கிணற்றுத் தண்ணீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருப்பது ஏன்?
Sun May 15, 2016 5:49 am
தரைமட்டத்திற்குக்கீழே சுமார் 50-60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது. மண் அரிதில்
வெப்பக்கடத்தி; எனவே கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர், ஏறக்குறைய 20-25 செ.கி.
வெப்பநிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம்.
கிணற்றின் வெளிப்புற வெப்பம் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும். குளிர் காலத்தில் சில
பகுதிகளின் சுற்றுச்சூழல் வெப்பநிலை 4-5 செ.கி. அளவுக்கும் செல்வதுண்டு;
அந்நிலையில் கிணற்றுநீர் 20-25 செ.கி. அளவில் இருப்பதால், அது
வெதுவெதுப்பான நீராக உணரப் பெறுகிறது. இதற்கு நேர்மாறான நிலை
கோடைக்காலத்தில் உண்டாகிறது.
கோடையில் சில பகுதிகளின் வெப்பநிலை 40-45
செ.கி. அளவில் இருப்பதை நாம் அறிவோம்.
அக்காலங்களிலும் கிணற்றுநீர் 20-25
செ.கி அளவில் இருப்பதால், சுற்றுச்சூழல் வெப்பநிலையோடு ஒப்பிடுகையில்,
கிணற்றுநீர் குளிர்ந்த நீராக நம்மால் உணரப் பெறுகிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|