தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
திருமணத்தின் போது மணமகள் அழகாக தோற்றமளிக்க...: Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

திருமணத்தின் போது மணமகள் அழகாக தோற்றமளிக்க...: Empty திருமணத்தின் போது மணமகள் அழகாக தோற்றமளிக்க...:

on Mon Aug 08, 2016 5:51 pm
""மணப்பெண் அலங்காரம்" என்பது எல்லா சமூகத்தினரும் தங்கள் தங்கள் சமய, கலச்சாரத்திற்கு ஏற்ப திருமணமாகப் போகும் பெண்ணை அலங்கரிப்பது என கூறலாம். தமிழர் சமூகத்தை பொறுத்தளவில் மணப் பெண் அலங்காரம்  எங்கள் கலாச்சார பாரம்பரியத்தை முதன்மைப் படுத்தி தொன்று தொட்டு பின்பற்றப் பெற்று வந்துள்ளது.

இத் தினத்தில் மணப் பெண் சேலை அணிவித்து, மூக்குத்தி, காதணி, கொண்டை, நகைகள், பூ மாலை என்பன அணியப் பெற்று தமது சமய, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெண்ணாக தோற்றமளிப்பாள். இம் முறையானது தற்போது ஆடம்பரம் மிக்கதாக வளர்ந்து அதிமுக்கிய இடத்தை பெற்றுள்ளது.

ஒவ்வொருவரும் தத்தம் வசதிக்கேற்ப அழகுசாதனப் பொருட்களைப் பயன் படுத்தி திருமண நாளில் திருமணப் பெண்ணை அலங்காரம் செய்கிறார்கள். திருமணமாகும் நாள் ஒரு பெண்ணின் புனிதமான நாளாகவும், மகிழ்ச்சியில் பூரித்து இன்புற்று இருக்கும் நாளாகவும் அமைவதால் அப் பெண்ணின் அதிஉயர் அழகுத் தோற்றத்தை எடுத்துக் காட்டுவதற்காக மணப் பெண் அலங்காரம் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது.


முக்காலத்தில் வாழ்ந்த பெண்கள் வாரம் இரு முறை எண்ணை தேய்த்து குளித்தல், வாரம் ஒரு முறை மஞ்சளுடன் தேங்காய் எண்ணை கலந்து உடல் முழுவதும், பூசுதல் மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு பண்டிகையை யொட்டி மருதாணி இட்டுக் கொள்ளுதல் போன்றவை அவர்களது தலைமுடி, முகம், கைகால்கள் ஆகியவற்றை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள உதவியது.

ஆனால் இன்றைய சூழலில் வாழும் பெண்கள் இயற்கை வளம் குற்றிய இடங்களில் வாழ்வதாலும், படிப்பு, வேலை மற்றும் உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை, தூக்க நிலை போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அதிக வேலைப்பளுவாலும், ஓய்வின்மையாலும் பெண்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள்.  அதனால் அவர்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, இயயற்கை அழகும் கெட்டு விடுகின்றது. 

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் குறைந்தது 3 மாதத்திற்கு முன்பிருந்தே அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் இருக்கும் முரண்பாடுகளை நீக்க வேண்டும். திருமணம் நிச்சயமானவுடன் அவர்களுக்கு தங்களை அழகு படுத்திக் கொள்ளும் எண்ணம் அதிகமாகிறது. 6 மாதம் முன்னதாகவே திருமணம் நிச்சயமான பெண்களுக்கு அவர்களை தயார் செய்து கொள்ள நிறைய நேரம் கிடைக்கிறது. 

மேலும் 3 மாதம், ஒரு மாதம் என்று குறைந்த நேரத்திலும் அவர்களை தயார் செய்ய பார்லர்களில் வித விதமான விதிமுறைகளை செயல்படுத்துகின்றனர்.

மூன்று மாதத்திலிருந்து, முகூர்த்தம் வரை மணப்பெண்களை எப்படி தயார் செய்ய வேண்டும், என்னென்ன மேக்அப் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.

முன்பெல்லாம் மணப்பெண் அலங்காரம் என்பது முகூர்த்தம் நடக்கும் தினத்தன்று மணப்பெண்னணின் முகத்திற்கு மேக்அப் போட்டு அலங்கரித்து புடைவைகள், அணிகலன்கல் அணிவிப்பது மட்டுமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் அழகாக்கப்படுகிறது. அது மட்டுமன்றி உடை, நகைகள் போன்றவை அனைத்தும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தேர்ந்தெடுத்து முழுமை படுத்தப்படுகிறது.

3 மாதங்களுக்கு முன்பு

மணப்பெண் திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன்பிருந்தாவது முறையான அழகுபராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மணப்பெண்ணின் முக அழகானது வீடியோ, போட்டோவில் வசீகரமானதாகத் தெரியும். 

அரைத்தேக்கரண்டி எலுமிச்சபழ சாறுடன் சிறிது பால் சேர்த்து அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு இதை எடுத்து இரவு படுப்பதற்கு முன்பு முகத்தில் நன்றாகப் பூசிக்கொள்ளுங்கள். காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் தவறாமல் செய்து வந்தால் உங்களது முகம் அபாரமாக பளிச்சிடும். 

கனிந்த தக்காளிபழ சாறு எடுத்து காலையில் முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் தினமும் தொடர்ந்து செய்துவர முகம் சிறிது சிறிதாக நல்ல நிறத்தை அடைகிறது..

வெள்ளரிக்காயை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து முகம் முழுவதும் தடவி 25 நிமிடங்கள் உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில்ல் கழுவினாலும் முகம் பளபளப்பு பெறும்..

பாதாமை அரைத்து பாலேட்டுடன் சேர்த்து சில துளிகள் பன்னீர் விட்டு முகத்தில் தடவிக்கொண்டு அரைமணி நேரம் உலரவிட்டு கழுவினால் முகம் பளிச் என்று ஆகிவிடும். தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் எல்லாம் மறைந்து முகம் மலர்ந்து தோன்றும்.

தயிர்கூட மிகச்சிறந்த அழகு சாதனம்தான் முகத்தில் தயிரை தடவி வர உங்கள் முகம் இளமைப் பொலிவுடன் திகழும்.. முகத்திற்கு கிரீம் லோஷன், மொய் ஸரைஸர் என்று மாற்றி மாற்றி கவனத்துடன் ஒப்பனை செய்து கொள்ளும் நாம் கழுத்தை கவனிப்பதில்லை. 

நன்றாக உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். முகம் பளிச் என்று இருக்கும் கழுத்து சம்மந்தமில்லாததுபோல கறுப்பாக இருக்கும். முகத்திற்கு எடுத்துக் கொள்ளும் கவனத்தை கழுத்திற்கும் எடுத்துக்கொள்வது நல்லது..

சில பெண்கள் வித விதமான உடையணிந்து முகத்தை ஒப்பனை செய்துகொண்டாலும் கைவிரல்களைப் பார்த்தால் தடிமனாகவும், சொர சொரவென்றும் பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும். இதற்கு காரணம் என்ன? அவர்கள் கைவிரல்களை சரியாக பராமரிக்காததுதான். சரிவர பராமரித்து அழகூட்டப்பட்ட விரல்களே உங்கள் அழகிற்கு மேலும் மெருகூட்டக்கூடியவை. 

வீட்டுவேலைகளின் போது உதாரணமாக பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தலின் போது கைகளில் ரப்பர் உறைகளைப் போட்டுக்கொள்வது அவசியம். உறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் ஏதாவது ஒரு ஹாண்ட் க்ரீம் தடவி கொள்ளுங்கள். 

நகங்கள் மிகவும் மென்மையாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் உப்பு சிறிதளவு போட்டு அதில் விரல் நகங்கள் படுமாறு சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வர நகங்கள் உறுதி ஆகும். 

கைவிரல்கள் உலர்ந்து வெடிப்புகள் வராமலிருக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய்யை கைகளில் பரவலாகத் தடவி தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும்..

உள்ளங்கைகளும், விரல்களும் மிருதுவாக இருக்க தயிரைத் தடவித் தேய்த்துக் கொள்வதாலும் விரல்கள் மென்மைப்படும். எல்லாவித பேஸ் பேக்குகளுமே கைகளுக்கு பயன்படுத்த ஏற்றவை.. கடைகளில் விற்கும் ஹோண்ட் கிரீம்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் வீட்டிலேயே கிரீம் தயாரித்துக் கொள்ளலாம். அரை அவுன்ஸ் கிளிஸரினுடன் அரை அவுன்ஸ் பன்னீர் சேர்த்து ஹேண்ட் கிரீம் தயாரிக்கலாம். அல்லது கிளிஸரினுடன் தேன், எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் ஹேண்ட் கிரீம் தாயாரிக்கலாம்..

நகங்களில் அவ்வப்போது ஒலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மஸாஜ் செய்து கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது க்ரீம் அல்லது ஒலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு கைவிரல்களை உருவி உருவித் தேய்த்து மஸாஜ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும். நகங்கள் உறுதியில்லாமல் அவ்வப்போது உடைந்தாலோ அல்லது தெறித்து விட்டாலோ உடம்பில் போதுமான அளவு இரும்புச்சத்து அல்லது கல்சியம் சத்து இல்லை எனத்தெரிந்து கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு நகங்கள் உறுதியாக இருக்கும். 

இனி 3 மாதம் முன்னதாகவே தயாராக வேண்டிய மணப்பெண் முதல் மாதம் முதலே பிளீச்சிங் பேஷியல் அல்லது கோல்டன் பேஷியல் ஆகியவற்றை தவறாமல் செய்து கொள்வது நல்லது.  இது முகப்பொலிவை உடனடியாக எடுத்துக் காட்டுகிறது. இது போல தலை முடியை பராமரிப்பதற்கும் சூடான எண்ணையில் மசாஜ் செய்வதோடு கூட வைப்ரேட்டர், ஹைபிரிகுவன்சியை உபயோகப்படுத்தி தலை முடியை பேன், பொடுகு, தொல்லை இல்லாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும். 

இத்துடன் பெடிக்யூர் மற்றும் மெனிக்யூரையும் அவசியமாக செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் திருமணத்துக்கு முன் எந்தவிதமான தோல் பிரச்சினை, பொடுகுப் பிரச்சினைகளோ, கை, கால், நகங்களின் மூலம் உண்டாகும் பிரச்சினைகளோ வராமல் தவிர்க்கலாம். 

முதலில் தலை முடிக்கு சிறப்பான சூட்டுப் பருவத்தில் எண்ணையில் மசாஜ் செய்து ஹென்னா கண்டிஷனர் மூலம் முடியை சுத்தமாக்கி பளபளப்பாக வைத்த பின்னர் முகத்துக்கு பிளீச்சிங் செய்தவுடன் கோல்டன் பேஷியல் செய்து முகத்தின் சதைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக் கச் செய்யலாம். கை, கால்களில் உள்ள நிறத்தை அதிகரிக்க முதலில் பிளீச்சிங் செய்து, பிறகு வேண்டாத முடியை நீக்க வெக்சிங் செய்கிறோம். 

இதன் மூலம் நிறம் அதிகரிப்பது மட்டு மல்லாமல் தோலும் மிருதுவாக இருக்கும். அதன் பிறகு பெடிக்யூர், மெனிக்யூர் ஆகியவற்றை பிரெஞ்ச் முறையில் செய்து பாதங்களையும், நகங்களையும் அழகு மிளிரச்செய்யலாம். திருமணத்துக்கு முன் உடல் முழுவதையும் மசாஜ் செய்து கொள்வது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும், சுறு சுறுப்பையும் கொடுக்கும். இவை அனைத்தும் மணமகள் அலங்காரத்தில் அடங்கும்.

தினமும் 4-5 லீற்றர் தண்ணீர் பருகவேண்டும். அசைவ உணவுகளின் அளவைக்குறைத்து, பெருமளவு காய்கறி, பழங்களை உணவில் சேர்க்கவேண்டும். மனதை அமைதிப்படுத்தும் பொழுது போக்கில் ஈடுபட வேண்டும். தினமும் 8 மணி நேரம் நன்றாகத் தூங்கவேண்டும். உடலை நன்றாக பராமரித்து, அழகில் ஆர்வம் செலுத்தவேண்டும். அழகைப் பொறுத்தவரையில் முதலில் வீட்டிலே அதற்குரிய செயல்முறைகளைத் தொடங்க வேண்டும். 

ஓட்ஸ், பால் பவுடர் ஆகிய இரண்டையும் தோடம்பழ ஜூசில் கலந்து வாரத்தில் ஒருநாள் உடம்பு முழுவதும் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மென்மையான ஸ்பான்ஞ்ச் அல்லது கை விரலால் மிதமாக தேய்த்துக்கொடுக்க வேண்டும். பின்பு கழுவிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் சருமத்தில் இருக்கும் ”இறந்த செல்கள்” நீங்கிவிடும். பால் பவுடரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத்தில் பதிந்து பளபளப்பை கொடுக்கும்.

அழகு நிலையத்தில் மணப்பெண்களுக்காக இப்போது ”மில்க் பாத்” உள்ளது. தொட்டியில் பால், தண்ணீர் மற்றும் ஒவ்வொருவர் சருமத்திற்கும் தேவையான ஜெல்லும் அதில் கலந்திருக்கும்.

முதலில் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி உடலில் பூசி தேய்த்து ”ஸ்கிரப்” செய்துவிட்டு, பின்பு ”ஆவி பாத்” கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் மில்க் பாத் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு உடல் முழுக்க ”மாஸ்க்” போடப்படும். இதனால் உடல் முழுக்க உள்ள சருமம் ஒரே நிறத்தில் தோன்றும். பளபளப்பும் தோன்றும். இதனை திருமணம் நடக்கும்வரை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது.

சில பெண்கள் ”வையின் தெரபி”யும் எடுத்துக்கொள்கிறார்கள். முதலில் ஸ்கிரப் செய்தல் பின்பு ஆவி பிடித்தல் அடுத்து வையின் கலந்த நீரில் குளிக்கவைத்தல் போன்றவை இதன் கட்டங் களாகும். இந்த தெரபிக்கான வையின் தனித் தன்மை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பால் பிடிக்காதவர்கள் வையினில் குளிக்கிறார்கள். 

முக அழகுக்கு வீட்டில் இருக்கும் பொருட் களை முதலில் பயன்படுத்த வேண்டும். ”நோர்மல் ஸ்கின்” கொண்டவர்கள் ஸ்ட்ரோபெரி பழத்தை பிசைந்து முகத்தில் தேய்த்து ஸ்கிரப் செய்ய வேண்டும். பத்து நிமிடத்தில் அதை நீக்கிவிட்டு, ஆப்பிள் கூழை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும்.

எண்ணெய்த்தன்மை சருமத்தை கொண்டவர்கள் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் முகத்தை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் எலுமிச்சம் பழச்சாறை முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் கழுவி விடவேண்டும். இது லேசான எரிச் சலைத் தரும். இதை விரும்பாதவர்கள் சாத்துக் குடி ஜூசை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். 

சந்தனப் பவுடரை பன்னீர் அல்லது சுத்தமான தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்களில் கழுவவேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்து விடும். பின்பு வாரத்தில் ஒருமுறை மட்டும் இவ்வாறு செய்தால் போதும். எண்ணெய்த் தன்மை குறைந்ததும் இந்த வீட்டு சிகிச்சையை நிறுத்தி விடலாம். ஆனால் கருப்புப் புள்ளி, திட்டு, படை, முகப்பரு, நிறமாற்றம் போன் றவை இருப்பவர்கள் அழகு நிலையங்களிலே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

கூந்தல் பராமரிப்பை பொறுத்தவரையில் மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே ஒலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற ஏதாவது ஒன்றை லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊறிய பின்பு ஷாம்பூ போட்டு கழுவி, கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை முடியில் மட்டும்தான் புரட்ட வேண்டும். தலை ஓட்டில் படக்கூடாது.

கூந்தல் ”டிரை ஹெயர்” ஆக இருந்தால் தே.எண்ணெய், விளக்கெண்ணெய், கிளிசரின், குக்கிங் வினிகர் போன்றவைகளை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கண்டிஷனருடன் கலந்து முடியில் பூச வேண்டும். பின்பு சுடு தண்ணீரில் டவலை நனைத்து பிழிந்து, தலையில் கூந்தலை சுற்றிக் கட்ட வேண்டும். இரண்டு, மூன்று முறை அவிழ்த்து கட்டவேண்டும். 15 - 20 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்போ போட்டு கழுவ வேண்டும். பின்பு கண்டிஷனர் பூச வேண்டும். வாரத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்ய வேண்டும்.

கூந்தலில் பிரச்சினைகள் இருந்தால் அழகு நிலைய சிகிச்சைகள் அவசியப்படும். ஸ்பா, ஸ்மூத்தனிங் போன்று தேவைப்படும் சிகிச்சைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை பெறவேண்டியிருக்கும்.
ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் செய்ய வேண்டியவை: நோர்மல் ஸ்கின் நாமக்கட்டி பவுடர், முல்தானிமுட்டி இரண்டையும் முகத்தில் பூசி கழுவ வேண்டும். எண்ணெய்ச் சருமம் என் றால் முல்தானிமுட்டி மட்டும் பூச வேண்டும். 

அழகு நிலையத்தில் இதற்காக ”ஸ்கின் லைட்னிங் பேக்கேஜ்” உள்ளது. இதனை சருமத்திற்கு 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும்.

ஒரு வாரத்திற்கு முன்பு:

முகூர்த்தத்தன்று மணப்பெண்ணுக்கு முழுமையாக எப்படி அலங்காரம் செய்யப் படுமோ அது போன்ற அலங்காரத்தை ஒரு வாரத்திற்கு முன்பே செய்து பார்த்துவிட வேண்டும். உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்துவிட்டு, அதில் ஏதாவது மாற்றங்கள் தேவையா? உடை, அணிகலன்களில் ஏதாவது மாற்றம் தேவையா? என்பதை எல்லாம் பார்த்துவிட வேண்டும். இப்போது பெரும்பாலும் மணமகனும் வந்து, மணப்பெண்ணின் முழு அலங்காரத்தை பார் வையிடுகிறார். அவருடைய விருப்பத்தையும் தெரிவிப்பார். போட்டோவும் எடுத்துக் கொள்வார். இந்த அலங்காரத்திற்கு மூன்று மணி நேரம் ஆகிவிடும்

திருமணத்துக்கு 4 அல்லது 5 நாட்களுக்கு சிறப்பு மணமகள் பேக்கேஜ் என்ற ஒரு வசதியை செய்து கொள்ளலாம். 3 மற்றும் 4 மணி நேரம் செலவிட்டால் மணப் பெண்ணை உச்சி முதல் பாதம் வரை தயார் செய்து விடலாம்.

மூன்று நாட்களுக்கு முன்பு:

பெடிக்யூர், மெனிக்யூர் எனப்படும் கால் கை நக பராமரிப்பு, வாக்சிங், பேஷ்யல், பொடி ட்ரீட்மென்ட் மற்றும் மெகந்தி போன்றவைகளை போட்டுக்கொள்ள வேண்டும். இவைகளை செய்த பின்பு மணப்பெண்கள் வெளியே செல்லக்கூடாது. வெயிலில் அலைவது, உடலில் மாசு படிவது, அலைச்சலை ஏற்படுத்திக்கொள்வது போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு:

திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு கை, கால்களில் மெஹந்தி எனப்படும். மருதாணியால் போடும் டிசைன்களை இப்பொழுது பலரும் விரும்பிப் போட்டுக் கொள்கிறார்கள். மணமகள் மருதாணி அலங்காரம் என்பது முழங்கை வரை போடப்படும். ராஜஸ்தானி (இந்திய) மாதிரியாகவோ அல்லது அரேபிய டிசைனாகவோ போட்டுக் கொள்ளலாம். 

கால்களுக் கும் கொலுசு டிசைன் முதல் காலை முற்றிலும் மூடும் ராஜஸ்தானி டிசைனையும் போட்டுக் கொள்ளலாம். தங்க கலர், சில்வர் கலர், கிலிட்டர்ஸ் ஆகியவற்றையும் வரவேற்பு நேரத்தில் போட்டுக் கொள்ளலாம்.

நிறைய தண்ணீர் பருகவேண்டும். நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். நிறைய பழச்சாறு பருகவேண்டும்.

திருமணத்தன்று:

முகூர்த்தத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, முழுமையான மணப்பெண் அலங் காரத்தை தொடங்க வேண்டும். ஏற்கனவே டிரையல் செய்து பார்த்திருந்தால் வேகமாக, சிறப்பாக மணப்பெண் அலங்காரத்தை செய்து முடித்துவிட முடியும். 

வரவேற்பு அலங்காரம் இப்போது மிக நவீனமாகி இருக்கிறது. சிம்பிள் அதே நேரத்தில் மாடர்ன் தோற்றத்தில் மணப் பெண்கள் ஜொலிக்க விரும்புகிறார்கள். அதற்கு தக்கபடி செய்யப்படும் மணப்பெண் அலங்காரம் அதிக வரவேற்பினை பெறுகிறது.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum