தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
பைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் !*Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்!!Sun Jan 21, 2018 7:21 pmKavithaMohanதைராய்டு நோயை குணமாக்கும் "கண்டங்கத்திரி"Sat Jan 20, 2018 3:39 pmசார்லஸ் mcகாலக் கொடுமை இதுதானோSat Jan 20, 2018 1:01 pmசார்லஸ் mcஉங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?Sat Jan 20, 2018 10:42 amசார்லஸ் mcவேதத்தில் உள்ள மாடுகள்Sat Jan 20, 2018 10:29 amசார்லஸ் mcஒளி வீசுவோம்Sat Jan 20, 2018 10:24 amசார்லஸ் mcஇந்துக்களை ஏமாற்றும் பிராமணர்கள் தந்திரம் பாரீர்Sat Jan 20, 2018 10:11 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
1 Post - 13%
Keywords

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests :: 1 Bot

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
February 2018
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728    

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பெண்கள் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகள்!

on Thu May 12, 2016 5:10 pm


‘‘வரும் முன் காப்பது எப்போதும் நன்று. அந்த வகையில், பெண்கள் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகள் இரண்டு உள்ளன’’  என்கிறார் மதுரை, தாஜ் மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு மருத்துவர் சுதா தீப்.
 
அவர் தெரிவித்த அந்த இரண்டு தடுப்பூசிகள் குறித்த விவரம் இங்கே...
 
ருபெல்லா (Rubella) தடுப்பூசி
 
" ருபெல்லா என்பது, வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடிய நோய். இந்நோய், சருமத்தில் சிவப்புத் திட்டுகள், தொண்டை வலி மற்றும் சுரப்பிகளில் வீக்கம் என்று மிகவும் மிதமான பாதிப்புகளுடன், ஆண்கள், பெண்கள் என யாருக்கும் அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரையே நீடிக்கக்கூடிய ஆபத்தில்லாத நோய். 
 
ஆனால், அதுவே ஒரு கர்ப்பிணி ருபெல்லா நோயால் பாதிக்கப்படும்போது, அந்நோய் அவளின் கருவில் உள்ள குழந்தையை கடுமையாகப் பாதிக்கலாம். சிசுவின் இதயம், மூளை, பார்வை, கேட்கும் திறன் பாதிப்புகளில் இருந்து கருச்சிதைவுவரை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது. எனவே, அதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு பெண்ணும் ருபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
 
பொதுவாக, பெண் குழந்தைகளுக்கு 12 வயதில் இருந்து, பெண்கள் கருத்தரிக்கும் முன்பாக எந்த வயதிலும் ருபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். வாழ்நாளில் ஒரு முறை போட்டுக்கொண்டால் போதும், தவணைகள்(டோஸ்) இல்லை. இந்த ஊசி போட்டுக்கொண்ட நாளில் இருந்து ஆறு மாதங்கள் வரை  கருத்தரித்தல் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
கர்ப்பவாய் புற்றுநோய் (Cervical Cancer) தடுப்பூசி
 
கர்ப்பவாய் புற்றுநோயை ஏற்படுத்தும் ஹுமன் பாப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus-HPV)-ல் இருந்து தற்காத்துக்கொள்ள, கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி அவசியமாகிறது. 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 1,22,844 பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது. அதில்,  67,477 பெண்கள் இறக்கிறார்கள். மற்ற கேன்சர்களை பின்தள்ளி, பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயில் இது முன்னணியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இப்போது புரிந்திருக்கும் இந்தத் தடுப்பூசி பெண்களுக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்று.
 

கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்பட பாலினப் பழக்க வழக்கங்களே முக்கியக் காரணம். எனவே, ஒரு பெண் ஹெச்பிவி வைரஸ் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன்பாகவே போட்டுக்கொள்ளும்பொருட்டு, பாலினத் தொடர்புகொள்ளும் வயதுக்கு முன்பாகவே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது.
 
எனவே,  பதின் பருவத்தில் இந்த ஊசி பரிந்துரைக்கத்தக்கது. 15 வயதில் இருந்து 40 வயதுவரை எப்போது வேண்டுமானாலும்  இதைப் போட்டுக்கொள்ளலாம் என்றாலும், எவ்வளவு விரைவாக போட்டுக்கொள்ளப்படுகிறதோ அந்தளவுக்குப் பாதுகாப்பு தரவல்லது.  
 
இதை மூன்று தவணைகளில், முதல் தவணை போட்ட நாளில் இருந்து ஒரு மாதம் கழித்து இரண்டாவது தவணையும், முதல் தவணை போட்ட நாளில் இருந்து ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது தவணையுமாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.
 
இந்தத் தடுப்பூசி போட்ட நாளில் இருந்து ஆறு மாதங்கள்வரை கருத்தரிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.’’
 
தாமதிக்காமல் விரைந்து தற்காத்துக்கொள்வோம் நம் ஆரோக்கியத்தை!
 
- ஜெ.எம். ஜனனி 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum