தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
டயாபடீஸ் தடுக்க 8 ட்ரிக்ஸ்! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

டயாபடீஸ் தடுக்க 8 ட்ரிக்ஸ்! Empty டயாபடீஸ் தடுக்க 8 ட்ரிக்ஸ்!

on Wed Feb 17, 2016 6:49 pm
ந்தியாவில் ஸ்வீட் பெர்சன்ஸ் அதிகமாயிட்டே இருக்காங்கன்னு ஒரு சர்வே சொல்லுது. ஆனால், இது சந்தோஷப்பட வேண்டிய செய்தி இல்லை. ஆமாங்க! சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிட்டே இருக்குன்னுதான் இப்படி மறைமுகமாச் சொல்லியிருக்காங்க.
கசப்பான இந்த சர்க்கரைநோய் நமக்கு வராம இருக்க சுலபமான 8 ட்ரிக்ஸ் இருக்கு. அது என்னென்ன...

கார்போஹைட்ரேட் ரூல்
 
மாவுச்சத்தை மொத்தமாகத் தவிர்க்க வேண்டும் என்பது இல்லை. மாவுச்சத்துக்கள் நிறைந்த உணவைச் சரியாகத் தேர்ந்தெடுத்து, அளவுடன் சாப்பிட்டாலே போதும். எந்த மாவுசத்துக்கள் உடலில் சென்று மெதுவாக செரிமானமாகி உடலுக்கு ஆற்றல் தருகிறதோ, அந்த மாவுச்சத்துக்களைச் சாப்பிடலாம். தீட்டப்படாத அரிசி அதாவது பிரவுன், கறுப்பு, சிவப்பு மற்றும் தீட்டப்படாத பருப்பு- பயறு வகைகளைச் சாப்பிடலாம். இதனுடன், நட்ஸ், பழங்கள், காய்கறிகளை உடன் சேர்த்துக்கொள்வது கூடுதல் பாதுகாப்பைத் தரும். ஜூஸைத் தவிர்த்து, பழமாகச் சாப்பிடுங்கள்.

டயாபடீஸ் தடுக்க 8 ட்ரிக்ஸ்! Diya_vc2


எடை

உடல்பருமன், உயரத்துக்குத் தகுந்த எடை இல்லை என்றால் எடையைக் குறைக்கலாம். உடனே,  ஜிம்மில் போய் நிற்க வேண்டாம். ஒருநாள் பத்து நிமிடங்கள் வாக்கிங் எனத் தொடங்கி ஒவ்வொரு நாளிலும் அதை அதிகரித்துக்கொண்டே செல்லுங்கள். 40 நிமிட நடைப்பயிற்சியை எந்தக் காரணத்துக்காகவும் காம்ப்ரமைஸ்செய்ய வேண்டாம். வாக்கிங், ஜாகிங், ஸ்ட்ரெச்சிங் என உடற்பயிற்சிக்கு உடலையும் மனதையும் தயாராக்கிவிட்டு ஜிம்முக்குச் செல்லவும்.

போதுமான தூக்கம்

அதிகத் தூக்கம் மற்றும் குறைவான தூக்கம் இரண்டுமே கேடு விளைவிக்கும். பசி உணர்வு, சோர்வு, களைப்பு, அதிகமான உணவு உண்ண ஏற்படுத்தும் மோகம் எனப் பிரச்னைகள் உண்டாக்கும். ஏழெட்டு மணி நேரத் தூக்கம் அவசியம் என்ற முடிவை எடுத்தாலே, ஆரோக்கியம் நம் வசமாகும்.

துடிப்பான வாழ்க்கைமுறை

டயாபடீஸ் தடுக்க 8 ட்ரிக்ஸ்! Diya_vc400புகை, மதுக்கு நோ சொல்லுங்கள். ஆக்டீவாக இருக்க, அருகில் உள்ள மார்கெட்டுக்கு நடந்து போகலாம். டூ-வீலர்தான் தேவை என்றால் சைக்கிளைப் பயன்படுத்துங்கள். சைக்கிள் ஓட்ட முடியாதவர்கள், வீட்டிலேயே பாட்டை போட்டுவிட்டு  நடனம் ஆடுங்கள். குழந்தைகளுடன் ஓடி விளையாடுவது சிறந்த பயிற்சி. சுறுசுறுப்புடன் குனிந்து நிமிந்து வீட்டு வேலைகளைச் செய்யலாம்.

உப்புக்கு நோ சொல்வோம்

உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அரை உப்பு போட்டு சாப்பிடப் பழக்கிக்கொள்ளலாம். அதிக உப்பு உள்ள கருவாடு, ஊறுகாய், நூடுல்ஸ், அப்பளம், பாஸ்தா போன்றவற்றைத் தவிர்க்கலாம். எண்ணெய் உணவுகளுக்கும் தடை விதிக்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு சோடியம் கலந்திருக்கும். இவற்றைத் தவிர்ப்பது அவசியம்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு 

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை  கண்டறியும் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் செய்ய வேண்டும். ப்ரீடயாபடீஸ் கண்டறியப்பட்டால் உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கைமுறையில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை அளவு உடலில் ஏறாத மாதிரியான உணவுகளை அடிக்கடி சாப்பிடலாம். வெந்தயம், சீரகம், அத்தி, பாகற்காய், வெண்டைக்காய், நாவல் பழம், வாழைப்பூ போன்றவை உங்களுக்கான நண்பன்.

டயாபடீஸ் தடுக்க 8 ட்ரிக்ஸ்! Diya_vc1


பொதுவான பரிசோதனை 

இதயம், சிறுநீரகம், கல்லீரலின் ஆரோக்கியத்தை  பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது செக்அப் செய்யலாம். உடலில் கொழுப்புப் படியாத அளவுக்கு உடற்பயிற்சிகளைச் செய்யலாம். ஏ,பி,சி எழுத்துகள், எண்கள் போன்றவற்றைத் தூரத்திலிருந்து படிக்க முடிகிறதா என அடிக்கடி டெஸ்ட் செய்துபாருங்கள். சின்னச் சின்ன எழுத்துக்கள் எவ்வளவு தெளிவாகத் தெரிகின்றன என வாசித்துப் பாருங்கள்.

மனஅழுத்தத்தை வளரவிட வேண்டாம் (Manage stress)

அதிக மனஅழுத்தம் அதிக நோய்களை வரவைக்கும். அதுபோல், மனஅழுத்தம் இருப்பின் சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம். தினமும் ஐந்து நிமிடங்கள் மூச்சுப் பயிற்சிகள், சின்னச் சின்ன எளிய யோகாசனங்கள்  மனதை அமைதிப்படுத்தும் தியானம் போன்றவை மன அழுத்தத்தைப் போக்க உதவும்.

- ப்ரீத்தி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum