தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
உண்மையுள்ளவனே சீஷனாக முடியும் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உண்மையுள்ளவனே சீஷனாக முடியும் Empty உண்மையுள்ளவனே சீஷனாக முடியும்

on Fri Feb 12, 2016 6:35 pm
உண்மையுள்ளவர்கள் குறைந்து போகிறார்கள்.

உண்மையுள்ளவர்கள் பூமியிலே குறைந்து போகிறார்கள். உண்மையுள்ள கிறிஸ்தவர்களை அல்லது சீடர்களை கண்டுபிடிப்பது அரிது. அதையே வேதாகமும் நமக்கு சொல்லுகிறது. சங்கீதம் 12:1 இல் ‘இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.’ என சங்கீதக்காரன் புலம்புகிறான். இது உண்மையுள்ளவனின் தேவையை உணர்த்துகிறது. உண்மையுள்ளவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு தேவை என்பதைக் காட்டுகிறது. அதேபோல் நீதிமொழி 20:6 இல் ‘உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?’ என சாலமோன் கேள்வி எழுப்புகிறார். அதே போன்று பிலிப்பியர் 2:19-20 இல் உண்மையுள்ள மனதுள்ளவன் அவனைத் தவிர வேறொருவன் என்னிடத்தில் இல்லை என பவுல், தீமொத்தேயுவைப் பற்றி கூறும் போது அவரிடத்தில் அனேக சீடர்கள் இருந்த போதிலும் உண்மையுள்ளவன் என அவர் கண்டது ஒருவரையே. இந்த வசனங்கள் யாவும் உண்மையுள்ள ஊழியர்களினதும் உண்மையுள்ள சீஷர்களினதும் தேவையைக் காட்டி நிற்கின்றன. உண்மையுள்ளவனுக்காக தேவனின் ஏக்கம் இதன் மூலம் வெளிப்படுகின்றது.

வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ள உண்மையுள்ள சீஷர்கள்

மோசே- எண்ணாகமம் 12:7 : அவன் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் என் கர்த்தரே மோசேக்கு சாட்சி கொடுக்கிறார். தேவன் அதனால் அவனுடன் முகமுகமாய் பேசுகிறார். அவர் நம்பி பெரிய பொறுப்பையும் கொடுக்கிறார்.

தாவீது- 1சாமுவேல் 22:14 : ஆசாரியனாகிய அகிமெலேக், சவுல் ராஜாவிடம் தாவீதைப் பற்றி இவ்வாறு கூறினான், ‘உம்முடைய எல்லா ஊழியக்காரனிலும் உண்மையுள்ளவன் யார்?’ என்று எல்லாருக்கும் முன்பாக சாட்சி பகருகிறான். இது தாவீதின் உண்மைத்துவத்தை பற்றி விளக்குகிறது.

தானியேல்- தானியேல் 6:4 : அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் தரியு ராஜாவின் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் அவன் மேல் சுமந்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை என கூறப்படுகின்றது. இது அவன் தனது வாழ்க்கையில் எல்லா விடயங்களிலும் உண்மையுள்ளவனாக இருந்தான் என்பதைக் காட்டுகின்றது அதனால் தேவன் அவனைக் கனப்படுத்துகிறார். அது ராஜாவுக்கும் மற்றவர்களுக்கும் சாட்சியாகவுள்ளது.

தீகிக்கு- எபேசியர் 6:21 : ’அன்றியும், எனக்கடுத்த காரியங்களும், என் சுகசெய்திகளும் உங்களுக்குத் தெரியவரும்படிக்கு, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.’ என பவுல் கூறும் போது தீகிக்கு கர்த்தருக்குள் உண்மையுள்ளவன் என கூறுகிறார். இது ஒரு சீஷனைப் பற்றி பவுல் கூறும் ஒரு சாட்சியாகும். இங்கு சீஷன் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதை பவுல் மறைமுகமாக வலியுறுத்துகிறார்.

சில்வானு- 1பேதுரு 5:12 : இங்கு பேதுரு ‘உண்மையுள்ளவனாகிய சில்வானு’ எனக் கூறியதன் காரணம் உண்மையில்லாதவர்களும் அவருடன் இருந்திருக்கிறார்கள் என்பதாலாகும். அதனாலே தான் அப்படிக் குறிப்பிட்டு கூறவேண்டியதன் அவசியம் ஏற்பட்டது.

இவ்வாறு இன்னும் பல உண்மையுள்ள சீஷர்களை பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுடைய வாழ்க்கைகள் நம் படிப்பினைக்காகவே எழுதப்பட்டுள்ளன என்பதை  நாம் மறந்துவிடக்கூடாது.

ஒநேசிமு  - கொலோ 4:9
யோசேப்பு  - ஆதியாகமம் 47:29
ஆபிரகாம் – நெகேமியா 9:7-8
தீமோத்தேயு – 1கொரிந்தியர் 4:17

இந்த எல்லா உதாரணங்களையும் அடிப்படையாக வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரலாம். அது  என்னெவென்றால் எப்பொழுதும் உண்மையுள்ள சீஷர்களையே கர்த்தரும், மனிதர்களும் விரும்புகிறார்கள் என்பதே ஆகும். இன்று சாதாரணமாக ஒரு வீட்டிற்கு ஒரு வேலைக்காரனை வேலைக்கமர்த்த முன்னர், நாம் முதலில் கேட்டு அறிவது அவன் உண்மையுள்ளவனா என்பதை தானே. அப்படியாயின் தேவனுக்கு வேலைக்காரனாய் அல்லது சீஷனாய் இருக்க வேண்டுமானால் நம்மிடம் உண்மைத்துவம் எதிர்பார்க்கப்படுவது நியாயமானதே!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உண்மையுள்ளவனே சீஷனாக முடியும் Empty Re: உண்மையுள்ளவனே சீஷனாக முடியும்

on Fri Feb 12, 2016 6:36 pm
தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். நாம் ஆராதிக்கும் தேவனிடம் பல குணாதிசயங்கள் இருக்கிறது. நாம் எந்தவொரு நல்ல குணாதிசயத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானாலும் அதற்கு வேதாகமத்தையே திருப்ப வேண்டும். அதிலே தேவனைப் பற்றிக் கூறியுள்ள குணாதிசயங்களை கொண்டே வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் உண்மையுள்ளவன் என்ற குணாதிசயத்தை ஆராய்ந்து பார்ப்போமானால் எபிரேயர் 6:18 ‘எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.’ எனக் கூறுகிறது. அதாவது தேவனிடத்தில் எவ்வளவேனும் பொய் இல்லை என்பதே அதன் அர்த்தமாகும். அவர் 100% உண்மையுள்ளவர். தேவன் தாம் உண்மையுள்ளவராய் இருக்கிறது போல் நாமும் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என விரும்புகிறார். தேவன் தன்னிடம் இல்லாத ஒரு குணாதிசயத்தை நம்மிடம் எதிர்பார்ப்பதும் கிடையாது தான் செய்யாதொன்றை செய்யும்படி நம்மைக் கட்டாயப்படுத்துவதும் இல்லை. எனவே நாம் தேவனுக்கு உண்மையான சீஷனாக இருக்க வேண்டுமானால் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும்.

தேவன் உண்மையுள்ளவர் என கூறும் சில வேதப் பகுதிகள்.

தேவன் கிறிஸ்துவுடன் நம்மை ஐக்கியப்படுத்த உண்மையுள்ளவராய் இருக்கிறார். (1கொரி. 1:9)
தேவன் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராய் இருக்கிறார். (எபிரே 10:23, வெளி.1:5)
தேவன் பாவத்தை மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிக்க உண்மையுள்ளவராய் இருக்கிறார். (1யோவான் 1:9)
தேவன் எங்கள் திரானிக்கு மேலாக நாம் சோதிக்கப்படவிடமாட்டார். அத்தோடு சோதனையைத் தாங்கத்தக்க பெலனையும், தப்பிக்கொள்ளும் வழியையும் நமக்கு உண்டுபண்ண உண்மையுள்ளவராய் இருக்கிறார். (1கொரி.10:13)
உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். (1 தெசோ 5:24)
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்தத்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக் கொள்வார். (11 தெசோ 3:3)
இவ்வசனங்கள் எல்லாவற்றிலேயும் தேவன் உண்மையுள்ளவர் என்கிற அவருக்கே உரிய குணாதிசயம் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி தேவன் எந்த விடயங்களில் உண்மையுள்ளவர் என்பதையும் காட்டுகின்றது. இது அவருடைய சீஷர்களாகிய நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துகின்றது.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum