தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இப்படி வளர்த்தால்தான் அது அடங்கி இருக்கும் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இப்படி வளர்த்தால்தான் அது அடங்கி இருக்கும் Empty இப்படி வளர்த்தால்தான் அது அடங்கி இருக்கும்

Fri Aug 12, 2016 3:10 pm
+ முதலாளி ஒருவருக்குப் பல விதமான மிருகங்களை வளர்ப்பதில் மிகு‌ந்த ஆர்வம் இருந்தது.
+ அதற்கென்று ஒரு தனி இடத்தை ஒதுக்கி, வேலியிட்டு , அவற்றைப் பராமரிக்க சில வேலையாட்களையும் நியமித்திருந்தார்.
+ தினமும் காலையிலும், மாலையிலும் நடைப் பயிற்சி போல அங்கே சென்று வருவார்.
+ ஒரு முறை அங்கு ஒரு குட்டிக் குரங்கையும் கொண்டு வந்தார்கள். 
+ முதலாளி அதைப் பார்த்ததுமே அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. 
+அதை மட்டும் கூண்டில் அடைக்காமல் சுதந்திரமாக வளர்க்கும்படி கட்டளையிட்டார். அது அவர் சொன்னபடியே வளர்க்கப் பட்டது.
+ மறுநாள்,
ஒரு வேலை நிமித்தமாக முதலாளி சிறிது நாட்கள் வெளியூர் செல்ல நேரிட்டது. 
+ வேலை முடிந்து அவர் திரும்பி வர ஒரு மாதம் ஆனது. 
+ வந்தவுடன் வழக்கம் போலவே மிருகங்கள் வளர்க்கும் இடத்திற்கு சென்றார்.
+ஒவ்வொன்றாய்ப் பார்வையிட்டுவிட்டுக் குரங்கை எடுத்து வரச்சொன்னார். 
+பணியாளர் ஓடிப்போய் குரங்கைத் தூக்கி வந்து முதலாளியிடம் கொண்டு வந்தார். 
+குரங்கை முதலாளியின் காலடியில் விட்டு விட்டு ஒரு குச்சியை எடுத்து அதன் முதுகில் சுரீரென்று ஒரு அடி கொடுத்தார். 
+குரங்கு வீலென்று அலறிய படியே நடுங்கி நின்றது.
^^இதைப் பார்த்ததும் முதலாளிக்குக் கோபம் வந்துவிட்டது.
" அட மூர்க்கனே!
வாயில்லா ஜீவனை இப்படியா துன்புறுத்துவாய்? இனிமேல் இப்படி நடந்து கொண்டால் உன்னை கடுமையாக தண்டிப்பேன்" என்றபடி நடுங்கியபடி நின்ற குரங்கைத் தடவிக் கொடுத்தார்.
** பணியாளர் ஏதோ சொல்ல வந்தார். 
ஆனால் சொல்லவில்லை.
+ குரங்கு நட்புடன் அவரைப் பார்த்தது. 
முதலாளி பணிக்குத் திரும்பினார். 
+ அன்று முழுவதும் அவருக்கு அடிபட்டு அலறிய குரங்கின் முகமே அடிக்கடி நினைவில் வந்தது.
+அதன் மேல் ஒரு பரிதாபம் உண்டானது. 
மறுநாள் இதற்காகவே கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து அங்கே சென்றுவிட்டார்.
** பணியாளரிடம் குரங்கை எடுத்து வரச்சொன்னார். 
** குரங்கு கொண்டு வரப்பட்டது.
*இந்த முறை அது அவரது கையையும், ஆடைகளையும் மெதுவாகத் தொட்டுப் பார்த்தது. அவருக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.
** மறுநாள் வந்தபோது குரங்கு அவரது 
இடுப்பில் ஏறி அமர்ந்தது.
+ முதலாளி அதையும் ரசித்தார். 
அடுத்த நாள் மீண்டும் அவர் குரங்கைக் கொண்டு வரச்சொன்னார்.
^^ இந்த முறை குரங்கு நேராக அவர் தலையில் ஏறியது. 
^^ அவரது தலையில் இருந்த தொப்பியை எடுத்து வீசிவிட்டு அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தது. 
^^ முதலாளி வலி தாங்க முடியாமல் அலறினார்.
-->>பணியாளர் ஓடிவந்து பிரம்பால் குரங்குக்கு சுள்ளென்று ஒரு அடி கொடுத்தார்.
-->>குரங்கு வீலென்று அலறிய படியே நடுங்கிக் கீழே இறங்கி அடக்கமாய் நின்றது.
பணியாளர் சொன்னார், 
" ஐயா! குரங்கை இப்படி வளர்த்தால்தான் அது அடங்கி இருக்கும் ".
+ நமது சரீரமும், மனமும் இப்படிப்பட்டவைதான். உபவாசத்தாலும், இரவு ஜெபங்களாலும், வசனத்தாலும் அவ்வப்போது அடி கொடுக்காமல் விட்டு விட்டால் அது நம் தலையில் ஏறி அமர்ந்து கொள்ளும். 
+அவமானம் படுத்திவிடும். 
+கவனமாய் இருப்போம்....
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum