எருசலேமிலிருந்து எரிகோவுக்கு
Wed Jan 27, 2016 9:30 am
எருசலேம்' பட்டணம் கடல் மட்டத்திலிருந்து 2,500 அடிக்கு மேல் அமைந்திருக்கிறது.
'எரிகோ' கடல் மட்டத்திலிருந்து 800 அடி தாழ்வாக அமைந்துள்ள உலகில் மிகப் பழைய நகரம்.
இவ்விரு பட்டணங்களுக்கும் இடையிலுள்ள உயர வித்தியாசம் ஏறத்தாழ 3300 அடி.
எனவே தான், எருசலேம் 'தேவ ராஜ்யத்தையும்' எரிகோ 'மனித ராஜ்யத்தையும்' சித்தரிக்கிறது. இதை வலியுறுத்தும் பல உவமைகள் வேதாகமத்தில் இலை மறை காய் மறைவாக சிந்திக் கிடக்கிறது.
'நல்ல சமாரியன்' உவமையை இயேசு கிறிஸ்து சொல்லும் போது 'ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில்..." என்று தொடங்குகிறார்.
ஆங்கில வேதாமகம் இன்னும் துல்லியமாக "A man was going down from Jerusalem to Jericho" என்று குறிப்பிடுகிறது.
எரிகோவுக்கு பயணப்பட மனிதன் வேறு யாருமில்லை 'ஆதாமே'. (லூக்கா 10:30-37) அவன் தான் முழு மனுக்குலத்தின் பிரதிநிதியாக இயேசு கிறிஸ்துவால் இவ்வுவமையில் சித்தரிக்கப்படுகிறான்.
ஆதாம் தான் தேவ ராஜாங்கத்தை(எருசலேம்) புறக்கணித்து மனித ராஜாங்கத்தை(எரிகோ) தேடி பயணித்தான். ஆகவே, அவன் கள்ளர்(பிசாசு) கையில் அகப்பட்டு தன வஸ்திரங்களை(மகிமை) இழந்தான்.
அவ்வழியே வந்த ஆசாரியனும், லேவியனும் (நியாயப்பிரமாணம்) அவனை காப்பாற்றக் கூடாதவர்களாய் கடந்து போனார்கள்.
அவர்களை தொடர்ந்து வந்த 'நல்ல சமாரியன்' (இயேசு) குற்றுயிராய்க் கிடக்கும் அவன் மேல் மனதுருகி அவனது காயங்களைக் கட்டி, அவனை தனது சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.(மீட்பு)
மறுநாளில் அங்கிருந்து கிளம்பிய 'நல்ல சமாரியன்' சத்திக்காரன்(சபை/ஆவியானவர்) கையில் அவனை ஒப்புவித்து, 'மீண்டும் வருவதாக' வாக்குரைத்து சென்றான்.
எனக்கு அருமையானவர்களே, நமது 'நல்ல சமாரியனாகிய' இயேசு கிறிஸ்து சீக்கிரம் வருகிறார்.
அவர் வரும் போது நமக்காக ஒரு விருந்தை ஆயத்தப்படுத்தப் போகிறார். அவ்விருந்தில் கலந்து கொள்ள நீங்கள் ஆயத்தமா?
"கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்." (ஏசாயா 61:10)
நன்றி: சிலுவையின் நிழல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|