு நிலையங்களிலிருந்துதான் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இணையம் விநியோகிக்கப்படுகிறது.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2 நிலையங்கள் உள்ளன.

இந்நகரங்களில் உள்ள துணை நிலையங்களை சேர்த்து மொத்தம் 8 மையங்கள் உள்ளன.

ஆனால் இதில் அதிர்ச்சி தரும் விஷயம் அரசு நிறுவனமான BSNL கைவசம் இருப்பது ஒரு நிலையமே மற்ற அனைத்தும் தனியாரிடமே உள்ளன.

1.டாடா வசம் 3

2.ஏர்டெல் வசம் 2.

3.ரிலையன்ஸ் வசம் 1

4.Sifi வசம் 1

5.BSNL வசம் 1.

அரசு நாட்டுக்கான இணையத் தேவைக்கு ரிலையன்ஸ்,டாடாவையே நம்பியுள்ளது.ஏனெனில் BROADBAND எனப்படும் அலைவரிசையை இந்நிறுவனங்களே வைத்துள்ளன.இவர்களிடமிருந்தே மற்ற டெலிகாம்கள் இணையத்தை வாங்கி நம்மிடம் விற்கின்றன.

இதெல்லாம் ஏன் இப்போ சொல்றேனா?....

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ எனப்படும் 4G சேவையை குறைந்த விலைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது

ஆனால் இதற்காக தனி கேபிள் இணைப்பையே 1500 கோடி செலவில் 8100. கி.மீ தொலைவுக்கு கடலுக்கடியில் அமைத்துள்ளது.இந்த முதலீட்டை இந்த திட்டத்தின் மூலம் சம்பாதிக்க காலம் பிடிக்கும்.

அதனால் அந்நிறுனத்தின் மற்ற தயாரிப்பு மற்றும் சேவையை சார்ந்துள்ள பொருட்கள் விலை ஏறலாம்.

ஏன் இணைய சேவையை வழங்குவதே அவர்கள்தான் என்பதால் ஒருவேளை மற்ற நிறுவனங்களின் இணைய கட்டணம் கூடலாம்.எனவே குறைவான கட்டணம் உள்ள Jio போன்ற நெட்வொர்க்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மாற நேரலாம்.அதிக வாடிக்கையாளர்கள் சேர்ந்த பின்னர் கட்டணம் உயரலாம்.

வியாபார தந்திரம்.

கா.அருண் பாண்டியன்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ எனப்படும் 4G சேவை

on Mon Sep 05, 2016 8:00 pm
ரிலையன்ஸ் ஜியோ தொழில் ரகசியம் என்ன?


கடந்த வாரத்தின் ஹாட் டாபிக் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் தான். பங்குச்சந்தை, தொலை தொடர்புத் துறை என அனைத்து ஏரியாக்களிலும் ஜியோமயம்தான். இனி குரல் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை, ஒரு ஜிபி டேட்டா 50 ரூபாய் மட்டுமே, மாணவர்களுக்கு 25 சதவீத சலுகை, இந்த வருடம் முழுவதும் இலவசம், அடுத்த வருடம் வரை 15,000 ரூபாய்க்கு இலவசமாக செயலிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என வாடிக்கையாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பல விஷயங்கள் இருந்தாலும், ஒரு புறம் எப்படி ரிலையன்ஸ் ஜியோ லாபம் ஈட்டும் என்ற சந்தேகமும் இருந்தன.
முகேஷ் அம்பானி இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட சமயத்தில் பார்தி ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. அதே சமயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கும் சரிந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இந்த பங்கு சரிந்ததற்கும் முதலீட்டாளர்களிடையே நிலவிய எப்போது லாபம் ஈட்டும் என்னும் சந்தேகம்தான். காரணம் கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவது கடினம்தான். ஆனால் நீண்ட காலத்தில் கணிசமாக லாபம் சம்பாதிக்க வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் மாதம் 150 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்களை கூர்த்து கவனித்தால் இதில் உள்ள உத்தி தெரியும். குறைந்தபட்ச கட்டணம் 149 ரூபாய். இதில் 0.3 ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும்.
குரல் வழி கட்டணம் இலவசமாக இருந்தால் கூட 0.3 ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் பெரும்பாலானவர் கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இதற்கு அடுத்த திட்டத் துக்கு செல்ல வேண்டும் என்றால் 499 ரூபாய்க்குத்தான் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். அந்த திட்டத்தில் கூட 4ஜிபி மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு ஜிபி 50 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றால் 4ஜிபி எப்படி 499 ரூபாய்?
மேலும் அதிக டேட்டா வேண்டும் என்றால் ரூ.1,000-க்கு மட்டுமே உங்களால் எடுக்க முடியும். இடையில் எந்த விலையும் கிடையாது. 1,000 ரூபாய்க்கு கூட 10 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இதுபோல விலை நிர்ணயம் செய்வதில் நல்ல உத்தியை கடைபிடித்திருக்கிறது.
இன்னொரு விஷயம் இந்த அனைத்து திட்டங்களுமே 28 நாட்களுக்கானது. ஒரு வருடத்துக்கு 365 நாட்கள் என்னும் போது 13 முறை கட்டணம் செலுத்தியாக வேண்டும்.
எப்படி இலவசம்?
எப்படி குரல் அழைப்புகள் இலவச மாகக் கொடுக்க முடியும் என்பது அடுத்த கேள்வி? அனைத்து அழைப்புகளும் இணையம் வழியே செல்கிறது. உதார ணத்துக்கு வாட்ஸ்அப்-பில் நாம் எப் படி பேசுகிறோமோ அல்லது தகவல் அனுப்புகிறோமோ அதேபோல இங்கேயும். அதனால் குரல் அழைப்புகளை இலவசமாக கொடுக்கிறது.
ஐடிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தகவல்படி 8 கோடி வாடிக்கை யாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ வசம் இருப்பார்கள். ஒரு மாதத்துக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் கட்டணம் 180 ரூபாய் என்ற அளவில் இருக்கும். அடுத்த மூன்று வருடங்களில் பிரேக் ஈவன் ஆகும் என தெரிவித்திருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 2019-20-ம் நிதி ஆண்டில் பிரேக் ஈவன் ஆகும் என கணித்திருக்கிறது.
எடில்வைஸ் நிறுவனம் கூறும் போது 500 ரூபாய்க்கு கீழ் இரு பேக்கேஜ் மட்டுமே இருப்பதால் அதிக வாடிக்கையாளர்கள் ரிலையன் ஸுக்கு செல்லும் வாய்ப்பு குறைவு. தற்போதைய தொலைதொடர்பு நிறு வனங்கள் பல திட்டங்களை வைத் துள்ளன. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள் என்றும் கூறியிருக்கிறது.
கோடக் செக்யூரிட்டீஸ் கூறும் போது ஆரம்பத்தில் இலவசங்களால் வாடிக்கையாளர்கள் வருவார்கள். தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கு சிரமப்படுவது போன்ற சூழ்நிலை இருக்கும். வாடிக்கை யாளர்கள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறது. நான்கு வருடங்களில் லாபம் சம்பாதித்தாலும் மொத்த முதலீட்டை மீண்டும் எடுப்பதற்கு 7-10 வருடங்கள் கூட ஆகலாம் என்ற கருத்தும் சந்தையில் இருக்கிறது.
ரிலையன்ஸ் மீன் பிடிக்குமா என்பது தெரியவில்லை ஆனால் மொத்த குட்டையையும் குழப்பி இருக்கிறது. டாடா டொகோமோ ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்னும் திட்டத்தை அறிவித்த போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தடுமாறின. அதன் பிறகு இப்போது…!
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum