தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
தத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை! ஏன்?Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயா!Mon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc "பிழைக்க தெரியாத மனுஷன்" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 9 users online :: 0 Registered, 0 Hidden and 9 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
July 2018
MonTueWedThuFriSatSun
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16176
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழ் வேதியியல் அருஞ்சொற்பொருள்/TAMIL CHEMISTRY GLOSSARY

on Fri Jul 22, 2016 9:11 pm
தமிழ் வேதியியல் அருஞ்சொற்பொருள்/TAMIL CHEMISTRY GLOSSARY
 
A - வரிசை
ADSORBSION - பரப்புக்கவர்ச்சி
ACETAL - காடிச்சாராயம்
ACETATE (COMPOUND) - காடியவினம்
ACETATE (GROUP/ANION) - காடியத் தொகுதி/நேர்மின்னூட்டணு - [CH3COO]- நேர்மின்னூட்டணு
ACETALDEHYDE - இருக்கொள்ளிய நீரகநீங்கியம் - வேற்று ஆங்கிலப் பெயர் Ethanal
ACCEPTOR, ACCEPTOR ATOM - ஏற்பி, ஏற்பணு
ACETONE - இரட்டை ஒருக்கொள்ளியக் கொழுக்காடியம் - இதன் ஆங்கிலப் பெயர் Dimethyl Ketone; CH3COCH3
ACCUMULATOR - சேமக்கலம்
ACETYLENE - முப்பிணை இருக்கொள்ளியம் - முறை ஆங்கில வேதிப்பெயர் ethyne
ACIDIMETRY - அமில அளவியல்
ACRYLIC ACID - ஆக்கிர அமிலம்
ACYL (COMPOUND) - அமிலமவினம் - RCO- உறுப்புக் கொண்டுள்ளச் சேர்மம்; கரிம அமிலங்களிருந்து நீரகவுயிரக உறுப்பு (-OH) நீக்கப்பட்டு பெறும் சேர்மம்
ACYL GROUP - அமிலமத் தொகுதி - RCO- உறுப்பு
ACYL (GENERAL) - அமிலமம்
ACYL HALIDE - அமிலம உப்பீனியினம்
ACYLATION - அமிலமவேற்றம்
ALCOHOL - சாராயம்
ALDEHYDE GROUP - நீரகநீங்கியத் தொகுதி O=CH- தொகுதி; வேற்று பெயர் ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி (formyl group அல்லது methanoyl group)
ALDEHYDE (GENERAL) - நீரகநீங்கியம்
ALIPHATIC COMPOUND - கொழுப்பார்ந்தச் சேர்மம்
ALKALOID - காரப்போலி
ALKANE - ஒருப்பிணைக்கொள்ளியம்
ALKENE - இருப்பிணைக்கொள்ளியம்
ALKYL (COMPOUND) - கொள்ளியவினம்
ALKYL (GROUP) - கொள்ளியத் தொகுதி - CnH2n+1 தொகுதி
ALKYNE - முப்பிணைக்கொள்ளியம்
ALLENE (CLASS OF HYDROCARBONS) - தொடர் ஈரிருப்பிணைக்கொள்ளியம் - -C=C=C- அமைப்பு கொண்ட நீரகக்கரிமம்
ALLENE (COMPOUND) - (1,2) ஈரிருப்பிணை முக்கொள்ளியம் - முறை ஆங்கிலப் பெயர் (1,2)-propadiene
ALLOTROPE - புறவேற்றுரு
ALLOTROPY - புறவேற்றுமை
ALUMINIUM - அளமியம்
ALUMINIUM HYDROXIDE - அளமியம் நீரகவுயிரகம் - Al(OH)3; முறைப் பெயர் அளமியம் மும்மை நீரகவுயிரகம்
AMETHYST - செவ்வந்திக்கல்
AMIDE (COMPOUND) - நீரகப்பரியவினம்
AMIDE (GENERAL) - நீரகப்பரியம்
AMIDE GROUP - நீரகப்பரியத் தொகுதி - O=CNH தொகுதி; பொதுவாக :O: RCN: (-H) (-R')
AMINE (COMPOUND) - நவச்சியவினம்
AMINE GROUP - நவச்சியத் தொகுதி - :N தொகுதி; இங்கு ':' ஒரு தனியிணை ஆகும்
AMINE (GENERAL) - நவச்சியம்
AMINO ACID - நவச்சியவமிலம் - நவச்சியத் தொகுதி (:N, amine group), ஈருயிரகக்கரிமநீரகத் தொகுதி (-C=OOH, carboxyl group) கொண்டச் சேர்மம்; பொது வாய்ப்பாடு H2NCHRCOOH, இங்கு R ஒரு நீரகக்கரிமத் தொகுதி
AMORPHOUS SOLID - பொடிமம்
ANABOLISM - வளர்மாற்றம் - சிக்கலான மூலக்கூற்றுகள் இணைசேர்ந்து இன்னும் பெரிய மூலக்கூற்றுகள் உருவாகும் வேதி வினைகள்
ANNEAL, ANNEALING - சீராற்று, சீராற்றல்
ANHYDRIDE - நீரிலி
ANTIMONY - கருநிமிளை
ARAMID - இறுமம்
AROMATIC COMPOUND - வாசனைச் சேர்மம்
ARSENIC - பிறாக்காண்டம்
ARSENIC PENTASULPHIDE - பிறாக்காண்டம் ஐங்கந்தகம் - As2S5
ARSENITE ANION - மூவுயிரகப்பிறாக்காண்ட நேர்மின்னூட்டணு - [AsO3]3-
ARSENITE (GROUP OF COMPOUNDS) - மூவுயிரகப்பிறாக்காண்டவினம்
ARYL (GENERAL) - மணமம்
ASPARAGINE - கிளவரியம் - C4H8N2O3
ASPARTAME - மதக்கிளவரியம் - C14H18N2O5
ASPARTIC ACID - கிளவரியமிலம்
ASPHALT - நிலக்கீல் - வேற்று ஆங்கிலப்பெயர் bitumen
AZIDE ANION - முத்தழைம நேர்மின்னூட்டணு - [N3]-
AZIDE COMPOUND - முத்தழைமவினம்
AZO COMPOUND - இலவணியவினம் - -R-N=N-R'- கொண்டச் சேர்மம், இங்கு R, R' மணம வளையம் (aromatic ring) அல்லது கொள்ளியத் தொகுதிகள் ஆகும்
AZO GROUP - இலவணியத் தொகுதி - -N=N- தொகுதி
AZO DYE - இலவணியச் சாயம்
 
B - வரிசை
BARIUM - பாரிதவியம்
BENZAL CHLORIDE - பாசிக இரட்டைக் கொள்ளியத் தூபியம் - முறை ஆங்கிலப் பெயர் chloro dimethyl benzene
BENZALDEHYDE - தூபிய நீரகநீங்கியம்
BENZENE - தூபியம்
BENZOIC ACID - தூபிவீருயிரகக்கரிமநீரக அமிலம்
BENZOATE - தூபியவீருயிரகக்கரிமம் - தூபிவீருயிரகக்கரிமநீரக அமிலத்தின் (benzoic acid) உப்பு அல்லது அத்தர் (ester)
BENZYL CHLORIDE - பாசிக ஒற்றையக் கொள்ளியத் தூபியம் - முறை ஆங்கிலப் பெயர் chloro methyl benzene
BERYL - வருணப்பாறை
BERYLIUM - வெளிரியம்
BITUMEN - நிலக்கீல் - வேற்று ஆங்கிலப்பெயர் asphalt
BLACK LEAD - காரீயம்
BLUE VITREOL - துருசு, நீலத்துத்தம், மயில் துத்தம்
BORAX - வெண்காரம் - இதன் வாய்ப்பாடு Na2B4O7-10H2O
BORIC ACID - கார்மவமிலம்
BORON - கார்மம்
BORON NITRIDE - கார்மம் தழைமம்
BORON TRICHLORIDE - கார்மம் முப்பாசிகம்
BROMOFORM - ஒருக்கொள்ளிய முன்னெடியம், முன்னெடியவொருக்கொள்ளியம் - CHBr3, இதர ஆங்கிலப் பெயர்கள் tribromometane, methyl tribromide
BUCKMINSTERFULLERENE-C60 - அறுபதாங்கோளக்கரிமம் - 60 கரிம அணுக்கள் கொண்ட கால்பந்து வடிவ கூடுக்கரிமம் (fullerene)
BUCKMINSTERFULLERENE-C70 - எழுபதாங்கோளக்கரிமம் - 70 கரிம அணுக்கள் கொண்ட கால்பந்து வடிவ கூடுக்கரிமம் (fullerene)
BUTADIENE - (1,3) ஈரிருப்பிணை நாற்கொள்ளியம்
BUTANE - ஒருப்பிணை நாற்கொள்ளியம்
BUTENE - இருப்பிணை நாற்கொள்ளியம்
BUTYL ALCOHOL - நாற்கொள்ளியச் சாராயம்
BUTYNE - முப்பிணை நாற்கொள்ளியம்
BY-PRODUCT - துணை வினைபொருள்
 
C - வரிசை
CALCIUM - சுண்ணம்
CALCIUM CARBONATE - சுண்ணம் மூவுயிரகக்கரிமம்
CAFFEINE - வெறியம்
CARBON - கரிமம்
CARBON-14 - பதினாறாங்கரிமம்
CARBON DIOXIDE - கரிமம் ஈருயிரகம் - CO2
CARBON MONOXIDE - கரிமம் ஓருயிரகம் - CO
CARBON NITRIDE - கரிமம் தழைமம் - வேற்று ஆங்கிலப் பெயர் cyanogen; வாய்பாடு N\\\C-C\\\N
CARBON TETRACHLORIDE - கரிமம் நாற்பாசிகம் - CCl4
CARBONATE - மூவுயிரகக்கரிமவினம்
CARBONATE ANION - மூவுயிரகக்கரிம நேர்மின்னூட்டணு - [CO3]2- மின்னூட்டணு
CARBONIC ACID - கரியமிலம்
CARBONYL GROUP/ION - உயிரகக்கரிமத் தொகுதி/மின்னூட்டணு - கரிமம் உயிரகம் இருப்பிணை (C=O) மின்னூட்டணு
CARBOXYLATE GROUP/ANION - ஈருயிரகக்கரிமத் தொகுதி/நேர்மின்னூட்டணு - COO- மின்னூட்டணு
CARBOXYLATE (GROUP OF COMPOUNDS) - ஈருயிரகக்கரிமவினம்
CARBOXYLIC ACID - ஈருயிரகக்கரிமநீரக அமிலம்
CARBOXYLIC COMPOUND - ஈருயிரகக்கரிமநீரகவினம்
CARBOXYLIC GROUP/ION - ஈருயிரகக்கரிமநீரகத் தொகுதி/மின்னூட்டணு - -C=OOH மின்னூட்டணு
CATABOLISM - சிதைமாற்றம் - சிக்கலான மூலக்கூற்றுக்கள் உடைந்து இன்னும் எளிய மூலக்கூற்றுக்கள் உருவாகும் வேதி வினைகள்
CATALYST - வினையூக்கி
CELLULOSE - மரநார் - இதன் வேதி வாய்ப்பாடு (C6H10O5)n
CERAMIC - வனைபொருள்
CHEMICAL DECOMPOSITION - வேதிச் சிதைவு
CHEMICAL EQUILIBRIUM - வேதிச் சமநிலை
CHEMOTHERAPY - வேதிச்சிகிச்சை
CHLORAL(DEHYDE) - பாசிக நீரகநீங்கியம் - CCl3CH=O
CHLORINATION - பாசிகமூட்டல்
CHLORINE - பாசிகம்
CHLOROBENZENE - பாசிகத்தூபியம்
CHLOROXYLENE - பாசிகமரநீர்
CHLOROFLOUROCARBON - பாசிகவினைவியக்கரிமம்
CHLOROFLOUROHYDROCARBON - பாசிகவினைவியநீரகக்கரிமம்
CHLOROFORM - ஒருக்கொள்ளிய முப்பாசிகம், முப்பாசிகவொருக்கொள்ளியம் - CHCl3, இதர ஆங்கிலப் பெயர்கள் trichloromethane, methyl trichloride
CHLOROMETHANE - பாசிகவொருக்கொள்ளியம் - CH3Cl; வேற்றுப் பெயர் ஒருக்கொள்ளியப்பாசிகம் (methyl chloride)
CHLOROPHYLL - பச்சையம்
CHROMATOGRAPHY - நிறவியல்
CHROMIUM - நீலிரும்பு
CINCHONINE - சுரப்பட்டைக்காரம்
CIS ISOMER - ஒருப்பக்க மாற்றியம்
CITRIC ACID - எலுமிச்சம்புளி அமிலம்
COAL TAR - நிலக்கரிக்கீல்
COAGULATION - திரளுதல்
COENZYME - துணைநொதியம்
COMPLEX - அணைவு - இரண்டு அல்லது மேலான மூலக்கூறு உருக்கள் பொதுவாக ஈந்தணைவிகள் (ligands) அல்லது மாழை மின்னூட்டணுக்கள் (metal ions) கொண்டுள்ள வேதிப்பொருள்
CONDUCTION BAND - கடத்தும் பட்டை
COVALENT BOND - ஒருவலுப்பிணைப்பு
CREAM OF TARTAR - திராக்கவுப்பு
CUMENE - சீரகவீனி
CUMINOLE - சீரகநெய்
CYANAMIDE (COMPOUND) - தழைமக்கரிமம் நீரகப்பரியம் N\\\CN(-H)(-H); CN2H2
CYANAMIDE GROUP - இருத்தழைமக்கரிமத் தொகுதி - -CN2 தொகுதி
CYANATE ANION - உயிரகக்ரகரிமத்தழைம நேர்மின்னூட்டணு - [OCN]- நேர்மின்னூட்டணு
CYANIDE COMPOUND - தழைமக்கரிமவினம்
CYANIDE (GENERAL) - தழைமக்கரிமம்
CYANO GROUP - தழைமக்கரிமத் தொகுதி - தழைமம், கரிமம் முப்பிணைத் தொகுதி [:C\\\N:]-
CYANOGEN - கரிமம் தழைமம் - வேற்று ஆங்கிலப் பெயர் carbon nitride; வாய்பாடு N\\\C-C\\\N
CYCLOBUTADINE - வளைய ஈரிருப்பிணை நாற்கொள்ளியம்
CYCLOMIN - மீனஞ்சம்
CYCLOPENTANE - வளையவொருப்பிணை ஐங்கொள்ளியம்
CYCLOPENTENE - வளையவிருப்பிணை ஐங்கொள்ளியம்
CYCLOSILICATE - வளையமண்ணியவீனி - நான்முகிகள் வளையங்களான அமைப்புகள் கொண்ட மண்ணியவீனி
CYMENE - சீரகவியம்
 
D - வரிசை
DIENE - ஈரிருப்பிணைக்கொள்ளியம்
DIESEL - வளியெண்ணை
DIOL - இருச்சாராயம் - வேற்று ஆங்கில வேதிப்பெயர் glycol; இரண்டு சாராயத் தொகுதிகள் (-OH) கொண்டச் சேர்மம்
DONOR, DONOR ATOM - வழங்கி, வழங்கணு
DOUBLE BOND - இரட்டைப்பிணைப்பு, இருப்பிணை
DOUBLE CHAIN SILICATE - இரட்டைச் சங்கிலி மண்ணியவீனி
DUCTILE - நீள்மையுடைய
DUCTILITY - நீள்மை
 
E - வரிசை
EMULSION - பால்மம்
EPOXIDE - ஆடைவுயிரகம்
ESTER - அத்தர்
ESTERIFICATION - அத்தராதல்
ETHANE - ஒருப்பிணை இருக்கொள்ளியம்
ETHENE - இருப்பிணை இருக்கொள்ளியம்
ETHER - அமுதியம்
ETHANOYL GROUP - இருக்கொள்ளியவமிலமத் தொகுதி - CH3CO- தொகுதி
ETHYL ALCOHOL - இருக்கொள்ளியச் சாராயம் - இதன் பொதுப்பெயர் தேறலியச் சாராயம் (vinyl alcohol)
ETHYL GROUP/ION - இருக்கொள்ளியத் தொகுதி/மின்னூட்டணு
ETHYLENE - இருப்பிணை இருக்கொள்ளியம் இதன் பொதுப்பெயர் நெய்தருவளி (olefiant gas)
ETHYLENE GLYCOL - இருப்பிணை இருக்கொள்ளிய இருச்சாராயம்
ETHYNE - முப்பிணை இருக்கொள்ளியம் - வேற்று ஆங்கில வேதிப்பெயர் acetylene
 
F - வரிசை
FERRIC OXIDE - மூவிணை இரும்பு உயிரகம் - வேற்று ஆங்கில வேதிப்பெயர் iron (iii) oxide, 'துறு (rust)' என அறியப்படுவது, Fe2O3
FERRITE - இரும்பியம் - உயர்ந்த உட்புகுமை கொண்டுள்ள சொக்கமான இரும்பின் வடிவம்
FERROUS OXIDE - ஈவிணை இரும்பு உயிரகம் - வேற்று ஆங்கில வேதிப்பெயர் iron (ii) oxide, FeO
FORMALDEHYDE - ஒருக்கொள்ளிய நீரகநீங்கியம் - முறை ஆங்கிலப் பெயர் Methanal
FLOURIDE - வினைவியவினம்
FLOURINE - வினைவியம்
FLOUROFORM - ஒருக்கொள்ளிய மூவினைவியம் - CHF3
FORMYL GROUP - ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி - வேற்றுப் பெயர் நீரகநீங்கியத் தொகுதி (aldehyde group); O=CH- தொகுதி
FORMYLATION - நீரகநீங்கியவேற்றம், ஒருக்கொள்ளியவலிமவேற்றம்
FRUCTOSE - பழச்சர்க்கரை
ETHENE - இருப்பிணை இருக்கொள்ளியம்
FURAN - தவிடியம்
 
G - வரிசை
GALLIUM - மென்தங்கம், பொன்னிதள்
GALLIUM ARSENIDE - மென்தங்கம் பிறாக்கண்டம், பொன்னிதள் பிறாக்காண்டம் - GaAs
GEL - களிமம்
GERMANIUM - சாம்பலியம்
GLUCITOL - மாச்சர்க்கரைச்சாராயம் - வேற்று ஆங்கிலப் பெயர் sorbitol
GLUCOSE - மாச்சர்க்கரை
GLUTAMATE ANION - மதவீருயிரகக்கரிம நேர்மின்னூட்டணு - மதத்தில் ஈருயிரகக்கரிமத் தொகுதி (carboxylate group) பிணைந்த நேர்மின்னூட்டணு
GLUTAMIC ACID - மதவீருயிரகக்கரிமநீரக அமிலம்
GLUTEN - மதம்
GLYCOL - இருச்சாராயம் - முறை ஆங்கில வேதிப்பெயர் diol; இரண்டு நீரகவுயிரகத் தொகுதிகள் (-OH) கொண்டச் சேர்மம்
GREEN VITRIOL - அன்னபேதி, பச்சைத்துத்தம்
GUAICOL - குவாட்டிநெய் - தூபிய வளையத்தில் அடுத்தடுத்து CH3O, OH தொகுதிகள் கொண்டச் சேர்மம், C6H4(OH)(OCH3)
 
H - வரிசை
HIGH DENSITY LIPOPROTEIN (HDL) - அடர் கொழுமியப்புரதம்
HYGROSCOPIC, HYGROSCOPY - நீர்க்கவரும், நீர்க்கவர்ச்சி
HYDRIDE - நீரகவினம்
HYDRIDE ION - நீரக மின்னூட்டணு - [H]-
HYDROCARBON - நீரகக்கரிமம்
HYDROGEN - நீரகம்
HYDROGEN CYANIDE - நீரகம் தழைமக்கரிமம்
HYDROGEN PEROXIDE - நீரகம் ஈருயிரகம்
HYDROXIDE - நீரகவுயிரகவினம்
HYDROXYL GROUP/ION - நீரகவுயிரகத் தொகுதி/மின்னூட்டணு - OH- தொகுதி
 
I - வரிசை
IDEAL GAS - கருத்தியல் வளிமம்
INCANDESCENCE - வெள்ளொளிர்வு
INDANE - ஒருப்பிணை இறஞ்சியம் - தூபிய வளையம் (benzene ring), வளையவொருப்பிணை ஐங்கொள்ளியம் (cyclopentane) மூலக்கூறுகள் பிணைந்தச் சேர்மம்
INDENE - இருப்பிணை இறஞ்சியம் - தூபிய வளையம் (benzene ring), வளையவிருப்பிணை ஐங்கொள்ளியம் (cyclopentene) மூலக்கூறுகள் பிணைந்தச் சேர்மம்
INDICATOR - காட்டி
INERT GAS - மந்த வளிமம்
INGOT - பாளம்
INHIBITOR - வினைத்தடுப்பி
INOSILICATE - சங்கிலி மண்ணியவீனி - இடைப்பின்னிய நான்முகிச் சங்கிலி அமைப்புகள் கொண்ட மண்ணியவீனி; இவைகள் ஒற்றைச் சங்கிலி மண்ணியவீனி (single-chain silicate) அல்லது இரட்டைச் சங்கிலி மண்ணியவீனி (double-chain silicate) இருவகைகள் உள்ளன
INSULIN - கணையநீர்
INTER-HALOGEN COMPOUND - இடையுப்பீனியினம்
IODOFORM - ஒருக்கொள்ளிய முன்னைலம், முன்னைலவொருக்கொள்ளியம் - CHI3, இதர ஆங்கிலப் பெயர்கள் triiodomethane, methyl triiodide
IODIDE - நைலவினம்
IODINE - நைலம்
IODINE TRICHLORIDE - நைலம் முப்பாசிகம் - ICl3
IODINE SULPHATE - நைலம் நாலுயிரகக்கந்தகம் - ISO4
IODINE TETROXIDE - நைலம் நாலுயிரகம் - IO4
ION - மின்னூட்டணு
IONIC BOND - மின்னூட்டணுவியற் பிணை
ISOBUTANE - ஒத்தம் ஒருப்பிணை நாற்கொள்ளியம்
ISOBUTYL ALCOHOL - ஒத்தம் நாற்கொள்ளியச் சாராயம்
ISOLATED PENTAGON RULE - தனித்த ஐங்கோண விதி - கூடுக்கரிமத்தின் (fullerenes) ஐங்கோணங்கள் பிணைந்திராமல் தனித்திருந்தால், அதாவது ஒவ்வொரு ஐங்கோணங்களுக்கு சுற்றி அறுகோணங்கள் இருந்தால் அது நிலைத்தக் கூடுக்கரிமமாக (stable fullerene) அமையும்; அறுபதாங்கோளக்கரிமம் (buckminsterfullerene / C60) இவ்விதியை பூர்த்திசெய்யும் மீச்சிறு கூடுக்கரிம மூலக்கூறு (fullerene molecule); அடுத்து வருவது எழுபதாங்கோளக்கரிமம் (C70)
ISOMER - மாற்றியம்
ISOTOPE - ஓரிடமி
ISOTOPISM - ஓரிடமை
IVORY BLACK - தந்தக்கரி
 
J - வரிசை
JELLY - திடக்கூழ், திண்மக்கூழ்
 
K - வரிசை
KETONE - கொழுக்காடியம் - உயிரகக்கரிமத் தொகுதி (carbonyl group, C=O) கொண்டுள்ளச் சேர்மம்; இதன் பொது வாய்ப்பாடு R1(CO)R2
KETOSE - காடியச்சர்க்கரை
KEVLAR - கடுமம்
KRYPTON - மறைவியம்
 
L - வரிசை
LANOLINE - கம்பளெண்ணை - செம்மறியாட்டுக் கம்பளத்திலுந்து தயாரிக்கப்படும் சப்பாத்து மெருகுக்கான மூலப்பொருள்.
LABELLED COMPOUND - குறியிட்டச் சேர்மம் - நொதுமின்னிகள் (நடுவணுக்கள்) பெயர்க்கப்படும் சேர்மம்.
LIGAND - ஈந்தணைவி
LIGNITE - பழுப்பு நிலக்கரி
LIMESTONE - சுண்ணாம்புக்கல்
LINOLEUM - சிறுசணலியத்திண்மம்
LINOTYPE METAL - வரியச்சு மாழை, வரியச்சுலோகம் - ஈயம், வெள்ளீயம், கருநிமிளை கொண்ட கலப்பு மாழை
LINOXYN - சிறுசணலியம்
LIPID - கொழுமியம்
LIPOPROTEIN - கொழுமியப்புரதம்
LITHIUM - மென்னியம்
LITMUS, LITMUS PAPER - பாசிச்சாயம், பாசிச்சாயத்தாள்
LONE PAIR - தனியிணை
LOW DENSITY LIPOPROTEIN (LDL) - ஐது கொழுமியப்புரதம்
 
M - வரிசை
MALLEABLE - தகடுமையுடைய
MALLEABILITY - தகடுமை
MAGNESIUM - வெளிமம்
MAGNESIUM BORIDE - வெளிமம் கார்மம் - MgB2
MAGNESIUM BROMIDE - வெளிமம் நெடியம் - MgBr2
MAGNESIUM CARBONATE - வெளிமம் மூவுயிரகக்கரிமம் - MgCO3
MAGNESIUM CHLORIDE - வெளிமம் பாசிகம் - MgCl2
MAGNESIUM IODIDE - வெளிமம் நைலம் - MgI2
MAGNESIUM NITRATE - வெளிமம் மூவுயிரகத்தழைமம் - Mg(NO3)2
MANGANESE - செவ்விரும்பு, மங்கனம்
MANGANESE DIOXIDE - மங்கனம் ஈருயிரகம்
MENTHOL - கற்பூரியம்
METAL - மாழை
METALLOID - மாழைப்போலி
METAL ACETYLIDE - முப்பிணை மாழைக்கொள்ளியம் - RC\\\C(-)M(+)
METHANE - கொள்ளிவளி, ஒருப்பிணை ஒருக்கொள்ளியம்
METHENOL - ஒருக்கொள்ளியச் சாராயம் - இதன் பொதுப்பெயர் 'மரச்சாராயம்' (wood alcohol)
METHENOYL GROUP - ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி - வேற்றுப் பெயர் நீரகநீங்கியத் தொகுதி (aldehyde group); O=CH- தொகுதி
METHYL ACETATE - ஒருக்கொள்ளியக் காடியம்
METHYL ALCOHOL - ஒருக்கொள்ளியச் சாராயம் - இதன் பொதுப்பெயர் 'மரச்சாராயம்' (wood alcohol)
METHYL CHLORIDE - ஒருக்கொள்ளியப் பாசிகம் - CH3Cl; வேற்றுப் பெயர் பாசிகவொருக்கொள்ளியம் (chloromethane)
METHYL GROUP/ION - ஒருக்கொள்ளியத் தொகுதி/மின்னூட்டணு
MONOSILANE - ஒருப்பிணை ஒருமண்ணியநீரகம் - வேற்று தமிழ்ப் பெயர்கள் மண்ணியம் நாநீரகம், மண்ணியம் நீரகம்; வேற்று ஆங்கிலப் பெயர்கள் Silicon Hydride, Silicon Tetrahydride; SiH4
MONOSODIUM GLUTAMATE - ஓருவர்மம் மதவீருயிரகக்கரிமம்
MU-METAL - உட்புகாமாழை/ஊடாமாழை
MUSTARD GAS - கடுகுவளி
 
N - வரிசை
NAPHTHALENE - கீல்ச்சூடன், அந்துநஞ்சம் - இரு தூபியப் பிணையங்கள் பிணைந்தச் சேர்மம்
NICOTINE - புகைநஞ்சம்
NESOSILICATE - தனி மண்ணியவீனி - தனித்தப் நான்முகிகள் கொண்ட மண்ணியவீனி
NITRATE (GROUP OF COMPOUNDS) - மூவுயிரகத்தழைமவினம்
NITRATE ION - மூவுயிரகத்தழைம மின்னூட்டணு - [NO3]- மின்னூட்டணு
NITRE - வெடியுப்பு
NITRE CAKE - வெடியுப்பப்பம்
NITRIC ACID - தழைம அமிலம்
NITRIDE - தழைமவினம்
NITRIDE ION - தழைம மின்னூட்டணு - [N3]- மின்னூட்டணு
NITRILE (GROUP OF COMPOUNDS) - கரிமத்தழைமவினம்
NITRILE GROUP - கரிமத்தழைமத் தொகுதி - கரமம் தழைமம் முப்பிணைத் தொகுதி [-C\\\N]
NITRITE - ஈவுயிரகத்தழைமவினம் - [NO2]- மின்னூட்டணு
NITRITE ION - ஈவுயிரகதழைம மின்னூட்டணு - [NO2]- மின்னூட்டணு
NITROGEN - தழைமம்
NITROGEN DIOXIDE - தழைமம் ஈருயிரகம் - வேற்று ஆங்கிலப் பெயர் nitrogen peroxide
NITROGEN OXIDE - தழைமம் உயிரகம்
NITROGEN PEROXIDE - தழைமம் ஈருயிரகம் - வேற்று ஆங்கிலப் பெயர் nitrogen dioxide
NITRO-COMPOUND - தழைமவீருயிரகவினம்
NITRO GROUP - தழைமவீருயிரகத் தொகுதி
NITROBENZENE - தழைமவீருரகயிரகத் தூபியம்
NITROGLYCERINE - தழைமவீருயிரகக் களிக்கரை
NON-METAL - மாழையிலி
 
O - வரிசை
OLEIC ACID - சைதூணெய் அமிலம்
OLEFIANT GAS - நெய்தருவளி
OLEFIN - நெய்யாக்குவளி இவை இருப்பிணை இருக்கொள்ளியவினங்கள் (alkene family)
OLEUM - புகைக்கந்தகவமிலம்
OXIDANT - உயிரகமேற்றி
OXIDATION - உயிரகமேற்றம்
OXIDE - உயிரகவினம்
OXYGEN - உயிரகம்
OZONE - சாரலியம்/மிகுவுயிரகம்
 
P - வரிசை
PARAFFIN - வெண்மெழுகு
PENTANE - ஒருப்பிணை ஐங்கொள்ளியம்
PENTENE - இருப்பிணை ஐங்கொள்ளியம்
PENT-1-ENE - 1-இருப்பிணை ஐங்கொள்ளியம்
PENT-2-ENE - 2-இருப்பிணை ஐங்கொள்ளியம்
PENTYNE - முப்பிணை ஐங்கொள்ளியம்
PEPTISATION - கூழ்மமாகல்
PERMALLOY - உட்புகுமாழை/ஊடுமாழை - இரும்பு மற்றும் வன்வெள்ளி ஆகியவற்றின் மாழைக்கலவை (Fe + Ni)
PERMANGANATE ANION - நாலுயிரகமங்கனம் நேர்மின்னூட்டணு - [MnO4]-
PETROCHEMICAL - பாறைவேதிப்பொருள்
PETROLEUM - பாறையெண்ணை, பாறைநெய்
PHENOL - மக்கியம்
PHOSGENE - ஒளியீனி - COCl2
PHOSPHATE ION - நாலுயிரகத்தீமுறி மின்னூட்டணு - PO4(3-) மின்னூட்டணு
PHOSPHATE MINERAL - தீமுறியீனி
PHOSPHORIC ACID - தீமுறியமிலம் - H3PO4
PHOSPHOROUS - தீமுறி, எரியம், மணிமம்
PHOSPHOROUS PENTOXIDE - தீமுறி ஐயுயிரகம்
PLASTIC - நெகிழி
POLYOXYMETHYLENE (P.O.M.) - பல்படியுயிரக இருப்பிணை ஒருக்கொள்ளியம்
POLYVINYL CHLORIDE (P.V.C.) - பல்படித்தேறலியப் பாசிகம் - தேறலியப் பாசிகத்தின் பல்படியாதலால் உருவாகும் வெப்பநெகிழி (thermoplastic); -[CH2-CHCl]-n
POLYSTYRENE - பல்படி மலக்கியம் - பொதுவாக மலக்கிய மெத்து (styrofoam, thermocole) என அழைக்கப்படுகிறது
POTASSIUM - சாம்பரம்
POTASSIUM SESQUIOXIDE - சாம்பரம் ஒன்றரையுயிரகம்
POTASSIUM PERMANGANATE - சாம்பரம் நாலுயிரகமங்கனம் - KMnO4
POTASSIUM THIOCYANATE - சாம்பரம் கந்தகக்ரகரிமத்தழைமம் - KSCN
PROPADIENE - (1,2) ஈரிருப்பிணை முக்கொள்ளியம்
PROPANE - ஒருப்பிணை முக்கொள்ளியம்
PROPENE - இருப்பிணை முக்கொள்ளியம்
PROPYNE - முப்பிணை முக்கொள்ளியம்
 
Q - வரிசை
QUANTUM - துளியன்
QUANTUM NUMBER - துளிமையெண்
QUARTERNARY - நாலிணை
QUARTERNARY AMMONIUM COMPOUND - நாலிணை நவச்சாரியச் சேர்மம்
QUARTZ, QUARTZ CRYSTAL - பளிங்கு, பளிங்குப் படிகம்
QUINIC ACID - சுரப்பட்டையமிலம்
QUININE - சுரப்பட்டையம்
QUINONE - சுரப்பட்டையீனி
 
R - வரிசை
REFRIDGERANT - குளிர்பதனூட்டி
ROCK SALT - இந்துப்பு
RUBBER - மீள்மம்
 
S - வரிசை
SALTPETRE - வெடியுப்பு
SACCHARASE - சர்க்கரைநொதி
SACCHARIMETER - சர்க்கரைமானி
SACCHARIN - சர்க்கரைப்போலி
SACCHAROMETER - சர்க்கரைச்செறிவுமானி
SESQUIOXIDE - ஒன்றரையுயிரகம் - உயிரகம் வேறொரு மாழைத் தனிமத்துடன் மூன்றுக்கு இரண்டு வீதத்தில் உள்ளச் சேர்மம்
SILANE - ஒருப்பிணை மண்ணியநீரகம் - மண்ணியம் நீரகம் ஒருப்பிணைச் சேர்மம்
SILICA - மணல்மம்
SILICATE - மண்ணியவீனி
SILICON - மண்ணியம்
SILICON DIOXIDE - மண்ணியம் ஈருயிரகம்
SILICON HYDRIDE - மண்ணியம் நீரகம் - வேற்று தமிழ்ப் பெயர்கள் மண்ணியம் நாநீரகம், ஒருப்பிணை ஒருமண்ணியநீரகம்; வேற்று ஆங்கிலப் பெயர்கள் Monosilane, Silicon Tetrahydride; SiH4
SILICONE - மணற்காடியம்
SILICONE ACETATE - மணற்காடியக் காடியம்
SILICONE RUBBER - மணற்காடிய மீள்மம்
SILICON TETRAFLOURIDE - மண்ணிய நால்வினைவியம்
SILICOXANE - உயிரகமண்ணியக்கொள்ளியம் - R2SiO தொகுதிகளை அடங்கியச் சேர்மம், இங்கு R என்பது நீரக அல்லது நீரகக்கரிமத் தொகுதியாகும்
SILVER - வெள்ளி
SILVER BROMIDE - வெள்ளி நெடியம் - AgBr
SILVER CARBONATE - வெள்ளி மூவுயிரகக்கரிமம் - Ag2CO3
SILVER CHLORIDE - வெள்ளிப் பாசிகம் - AgCl
SILYL (COMPOUND) - மண்ணியநீரகம்
SILYL (GROUP) - மண்ணியநீரகத் தொகுதி - SinH2n+1 தொகுதி
SINGLE BOND - ஒற்றையப்பிணைப்பு, ஒருப்பிணை
SINGLE CHAIN SILICATE - ஒற்றைச் சங்கிலி மண்ணியவீனி
SLAG - கசடு
SODA - காலகம்
SODIUM - உவர்மம்
SODIUM CHLORIDE - உவர்மம் பாசிகம்
SODIUM PHOSPHATE - உவர்மம் நாலுயிரகத்தீமுறி
SOL - நீர்மக்கூழ்
SOLVENT - கரைப்பி
SORBITOL - மாச்சர்க்கரைச்சாராயம் - வேற்று ஆங்கிலப் பெயர் glucitol
SOROSILICATE - இருத்தனி மண்ணியவீனி- தனித்த இரட்டைப் நான்முகிகள் கொண்ட மண்ணியவீனி
SPODULENE - தீயணற்பாறை - மென்னியத்தின் (lithium) தாது
STEROID - ஊக்கியம்
STYROFOAM - மலக்கிய மெத்து - இதன் வேதிப்பெயர் பல்படி மலக்கியம் (polystyrene); வேற்று ஆங்கிலப் பெயர் thermocole
STYRENE - மலக்கியம்
SUCROSE - கரும்புச்சர்க்கரை
SULPHATE (GROUP OF COMPOUNDS) - நாலுயிரகக்கந்தகவினம்
SULPHATE ION - நாலுயிரகக்கந்தக மின்னூட்டணு - [SO4]2- நேர்மின்னூட்டணு
SULPHITE (GROUP OF COMPOUNDS) - மூவுயிரகக்கந்தகவினம்
SULPHITE ION - மூவுயிரகக்கந்தக மின்னூட்டணு - [SO3]2- நேர்மின்னூட்டணு
SURFACTANT - பரப்பிழுவிசைக்குறைப்பி
 
T - வரிசை
TAR - (கரிக்)கீல்
TAR OIL - (கரிக்)கீலெண்ணை
TARTARIC ACID - திராக்கவமிலம்
TERPENE - பயினியம்
THERMOCOLE - மலக்கிய மெத்து - இதன் வேதிப்பெயர் பல்படி மலக்கியம் (polystyrene); வேற்று ஆங்கிலப் பெயர் styrofoam
THERMOPLASTIC - வெப்பநெகிழி
THERMOSETTING PLASTIC - வெப்பமிறகு நெகிழி
THIOCYANATE ANION - கந்தகக்கரிமத்தழைம நேர்மின்னூட்டணு - [SCN]- நேர்மின்னூட்டணு; வேற்று ஆங்கிலப் பெயர்கள் sulphocyanate, thiocyanide
THIOFURAN - கந்தகத்தவிடியம் - இதன் வேற்றுப் பெயர் thiophene
THIOPHENE - கந்தகத்தவிடியம் - இதன் வேற்றுப் பெயர் thiofuran
THIOL - நீரகக்கந்தகவினம்
THIOL GROUP - நீரகக்கந்தகத் தொகுதி - -SH தொகுதி
TITANIUM - வெண்வெள்ளி
TITANIUM DIOXIDE - வெண்வெள்ளி ஈருயிரகம் - TiO2
TOLUENE - வர்ணியம்
TRANS ISOMER - எதிர்ப்பக்க மாற்றியம்
TRIPLE BOND - மும்மைப்பிணைப்பு, முப்பிணை
 
U - வரிசை
UREA - அமுரியம்
URIC ACID - அமுரியமிலம்
 
V - வரிசை
VALENCE BAND - இணைதிறன் பட்டை
VALENCY - இணைதிறன்
VARNISH - மெருகெண்ணை
VERDIGRIS - செம்புக்களிம்பு
VINYL ALCOHOL - தேறலியச் சாராயம் - இதன் வேதிப்பெயர் இருக்கொள்ளியச் சாராயம் (ethyl alcohol)
VINYL CHLORIDE - தேறலியப் பாசிகம் - CH2=CHCl; வேற்று வேதிப்பெயர் பாசிகவிருப்பிணை இருக்கொள்ளியம் (chloro ethylene)
VINYL COMPOUND - தேறலியவினம் - இருக்கொள்ளியச் சாராயத்திலிருந்து (ethyl alcohol) பெறப்பட்டச் சேர்மம்
VINYL GROUP - தேறலியத் தொகுதி - −CH=CH2 தொகுதி; வேற்று ஆங்கிலப் பெயர் ethyl group
VITREOL - துத்தம்
VOLATILE - வெடிமையுடைய
VOLATILITY - வெடிமை
VULCANIZE (v.) - வலுப்பதனிடு
VULCANIZATION - வலுப்பதனீட்டல் - மீள்மத்தை (rubber) வெம்மைப்படுத்தி கந்தகம் சேர்த்து வலுப்படுத்தும் முறை
VULCANIZED RUBBER - வலுப்பதனிட்ட மீள்மம்
 
W - வரிசை
WOOD ALCOHOL - மரச்சாராயம் - இதன் வேதிப்பெயர் 'ஒருக்கொள்ளியச் சாராயம்' (methyl alcohol)
WEAK ACID - மென்னமிலம்
WEAK BASE - மென்காரம்
 
X - வரிசை
XENON - அணுகன்
XYLENE - மரநீர்
XYLENOL - மரமக்கியம் - இதன் வேதிப் பெயர் 'இரட்டை ஒருக்கொள்ளிய மக்கியம்' (dimethyl phenol)
XYLITOL - மரச்சர்க்கரைச்சாராயம்
 
Y - வரிசை
 
Z - வரிசை
ZINC - நாகம்
ZINC CARBIDE - நாகம் கரிமம் - ZnC
ZINC DIHYDRIDE - நாகம் இருநீரகம் - ZnH2
ZINC SILICATE - நாகம் மண்ணியவீனி

ZINC CYANAMIDE - நாகம் இருத்தழைமக்கரிமம் - ZnCN2
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum