இதுதான் தமிழ் வருஷப் பிறப்பா?...............
Fri Apr 15, 2016 7:32 am
வருஷப் பிறப்பு என்பது பற்றி மிகவும் மோசமாகவே புராணக் கூற்றுப்படி காணப்படுகிறது. அதாவது, ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து "நீர் அறுபதாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன?" அதற்குக் கண்ணன், "நான் இல்லா பெண்ணை வரிக்க!" என அதற்கு உட்பட்டு எல்லா வீடுகளிலும் பார்த்து வர, இவர் இல்லாத வீடு கிடைக்காததனால் கண்ணனிடம் வந்து, அவர் திருமேனியில் மையல் கொண்டு, 'நான் தேவரிடம் பெண்ணாக இருந்து வரிக்க எண்ணிக் கொண்டேன்' என்றனன்.
கண்ணனும் மறுக்கவில்லை. நாரதரை ஸ்நானம் செய்ய ஏவ, முனிவர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற, அவர்கள் பெயரே பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானார்களாம். இவர்கள் யாவரும் வருடமாய்ப் பதம் பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது. (அபிதான சிந்தாமணி).
இவ்வளவு கேவலமான, ஆபாசமான, அறிவுக்குப் பொருத்தமற்ற அடிப்படைகளைக் கொண்ட வருஷப் பிறப்பைக் கொண்டாடுபவர்களைப்பற்றி நாம் என்ன நினைப்பது?
தமிழ் வருடம் என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே மருந்துக்கு ஒரே ஒரு ஆண்டின் பெயராவது தமிழில் இருக்கிறதா?
1.பிரபவ, 2.விபவ, 3.சுக்ல, 4.பிரமோதூத, 5.பிரசோற்பத்தி, 6.ஆங்கீரச, 7.ஸ்ரீமுக, 8.பவ, 9.யுவ, 10.தாது, 11.ஈஸ்வர, 12.வெகுதானிய, 13.பிரமாதி, 14.விக்கிரம, 15.விஷு, 16.சித்திரபானு, 17.சுபானு, 18.தாரண, 19.பார்த்திப, 20.விய, 21.சர்வசித்து, 22.சர்வதாரி, 23.விரோதி, 24.விக்ருதி, 25.கர, 26.நந்தன, 27.விஜய, 28.ஜய, 29.மன்மத, 30.துன்முகி, 31.ஹேவிளம்பி, 32.விளம்பி, 33.விகாரி, 34.சார்வரி, 35.பிலவ,36.சுபகிருது,37.சோபகிருது,38.குரோதி,39.விசுவாவசு, 40.பராபவ, 41.பிலவங்க, 42.கீலக, 43.சௌமிய, 44.சாதாரண, 45.விரோதிகிருது, 46.பரிதாபி, 47.பிரமாதீச, 48.ஆனந்த, 49.ராட்சச, 50.நள, 51.பிங்கள, 52.காளயுக்தி, 53.சித்தார்த்தி, 54.ரௌத்திரி, 55.துன்மதி, 56.துந்துபி, 57.ருத்ரோத்காரி, 58.ரக்தாட்சி, 59.குரோதன, 60.அட்சய கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ஒரே ஒரு தமிழ்ப் பெயரை!
ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் தமிழ் ஆண்டுகள் என்பது தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்துவது ஆகாதா? வெட்கக் கேடு! வெட்கக் கேடு!!
- விடுதலை நாளிதழ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|