தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
» பரலோகம் இலவசம்
by charles mc Wed Feb 22, 2017 8:18 pm

» ஆண்டவரே ஏன் இப்படி?
by charles mc Fri Feb 03, 2017 8:21 am

» உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
by charles mc Fri Jan 27, 2017 7:31 pm

» பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
by charles mc Thu Jan 26, 2017 10:28 am

» நாட்டு மாடு வளர்க்க ஆசையா..? மாடுகள் #எங்கு கிடைக்கும்?
by charles mc Thu Jan 26, 2017 10:16 am

» இதுதான் இயற்கை சூழலா?
by charles mc Wed Jan 25, 2017 8:44 am

» தெரியாத சட்டங்கள்
by charles mc Wed Jan 25, 2017 8:29 am

» பெண்களுக்கான உணவும் உடல் நலமும்
by charles mc Sun Jan 22, 2017 7:32 am

» பின்னால் உள்ள பயங்கரம் தெரிவதில்லை
by charles mc Wed Jan 18, 2017 8:13 pm

» தொழு நோயாளிகளின் ஊழியர் "ஜோசப் டேன்யன்"
by charles mc Tue Jan 17, 2017 7:21 pm

» மனித உடலின் மூலப் பொருட்களாக ...
by charles mc Sun Jan 15, 2017 9:10 am

» ஆக்கிரமிப்பது யார்?
by charles mc Sun Jan 15, 2017 9:07 am

» கண்டிப்பு அல்லது கடிந்து கொள்ளுதல்
by charles mc Sun Jan 15, 2017 8:49 am

» இருதய அறுவை சிகிச்சையும் தேவனுடைய அன்பும்
by charles mc Fri Jan 13, 2017 9:20 pm

» சுவிசேஷத்தை அறிவித்தும்
by charles mc Tue Jan 10, 2017 9:00 am

» சொல்லிமுடியாத ஈவு
by charles mc Tue Jan 10, 2017 8:58 am

» திரும்ப அளிப்பேன்
by charles mc Tue Jan 10, 2017 8:53 am

» நமக்குரிய நீதியின் கீரிடம்
by charles mc Tue Jan 10, 2017 8:50 am

» எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்
by charles mc Tue Jan 10, 2017 8:47 am

» நான் கடனாளியாயிருக்கிறேன்
by charles mc Tue Jan 10, 2017 8:40 am

» உங்கள் பாதுகாப்பின் காரணம்
by charles mc Tue Jan 10, 2017 8:34 am

» கடைசில கதற விட்டுட்டீங்களேடா
by charles mc Tue Jan 10, 2017 8:26 am

» நாட்டு மாடு வகைகள்
by charles mc Tue Jan 10, 2017 8:19 am

» இந்திய பன்னாட்டு எண் முறையில் படிப்பது எப்படி?
by charles mc Wed Dec 14, 2016 9:59 am

» நற்செய்தி: சோப்பு இருந்தால் போதுமா?
by charles mc Sat Dec 03, 2016 8:35 pm

» ஜெபம் - அறிவோம்
by charles mc Sat Dec 03, 2016 8:31 pm

» கடவுள் வரட்டும்
by charles mc Sat Dec 03, 2016 8:26 pm

» தலையில்லா முண்டம்
by charles mc Sat Dec 03, 2016 8:21 pm

» ஈஸ்டர் செய்தி
by charles mc Sat Dec 03, 2016 8:21 pm

» வேதத்தை படிக்க ஆலோசனை
by charles mc Sat Dec 03, 2016 8:18 pm

» இதற்குமா அல்லேலூயா
by charles mc Sat Dec 03, 2016 8:07 pm

» அழுவதற்கல்ல இந்த வாழ்க்கை
by charles mc Sat Dec 03, 2016 8:06 pm

» பக்தி மட்டும் போதாது
by charles mc Sat Dec 03, 2016 7:56 pm

» சகோ.அகத்தியனின் கடிதம்
by charles mc Sat Dec 03, 2016 7:43 pm

» ஞானஸ்நான உடன்படிக்கை
by charles mc Sat Dec 03, 2016 7:41 pm

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Top posting users this month

Keywords

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

Most users ever online was 50 on Sat Jul 29, 2017 12:37 pm
Social bookmarking

Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website

பார்வையிட்டோர்
Add this to U r Website
October 2017
MonTueWedThuFriSatSun
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     

Calendar Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

அரசுப் பேருந்துப் பயணிகளே... உங்களுக்கு இந்த 'பகீர்' விஷயம் தெரியுமா?

View previous topic View next topic Go down

அரசுப் பேருந்துப் பயணிகளே... உங்களுக்கு இந்த 'பகீர்' விஷயம் தெரியுமா?

Post by சார்லஸ் mc on Sat Jan 30, 2016 8:33 am

நீங்கள் திருநெல்வேலியில் உள்ள  ஏதோ ஒரு குக்கிராமத்தில்,  அலுவலகம் செல்வதற்காக பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அன்று வர வேண்டிய அரசு பேருந்து நேரத்திற்கு வரவில்லை. உங்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு செல்ல அந்த ஒரு பேருந்துதான் இருக்கிறது.  உங்கள் காத்திருப்பும் கால் மணி நேரம், அரை மணி நேரம் என நீள்கிறது. கடைசி வரை பேருந்து வரவே இல்லை. இப்போது  நீங்கள் என்ன செய்வீர்கள்... எவ்வளவு மன உளைச்சலை அனுபவிப்பீர்கள்..?

இது ஏதோ திருநெல்வேலியின் உள்ள ஒரு குக்கிராமத்தின் கதை அல்ல. தமிழகத்தில் பல ஊர்களின் நிலை இதுதான். பல ஊர்களில், பல மணி நேரங்களாக காத்திருந்தும் கடைசி வரை வராத பேருந்து, கடைசியில் எங்கு இருக்கிறது என்று நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? 

இந்த யோசனையுடன் நீங்கள் உங்கள் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்துக்குச் சென்றால், உங்கள் ஊருக்கு வராத பேருந்தை நீங்கள் அங்கு கண்டடைய வாய்ப்புகள் அதிகம். 

ஆம். தமிழகத்தில் பேருந்து நிலையங்களைவிட நீதிமன்றங்களில்தான் அதிக பேருந்துகள் நிற்கிறது. அண்மையில் ஒரு மாவட்டத்தில் உள்ள மாஜிஸ்திரேட், “இது நீதிமன்றமா... இல்லை பேருந்து நிலையமா என்று எனக்கே அடிக்கடி குழப்பம் வருகிறது...!” என்று சலித்துக் கொண்டார்.

வேடிக்கை வர்ணனைகள் வேண்டாம். விஷயத்துக்கு  வருவோம். ஏன் நீதிமன்றத்தில் இத்தனை பேருந்துகள் நிற்கிறது...?  இந்தகேள்வியில்தான், தமிழக அரசின் அலட்சியமும், தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு குறித்த செய்தியும் அடங்கி இருக்கிறது. ஆம். நீதிமன்றத்தில் நிற்கும் அனைத்து பேருந்துகளும் நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்டவை... 

ஏன் நீதிமன்றங்கள் அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய வேண்டும்...? இந்தப் பேருந்துகள் அனைத்தும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு  இழப்பீடு தராத பேருந்துகள். சரி... தனியார் பேருந்துகள் ஒன்றைக்கூட நீதிமன்ற வளாகங்களில் காணமுடியவில்லையே... அப்படியென்றால் அவர்கள் விபத்தே ஏற்படுத்துவதில்லையா..?

இல்லை. அவர்களும் ஏற்படுத்துகிறார்கள். ஆனால், சரியாக இழப்பீடு தந்துவிடுகிறார்கள். அவர்கள் என்றால் அவர்கள் அல்ல; அவர்கள் காப்பீடு செய்த நிறுவனங்கள்.

அப்படியென்றால் அரசு பேருந்துகளுக்கும் தர வேண்டியது தானே... தாரளமாக தரலாம்தான். ஆனால், அதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்,  தன் பேருந்துகளை காப்பீடு செய்திருக்க வேண்டுமே! ஆம்... நம்புங்கள்..! தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் ஒன்றுக்கு கூட காப்பீடு செய்யப்படவில்லை. ஒரு குடிமகன்,  தன் இருசக்கர வாகனத்திற்கு காப்பீடு செய்யவில்லை என்றால், அவனுக்கு அபராதம் விதிக்கும் தமிழகத்தில்தான், இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் காப்பீடு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. 

“தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக மொத்தம் 22,500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இருக்கின்றன. இதில் ஒன்றுகூட காப்பீடு செய்யப்பட்டது இல்லை. போக்குவரத்து கழகங்கள் உண்டாக்குவதற்கு முன்பு வரை அனைத்து பேருந்துகளுக்கும் காப்பீடு செய்யப்பட்டுதான் வந்தன. ஆனால் போகுவரத்து கழகம் உருவாக்கப்பட்ட பின் 1972 -ம் ஆண்டு முதல்,  பேருந்துகளுக்கு காப்பீடு கட்டுவது நிறுத்தப்பட்டுவிட்டன” என்கிறார் அனைத்து இந்திய தொழிற் சங்க காங்கிரஸின் மாநில செயலாளர் ஜெ. லட்சுமணன். 

அதற்கு அவர் கூறும் காரணம், அரசு தன் குடிகள் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. 

“தொழிற் சங்கங்கள் பல முறை இதுகுறித்து போக்குவரத்து கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டது. தொடர் போராட்டம் மூலமாக பல அழுத்தங்களை தந்தாகிவிட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் 20,000 க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கும் காப்பீடு கட்டுவது கடினம். விபத்தில் தோராயமாக 200 பேருந்துகள் மட்டுமே சிக்குகின்றன. அவர்களுக்கு வேண்டுமானால். நாம் இழப்பீடு கொடுத்துவிடலாம் எனக் கூறிவிட்டது.
  
தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த நிலை. நம் அண்டை மாநிலமான கர்நாடகம், ஆந்திரம் ஆகிய  மாநிலங்களில் உள்ள அரசுப் பேருதுகள் அனைத்தும் முறையாக காப்பீடு செய்யப்பட்டவை. பேருந்து கட்டணம் நிர்ணயம் செய்யும்போது காப்பீடு கட்டணத்தையும் சேர்த்தே நிர்ணயிக்கிறார்கள். அந்த முறையை தமிழ்நாடும் பின்பற்ற வேண்டும். தமிழ் நாட்டில் ஓடும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளின் நிலை பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. முறையற்ற கையாளுமை, அலட்சிய பராமரிப்பு காரணமாக பல பேருந்துகளும் தகர டப்பா கணக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது. 

பொதுவாக பொது போக்குவரத்து பேருந்து,  9 ஆண்டுகள் ஓடிவிட்டால் அதை பயன்படுத்தக் கூடாது என்று ஒரு விதி இருக்கிறது. ஆனால், ஏறத்தாழ 17,000 பேருந்துகள் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிய பழமையானவை. இதுவே அடிக்கடி விபத்து நடக்க காரணமாகிறது!'' எனச்சொல்லி அதிர வைக்கிறார் லட்சுமணன்.

அரசு போக்குவரத்து விபத்துகளில், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அதிக  வழக்குகளில் ஆஜரான கிருஷ்ணகிரியை சேர்ந்த வழக்கறிஞர் வி.யுவராஜ், “நான் ஒருவன் மட்டுமே 20 பேருந்துகளை ஜப்தி செய்ய ஆர்டர் வாங்கி உள்ளேன். கிருஷ்ணகிரியில் மட்டும் பல்வேறு விபத்துகளில், பாதிக்கப்ப‌ட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு போக்குவரத்துக் கழகம் தராததால், 62 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய சமீபத்தில் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு,  அனைத்து பேருந்துகளையும் உடனடியாக காப்பீடு செய்வது மட்டுமே. நம் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரத்தால் இயலும்போது ஏன் நம்மால் மட்டும் முடியாது...?” என்று கேள்வி எழுப்புகிறார்.

விபத்தில் கணவனை இழந்து,  கடந்த ஒன்பது ஆண்டுகளாக இழப்பீட்டு தொகைக்காக போராடி கொண்டிருக்கும் தருமபுரியை சேர்ந்த பச்சையம்மாள், “6 லட்ச ரூபாய் இழப்பீடு தரச்சொல்லி கோர்ட் உத்தரவிட்டும் பல ஆண்டுகள் ஆச்சு. ஆனா, இன்னும் ஒத்த காசு கூட வரலை. பல நிறைவேற்று மனு போட்டும் பயனில்லை” என்கிறார் விரக்தியான குரலில்.

இதுகுறித்து  போகுவரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “அனைத்து பேருந்துக்கும் காப்பீடு செய்வது என்பது அதிகம் செலவு பிடிக்கும் செயல். ஏற்கனவே, போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமை சரியில்லாமல் இருக்கும்போது, இது அனைத்துக் கழகங்களையும் அதிக நிதிச் சுமையில் அழுத்திவிடும். அரசு பேருந்துகள் குறைந்த அளவிலேயே விபத்துகளில் சிக்குகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போக்குவரத்து கழகங்களே இழப்பீட்டை வழங்கிவிடுகிறது” என்றனர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு கோடி பேர் அரசு பேருந்தில் பயணம் செய்கிறார்கள். நேரடியாக சொல்ல வேண்டுமானால், இத்தனை பேரும் தன் உயிரை பணயம் வைத்துதான்  தங்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

இந்த கட்டுரை நம் அரசு போக்குவரத்து கழகத்தை பயன்படுத்தாதீர்கள் என்ற அச்சமூட்ட அல்ல.  அரசுப் போக்குவரத்துக் கழகங்களை நாம் குறை கூறி,  தனியார் பேருந்துகளே சிறந்தது என்று, மொத்த போக்குவரத்து துறையையும் தனியார்மயமாக்கிவிட வேண்டும் என எண்ணினால் அது அறியாமை. போக்குவரத்து துறையை தனியாரிடம் கொடுத்துவிட்டால் நிச்சயம் அவர்கள் அதிக வருவாய் வரும் வழித்தடங்களில் மட்டுமே பேருந்தை இயக்குவார்கள். பல கிராமங்கள் பேருந்துகள் இல்லாமல் துண்டிக்கப்பட்டுவிடும். 

இதற்கெல்லாம் மேல் பொது போக்குவரத்து அரசிடம்தான் இருக்க வேண்டும் என்பதை சென்னை பெருவெள்ளம் நமக்கு உணர்த்திவிட்டு சென்றுவிட்டது. சென்னை பெருவெள்ளத்தின் போது, தனியார் பேருந்துகள் இயங்க மறுத்தபோது, அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கியது. அந்த முகம் தெரியாத பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் செயலாற்றினர். அவர்கள் தியாகம் அளப்பரியது. 

இக்கட்டுரையின் நோக்கம் மக்களின் போக்குவரத்தை இன்னும் பாதுகாப்பானதாக்க வேண்டும் என்பதே! 

- மு. நியாஸ் அகமது
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்

Posts : 15983
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

http://nesarin.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum