தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
மனந் திரும்பல் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மனந் திரும்பல் Empty மனந் திரும்பல்

on Wed Feb 03, 2016 10:40 am
1. இரு காட்சிகள்: 

இரு மனிதர்… நேரெதிரான இரு வாழ்க்கைகள்… இரு முடிவுகள்… லூக்கா 16:19-31ஐ ஆராய்ந்து அறிந்தால், இறப்புக்குப் பின்னானவைகளைப்பற்றி பல உண்மைகளைக் கற்றுக் கொள்கிறோம்.

அ. மனிதனின் ஆவி அழிவில்லாதது. இறப்பின்போது உடல் மட்டுமே அழிவைக் காணும். ஆவி இரு இடங்களில் ஓரிடத்துக்கு மட்டுமே போய்ச்சேரும். ஒன்று, பேரின்பம் மிக்க விண்ணுலகம். மற்றொன்று, வேதனை மிக்க நரகலோகம். நடுவிடம் ஏதுமில்லை. பரம ஏழை லாசரு விண்ணேகினான். மாசெல்வந்தன் பாதாளத்தில் தன் கண்களை ஏறெடுத்தான் (லூக்கா 16:22,23)..

ஆ. நரகத்திற்குச் செல்வோர் நித்திய வேதனையை அனுபவிப்பர். அதற்கு முடிவே இல்லை. இதற்கு உறுதியான அத்தாட்சி பொய்யுரையா இறை இயேசுவே (மாற்கு 9:43-48). பூமியின் மேன்மைகள் அங்கே உதவாது.

இ. நரகத்திலிருப்போரின் கூடுதலான வேதனை என்னவென்றால், தாங்கள் இழந்துபோன பேரின்பநிலையைக் கண்கூடாகக் காண்பார்கள் (லூக்கா 16:23,24).

ஈ. மரித்தோர் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்வார்கள் (23).

உ. கடக்கமுடியாத ஒரு பெரும்பிளவு இரு இடங்களையும் பிரித்திருக்கும் (26). அங்கிருந்து ஒருவரும் பூமிக்குத் திரும்பிவர இயலாது.

ஊ. நரகத்திலுள்ளவர்களுக்கு பூமியிலுள்ள தங்களுக்கு அன்பானவர்களைக் குறித்த பாரம் இருக்கும் (லூக்கா 16: 27,28).

எ. 29ஆம் வசனத்தில் ‘மோசே’ என்பது திருமறையையும், ‘தீர்க்கதரிசிகள்’ என்பது திருப்பணியார்களையும் குறிக்கும். அவர்களுக்குச் செவி சாய்க்காதவர்கள் நரகத்திற்குத்தான் செல்லவேண்டும்.

2. கேள்வி:

 செல்வந்தன் ஏன் நரகம் சென்றான்? ஏழை லாசருவுக்கு இரங்காததினாலா? இதுதான் பொதுவான கருத்து. ஆனால் நற்செயல் ஒருவரையும் இரட்சிக்காதே! இக்கேள்விக்குச் சரியான விடை லூக்கா 16:30இல் இருக்கிறது. “அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.” செல்வந்தன் தன் பாவங்களுக்காகவோ அல்லது ஏதோ ஒரு தீஞ்செயலுக்காகவோ நரகத்தில் போடப்படவில்லை. தன் பாவங்களுக்காக மனந்திரும்பாததே காரணம்.

3. நற்செய்தியின் தொடக்கம்: 

இயேசுவுக்கு முன்னோடியாய் வந்த யோவான் எப்படி அவருக்கு வழியை ஆயத்தம்பண்ணினார்? மத்தேயு 3:2: “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.” யோவான் சிறையில் அடைக்கப்பட்டபின் இயேசுவின் திருப்பணி தொடங்கியது. அவர் பிரசிங்கித்த முதல் செய்தி “மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” என்பதே (மாற்கு 1:15). தம் அடியார்களை முதன்முதலாக ஊழியத்திற்கு அனுப்பியபோது, அவர்கள் என்ன பிரசிங்கித்தார்கள்? “அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து…” (மாற்கு 6:12). 

பெந்தெகொஸ்தே நாளில் அடியார்கள் தூயாவியினால் நிரப்பப்பட்டபின் பேதுரு செய்த முதல் பிரசங்கம் இதோ: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” (அப்போஸ்தலர் 2:38). பவுல் அத்தேனே பட்டணத்திலுள்ள மார்ஸ் மேடையில் ஏறி கிரேக்கருக்குப் பிரசிங்கித்தது என்ன? “அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்” (அப்போஸ்தலர் 17:30). இது இறைவனின் கட்டளை. எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கொடுக்கப்படும் கட்டளை. இதற்கு எந்த மனிதனும் விலக்கல்லன். இதோ, இரட்சிப்பின் தொடர்!

மனமாற்றம் à இரட்சிப்பு à வாழ்க்கை மாற்றம்

4. பொய்ப் பொருள்: 

ஆங்கில அகராதியில் ‘மனந்திரும்பல்’ என்பதற்கு ‘வருந்துதல்’ எனப் பொருள் கொடுக்கப்பட்டிருகிறது. அது சரியன்று. எவை மனந்திரும்பல் அல்ல?

அ) என் வாலிப நாட்களில் நான் கால் பந்து ஆட்டம் விளையாடுவதுண்டு. ஒரு முறை எங்கள் குழுவுக்கும், வலுவான இன்னொரு குழுவுக்கும் போட்டி. எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவன் வேண்டுமென்றே எதிர்க்குழுவின் சிறந்த ஆட்டக்காரனின் காலைத் தட்டிவிட்டான். உடனே அவனுக்குக் கைலாகுக் கொடுத்து ‘சாரி’ என்றான். இன்று பலருடைய மனந்திரும்பல் இப்படித்தான் இருக்கிறது. வாராவாரம் பாவ அறிக்கைச் செய்கிறார்கள். அதாவது ஆண்டவரிடம் ‘சாரி’ என்கிறார்கள். பிறகு அடுத்த வாரமும் இதே கதைதான்! இது மனமாற்றமற்ற சடங்கு.

ஆ) பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பிலாய் உருக்காலை கட்டுமானத் திட்டத்தில் பொறியாளராகப் பணியாற்றினேன். என் கட்டுப்பாட்டில் மூன்று கிடங்குகள் இருந்தன. அவ்வப்போது நள்ளிரவில் நானே ஜீப்பை ஓட்டிகொண்டு அந்த இடங்களைக் கண்காணிக்கச் செல்வேன். ஓர் இரவு ஒரு கிடங்கில் சுக்குராம் என்றக் காவலாளி தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவனை எச்சரிப்புடன் விட்டுவிட்டேன். ஆனால் மீண்டும் ஒரு நாள் அவன் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டபோது நான் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியதாயிற்று. அவன் என் அலுவகம் வந்து, காலில் விழுந்து கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டான். மனமிரங்கி மன்னித்தேன். ஆனால் அவன் திருந்தவே இல்லை. அவன் மனங்கசந்து அழுது மன்னிப்புக் கேட்டது மனமாற்றத்தினால் அல்ல, அகப்பட்டுக்கொண்டோமே என்பதால்தான்.

இ) காலஞ்சென்ற இறைப்பணியாளர் டாக்டர் எட்வின் ஆர் ஓரு வேடிக்கையான கதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன். 

ஒரு மனிதன் தன் போதகரிடம் சென்று பாவ அறிக்கை செய்தானாம். “ஐயா, நான் இரண்டு உருளை கிழங்கு மூட்டை திருடிவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்பு அருளுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். அந்தச் சபை பாரம்பரியத்தின்படி பாவமன்னிப்பு அருளிய போதகர், ஒரு பெயரைச் சொல்லி, “இன்னார் வீட்டில் திருடினாயா?” எனக் கேட்டார். ‘’ஆம்’’ என அவன் கூறப் போதகர், “அவர் என்னிடம் ஒரு மூட்டை திருடு போய்விட்டதாகத்தானே சொன்னார்! நீ எப்படி இரண்டு மூட்டை என்கிறாய்?” என வினவினார். அவன் தலையைச் சொறிந்துகொண்டு, “ஆம், ஒன்றுதான் திருடினேன். இன்னொரு மூட்டையை இன்றிரவு திருடப் போகிறேன். அதற்காக முன்கூட்டியே பாவ அறிக்கை செய்துவிட்டேன்” என்றானாம்! இதுதான் சிலருடைய தந்திரம். 

திருமறை கூறுவதென்ன? “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” நீதிமொழிகள் 28:13.

ஒரு மெய்க்கிறிஸ்தவன் திருடனாய் இருக்கமுடியது. கிறிஸ்தவத் திருடன், கிறிஸ்தவப் பொய்யன், கிறிஸ்தவக் கள்ளன் என்பது பொருள் பொருந்தாச் சொற்கள்.

5. மெய்ப் பொருள்: 

அப்படியானால் ‘மனந்திரும்பல்’ என்பதின் சரியான பொருள் என்ன? இதற்குரிய எபிரெயச் சொல் ‘டெஷுபா’. அதன் பொருள் ‘முற்றிலும் திரும்பு’ என்பது. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஒரு போர்வீரனின் சாட்சி. தன் பட்டாளத் தோழர்களுடன் தீயவழிகளில் சென்றுகொண்டிருந்தான். ஒரு நாள் வியக்கத்தக்கவிதமாக இரட்சிக்கப்பட்டான். அவன் மாற்றத்தைக் கண்ட நண்பர்கள், “உனக்கு என்னவாயிற்று?” என்று கேட்டார்கள். தன் மாற்றத்தைப் பட்டாளமொழியில் விளக்கினான். “நான் உங்களுடன் சேர்ந்து நரகத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். ஒரு நாள் இயேசு முன் தோன்றி மூன்று கட்டளைகள் கொடுத்தார். முதலாவது கட்டளை ‘ஹால்ட் (நில்)’ என்பது. நின்றேன். இரண்டாவதாக ‘ரைட் அபௌட் டெர்ன் (பின்னோக்கித் திரும்பு)’ என்றார். நரகத்தை நோக்கியிருந்த நான் பரலோகத்தை நோக்கி நின்றேன். மூன்றாவதாக ‘குய்க் மார்ச் (வேகமாய் நட)’ என்றார். இப்பொழுது நான் விண்ணோக்கி வேகமாய் நடக்கிறேன்” என்றான். இதுதான் மெய்யான மனந்திரும்பல். முழுமாற்றம். வாழ்க்கை மாற்றத்திற்கு வழிகோலும் அடிப்படை மாற்றம். 

இதைத்தான் ஆண்டவர் இயேசு மத்தேயு 18:3இல் வலியுறுத்துகிறார். “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” முற்றிலும் மனந்திரும்பியவன் ஒரு சிறு பிள்ளையைப்போல் ஒரு புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறான்.

காலஞ்சென்ற புகழ்மிகு நற்செய்திப் பாடகர் பின்வரும் உரையாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறார். “ஓரிரவு என் மகன் தன் கட்டிலருகே முழந்தாளிட்டு, ‘அன்பின் ஆண்டவரே, என்னை என் அப்பாவைப்போன்ற மனிதனாக்கும். கூரறிவும் பெலனும் உள்ளவனாக மாற்றும். உம்மால் முடியும்   என்று நான் அறிவேன்.” அவன் தூங்கினவுடன், அவன் கட்டிலருகே நான் முழந்தாளிட்டு, ‘ஆ ஆண்டவரே, என்னை என் பிள்ளையைப்போன்ற ஒரு பிள்ளையாக மாற்றும். களங்கமற்றத் தூய்மையைத் தாரும். மெய்யான விசுவாசத்துடன் உம்மையே சார்ந்திருக்கச் செய்யும்’ என்று மன்றாடினேன்.” ஆம், சிறு பிள்ளையைபோல் மனந்திரும்பல். அதாவது,

பழைய தீமைகளுக்குப் புறமுதுகுக் காட்டு

பழைய நன்மைகளுக்குப் புறமுதுகுக் காட்டு

தன்முயற்சிகளுக்குப் புறமுதுகுக் காட்டு

கிறிஸ்துவைப் பற்றிக்கொள்.
 

- சி. சாமுவேல்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum