தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
உடல் எடை குறைய எளிதான எட்டு வழிகள் ! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உடல் எடை குறைய எளிதான எட்டு வழிகள் ! Empty உடல் எடை குறைய எளிதான எட்டு வழிகள் !

on Tue Jun 21, 2016 7:39 pm
‘எப்படியாச்சும் வெயிட்டை குறைக்கணும்!’ என்று பலரும் புலம்பினாலும், அதற்காக அவர்கள் எதுவுமே மெனக் கெடுவதில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு, உடலையோ, மனதையோ, நேரத்தையோ வருத்திச் செய்யாமல், எடையைக் குறைப்பதற்கான எளிய டிப்ஸ் கிடைத்தால்..?! 

ட்ரை இட்! 

* உணவைச் சுருக்காதீர்கள், பெருக்குங்கள்

எடுத்துக்கொள்ளும் டயட்டில், உணவுகளைச் சுருக்குவதற்குப் பதிலாக, சத்தான உணவுகளைப் பெருக்குங்கள். ஏனெனில், ‘ரெண்டே இட்லிதான் சாப்பிட்டேன்’ என்று ஏக்கம் வந்தால், அதை விரட்டுவது கடினம். மாறாக, பழத்துண்டுகள், வெஜிடபிள் ஜூஸ், லோ காலரி உணவுகள் என்று கைவசம் வைத்துக்கொண்டு, சாப்பிடத் தோன்றும் போதெல்லாம் இவற்றைச் சாப்பிடுங்கள். ‘ரெண்டே இட்லிதான் சாப்பிட்டேன்’ என்ற பசி உணர்வு விரட்டப்படும்... மனதில் இருந்தும்!

* எக்ஸர்சைஸ் வேண்டாம்

ட்ரெட் மில், அப்டமன், ஜிம், ஏரோபிக்ஸ் எதையும் கட்டாயத்தின் பேரில் செய்தால், நீண்ட நாள் தொடர முடியாது. ‘வொர்க் அவுட்’ என்பது அலுப்பாக இருந்தால், செய்ய வேண்டாம். அப்படியென்றால் சேர்ந்துள்ள கலோரிகளை எப்படிக் கரைப்பது..? சைக்ளிங் செல்லலாம், காரைக் கழுவலாம், தோட்ட வேலை பார்க்கலாம், ஃபிரிஸ்பீ விளையாடலாம், குழந்தைகளின் காஸ்ட்லி உடைகளை மட்டும் கையால் துவைக்கலாம்... இப்படி ஏதாவது ஒன்றை சுவீகரித்துக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் செய்தால் போதும்! 

* ‘வாக்’ செல்லலாம் ஜாலியாக

எதுவுமே செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு ‘வாக்’ செல்லச் சொன்னால் எப்படி என்கிறீர்களா..?! இப்படிச் செய்து பாருங்கள்..! 

அலுவலகத்திற்கு பேருந்தில் செல்பவர்கள், முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்வதோடு, வீடும் திரும்பும்போதும் அப்படியே செய்யலாம்; அலுவலகத்தில் காரை கடைசியாக பார்க் செய்துவிட்டு, நடந்து போகும் தூரத்தை அதிகரித்துக்கொள்ளலாம்; வீடு, அலுவலகம், மால், ஹோட்டல் என்று எங்கு சென்றாலும், எஸ்கலேட்டர் தவிர்த்து படிகளைப் பயன்படுத்தலாம்; அருகில் உள்ள கடை, கோவில், பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே செல்லலாம்.

அதிகம் இல்லை... காலையில் 10 நிமிடங்கள், மாலையில் 10 நிமிடங்கள் என, நடப்பதற்கு இது போல ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஆக, ஒரு நாளில் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி, 10 நிமிடங்கள் உடற்பயிற்சி... 30 நிமிடங்கள் என்பது பிரமாதம் போங்கள்! 

* தண்ணீர் குடித்தால் எடை குறையும்

எப்படி..? சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் பசியையும், ‘நிறையச் சாப்பிடணும்’ என்ற ஆர்வத்தையும் தணிக்கும். மேலும் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்வது, காரைக் கழுவும்போதோ, படிகளில் ஏறும்போது, ‘போதும்ப்பா...’ என்ற அயர்வைத் தராது!

* உங்கள் மிஸ் சொல்லித் தந்தார்களா... ஷேரிங்..

வீட்டில் மனைவி/கணவர், அலுவலகத்தில் நண்பர்/தோழி என்று உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்ள ஒரு பார்ட்னர் வைத்துக்கொள்ளுங்கள். பிடித்த உணவை டைனிங் டேபிளில் சந்திக்கும்போது, ‘அப்படியே சாப்பிடுவேன்!’ என்று தயாராகாமல், ‘பிரியாணியை ஷேர் செய்துக்கலாம்...’, ‘பனீர் சிக்கன் மசாலா 1/2 கேட்டு வாங்கிக்கலாம்...’ என்று பார்ட்னருடன் அதை ஷேர் செய்துவிடுங்கள். சாப்பிடவில்லை என்பதும் இல்லை, முழுதாகச் சாப்பிட்டதாகவும் இருக்காது! 

* பிளேட், டம்ளர், பவுல்... சைஸைக் குறையுங்கள்

பெரிய தட்டில் இரண்டு கரண்டி சாதம் வைத்தால், கொஞ்சமாகத்தான் தெரியும். ‘அய்யோ இவ்ளோ கொஞ்சமா சாப்பிடுறோமே’ என்று மனம் பிதற்ற ஆரம்பித்துவிடும். அதுவே சிறிய தட்டில் அதே இரண்டு கரண்டி சாதம் வையுங்கள்... நிறையும் கண்களும்! அதுபோலவே, பொதுவாக நமக்கு டம்ளர், பவுலின் அடிப்பாகத்தைப் பார்த்துவிட்டால், போதுமான அளவு சாப்பிட்டுவிட்டோம் என்ற திருப்தி வந்துவிடும். எனவே, சின்ன டம்ளர், பவுலாக வைத்துக்கொள்ளுங்கள். சீக்கிரம் காலியாகிவிடும்! 

* போர் அடிக்க நேரம் கொடுக்காதீர்கள்

வேலை, பொழுதுபோக்கு எதுவும் இல்லாமல் இருக்கும் நேரம்தாம், அதிகம் பேருக்கு ஸ்நாக்ஸ், சாப்பாடு தேடும். எனவே, உங்களை ‘என்கேஜுடு’ ஆக வைத்துக்கொள்ளுங்கள் அல்லது சுவாரஸ்மான பொழுதுபோக்கில் மனதை மடைமாற்றுங்கள். 

இதில் முக்கியமான விஷயம்... பொழுதுபோக்க டிவியில் சமையல் நிகழ்ச்சி, ஐஸ் கிரீம் விளம்பரம் என்று பார்த்தாலோ, பைக்கில் ரவுண்ட்ஸ் என்கிற பெயரில் வடைக் கடையில் வண்டி பிரேக் போட்டாலோ... செல்லாது செல்லாது. உணவை நினைவுபடுத்தாத நிமிடங்களாக அவை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்!

* குறைந்த எடை குறைந்ததாகவே இருக்க வேண்டும்

எடுத்த முயற்சிகளுக்குப் பலனாக எடை குறையப் பெற்றதும், ‘எப்டீ?!’ என்று மற்றவர்களைக் கேட்க வைத்ததும் குட்! ஆனால் அதற்குப் பின் ரசகுலா டப்பாவையோ, மட்டன் கிரேவியையோ பார்க்கும்போது, ‘அதான் ஆபீஸ் ஃபங்ஷன்/அண்ணி வீட்டுக் கல்யாணம் முடிஞ்சிருச்சுல்ல... கொஞ்சம் வெயிட் போட்டுக்கிட்டா பரவாயில்ல... அப்புறம் மெலிஞ்சுக்கலாம்!’ என்று நினைத்து நாக்கை சந்தோஷப்படுத்துபவர்கள் பலர். வேண்டாமே! 

எடையைக் குறைத்து அதை அப்படியே பராமரித்து வந்தால், அதற்கான மெனக்கெடல்கள் ஆரம்பகட்டத்தைவிட குறைவாகவே தேவைப்படும். ஆனால் மீண்டும் எடை கூடிவிட்டால்... ‘மறுபடியும் முதல்லயிருந்தா?!’தான்! எனவே, கீப் ஃபிட்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உடல் எடை குறைய எளிதான எட்டு வழிகள் ! Empty Re: உடல் எடை குறைய எளிதான எட்டு வழிகள் !

on Tue Jun 21, 2016 7:41 pm
உடல்பருமன் குறைய சுலபமான வழி !!!

எடையைக் குறைக்க சுலபமான வழி – ஜெனரல் மோட்டார்ஸ் டயட் .

மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.
இப்போது இந்தியாவிலும் இதை பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது என்பது மிகவும் வேதனை அளிக்கிறது ஆதலால் நாமும் இந்த உணவு திட்டத்தை கடைப் பிடிக்கலாம். உடம்புக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது.

7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.

அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும்.

1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.

3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
ஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.

5. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.

6. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் – காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.

7. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.

இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான்.
எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.

முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.

3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும்.

நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.

5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது.

அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உடல் எடை குறைய எளிதான எட்டு வழிகள் ! Empty Re: உடல் எடை குறைய எளிதான எட்டு வழிகள் !

on Tue Jun 21, 2016 7:48 pm
உடல் பருமன்...
உயிருக்கு எமன்.

டாக்டர் எம்.செந்தில்குமார்,
உடல்பருமன் மேலாண்மை மருத்துவர்.

உடற்பருமன் என்றால் என்ன? 

உடலில் தேவைக்கும் மிக அதிகமான அளவில் கொழுப்பு இருப்பது. ஒருவருடைய உடல் எடை, இயல்பாக இருக்க வேண்டியதைவிட 20 சதவீதம் கூடுதலாகிவிட்டால் அவர் உடல் பருமனுடன் இருக்கிறார் என்று அர்த்தம். இந்தியர்களின் உடல் எடை இந்தியர்களுக்கு மரபு வழியாகவே உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக இடையைச் சுற்றி கொழுப்பு அதிகமாகும் வாய்ப்பு அதிகம். இடைச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ.க்கு அதிகமாகவும், பெண்களுக்கு 85 செ.மீ.க்கு அதிகமாகவும் இருந்தால், சர்க்கரை மற்றும் இருதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். 

உடற்பருமனை எவ்வாறு கணிப்பது? 

ஒருவரின் உயரம் மற்றும் எடைகொண்டு உடற்பருமனைக் கண்டறியலாம். உடற்பருமன் எண் = உடல் எடை (கிலோவில்) / உடல் உயரம் x உடல் உயரம் (மீட்டரில்) Metric Units: BMI = Weight (kg) / (Height (m) x Height (m)) English Units: BMI = Weight (lb) / (Height (in) x Height (in)) x 703 இந்த கணக்கின் படி, கணிக்கும் எண் 18.5க்கும் குறைவாக இருந்தால், குறைவான எடையுடன் இருக்கிறீர்கள். கணிக்கும் எண் 18.5க்கும் 24.9க்கும் இடையில் இருந்தால், சரியான எடையுடன் இருக்கிறீர்கள். கணிக்கும் எண் 25க்கும் 29.9க்கும் இடையில் இருந்தால், அதிக எடையுடன் இருக்கிறீர்கள். கணிக்கும் எண் 30க்கும் அதிகமாக இருந்தால் உடற்பருமனுடன் இருக்கிறீர்கள். 

உடற்பருமன் குறித்து இந்திய சுகாதாரத் துறை 

இந்தியாவைப் பொறுத்தவரை உடற்பருமனைக் கணிக்கும் எண் 23க்கும் மேல் இருந்தால், அதிக எடை உள்ளவராகவும், 25க்குமேல் இருந்தால், உடல் பருமன் உள்ளவர்களாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என இந்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

உடற்பருமன் காரணங்கள்! 

முறையற்ற உணவுப் பழக்கங்கள்- 

முக்கியமாக அதிக சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உட்கொள்ளுதல். உடலுக்கு அதிக வேலை தராமலும், உடற்பயிற்சி இல்லாமலும் இருப்பது. அதிக உணர்ச்சிவசப்படுவது மற்றும் பதட்டப்படுவது. வியாதிகளுக்காக உட்கொள்ளும் ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள் அதிக அளவில் உணவு உட்கொள்ளுதல் (இதற்கு உடல் மற்றும் உளவியல்ரீதியான பிரச்னைகளும் காரணம்) நாளமில்லாச் சுரப்பிகளில் எற்படும் பலவிதமான கோளாறுகள் உடற்பருமன்கொண்ட இளம் வயதினர் உடற்பருமன் இள வயதினரை மனரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் மிகவும் பாதிக்கிறது. மேலும் இளவயதிலேயே பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு சரியான உணவு மற்றும் வாழ்க்கைமுறையை சொல்லித்தருவது அவசியம். 

உடற்பருமனால் வரும் கேடுகள் இருதய நோய்கள், ரத்தக் கொதிப்பு, இருதயக் குழாய்களில் அடைப்பு, பித்தப்பை நோய்கள், மூளையில் ரத்தம் கசிவது, மூட்டு நோய்கள், இடுப்பு வலி, சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு சேர்வது, நெஞ்சு எரிச்சல், அதிகக் குறட்டை, ஸ்லீப் அப்னியா என்னும் தூக்கத்தில் சில நொடிகள் மூச்சு நின்றுபோகும் வியாதி, பெண்களுக்கு மாதவிடாயில் பிரச்சனை, நுரையீரல் நோய்களால் எளிதில் பாதிக்கப்படுவது போன்றவை உண்டாகும் வாய்ப்புள்ளது. 

உடல் எடை அதிகரிப்பதை எப்படித் தடுக்க முடியும்? 

பிசியோதெரபி மருத்துவர்களின் ஆலோசனையின் படி 
தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், யோகப் பயிற்சிகள் செய்தல், 
உணவு முறைகள் சரியான நேரத்தில் மட்டுமே உணவை உட்கொள்ள வேண்டும். குறைந்த கொழுப்பு, அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் காய், பழங்களை அதிகமாக உட்கொள்வது. இரண்டு உணவு வேளைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 4 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும். சரியான சத்துள்ள உணவை அளவுடன் உட்கொள்ள வேண்டும் சரியான பழக்கவழக்கங்கள் 6 மற்றும் 7 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதைத் தவிர்த்தல் புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கத்தைத் தவிர்த்தல் மேற்சொன்னவற்றைத் தவிர உடலில் வேறுசில காரணங்களால் உடல் எடை அதிகரித்துள்ளதா என மருத்துவரிடம் சோதித்துக்கொள்வது நல்லது
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உடல் எடை குறைய எளிதான எட்டு வழிகள் ! Empty Re: உடல் எடை குறைய எளிதான எட்டு வழிகள் !

on Wed Jun 22, 2016 9:02 am
தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்!!!
உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும். 
அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. 
இங்கு சோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும். 
சோம்பு தண்ணீர் செய்முறை 
1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து வர வேண்டும்.மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் 
சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
பசியை அடக்கும் 
அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும் 
சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
டாக்ஸின்களை வெளியேற்றும்தற்போதைய காலத்தில் கண்ட உணவுப் பொருட்கள், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்களானது பல வழிகளில் உடலில் நுழைகிறது. ஆனால் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.
புத்துணர்ச்சியை வழங்கும் 
தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
தூக்கத்தை சீராக்கும் 
சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்
Sponsored content

உடல் எடை குறைய எளிதான எட்டு வழிகள் ! Empty Re: உடல் எடை குறைய எளிதான எட்டு வழிகள் !

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum