தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
தத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை! ஏன்?Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயா!Mon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc "பிழைக்க தெரியாத மனுஷன்" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests :: 1 Bot

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
July 2018
MonTueWedThuFriSatSun
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16176
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பேதுரு (peter) என்கிற ஜூனியர் பாலையா

on Fri Feb 19, 2016 8:37 pm
 

பிரபல முன்னாள் சினிமா நடிகர் இன்று கிறிஸ்துவை சுமக்கும் ஊழியக்காரர்

இவர் T.S பாலையா அவர்களின் புதல்வன்.  இவரின் குடும்பத்தில் பணத்திற்கு பஞ்சமில்லாதிருந்த காலம். இவரின் சொத்து ஒரு காலத்தில் 240 ஏக்கர். இது சென்னையில் மட்டும். 

இவர் வீட்டின் பிறந்த நாள் விழாக்களில் ஓர் பெரிய கூடை நிறைய பணத்தை போட்டு இவர்களின் தலையில் கொட்டுவார்களாம். இவரது தாயார், சகோதரர் மற்றும் ஜூனியர் பாலையா பெயர்களை பல தெருக்களுக்கு வைத்திருக்கிறார்கள். இவரின் தந்தையார் பெயரில் ஓர் காலனியே உள்ளது.


T.S பாலையா

 மிகபெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த இவர் மனம் போன வாழ்க்கையில் தன்னுடைய நண்பர்களுடன் தன் வாலிப வயதில் பாவமான வாழ்க்கையை பாவம் என்றே தெரியாமல் பருகி வந்தார். ஆனால் இவை அனைத்தும் நிரந்தரம் இல்லை. இயேசு கிறிஸ்துவே நிரந்தரம் என்று புரிந்து கொள்ளகூடிய நேரம் இவர் வாழ்க்கையிலும் வந்தது.

இவர் நடித்த முதல் படத்திற்கு பிறகு 3ம் நாளில் இவரின் தந்தை இறந்து விட்டார். வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. அதன் பிறகு இவரின் தாயார் சுகவீனமாய் படுத்து விட்டார்கள். இந்த நேரத்தில் நிலம் விற்பது தொடர்பாக ஓர் பிரச்சினை ஆரம்பித்து. தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்கிற பயம் இவரை ஆட்டிபடைக்க ஆரம்பித்தது. 

யோபு 3:25 ல் "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று சொல்லப்பட்டது போல் இவரின் வாழ்க்கையும் ஆனது. விக்கிரகங்களை வணங்கினால் பயம் நீங்கும் என்று பலரும் சொன்னதால் பல இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடுவார். போகாத இடம் இல்லை. ஆனாலும் பயத்தில் தூக்கம் இல்லை. பயங்கர குடிகாரனானார். குடும்பத்தில் சேமிப்பு எதுவும் கிடையாததால் தந்தை இறந்த பிறகு இவரின் தாயாரை நெருங்கினவர்கள் ஏமாற்றி கையெழுத்து வாங்கி சொத்தையெல்லாம் அபகரித்து கொண்டனர். 

இதன் மூலம் பல துயரங்களுக்கு இவர் விதையாகி போனார். அதுவரை பணத்தின் பெருமையில் உல்லாசமாக இருந்த இவரின் வாழ்க்கை சோகம், ஏமாற்றம், வெறுப்பு, துன்பம் என்ற பல புயல்களில் அகப்பட்டு இருள் என்னும் ஓர் மாயைக்குள் திணிக்கப்பட்டார். சினிமா உலகில் ஸ்ட்ரைக் நடந்த போது இவருக்கு வேலை இல்லமால் போனது. வருமானமும் நின்று விட்டது. சேமிப்பு இல்லாததினால் கடன் வாங்க ஆரம்பித்தார். நாளடைவில் கடன் அடைக்க முடியாமல் கடனாளியானார்.

நண்பர்கள் மாயமாகிபோனார்கள். ஒரு முறை நண்பன் வீட்டிற்கு சென்ற போது அவர் இவரின் வருகையை தெரிந்து கொண்டு "என்ன செக் bounce ஆகிவிட்டதா என்று சத்தம் போட்டு அவமானபடுத்தினதாக மனவருத்தத்துடன் குறிபிடுகிறார். இதன் மத்தியில் இவர் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த ஓர் சகோதரி தனக்கிருந்த கிழிந்த ஓர் வேதாகமத்தை இவர் மனைவியிடம் கொடுத்து படிக்கசொன்னார். அதை படித்த மாத்திரத்தில் தேவன் அவரிடம் பேசுவதை உணர்ந்து, அவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டார். அதன் பிறகு ஓர் ஆலயத்தில் ஞானஸ்நானம் எடுத்து கொண்டார். இதை ஜூனியர் பாலையாவிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் இவரோ அதை கண்டுகொள்ளவில்லை. ஓர் நாள் கடன் கொடுத்த நண்பர் வீட்டிற்கு வந்து ஜூனியர் பாலையா தற்கொலை செய்து கொண்டால் கடனை திருப்பி தர வேண்டாம் என்று கூறினார். இதை கேள்விப்பட்ட பாலையா தற்கொலை செய்து கொள்ள குடிவெறியுடன் காரை வேகமாக ஓட்டியுள்ளார்.

அதன் பிறகு இவர் மனைவி ஆலயத்திற்கு அழைத்து சென்றார். ஆலயத்தில் அழுகையோடு "இயேசுவே, இயேசுவே" என்று வேதனையில் கதறின போது தன் கைபேசி அழைக்கவே எடுத்து பேசியிருக்கிறார். அதில் இவரை ஏமாற்றி சொத்தை, பணத்தை அபகரித்தவர் மீண்டும் பணத்தை கொடுப்பதாக சொன்னார். இவரால் நம்பவே முடியவில்லை. தேவன் அங்கேயே ஓர் அற்புதத்தை செய்தார். ஜூனியர் பாலையா ரட்சிக்கப்பட்டு 10-4-2013 அன்று ஞானஸ்நானம் எடுத்து கொண்டார். இன்று தேவனை அறியாத மக்களுக்கு இயேசுவை பற்றி சொல்ல தன்னை அர்ப்பணித்து ஊழியம் செய்து வருகிறார். அல்லேலூயா. ஆமென்.

இந்த சாட்சியை படித்த எனக்கன்பான கிறிஸ்தவ பெயரை வைத்துகொண்டு உலகபிரகாரமாய் வாழும் கிறிஸ்தவர்களே, மற்ற மதங்களை சேர்ந்த சகோதர சகோதரிகளே "இயேசு உங்களை நேசிக்கிறார்".

 வேதாகமத்தில் ஓர் வசனம் உண்டு "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே. நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்". இது தேவன் கொடுக்கும் ஓர் அழகிய அழைப்பு. நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் சரி. இருக்கிற வண்னமாகவே இயேசுவிடத்தில் வாருங்கள். உங்கள் வாழ்க்கை மாறும். பரிசுத்த வேதாகமம் எங்காவது கிடைத்தால் தவறாது வாசியுங்கள். தேவன் (இயேசு)உங்களோடு பேசுவார். உங்கள் காதுகளில் நிச்சயம் கேட்கும்.

எனக்கு அன்பானவர்களே... இவர் சொல்வதெல்லாம் நான் கஷ்டப்படும் போது யாரும் இந்த இயேசுவை எனக்கு சொல்லவில்லை என்பது தான். அன்பு நண்பர்களே. இந்த சாட்சியையாவது உங்கள் நண்பர்களுக்கு  பகிருங்கள். தேவனை அறிந்து கொள்ளட்டும். தொடர்ந்து அவர்களுக்காக ஜெபியுங்கள். என்றாவது ஓர் நாள் அவர்கள் தேவனுக்குள்ளாக வருவர்.

நீங்களும் உங்கள் நண்பர்களுக்காக, அண்டை வீட்டாருக்காக, கூட வேலை செய்பவர்களுக்காக ஜெபம் செய்ய ஆரம்பிக்கலாமே. தேவன் உங்களை ஆசீர்வதிபாராக.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum