தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
தமிழ்நாடு புவியியல் - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான பாடக்குறிப்புகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழ்நாடு புவியியல் - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான பாடக்குறிப்புகள் Empty தமிழ்நாடு புவியியல் - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான பாடக்குறிப்புகள்

on Tue Aug 16, 2016 10:37 pm
தமிழகத்தின் முதன்மையானதும். மிகப் பழமையானதுமான தொழில் வேளாண்மை.

    தமிழக மொத்த மக்கள் தொகையில் 56% மக்கள் விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ளனர். 

    தமிழக விவசாயத்தை கீழ்க்கண்ட 3 வகைகளாகப் பிரிக்கலாம்.

1. தீவிர தன்னிறைவு விவசாயம்: சிறிய அளவிலான விளை நிலத்தில் சுய தேவைக்கு மட்டுமே உணவு தானியங்களை வளர்க்கும் முறைக்கு இப்பெயராகும். 

2.    தமிழகத்தின் பெரும்பான்மையான விவசாயிகள் இம்முறையைப் பயன்படுத்துகின்றனர். 

3.     தோட்டப் பயிர் விவசாயம்: மிகப்பெரிய தோட்டங்கள் அல்லது பண்ணைகளில் செய்யப்படும் சாகுபடி ஆகும். 

    தேயிலை, காபி, ரப்பர், மிளகு போன்ற பயிர்கள் தோட்டப்பயிராக பயிரிடப்படுகிறது. 

4.    கலப்பு விவசாயம்:  இவ்வகை விவசாயத்தில் மிகப்பெரிய அளவிலான விளை நிலங்களில் பல பயிர்களை வளர்ப்பதுடன் கால்நடை, மீன், தேனீ மற்றும் பறவைகளையும் வளர்க்கும் முறையாகும். 

தமிழ்நாட்டின் சாகுபடி பருவங்கள் 


சொர்ணவாரி -     மே மாதத்தில் நடவு நட்டு

சித்திரைப் பட்டம்    அக்டோபர் மாதத்தில்         (கரிப் பருவம்),    அறுவை செய்யப்படும் பருவம் 

சம்பா பருவம்-    சூலை மாத்தில் விதைத்து         ஆடிப்பட்டம்    ஜனவரியில் அறுவடை             செய்யப்படும் பருவம் 

நவரைப் பருவம்-    நவம்பரில் விதைத்து மார்ச் கார்த்திகைப்பட்டம்     மாதம் அறுவடை         (ரபி பருவம்)    செய்யப்படும் பருவமாகும். 

தமிழகத்தின்  பாசன  ஆதாரங்கள். 

கால்வாய்கள் 


     ஆறுகள் அல்லது அணைக்கட்டுகளில் இருந்து நீரினை வயலுக்குக் கொண்டு செல்ல மனிதனால் ஏற்படுத்தப்பட்ட வழித்தடங்களே கால்வாய்கள் எனப்படும். 
     தமிழ்நாட்டில் 27% கால்வாய் பாசனம் நடைபெறுகிறது. 

 முதலாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை கால்வாய் பாசன வரிசையில் உலகின் மிகப்பழமையான நீர் மேலாண்மை திட்டமாகும். 

     காவிரியின் இதர முக்கிய கால்வாய்கள்: பவானி ஆற்று கால்வாய், அருகன் கோட்டை, தாடப்பள்ளி மற்றும் கலிங்கராயன் கால்வாய். 

     தாமிரபரணியின் துணையாறுகள் திருநெல்வேலி மாவட்ட கால்வாய் பாசனத்திற்கு மிகவும் பயன்படுகின்றன. 

குளங்கள் 

     தமிழகத்தில் 39,202 நீர்ப்பாசன குளங்கள் உள்ளன.  
 தமிழகத்தின் 19% நிலங்களுக்கு இக்குளங்கள் நீர் ஆதாரத்தை அளிக்கின்றன. 
 தமிழகத்தில் இராமநாதபுரத்தில் அதிகமான குளங்கள் உள்ளன. 

கிணறுகள்  
     தமிழகத்தில் சுமார் 52% விவசாய நிலம் கிணற்றுப் பாசனத்தை சார்ந்துள்ளன. 
     தமிழகத்தில் கிணறுகளை விட ஆழ்குழாய் கிணறுகளே நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. 

தமிழகத்தின்  பயிர் பரவல்  

     தமிழகம் அயன மண்டலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது,  எனவே, அயன மண்டலப் பயிர்கள் அனைத்தும் பயிரிடப்படுகிறது. 

    நெற்பயிர் தமிழ்நாட்டின் முதன்மையான உணவுப் பயிராகும். 

    தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் விளை பரப்பளவிலும், உற்பத்தியிலும் முதன்மையாக விளங்குகிறது.  காவிரி டெல்டாவான இப்பகுதிகள் தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படுகிறது. 

     தமிழகத்தில் பொதுவாக மூன்று பருவங்களில் நெல்பயிர் செய்யப்படுகிறது. 
     தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நெல் நான்கு பருவங்களில் பயிரிடப்படுகிறது. 

     தமிழகத்தின் நெல் ஆராய்ச்சி நிறுவனம் “ஆடுதுறை” என்ற இடத்தில் அமைந்துள்ளது.  தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் திருவாரூர் கிளை TNRH 174  என்ற புதிய நெல் ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  

    இந்நெல் வகை ஏக்கருக்கு 4500 கிலோ உற்பத்தி செய்ய வல்லது. 

    பயிர் வகைகள் மற்றும் 
குறுதானியங்கள்     -  உற்பத்தியில் முதன்மை 
மாவட்டங்கள்                      

    சிறு கடலை    கோவை 

    துவரை    வேலூர், கிருஷ்ணகிரி 
    பச்சை பயிர்    திருவாரூர், நாகப்பட்டினம்,                 தூத்துக்குடி 
    உளுந்து    திருவாரூர், நாகப்பட்டினம்,                 கடலூர் 
    கொள்ளு    கிருஷ்ணகிரி, தர்மபுரி
    சோளம்    கோவை, திருச்சி,                 பெரம்பலூர், திண்டுக்கல்
    கம்பு    விழுப்புரம், தூத்துக்குடி 
    கேழ்வரகு    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்
    திணை    சேலம், நாமக்கல் 

பணப் பயிர்:

     சுய தேவைக்கு மட்டுமல்லாது, சந்தை நோக்குடன் வளர்க்கப்படும் பயிர்கள் பணப்பயிர்கள் எனப்படும்,  (எ-டு) கரும்பு, புகையிலை, எண்ணெய் வித்துகள், மிளகாய், மஞ்சள், கொத்துமல்லி போன்றவை.

     தமிழகத்தின் முதன்மையான பணப்பயிர் கரும்பு,  இது விளைய அதிக வளமுள்ள மண், அதிக வெப்பம், பூக்கும் காலம் வரை நீர்ப்பாசனம் ஆகியவை தேவை. 

     கரும்பு அதிகம் விளையும் மாவட்டங்கள் : கோவை. கரூர், விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் கடலூர்.

     தமிழகத்தின் இரண்டாவது முக்கிய பணப்பயிர் புகையிலை. பயிரிடப்படும் மாவட்டங்கள்: திண்டுக்கல், தேனி, மதுரை

இழைப் பயிர்  

 தமிழகத்தின் முக்கிய இழைப்பயிர் பருத்தி,  இது விளைவதற்கு உகந்த மண் கரிசல் மண்,  விளையும் மாவட்டங்கள்: திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம். 
    பயிரிடப்படும் பருத்தி ரகங்கள்: எம்.சி.யூ.4, எம்.சி.யூ.5, ஆர்.எ.5166.

தோட்டப் பயிர் 

     தமிழகத்தின் முக்கிய தோட்டப்பயிர்கள் தேயிலை, காபி, இரப்பர், மிளகு மற்றும் முந்திரி. 

தேயிலை, காபி 

     தேயிலை, காபி உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது,  (தேயிலை முதலிடம்: அஸ்ஸாம். காபி முதலிடம் : கர்நாடகம்) 

     தேயிலை விளையும் மாவட்டம் - நீலகிரி, கோவை
     காபி விளையும் மாவட்டம் - நீலகிரி, மதுரை, தேனி
     இரப்பர் விளையும் மாவட்டம் - கன்னியாகுமரி 
     மிளகு விளைவது - கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மலைச்சரிவுகள் 
     முந்திரி - கடலூர் மாவட்டம். 

தோட்டக்கலைப் பயிர்கள், 

    தோட்டக்கலைப் பயிர்கள் - முதன்மை மாவட்டங்கள் 
    காய்கனி, பூ    தருமபுரி
    வாழை    கோவை, ஈரோடு
    மாம்பழம்    கிருஷ்ணகிரி 
    திராட்சை    தேனி 

  மீன்  வளர்ப்பு 

     தமிழகம், மீன் வளர்ப்பில் இந்திய அளவில் நான்காவது இடத்தில் உள்ளது. 
     தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள்-13. கடற்கரையை ஒட்டி தமிழகத்தில் 591 மீனவ கிராமங்கள் உள்ளன. 

     கடலில் முழ்கி முத்தெடுத்தல் மன்னார் வளைகுடாவின் சிறப்பு அம்சமாகும்.
    தூத்துக்குடி தமிழகத்தின் முதன்மை மீன்பிடி துறை முகமாகும்.

விவசாய பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையம் 

     கோவையில் விவசாய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 
     சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் உள்ளது. 
     நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரியில் ஏற்றுமதி மண்டலம் அமைந்துள்ளது. 

தொழிற்சாலைகள்

    பொருளை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் இரண்டாம் நிலைத் தொழிலாகும். 

     மகாராஷ்டிரா, குஜராத்தை அடுத்து தமிழகம் தொழில் வளர்ச்சியில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 

 தமிழகத்தின் வருமானத்தில் 24% தொழில்துறையின் மூலம் கிடைக்கிறது. 

தொழிற்சாலைகளின் வகைப்பாடு

     ரூபாய் பத்து கோடிக்கு மேல் பண முதலீடு செய்யும் தொழிற்சாலைகள் பெருநிலைத் தொழிற்சாலைகள். 

     ரூபாய் ஒரு கோடி முதல் பத்து கோடி வரை பண முதலீடு செய்யப்படுவது மத்திய தரத் தொழிற்சாலைகள். 

     ரூபாய் ஒரு கோடிக்கு குறைவாக முதலீடு செய்யப்படுவது சிறுநிலைத் தொழிற்சாலைகள் ஆகும். 

நெசவுத்  தொழிற்சாலைகள். 

     பருத்தி நூல், இழை மற்றும் துணி உற்பத்தியில் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 25 சதவீதமாகும். 
     கோவையில் மிகப்பெரிய அளவில் நெசவுத் தொழில் நடைபெறுவதால் “தென்இந்தியாவின் மான்செஸ்டர்” என்றழைக்கப்படுகிறது.  

     திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்கள் நெசவுத் தொழிலின் மூலம் மாநிலப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிப்பதால் “தமிழ்நாட்டின் நெசவுப் பள்ளத்தாக்கு” என்றழைக்கப்படுகிறது. 

     திருப்பூர் தமிழகத்தின் 70% உள்ளாடைகளை ஏற்றுமதி செய்கிறது. 
     படுக்கை விரிப்புகளின் உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. 

     கரூர் தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் எனப் பெயர் பெற்றுள்ளது. 

பட்டு நெசவுத்  தொழில் 

 இந்திய அளவில் பட்டு நெசவுத் தொழிலில், தமிழ்நாடு நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. 

     காஞ்சிபுரம் பாரம்பரியமிக்க நெசவு தரத்திற்கு உலகப்புகழ் பெற்றது. 
     செயற்கை இழை ஆடை உற்பத்தியில் மேட்டூர், மதுரை மற்றும் இராமநாதபுரம் பகுதிகள் சிறப்புடன் விளங்குகிறது. 

சர்க்கரை  ஆலைகள் 

 இந்திய அளவில் 10% சர்க்கரை உற்பத்தி. தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. 
     தமிழகத்தில் உள்ள 42 சர்க்கரை ஆலைகளில் 16 கூட்டுறவு சங்கங்கள் மூலமும், அரசாலும். 23 தனியாராலும் நடத்தப்படுகின்றன.

     சர்க்கரை ஆலை அதிகமுள்ள மாவட்டங்கள்: விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை. 

     கரும்புச்சாறு பிழிந்தவுடன் கிடைக்கும் கரும்புச் சக்கை காகிதத் தொழிற்சாலைக்கு மூலப்பொருளாகப் பயன் படுகிறது.  

காகிதத் தொழிற்சாலைகள். 

     இந்தியாவில் காகித உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.  (முதலிடம் ஆந்திரா),  இந்திய காகித உற்பத்தியில் 12% தமிழகத்திற்குரியது,

     காகித உற்பத்திக்கான மூலப்பொருட்கள்: மூங்கில், புற்கள், கரும்புச்சக்கை
    மேலும் தேவைப்படும் பொருட்கள்: சோடா, சோடா உப்பு, குளோரின், கந்தகம், மரக்கூழ் மற்றும் அதிக அளவு தண்ணீர். 

     உலகிலேயே மிகப்பெரிய காகித ஆலையான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) கரூர் மாவட்டம் புகளூரில் உள்ளது. 

 மேலும் தமிழகத்தில் பவானி சாகர், பள்ளிபாளையம், பரமத்தி வேலூர், கோவை, உடுமலைப்பேட்டை, தோப்பம் பட்டி, நிலக்கோட்டை, புக்காத்துறை (காஞ்சிபுரம்) ஆகிய இடங்களில் காகிதத் தொழிற்சாலைகள் உள்ளன. 

தோல்  பதனிடும்  தொழில் 

     இந்தியாவில் 70% தோல் பதனிடும் ஆலைகள் தமிழகத்தில் உள்ளன,  இந்திய ஏற்றுமதியில் 60% தமிழகத் தின் பங்காக உள்ளது. 

     தோலைப் பதனிட அமிலப்பொருள் (டானின்), குரோமியம் மற்றும் விலங்குகளின் கொழுப்பு கொண்டு பதனிடும் முறைக்கு ‘ஈரநிலை முறை அல்லது இரசாயன பதனிடுதல் முறை’ என்பர்.

     தோலைப் பதனிட தாவரத்தின் மரப்பட்டைகளை பயன் படுத்தும் முறைக்கு தாவரப் பதனிடுதல் முறை என்று பெயர். 

    சென்னை, வேலூர், ஆம்பூர், இராணிப்பேட்டை, வாணியம்பாடி, திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அமைந் துள்ளன.
 
சிமெண்ட்  தொழிற்சாலை 

     இந்திய அளவில் தமிழ்நாடு 10% சிமெண்ட்டினை உற்பத்தி செய்து, நான்காம் இடத்தில் உள்ளது.

    பொதுத்துறை நிறுவனமான டான்செம், சாதாரண போர்ட்லண்ட் சிமெண்ட் மற்றும் சூப்பர் ஸ்டார் சிமெண்ட் என இரு வகையான சிமெண்டினை உற்பத்தி செய்கிறது.

     சிமெண்ட் தயாரிக்க மூலப்பொருட்கள்: சுண்ணாம்புக்கல், டாலமைட், ஜிப்சம், களிமண், நிலக்கரி.

  தமிழகத்தில் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படும் இடங்கள்: ஆலங்குளம், துலுக்கப்பட்டி, சங்கர்நகர், தாழையூத்து, அரியலூர், டால்மியாபுரம், மானாமதுரை, மதுக்கரை, புலியூர், குன்னம், செந்துறை மற்றும் சங்ககிரி. 

மோட்டார் வாகனத்  தொழிற்சாலை 

    சென்னை “தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்றழைக்கப் படுகிறது. 
 தமிழ்நாட்டில் பொது வளர்ச்சி குறியீட்டில் (GDP) 8% மோட்டார் வாகனத் தொழிலின் மூலம் கிடைக்கிறது. 

 இந்திய அளவில் தமிழ்நாட்டிலிருந்து 21% பயணிகள் கார்களும், 33% வணிக வாகனங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இரசாயனத்  தொழிற்சாலை

    இது உரம், சோப்பு, மருந்து, அழகுப்பொருட்கள், பிளாஸ்டிக், செயற்கை ரப்பர் போன்றவற்றின் உற்பத்தியை குறிப்பதாகும். 

     உரத்தொழிற்சாலைகளில் இந்தியாவிலேயே மிக அதிக அளவில் உரம் உற்பத்தி செய்யும் ஸ்பிக் நிறுவனம் தூத்துக்குடியில் அமைந்துள்ளது. 

    மேலும் இரசாயனத் தொழிற்சாலைகள் மணலி, கடலூர், பனங்குடி (நாகப்பட்டினம்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.  

மென்பொருள்   தொழிலகம் :

     இந்தியாவின் இரண்டாவது மென்பொருள் ஏற்றுமதி யாளராக தமிழ்நாடு உள்ளது,  (முதலிடத்தில் கர்நாடகா உள்ளது), 

     சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட அஸன்டாஸ் நிறுவனமும். 
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் இணைந்து சென்னை தரமணியில் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப வளாகத்தை அமைத்துள்ளன. 

    சென்னையில் இன்போசிஸ், விப்ரோ, காக்னசன்ட்,  ஹெச்.சி.எல்., போலாரீஸ், இராம்கோ சிஸ்டம் போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளன. 

தமிழகத்தின்  குறிப்பிடத்தக்க  இதர தொழிற்சாலைகள். 

     ஆசியாவின் மிகப்பெரிய தொழில் வகைகளுள் ஒன்றாக, சென்னை பெரம்பூரில் உள்ள இரயில் இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ICF) உள்ளது,

     சென்னை-ஆவடியில் இராணுவ வாகனங்கள் மற்றும் இராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 

     சேலத்தில் சேலம் எஃகு நிறுவனம் (SAIL) உள்ளது,  இது மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகிறது.

 குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி, பட்டாசு மற்றும் வெடிவகைகள். தீப்பெட்டி. அச்சு போன்றவற்றில் முதன்மையாக விளங்குகிறது. 

     நெய்வேலியில் அனல் மின்சாரம். உரம் மற்றும் பீங்கான் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. 

     தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் வெண்கலச்சிலை மற்றும் இசைக்கருவிகள் தயாரிக்கப்படுகிறது. 

     பொதுத்துறை நிறுவனமான மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) பல சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணி யாக அமைந்துள்ளது. 

சுற்றுலாத்துறை 

 அந்நியச் செலவாணியை ஈட்டித் தருவதில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 

 இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழக சுற்றுலாத்துறை 16% வளர்ச்சி விகிதத்தைக் கொண்டது. 

தமிழகத்தின்  சிறப்பு  பொருளாதார மண்டலங்கள் 

1.    ஸ்ரீபெரும்புதூர்     -     தொழிற்பூங்கா 
2.    இருங்காட்டுக்கோட்டை -     காலணிப்பூங்கா 
3.     இராணிப்பேட்டை     -     தோல்துறை சிறப்பு                 மண்டலம் 
4.    பெருந்துறை     -    பொறியியல் பொருட்கள்                 உற்பத்தி சிறப்பு மண்டலம் 

5.    செய்யார்    -    மோட்டார் வாகனம் /                 தானியங்கி வாகனங்கள்                 உற்பத்தி 
6.    கங்கை கொண்டான்    -    போக்குவரத்து பொறியியல்             உபகரணங்கள் உற்பத்தி.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum