தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
காந்த அலையும் கையாளும் முறையும் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

காந்த அலையும் கையாளும் முறையும் Empty காந்த அலையும் கையாளும் முறையும்

on Tue Jul 05, 2016 9:15 am
அன்றாட வாழ்வில் செல்போன் அத்தியவசிய பொருளாகிவிட்டது. இதை தவிர்ப்பதால் நன்மை அதிகமா? செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். ஏன் என பார்க்கலாம்.


1) நிலையான தொலைபேசி உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள்
உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் நிலையான தொலைபேசிகளை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம். பொதுவாக இலத்திரனியல் சாதனங்களிற்கு அருகில் நின்று போன் உபயோகிக்க வேண்டாம், இரண்டு காந்த அலைகளும் மோதும் போது பக்க விளைவு அதிகம்.2) சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் செய்வதை தவிர்த்து குறுந்தகவல் (SMS) வசதியை உபயோகிக்கவும்.


3) பலர் இழைக்கும் பாரிய தவறு, குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம்.
குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.4) உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் (Rural area) அழைப்பை மேற்கொள்ள வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.


5) இடது காதில் வைத்து பேசுவது மட்டுமே சிறந்தது. மேலும் காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.


6) தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும். இரவில் அதிகமாக காந்த அலை பாதிக்கும். SWITCH OFF/ AIRPLANE MOOD சிறந்தவை, அதி சிறந்தவை அல்ல.


7) நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஏற்ற பின் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் செய்யும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
Cool செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.


9)செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.


10) செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.


11)செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம். ஆண் மற்றும் பெண்கள் ஜீன்ஸ் பாக்கட்டில் வைக்க வேன்டாம், காரணம் ஆண்மை பாதிக்கும், கர்ப்பப்பை பாதிக்கும்.


12) தவிர்க்க முடியாத சந்தர்ப்படதில் ஜீன்ஸ் பாக்கட்டில் வைகும் போது பற்றரி உள்ள பகுதி உடகலில் தொடும்படி வைக்க வேன்டாம், போன் வெகவாக உடல் வெப்பத்தால் வெப்பமாகும் மேலும் போன் திரை பாதிப்பு குறையும்


13) போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

காந்த அலையும் கையாளும் முறையும் Empty Re: காந்த அலையும் கையாளும் முறையும்

on Tue Jul 05, 2016 9:18 am
21ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி, அதன் மேலுள்ள மோகம், அனர்த்தங்கள் என்பன நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது என்பது யாவரும் அறிந்ததே, தொழில்நுட்ப சாதனங்களால் ஏற்படும் விபத்துக்களிலிருந்து மீள வெளிவருவது என்பது சாதாரண விடயம் அல்ல, எதிர்கால சந்ததியினையே பாதிக்கும் அளவிற்கு இவ் தொழில்நுட்ப வளர்ச்சி பாரியளவு விரிவடைந்துள்ளது.
சாதகம் பாதகம் என்பது சரி நிகராக உள்ளது வருந்தத்தக்கது, தற்காலத்தில் வீட்டிற்கு வீடு கணனி, ஸ்மார்ட் போன் போன்ற அடிப்படை தேவையாக உள்ளது. இதில் குறிப்பாக ஸ்மார்ட்போன் மோகம், கவர்ச்சி மானிட யுகத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளது.

நேரடியாக கூறவந்த முதல் விடயத்தை நோக்கினால், ஸ்மார்ட் போன்களால் ஏற்படும் விபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரித்து செல்கிறது,

இவ் விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது? அதற்கான காரணங்கள் எவை என்பது பற்றிய பல வினாக்கள் நம்மவர் மனங்களில் எழுகின்றதல்லவா?
ஆம் என்பதுவே பெருப்பான்மையோரின் பதிலாக அமையும்,

ஸ்மார்போன்களின் விபத்துக்களிற்கு மானிடராகிய நாமும் காரணமாக அமைகிறோம், அது எவ்வாறு?

* பாவனை
* கையாளும் திறன்
* அறியாத செயல்களில் ஈடுபடல் 
முதலிய முக்கிய அம்சங்களால் விபத்துக்கள் சம்பவிக்கின்றன, இவற்றை சற்று விரிவாக நோக்குவோமானால், 

1.) SMART PHONES ஐ பொறுத்தமட்டில் பல BRANDஐ கொண்டுள்ளது.செல் பேசிகள் பொதுவாக அதிர்வு அலைகளை வெளியிடக் கூடியவையே, மலிவான விலைகளில் கிடைக்கும் CHINAPHONES அதிகப்படியான அதிர்வைக்கொண்டது.இதனை ஜீன்ஸ்ஸில் வைப்பதைக் குறைப்பது மிகவும் நன்று.

2.) ஜீன்ஸ் பொக்கடட்டில் செல் போனை வைக்கும் போது போனின் DISPLAY பக்கம் உடலில் தொடும் வகையில் வைப்பதன் மூலம் ஆபத்தைக் குறைக்கலாம், அதாவது பற்றரி பகுதி உடலில் தொடக்கூடியவாறு வைத்தால் உடல் வெப்பத்தால் பற்றரி வெடிக்கக்கூடும்மற்றும் எதிர்பாராத விபத்தால் போனின் தோடுகைத்திரைக்கு பாதிப்பு ஏற்படலாம். போனை தொடர்ச்சியாக பாவித்த பின் ஜீன்ஸ் பையில் வைப்பதை தவிர்க்க வேண்டும், காரணம் தொடர்ச்சியான பாவனையின்போது போன் வெப்பமாகியிருக்கும், பாக்கட்டில் வைத்தால் வெப்பம் கடத்தப்படாது, அடக்கப்படும். இதால் நிச்சயம் விபத்து நிகழும்.

3.) இரவில் SMART PHONE ஐ பயன்படுத்திவிட்டு நித்திரை செய்துவிடுவார்கள். மற்றும் போனை தம்மருகில் வைத்து நித்திரை செய்வார்கள், முற்றாக தவிர்க்கப்படவேண்டியதாகும்.காரணம் காந்த அலைகள் ( MAGNETIC WAVES ) எமது மூளைக்கு உகந்ததல்ல. ஆய்வுகளின் அடிப்படையில் மூளைப்புற்றுநோய் ஏற்படலாம்.

4.) பெரும்பாலானவர்கள் செல் போனை CHARGE செய்து கொண்டு உரையாடுவது, இணையம் பயன்படுத்துவது,கேம் விளையாடுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள், முற்றாக தவிர்க்கப்பட வேண்டியதாகும்.மற்றும் CHARGE செய்ய முன் போனின் BACK COVER , OPEN COVER போன்றவற்றை நீக்கிவிட்டு CHARGE செய்வது சிறந்தது. இவ்வாறு ஏன் செய்ய வேண்டும்? போன் charge ஆகும்போது சாதுவான வெப்பத்தை உணர முடியும், தொடர்ச்சியான பாவனை இதன் வெப்பத்தை அதிகரிக்கும், மற்றும் போன் charge குறைவான நேரத்தில் ( LOW BATTERY <15% ) அழைப்புக்களை தவிர்ப்பது சிறந்தது, காரணம் காந்த அலைகள் கூடுதலாக கடத்தப்படும்.

5.) பற்றரியை நீண்ட நேரம் சார்ச் செய்வதை தவிர்க்க வேண்டும், அவ்வாறு இல்லாவிடின் வெடிக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம், மற்றும் பற்றரியின் ஆயுள் குறையலாம். சாதாரணமாக ஒரு போன் பற்றரியின் ஆயுட்காலம் 4/5 வருடங்கள். சிறந்த பாவனை மூலம் ஆயுள் அதிகரிக்கலாம்.
புதிதாக ஒரு மொபைல் வாங்கும்போது, போனை OFF செய்து 2/4 மணித்தியாலம் charge செய்தால் போதுமானது. சிலர் 8 மணித்தியாலம் charge அவசியம் என்பார்கள். மடிக் கணனிக்கே 8 மணித்தியாலம் CHARGE அவசியம். 
பற்றரியை charge செய்யும் போது LI-PO பற்றரி என்றால் 10-15% இருக்கும்போது charge செய்யாலாம், LI-ION பற்றரி என்றால் 25-35% உள்ளபோது Charge செய்ய வேண்டும். அதைவிடுத்து LI-ION பற்றரியை 15% ற்கு குறைவான நிலையில் வரும்வரை காத்திருந்து தொடர்ச்சியாக LOW BATTERY நிலையை பின்பற்றினால் காலப்போக்கில் Charge தானாக குறைவடையும், பற்றி பருமன் அதிகரிக்கும், வெடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
மற்றும் பற்றரியினை அடித்தல், எறிதல் போன்றன தவிர்க்க வேண்டியது.
POWER BANK மூலமான charging உகந்ததா? இல்லை போனிற்கான ஒரியினல் charger மூலம் charge செய்வது பாதுகாப்பானது, POWER BANK அதிக சக்தியை கடத்தும். ஆதலால் பற்றரி விரைவில் சேதமாகும், எனவே போனுடன் வழங்கப்படும் CHARGER சிறந்தது.
போனுடன் வரும் மின்கல அளவை விட ( மில்லி அம்பியர் ) கூடதலான mAh பயன்பாடு உகந்ததா? இல்லை, போன் வடிவமைக்கும்போது தெரிவு செய்யப்பட்ட அளவு அதாவது 2000mAh வருகிறதென்றால் 2050mAh பயன்படுத்துவது பாதிப்பில்லை, அதைவிடுத்து 3000mAh உகந்ததல்ல.

சில மொபைல்களுக்கு அதனுடன் வரும் பற்றரியைவிட வேறு பற்றரிகள் charge நீடிப்பை வழங்காது, எடுத்துக்காட்டாக BLACKBERRY. தொடர்ச்சியாக பற்றரியை கழற்றி மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

6 ) ஈரம் படிந்த கையால் மொபைலை பாவிக்க கூடாது, மற்றும் அதீத குளிர்/வெப்ப இடங்களில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

7 ) மொபைலை சுத்தம் செய்யும்போது OFF செய்து, பின் cover, பற்றரி போன்றவற்றை அகற்றிய பின் சுத்தம் செய்ய வேண்டும், இலகுவில் ஆவியாகக்கூடிய சுத்தம் செய்யக்கூடிய திரவத்தை கண்ணாடி நார்களைக்கொண்ட துணி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இதைவிடுத்து உடலுக்கு பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள், மதுசாரம் போன்றன பயன்படுத்தல் தகாதது. இவ்வாறு பயன்படுத்தினால் 
கார்பன் படிவு போன்று பச்சை நிற படிவங்கள் போன் BOARDல் படிந்து போன் இயங்காது.
மேலே கூறப்பட்டுள்ள சில குறிப்பிடத்தக்க முக்கிய காரணங்கள் மானிடராகிய எம்மால் ஏற்படுவதாகும்.

மொபைல் நிறுவனங்களாலும் அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. எவ்வாறு?

* தரம்
* உற்பத்து

முதலிய விடயங்களை சுட்டிக் காட்டலாம். விரிவாகப் பார்த்தால் பல முன்னணி மொபைல் நிறுவனங்கள் உள்ள, IPHONE, SAMSUNG, HTC , NOKIA
முதலியவற்றில் பல தரமற்ற மொபைல்கள் சந்தையில் உலாவுகின்றன, ஐம்பது ஆயிரம் ( 50,000/= ) உள்ள மொபைல் ஐந்தாயிரத்தில் என்றால் தரம்பற்றி கூற வேண்டுமா?
ஆரம்ப காலத்தில் NOKIA போன் பலராலும் விரும்பப்பட்டது. HUNGARY தயாரிப்புக்கள் என்றால் பெரும்பாலானர்கள் விரும்பி கொள்வனவு செய்தார்கள், காரணம் தரம்மிக்கது என்பதால், காலப்போக்கில் பிற மொபைல்களின் வருகை NOKIAவை வீழ்த்தியது. காரணம் குறைந்த விலையில் வியாபார நிறுவனங்கள் NOKIA போனை கொள்வனவு செய்து லாபம் ஈட்டின, ஒரியினல் போல மாற்றப்பட்டு விற்கப்பட்டது. IMEI, MADE போன்ற தகல்கள் அடங்கிய STICKESRS , குறைந்த விலையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்டு, ஒரியினல் என்ற போர்வையில் விற்கப்படுகின்றன. இவ்வாறான வியாபாரத்தந்திரங்கள் மூலம் தரமற்ற போலியானவை விற்கப்படுகின்றன.
எனினும் NOKIA,SAMSUNG………
முதலிய போன்களின் ஒருயினல் தன்மையை கண்டறிய முடியும்.

NOKIA மொபைலில் இரு கரங்கள் பற்றுதல்.
SAMSUNG மொபைலில் வர்ணங்களை உள்ளடக்கிய நீள் வட்ட வடிவில் SAMSUNG எனும் பெயரை சுற்றிய வண்ணம் காணப்படும்.
பிற மொபைலை பொறுத்தவரை மொபைல் பெயரை விடுத்து VODAPHONE, ORANGE………… முதலிய LOGO வுடன் தோன்றினால், தரம் குன்றியதாக இருக்கும். இவை வெப்பமாதல், HANG ஆகுதல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தரமற்ற மொபைல்கள் சந்தையில் விற்கப்படுவதற்கு சீனாவே முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு விடயத்தை சிந்தியுங்கள் குறைந்த விலையில் ( 2000/= )பல வசதிகளுடன் X என்ற சீன உற்பத்திப் பொருளை கொள்வனவு செய்து இரு வருடங்களில் பழுதடைந்து எதிர்காலத்தில் நமது நலத்திற்கும் பாதிப்பு வருவது சிறந்ததா?
அல்லது
X என்ற பல வசது உடைய ஜப்பானிய பொருளை கூடுதல் விலையில் ( 10,000/= ) கொள்வனவு செய்து 10 வருங்கள் எவ்வித பக்கவிளைவுமற்று பயன்படுத்துவது சிறந்ததா?

பதில் உங்கள் கையில்……………?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மொபைல் மீது கவர்ச்சி ஆர்வம் இருக்கும். அந்த மொபைலைவிடட வேறு சிறந்த மொபைல்கள் இல்லை என எண்ணுவார்கள். இது அவ்வாறான சாயலை உடையவர்களது அறியாமையே ஆகும்.

எவ்வாறு அறியாமை காரணமாகும்? 
ஒரு மொபைல் உற்பத்தி நிறுவனம் மொபைல்களை உற்பத்தி செய்யும்போது எவ்வெவ் எதிர்பார்களினடிப்படையில் உற்பத்தி செய்கிறது?

* மக்கிடையே உள்ள எதிர்பார்ப்பு
* பிரபல்யம் 
* கொள்வனவு சதவீதம்

முதலிய சில அம்சங்களினடிப்படையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன, இடை நுடுவில் ஒரு வினா எழலாம்? இந்தியாவில் SAMSUNG மொபைல்கள் HANG ஆகிறதே இலங்கையில் சிறப்பாக இயங்குகிறதே?
உற்பத்தியின்போதும், ஏற்றுமதியின்போதும் ஒவ்வொரு நாட்டிற்கும் வித்தியாசம் உள்ளது, மக்கள் மத்தியில் உள்ள பிரபல்யம், கொள்வளவு மற்றும் காலநிலையே இதற்கான காரணமாகும்.
எடுத்துக்காட்டாக அராபிய நாட்டில் ஒரு மொபைல் வாங்கினால் அந்த மொபைலை ஆசிய நாடுகளில் பயன்படுத்தலாம். எனினும் மாறாக பயன்படுத்த முடியாது, ஆசிய நாட்டு மொபைல்கள் அராபிய நாட்டு வறண்ட காலநிலையை எதிர்கொள்ளாது.
மற்றும் ஆசிய நாடுகளில் தரமற்ற மொபைல்கள் பெருகிக்கிடப்பதற்கு நாட்டின் அன்னிய செலாவணியும் ஒரு முக்கிய காரணமாகும்.
அராபிய நாடுகளில் தரமற்ற மொபைல்களுக்கு அனுமதி கிடையாது என்பதுவும் நோக்கத்தக்கது.
பொதுவாக பல சீன மொபைல் நிறுவனங்கள்தான் தரம் குறைந்த மொபைல்களை உற்பத்தி செய்கிறது, சீன தயாரிப்புக்களில் சில சிறந்தவையும் இருக்கவே செய்கின்றன. எனினும் இந்த நாட்டுத் தயாரிப்புக்களில் அதிகூடிய ஒலி, அதி கூடிய அதிர்வலைகளைக்கொண்ட தயாரிப்புக்களில் பரவிக் காணப்படுகின்றன. இதனாலேயே அனர்த்தங்கள் சம்பவிக்கின்றன, அனர்த்தங்கள் சம்பவிப்பதோடு நின்றுவிடுவதில்லை, எதிர்காலத்தையே முடக்கி விடுகின்றன.

மேற்கூறப்பட்ட விடயங்களினூடாக மொபைல் விபத்துக்களிற்கு யார் யார் மற்றும் எவை எவை காரணம் என்பதை நன்கு அறிந்திருப்பீர்கள்!

- - - - - - - - - - - - - - - - - - - - 

அடுத்த தலைப்பு பற்றி நோக்குவோமானால் புதிய மொபைல் கொள்வனவு சிறந்ததா அல்லது பயன்படுத்திய மொபைல் கொள்வனவு செய்வது சிறந்ததா?

பயன்படுத்திய மொபைல் வாங்குவது நிச்சயம் சிறந்ததல்ல ஏன் விலை குறைவாகக் கிடைக்கும்தானே என எண்ணலாம்?
ஆம் கிடைக்கும் எனினும் மொபைலின் தரத்தை உறுதிப்படுத்த முடியுமா? கடினம் தான்! 
வெளித்தோற்றம் மற்றும் மென்பொருள் ( SOFTWARE ) சிறப்பாக உள்ளதே பின்னர் என்ன வேண்டும்? வெளித்தோற்றம் நன்றாகவிருந்தால் போதுமா? வன்பொருள் ( HARDWARE ) சிறப்பாக இருப்பது அவசியம்தானே? ஆம் நிச்சயம்! 
வன்பொருளானது நன்றாக இயங்குகிறதா என்பது ஒவ்வொன்றாக பரிசோதிப்பது கடினமே! ஒரு விடயத்தை மற்றும் கூறுகிறேன், பின்னர் சிந்தியுங்கள், பயன்படுத்திய மொபைல் சிறந்ததா என?

மொபைலில் உள்ள SENSOR பற்றி அறிவீர்கள், மொபைலானது ஒரு தடவை நிலத்தில் விழுத்தால் ஏதோவொரு வகையில் சேதமாகும், தொடுதிரை ( TOUCHPAD , DISPLAY ) உடையலாம் COVER உடையலாம் என பல கூறலாம். கீழே விழுந்தும் அதிஷ்டவசமாக எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என சந்தோசப்படுபவர்கள். இச் சந்தோசம் நிலைக்குமா? இல்லை பின்விளைவு நிச்சயம் உண்டு. எவ்வாறு?

SENSOR பொருத்தப்பட்டுள்ள இடத்திலிருந்து 0.001% அளவு மாறுபட்டாலே ஒரு குறைந்தது வருத்திற்குள் போன் தன் செயற்பாட்டை நிறுத்திக்கொள்ளும். கீழே விழுந்த மொபைலை தொடர்ந்த பயன்படுத்தினால் நிச்சயம் மாற்றங்களை உணரலாம். SENSORஐ மாற்றிவிட்டால் பிரச்சனையில்லை என எண்ணலாம்! அவ்வாறில்லை SENSOR, IC போன்றன மாற்றினாலும் ஆரம்பத்தில் சிறப்பாகவிருந்தாலும் பின்னர் செயற்பாடுகள் நிறுதப்பட்டுவிடும்.

IPHONEஐ எடுத்தால் வெளித்தோற்றம் உள்த்மோற்றம் என்பன பிரச்சனைதான்! ANDROID இயங்குதளத்தை அடிப்படையாகக்கொண்ட போன்களில் ANDROID VERSION UPDATE செய்யும்போது SOFTWARE பிரச்சனை, IMEI பிரச்சனை வந்தால் FLASH செய்து சரிசெய்துவிடலாம், IPHONEல் UPDATE செய்யும்போதும் JAILBREAK செய்யும்போதும் கவனம் அவசியம் சற்று கவனம் சிதறினாலும் அவ்வளவுதான் BLUTOOTH, WIFI ADDRESS மற்றும் IMEI அழிந்துவிடும், ANDROID போல FLASH செய்ய முடியாது BOARD மாற்றியாக வேண்டும் இதைவிட புதிதாக வாங்கலாமல்லவா?
மேலுமொரு வினா சிந்தனைக்கு வரலாம் பயன்படுத்திய இலத்திரனியல் சாதனங்களை விற்கும் போது வாங்கிய விலையைவிட அரை விலை/ குனைவாக விற்கப்படுகிறதே?

* உத்தரவாதம்
* தரம் முதலியவையே விலையில் பாதிப்பு செலுத்துகிறது. உத்தரவாதம் இருந்தாலும் வாங்கிய அதே விலைக்கு விற்க முடியாது சற்று குறைத்தே விற்பனை செய்யலாம்.

கொடப்பனவு முறையில் மொபைல் வாங்கும்போது நிச்சயம் 3000/= - 5000/= கூடதல் விலையில் கிடைக்கும், இதை விட முழுக்கொடப்பனவு சற்று பரவாயில்லை. இருப்பினும் மேலைத்மேய நாடுகளில் கொடுப்பனவு முறையில் வாங்கிய மொபைல்கள் வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்த முடியாத, அவ்வாறு செய்வதென்றால் UNLOCK அவசியம்.
இலத்திரனியல் பொருட்கள் கொள்வனவின் போது பிரபல்யமான சந்மைகளில் வாங்குவது சிறந்ததெனினும் அவற்றில் கவனம் அவசியம், காரணம் மேலைத்தேய நாடுகளில் சிறு பழுது ஏற்பட்ட சாதனங்களை அகற்றிவிட்டு புதிதாக கொள்வனவு செய்வார்கள். பழையவை மீள சரிசெய்யப்பட்டு பல பின்தங்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சிந்தியுங்கள் புதிதா பழையதா?
எது நல்லது? சிந்தியுங்கள்!
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum