தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
வெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
June 2018
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யெகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்கள்

on Tue Jan 26, 2016 8:41 am
சார்லஸ் டாஸ் ரசல்    (Charles Taze Russell 1852-1916)   வாச்டவர் பைபிள் அணுட் ட்ராக்ட் சொசைட்டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து தம் சொந்த கொள்கைகளைப் பரப்பினார். ஜோசப் பிராங்ளின் ரத்தப்போர்ட் (Joseph Franklin Rutherford 1869 - 1942) ரசலுக்குப் பின் 1917ல் இவர் இந்த இயக்கத்தின் தலைவரானார். இவர் ஒரு வழக்கறிஞர். பின் நீதிபதியானார். 1931ல் இந்த இயக்கத்தின் பெயர் யெகோவா சாட்சிகள் என்று மாற்றப்பட்டது. நேர்த்தன் நோர் (Nathan Knorr) என்பவர். ருத்தர்போர்டுக்குப் பின் இதன் தலைவரானார். வீடு வீடாக சென்று சாட்சி பகர வேண்டுமென்பதை வலியுறுத்தியவர் இவர்தான். இவருடைய நாட்களில் தான் இந்த இயக்கம் அதிவேகமாக வளர்ந்துள்ளது.
 
இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை முதலாவது விளங்கிக் கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொண்டவர்களே கிறிஸ்தவர்கள். இவர்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுடைய உபதேசங்கள் மிகவும் விகற்பமானவை:
 
இவர்கள் எந்த ஒரு வேத வசனத்தையும் நேரடியாக அர்த்தம் எடுத்துக்கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். வேத வசனம் என்பது மூடி முத்திரையிடப்பட்ட புத்தகம் என்பதும், இவர்களிடம் கற்றால் மட்டுமே வேத வசனங்கள் புரியும் என்பதும் இவர்கள் கூற்று. வேத வசனத்தில் இவர்கள் கொள்கைக்கு சாதகமாக வராத எந்த சம்பவங்களையும், சொல்லர்த்தமாக அப்படியே எடுத்துக்கொள்ள இவர்கள் சம்மதிப்பதில்லை. அப்படிப்பட்ட வசனங்களின் ஒவ்வொரு வார்த்தைகளையும் தனித்தனியாக பிரித்து, வேதத்தில் அந்த வார்த்தை எந்த இடத்தில் இவர்களுக்கு சாதகமான கருத்து வரும்படி வருகிறதோ, அந்த பகுதியை காண்பித்து, அந்த சம்பவத்தின் மொத்த கருத்தையும் திசைதிருப்பி விடுவதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். இவர்கள் வேதத்தை வியாக்கியானம் செய்ய வைத்திருக்கும் ஒவ்வொரு குறிப்புகளும் சாத்தானின் வஞ்சிக்கிற ஆவியால் நிரம்பியவர்களால் எழுதப்பட்டவை என்பதை நாம் முதலாவது புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் குறிப்புகளை பரிசுத்தாவியின் நிறைவின்றி வாசித்தால் வேதத்தை தினம்தோறும் வாசிப்பவர்கள் கூட குழம்பிவிடும் ஆபத்துண்டு. இவர்கள் நடத்தும் வேத பாட வகுப்புகளில் பரிசுத்த ஆவியானவரின் துணையில்லாமல் கலந்துகொள்பவர்கள், மூளைச்சலவை செய்யப்படும் ஆபத்தும் உண்டு. காரணம், வேத வசனத்திலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களை பொறுக்கியெடுத்து, அந்த வேதவசனங்களை  எப்படியெல்லாம் புரட்டக்கூடுமோ, அப்படியெல்லாம் புரட்டி, விசேஷமாய் தயாரிக்கப்பட்ட சாத்தானின் வேதத்தைக்கொண்டே இவர்கள் இப்படிப்பட்ட வகுப்புகளை நடத்துகிறார்கள்.
 
உதாரணமாக மோட்சம் நரகம் இல்லை என்னும் இவர்கள் கொள்கையை நிலைநாட்ட, வேதத்திலுள்ள ஐஸ்வர்யவான், லாசரு உவமையை இவர்கள் புரட்டி, ஐஸ்வர்யவான் என்பது (யூதரும், பென்யமீனரும் இணைந்த) யூதர் எனவும், லாசரு என்பது புறஜாதிகள் எனவும், பெரும்பிளப்பு என்பது யூதருக்கும் புறஜாதிகளுக்கும் நடுவில் உள்ள பிரிவினை எனவும், ஐந்து சகோதரர் என்பது இஸ்ரவேலின் மற்ற பத்து (ஐஸ்வர்யவான் என்பது இரண்டு கோத்திரம் என்றால் மற்ற ஐந்து என்பது பத்து என கணக்கிட்டு) கோத்திரத்தார் எனவும் கூறி, இயேசு கூறிய அந்த உவமையின் நேரடியான சொல்லர்த்தத்தை, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல மறைத்துவிடுவார்கள்.
 
காணாமல்போன ஆடு (லூக்.15:4-7) உவமையில் காணாமல் போன ஆடு என்பது, தனி மனிதன் அல்ல எனவும், மொத்த மனுக்குலமும் என்பார்கள். அப்படியானால் மனந்திரும்ப அவசியமில்லாத மற்ற தொண்ணூற்றொன்பது நீதிமான்கள் என்பவர் யார் என்றால், அது, மிருகங்கள், பறவைகள், மீன்கள், பூச்சிகள், தாவரங்கள், தூதர்கள், கேரூபீன்கள் போன்ற தேவனுடைய மொத்த சிருஷ்டிகளைக் குறிக்கும் என்பார்கள். இங்கு நாம் கவனித்தால், மனிதனைத்தவிர மற்ற எல்லா சிருஷ்டிகளும், மனம்திரும்ப அவசியமில்லாத நீதிமான்கள் எனவும், மனிதன் மட்டுமே பாவம் செய்த ஆத்துமா எனவும் கூறி, இவர்கள் எவ்வளவு தந்திரமாக வேதத்தை சாத்தானுக்கு சாதகமாக புரட்டுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
 
மனிதன் தேவ சாயலில் உருவாக்கப்பட்டவன். மனிதன் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் பெற்றவன். அப்படிப்பட்ட மனிதனை, பூச்சிகள், மீன்கள் பறவைகள் இவற்றுக்கு ஒப்பாக்குவதன் மூலம், ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் இழிவுபடுத்தும் சாத்தானின் உள்மனம் இங்கு வெளிப்படுகிறது.
 
இவர்கள்,  இயேசு கிறிஸ்து யெகோவாவால் சிருஷ்டிக்கப்பட்டவர், முன்பு மிகாவேல் தூதனாய் இருந்தவர் என்றெல்லாம் கூறி இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கிறார்கள். இவர்கள் இதற்கு ஆதாரமாக கூறும் வேத வசனங்கள் பின்வருமாறு:
 
i. யோவான் 14:28 என் பிதா எங்கிருந்தாலும் பெரியவராயிருக்கிறார்.
ii.      லூக்கா 18:18,19 நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவர் ஒருவனும் இல்லையே.
iii.      1கொரி 11:3 கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார்.
iv.      1கொரி 15:18 குமாரன் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருப்பார்.
v.      வெளி 3:14 தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியானவர் இயேசு.
vi.      கொலோ 1:15 சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர் இயேசு.
 
இயேசு கிறிஸ்து யார் என்று வேதம் நமக்கு போதிக்கிறது?
 
i.      ஏசாயா 7:14 கன்னிகையின் மைந்தன் இம்மானுவேல் என்றழைக்கப்படுவார்.
ii.      ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். அவர் நாம் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா. சமாதான பிரபு.
iii.      மத்தேயு 1:23 இம்மானுவேல் என்றால் தேவன் நம்முடனிருக்கிறார்.
  iv.      யோவான் 1:1,2,14 அந்த வார்த்தை தேவனாயிருக்கிறது. அந்த வார்த்தை மாம்சமாகி. நமக்குள்ளே வாசம் பண்ணினார்.
v.      யோவான் 5:17,18 இயேசு தன்னை தேவனுக்கு சமமாக்கினார் என்று மக்கள் கூறினர்.
vi.      யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.
vii.      யோவான் 10:33 உன்னை தேவன் என்று சொல்லுகிறாயே என்று மக்கள் கூறினர். (இயேசு அதை மறுகவில்லை)
viii.      யோவான் 14:9,11 என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.
ix.      யோவான் 20:28 தோமா இயேசுவை நோக்கி."என் ஆண்டவரே,என் தேவனே" என்றான்.
  x.      கொலோ 1:15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்.
xi.      கொலோ 2:9 தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
xii.      1 தீமோ 3:16 தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்.
xiii.      எபி 1:8 குமாரனை நோக்கி "தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கு முள்ளது"
xiv.      1 யோவான் 5:20 இயேசு கிறிஸ்து மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.
 
புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்று 663 இடங்களில் வருகிறது. கர்த்தர் என்பதற்கு கிரேக்க மொழியில் குரியோஸ் (Kurios என்று வருகிறது. புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழியில் வரும் யெகோவா என்பதும் கிரேக்க மெழியில் வரும் குரியோஸ் என்பதும் ஒரே கருத்தில் தான் கர்த்தர் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
 
 தேவன் சர்வ வல்லவர், சகலத்தையும் அறிந்தவர், எங்கும் எப்போதும் இருக்கக்கூடியவர், மாறாதவர், பாவத்தை மன்னிக்கிறவர்,
சிருஷ்டிக்கிறவர், இத்தனை தெய்வீக தன்மைகளையும் இயேசு கிறிஸ்துவிடம் காண்கிறோம்.
 
இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை விளக்கும் சில வசனங்கள்.
 
i.      யோவான் 5:26 பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவர். குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவர். அதாவது இயேசுவை யாரும் சிருஷ்டிக்கவில்லை என்பது தான் பொருள்.
ii.      யோவான் 14:6 நானே ஜீவன்.
 iii.      யோவான் 1:4 அவருக்குள் ஜீவன் இருந்தது அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
  iv.      யோவான் 10:18 என் ஜீவனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.
v.      மத் 28:18 வானத்திலும் பூமியிலும் சர்வ அதிகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
vi.      வெளி 1:18 இயேசு கிறிஸ்துவே சர்வ வல்லமையுள்ள தேவன்.
vii.      யோவா 2:25 மனுஷருடைய எண்ணங்களையெல்லாம் அவர் அறிந்திருக்கிறார்.
viii.      மத் 18:20 இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன். (சர்வ வியாபி)
ix.      கொலோ 1:16 அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது.சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
x.      (எபே 3:9. எபி 1:2,10)
xi.      மத் 28:20 இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.
xii.      எபி 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். (யெகோவா என்பதற்கு "I AM WHO I AM" அல்லது இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று அர்த்தம்)
xiii.      மாற்கு 2:5-12 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது. (மன்னிக்கும் அதிகாரம் படைத்தவர்)
xiv.      யோவா 1:3,10 சகலமும் அவர் (இயேசு கிறிஸ்து) மூலமாய் உண்டாயிற்று. (அவரே சிருஷ்டி கர்த்தர்)
xv.      "ஏசாயா 40:3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் (YAWH) பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்" (யோவானால் சுட்டிக்காட்டப்பட்டவர் இயேசுவே)
xvi.      ஏசாயா 43:10-11 எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. (இயேசு என்பதற்கு இரட்சகர் என்று பொருள்)
 
யோவா 1:18; பிதாவை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை. யாத் 33:20; ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடுயிருக்க கூடாது என்றார். (யோவா.5:37; கொலோ.1:18; 1தீமோ.6:16-17) ஆகிய வசனங்கள் மூலம் பிதா அதரிசனமானவர் என்று அறிகிறோம்.
 
ஏசாயா 6:1 உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.
ஏசாயா 6:5 அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை (யெகோவா தேவனை) என் கண்கள் கண்டதே என்று கூறியபோது அவர் யாரைக்கண்டு அப்படி கூறினார் என்று புதியஏற்பாட்டில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. யோவான் 12:41 ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். என்ற வசனத்தின்படி அவர் இயேசுவாகிய யெகோவா தேவனைக் கண்டே அப்படி கூறியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
 
உலக மனிதர் அனைவருக்கும், அவ்ர்கள் எப்படி இருந்தாலும், யாராயிருந்தாலும், யாரை பின்பற்றினாலும், என்னதான் துன்மார்க்கமாய் வாழ்ந்தாலும், அனைவருக்கும் ஒருசேர மீட்பு உண்டு என்கிறார்கள் இவர்கள். அதற்கு இவர்கள் காண்பிக்கும் உதாரணம்:-
 
இயேசு உலக இரட்சகர் என்பதால் உலக மக்கள் அனைவருடைய பாவத்தையும் ஒரேதரம் தம்முடைய பலியினால் பரிகரித்துவிட்டார்; மனிதனின் ஜென்ம பாவத்துக்கான தண்டனை என்பது மாம்ச மரணமே; நரகம் என்பதெல்லாம் கிடையாது; கல்லறைக்குழியே பாதாளம் எனப்படுகிறது; இறுதி நாளில் கிறித்துவைப் போலவே பரிசுத்தமாக வாழ்ந்தோருக்கான மீட்பில் முதல் கூட்டம் (ஈசாக்கின் ஒப்பீடான கிறித்தவர்) இடம்பெறும்; அவர்களே ஆட்சியாளர்கள்; அடுத்து கைவிடப்பட்டோருக்கு ( யூதர் அல்லது இஸ்ரவேலர்) ஒரு வாய்ப்பு; இறுதியில் ஆயிரம் வருட அரசாட்சியின்போது உலகத்தார் அனைவருமே ஒருசேர மீட்கப்பட இந்த உலகமே பரலோகமாக மாறும். இதுவே ஆபிரகாமின் மூன்று மனைவியரின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறும் பாடமாகும் என கூறுகிறார்கள். முதல் மனைவியான சாராளின் மகனான ஈசாக்கின் வாக்குதத்த சந்ததிக்கு கிறித்துவர்கள் ஒப்பீடாம்; இரண்டாம் மனைவி(?)யான ஆகாரின் சந்ததியார் கிறித்துவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களாம்; மூன்றாவது மனைவியான கேத்துராளின் சந்ததியார் ஒரு பாவமும் அறியாத உலகத்தாராம்; இந்த மூன்று கூட்டத்தையும் மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு திட்டத்தின் மூலம் ஆண்டவர் மீட்டுக்கொண்டு இந்த உலகையே பரலோகமாக மாற்றிவிடுவாராம் என்பதுதான் இவர்கள் உபதேசம்.
 
இந்த கருத்திற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பதே உண்மை. காரணம் ஆபிரகாமின் வாழ்க்கை ஒரு சரித்திர சம்பவம். இதிலிருந்து வேதம் விவரிக்காத ஒரு கருத்தை, அல்லது வேறு எங்குமே இணைவசனம் இல்லாத ஒரு கருத்தை இவர்கள் திரிக்கிறார்கள்.
 
இவர்கள் நரகம் என்பதே இல்லை என்றும், அன்பு மிகுந்த தேவன் யாரையும் நரகத்தில் தள்ளுவதில்லை. அனைவருக்கும் மீட்பு என்பது இயேசுக்கிறிஸ்துவின் ஈடுபலியின் மூலம் உறுதியாகிவிட்டது என்று கூறுகிறார்கள்.

அனைவருக்கும் மீட்பு என்பதற்கு ஆதாரமாக இவர்கள் காண்பிக்கும் வேத வசனங்கள்:-
 
1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
ஏசாயா 11:9. ..........................சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
1 யோவான் 2:2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே
வெளி 21:4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: யெகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்கள்

on Tue Jan 26, 2016 8:43 am
இயேசுவை விசுவாசித்து தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே மீட்பு அல்லது இரட்சிப்பு என்பதற்கு நாம் வேதத்திலிருந்து பல வசனங்களை ஆதாரமாக பெற முடியும்.
 
a). தேவன், தம்முடைய ஒரேபேறான ”குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு”, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.   யோவான் 3:16 (விசுவாசிக்கிறவனுக்கு மட்டுமே நித்தியஜீவன்)
b). என்னவென்றால், கர்த்தராகிய ”இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்”.  நீதியுண்டாக இருதயத்திலே ”விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.”  ரோமர் 10:9-10
c). "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்."   யோவான் 1:12
d). "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல."   எபேசியர் 2:8-9 (விசுவாசித்தால் தான் இரட்சிப்பு)
e). "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் " (அப்போஸ்தலர்.16:31) (இரட்சிக்கப்பட நாங்கள் என்ன செய்யவேண்டும் என பயத்துடன் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் இது)
f). “விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான். (எபி 11:7) (எச்சரிப்பை கேட்டு, அதை விசுவாசித்து, பயபத்தியுடன் இரட்சிப்புக்கேற்ற கிரியையை ஆரம்பிக்கவேண்டும்)
 
இரட்சிக்கப்படாதவர்களுக்கு தண்டனையாக நரக ஆக்கினை உறுதி என தெரிவிக்கும் வசனங்கள்:-
 
a). எபிரெயர் 2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
b). சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
c). நீதிமொழிகள் 9:18 ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.
d). மத்தேயு 5:22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
e). மத்தேயு 5:29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
f). மத்தேயு 5:30 உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
g). மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
h). மத்தேயு 18:9 உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுள்ளவனாய், எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
i). மத்தேயு 23:33 சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?
j). II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
k). யாக்கோபு 3:6 நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
 
மத்தேயு 25:41: அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
மத்தேயு 25:46: அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்
 
இந்த வசனங்களின்படி பாவத்தில் நிலைத்திருப்பவர்கள் நித்திய ஆக்கினையாகிய நித்திய அக்கினியிலே பங்கடைவார்கள் என்பதை இயேசு இங்கே தெளிவுபடுத்தியுள்ளார்.
 
இயேசுக்கிறிஸ்துவின் மாம்ச உயிர்தெழுதலை இவர்கள் மறுதலிப்பார்க்ள். அவர் சரீரத்தில் உயிர்த்தெழவில்லை என சாதிப்பர்கள். அப்படியானால் அவர் சரீரம் என்னவாயிற்று, அவர் சரீரத்தை தேடிச்சென்ற பெண்களும் சீஷர்களும், அவர் சரீரத்தை காணவில்லையே என கேட்டால், மோசேயின் சரீரத்திற்கு என்னவாயிற்றோ, அதுதான் இயேசுவின் சரீரத்திற்கும் நடந்தது என்பார்கள். அதற்கு ஆதாரமான வசனம் கேட்டால் அவர்களால் கொடுக்க இயலாது. இயேசுக்கிறிஸ்து மாம்சத்தில் உயித்தெழவில்லை என கூற அவர்கள் உபயோகிக்கும் வசனங்கள்:-
 
I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
 
I கொரிந்தியர் 15:50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
 
அவர் மாம்சத்தில் கொலையுண்டபோது அவரது ஆவி உயிரோடிருந்தது. அந்த ஆவியில் அவர் போய் காவலிலுள்ள ஆவிகளுக்கு பிரசங்கித்தார் என 1 பேதுரு 3:19 கூறுகிறது. பின்பு மூன்றாம் நாளில் தான் அவர் மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார். அதுபோல தான், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்க மாட்டாது என கூறுகிற பவுலடிகள் அடுத்த வசனத்தில் அதை தெளிவு படுத்துகிறார். 1 கொரி. 15:51,52 வசனங்களில், (இயேசு மறுரூபமலையில் மகிமையின் சரீரத்திற்குள்ளாக மறுரூபமானதுபோல) நாமும் மறுரூபமாவோம் என கூறுகிறாரே.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: யெகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்கள்

on Tue Jan 26, 2016 8:43 am
மாம்ச உயிர்த்தெழுதல் மற்றும் மறுரூபமாக்கப்படுதலுக்கு ஆதாரமான வசனங்கள்: -
 
யோவான் 20:14 to 21:25; மத்தேயு 28:9-17; மாற்கு 16:9-16; லூக்கா 24 ம் அதிகாரம்; யோவான் 20:14 - 21:25 அதிகாரங்கள் முழுக்க முழுக்க இயேசு மாம்சத்தில் உயிர்த்தெழுந்ததையே திட சாட்சியாக அறிவிக்கின்றன.
லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
லூக்கா 24:40. தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் மத்தேயு 28:9. ”அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்” என்றும் வேதம் கூறுகிறது. ஆவியாயிருந்திருந்தால் பாதங்களை எப்படி தழுவமுடியும்!
மேலும் அப். 2: 31. இன் படி “அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.” என்று பேதுரு கூறுகிறாரே!
 
இயேசு பூட்டிய அறைக்குள் எப்படி பிரவேசித்தார் என கேட்கிறார்கள். அவர் மறுரூபமாக்கப்பட்ட சரீரத்தோடுதான் உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த சரீரத்திற்கு அறைக்குள் ஊடுருவிச்செல்லும் தன்மையும் இருந்தது, அதே நேரத்தில் புசிக்கிறதற்கு ஏதாகிலும் இருக்கிறதா எனக் கேட்டு புசிக்கும் தன்மையும் இருந்தது.
 
சபை கூடிவருதல் மற்றும் காணிக்கையை குறித்து:
 
இவர்கள் இன்று இருக்கும் ஒட்டுமொத்த சபை அமைப்பையுமே பாபிலோனிய வேசி சபை என்பார்கள். தசமபாகம், காணிக்கை என்பதெல்லாம் யூதர்களுக்கு மட்டுமே உரியது என்றும் யாரும் யாருக்கும் காணிக்கை செலுத்த தேவையில்லை என்பார்கள். ஒட்டுமொத்த சபைத்தலைவர்களையும், ஓநாய்கள் என்றும், கள்ளப்போதகர்கள் என்றும் மிஷனரிகளை விஷ நரிகள் என்றும் தூஷிப்பார்கள். ஆதி அப்போஸ்தலர் மட்டுமே சுவிசேஷம் சொல்ல பணிக்கப்பட்டிருந்தனர் எனவும், அவர்களுக்கு மட்டுமே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது எனவும் வேறு யாரும் (பவுல் மட்டும் விதிவிலக்கு என்பார்கள்) சுவிசேஷம் சொல்லவோ, ஜனங்களை நடத்தவோ தேவையில்லை என்பார்கள்.
 
சபையில் ஐந்துவிதமான ஊழியங்களை ஆண்டவர் வைத்துள்ளார் என வேதம் தெளிவாக கூறுகிறது.
எபேசியர் 4:11. ”மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், 12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், 13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். 14. நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், 15. அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்”.
 
மேற்கண்ட வசன்ங்களில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைய சபையையும் சபை ஊழியங்களையும் ஆண்டவரே ஏற்படுத்தியிருக்கிறார் என்று பார்க்கிறோம். ஆனால் மக்கள் சபை அமைப்பிலிருந்து சிதறடிக்கப்பட்டால் என்னவாகும்..? ஒருவருக்கொருவர் தாங்குதலோ, ஜெபித்தலோ இராது. மந்தையில் சேர்ந்திருந்த மாடுகளை பட்சிக்க இயலாத ஒரு சிங்கம், நரியின் சூழ்ச்சியுடன் மாடுகளை சிதறடித்து, பின் ஒவ்வொன்றாக பட்சித்த கதையை நாம் அறிவோம். இன்று பிசாசின் தந்திரமும் அதுதான். எனவேதான் சபைகளில் பிரிவினையின் ஆவியை எழுப்பி மக்களை சிதறடிக்க முயல்கிறான்.
 
எபிரேயர் 10: 24. ’மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; 25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்” என்று வேதம் தெளிவாக சொல்கிறதே.
 
காணிக்கையை குறித்து:
 
1 கொரி 9: 7. எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்? 8. இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா? 9. போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ? 10. நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது. 11. நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா? 12. மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம். 13. ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா? 14. அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்” என்று வேதம் கூறும் வசனங்கள், தங்கள் பூமிக்குரிய வாழ்விற்கென்று செலவழிக்கவேண்டிய முழு நேரத்தையும், கர்த்தருடைய மந்தையை பராமரிக்கும் பணியிலும், ஆத்தும அறுவடையிலும் செலவிடுவதால், அவர்கள் போஷிக்கப்படவேண்டும் என்பது ஆண்டவருடைய கட்டளை.
 
உலக ஆசீர்வாதத்தை எப்படியாவது, எந்த வழியிலாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என எண்ணி, (ஏமாற்றுதல், வஞ்சித்தல், பில்லிசூனியம், குறி கேட்டல் போன்ற)
பல வழிகளில் முயற்சித்து திருப்தியடையாதவர்கள், காணிக்கை கொடுத்தால் பல மடங்காக திருப்பிக்கிடைக்கும் என்றெண்ணி கொடுக்கிறார்கள். பண ஆசை கொண்டு, எப்படியாவது யாரையாவது ஏய்த்து பிழைக்கவேண்டும் என்ற நோக்கோடு வரும் சிலர் சுவிசேஷத்தை ஆதாயத் தொழிலாக எண்ணி ஊழியர் என்ற ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு அவர்களுக்கு தவறான வாக்குறுதிகளை கொடுத்து அவர்களிடம் காணிக்கை என்ற பெயரில் கொள்ளையடிக்கின்றனர். தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள் என கூறி, அதை சாக்காக வைத்து, சரியான ஊழியர்களை குற்றம் சாட்டுவது பிசாசின் தந்திரமாகும். போலி மருந்துகள் இருப்பது உண்மைதான், அதற்காக யாராவது, இன்று அனைத்து மருந்து கடைகளும் ஒட்டுமொத்தமாக போலி மருந்தை மட்டுமே விற்கிறார்கள், எனவே யாரும் மருந்து வாங்க வேண்டம் என கூறுவதுபோல தான் இதுவும்.
 
 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்ற வசனத்தின்படி, கொடுக்கிறவனுக்கு நிச்சயம் பிரதிபலன் உண்டு. இரண்டு காசு போட்ட விதவையைக்குறித்து இயேசு கூறியபோது, ஐயோ இவளை இந்த கோடீஸ்வர குருமார்கள் கொள்ளையடித்துவிட்டார்கள் என கூறவில்லை மாறாக அவளை அவர் பாராட்டினார். தவறான நோக்கோடு வாங்குவது பாவமே, ஆனால் ஆண்டவர் நாமத்தில், அவருக்கு கொடுக்கவேண்டுமே என்ற உயரிய நோக்கோடு கொடுப்பவர்களை ஆண்டவர் அங்கீகரிக்கிறார்.
 
பிரதிபலன் எதிர்பாராமல் கொடுக்கப்படும் காணிக்கை ஆண்டவரால் முற்றிலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஞான நன்மையை விதைப்பவர்களுக்கு, சரீர நன்மைகளை கொடுக்கவேண்டியது சபை கூடிவருகிறவர்களுடைய கடமையும்கூட. இது பிரதிபலன் எதிர்பார்த்து செய்யப்படும் காரியம் அல்ல. எப்படி ஒரு குடும்பத்தில் ஒரு தலைவன் தன் பெற்றோர், மனைவி மற்றும் மக்களுக்காக உழைக்கிறானோ அது போன்றதுதான் இதுவும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை நிறைவேற்றுவதுபோல, சபையிலும் ஒவ்வொருவரும் தத்தமது பங்கை நிறவேற்றினாலேயே சபை அமைப்பு நிலைத்திருக்கும்.  சபைக்கு காணிக்கை கொடுக்க்க்கூடாது என சாத்தான் தடைசெய்வதால், சபை அமைப்பை சிதறடிக்க அவன் எடுக்கும் முயற்சி வெளியரங்கமாகிறது.
 
இப்படி வேத வசனங்களை புரட்டி, வளைத்து, தேவ ஜனங்களை ஏமாற்றும் இந்த கூட்டம், இன்று தமிழகத்தின் பல பாகங்களில் நுழைந்திருக்கிறார்கள். இவர்களிடம் அகப்பட்டு குழப்ப நிலையில் இருக்கிறவர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து வேத வசன அடிப்படையில் விளக்கம் பெற விரும்பினால் கீழ்கண்ட email முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
 
petersamuel@gmail.comspetersamuel@facebook.com
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: யெகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்கள்

on Tue Jan 26, 2016 8:47 am
தேவனுடைய ஒரே பேறான குமாரன் (யோவான் 3:16)
இயேசு கிறிஸ்து “தேவனுடைய ஒரேபேறான குமாரன்“ (45) என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும், அவர் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கான ஆதாரமாக யெகோவா சாட்சிகளால் சுட்டிக் காட்டப்படுகிறது. எபிரேயர் 11:19 ஈசாக்கு ஆபிரகாமின் ஒரேபேறான குமாரன் எனறு குறிப்பிடப்பட்டுள்ளமையால், ஆபிரகாம் ஈசாக்கை சரீரப்பிரகாரமாய் பெற்றது போலவே, யெகோவா தேவன் பெற்ற பிள்ளையாக இயேசு கிறிஸ்து இருக்கிறார். என்றும், இதனாலேயே அவர் தேவனுடைய ஒரேபேறான குமாரன் என்று குறிப்பி்டப்பட்டுள்ளார்.“ என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். (46) இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதனால் அவர் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர், இதனால் அவரல் தேவனாக இருக்க முடியாது என்பதே இவர்களது தர்க்கமாகும். (47)


ஈசாக்கை ஆபிரகாம் பெற்றதுபோலவே தேவன் இயேசு கிறிஸ்துவைப் பெற்றார் என்றும் ஈசாக்கு ஆபிரகாமுக்கு குமாரனாய் இருப்பதைப் போலவே இயேசு கிறிஸ்துவும் தேவனுக்கு குமாரனாய் இருக்கின்றார். என்றும் யெகோவாவின் சாட்சிகள் கூறுவது தேவனையே நிந்திக்கின்ற கூற்றுக்களாகும். இது இயேசு கிறிஸ்துவுக்கு “ஒரு பரலோகத் தகப்பன் இருப்பது போல பரலோகத்தாயும் இருக்கின்றாள் எனும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. (48) இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தையும் நித்தியத்துவத்தையும் நிராகரித்து, யெகோவா தேவனைக் கனப்படுத்துவதாக நினைக்கும் யெகோவாவின் சாட்சிகள் இத்தகைய விளக்கங்களினால் யெகோவா தேவனையே நிந்திக்கிறவர்களாக இருக்கின்றனர். 


மேலும், “ஒரேபேறான குமாரன்“ எனும் சொற்பிரயோகத்தை பெற்றெடுத்த ஒரேயொரு பிள்ளை“ என்று யெகோவாவின் சாட்சிகள் விளக்குவது தவறாகும். ஏனென்றால், ஈசாக்கு ஆபிரகாமின் “ஒரேபேறான குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதனாலும் அவன் ஆபிரகாமின் ஒரேயொரு பிள்ளையாக இருக்கவில்லை. ஆபிரகாமுக்கு வெறு பிள்ளைகளும் இருந்தார்கள். (ஆதி. 16:11, 25:1-6) ஆபிரகாமுடைய பிள்ளைகளில் ஈசாக்கு சிறப்பானவனாகவும், ஒப்பற்றவனாகவும் இருந்தமையினாலலேயே எபிரேயர் நிருபத்தில் அவன் ஆபிரகாமின் ஒரேபேறான குமாரன் என்று குறிப்பிடப்டப்டிருப்பதற்கான காரணமாகும்.


வேதாகமத்தில் “ஒரேபேறான குமாரன்“ எனும் பதம் “ஒருவன் பெற்றெடுத்த பிள்ளை“ எனும் அர்த்தத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு உபயோகிக்கப்படவில்லை (49) “ஒரேபேறான“ எனும் வார்த்தை இயேசு கிறிஸ்துவின் தனித்துவத்தையும் ஒப்பற்ற தன்மையையும் சுட்டிக் காட்டுகிறது. (50) அதாவது இயேசு கிறிஸ்துவைப் போல தேவனுக்கு வேறொருவரும் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். அதேபோல “குமாரன்“ எனும் பதம் “ஒருவன் பெற்றெடுத்த பிள்ளை“ எனும் அர்த்தத்துடன் மட்டும் வேதகமக்கால மக்களால் உபயோகிக்கப்படவில்லை. உண்மையில் , இதை அறியாதவர்களே, இயேசு கிறிஸ்து தேவன் பெற்ற பி்ள்ளை என்றும், இதனால் , அவர் தேவனைவிட தாழ்வானவர் என்றும் தவறான கருத்துடையவர்களாய் இருக்கின்றனர். (51)


வேதாகமத்தில் ஒருவருக்கு பிறக்காதவர்களும் அவருடைய பிள்ளையாகக் குறிப்பிடப்படடடிருப்பதை நாம் அவதானிக்கலாம். இதனால்தான் சாமுவேலை ஏலி “என் மகனே“ என்று கூப்பிட்டார். (1 சாமு 3:16) சவுல் தாவீதைத் தன் குமாரன் என்று அழைத்துள்ளார். (1 சாமு 26:17) (52) அதேபோல, ஆசிரியர் தன் மாணவரை “என் மகனே“ என அழைப்பதை நீதிமொழிகளில் நாம் அவதானிக்கலாம். (நீதி. 7:1) எனவே வேதாகமத்தில் “குமாரன்“ “மகன்“ எனும் பதங்கள் ஒருவனுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு மட்டுமே உபயோகிக்க்பபட்டுள்ளது என்று கூறமுடியாது. இயேசு கிறிஸ்துவும் “தாவீதின் குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் தாவீதுக்குப் பிறந்தவர் என்பது இதனது அர்த்தமல்ல. (மத். 1:1)(53) வேதாகமத்திலுள்ள வம்சவரலாறு அட்டவணைகளிலும், இடைக்கிடையே சில தலைமுறைகள் விடப்பட்டுள்ள போதிலும், ஒருவன் மற்றவனைப் பெற்றான் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (54) மேலும், தீரக்ககதரிசியின் சீடர்கள் “தீர்க்கதரிசியின் புத்திரர்“ என்றும் (1 ராஜா 20:35) பாடகர் குழுவினர் “பாடகரின் புத்திரர்“ என்றும் (நெகே. 12:28) அழைக்கப்பட்டுள்ளனர்.


 வேதாகமம் குமாரன் எனும் பதத்தை உருவகமாக உபயோகித்துள்ளதையும் நாம் அவதானிக்கலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றினது தன்மை அல்லது குணத்தைக் குறிப்பிடுவதற்கு மகன் என்னும் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே, தீமையான மனிதன் “நியாயக்கேட்டின் மகன்“ (சங். 89:22) என்று குறிப்பிடப்பட்டுள்ளமயால், இவன் மனிதனுக்கல்ல. நியாயக்கேட்டுக்கு பிறந்தவன் என்று கூறமுடியாது. 


மேலும். யாக்கோபையும் யோவானையும் இயேசு கிறிஸ்து இடியின் புத்திரர் என்று அழைத்தபோது, இவர்களிருவரும் இடிக்குப் பிறந்தவர்கள் எனும் அர்தத்தில் அல்ல. மாறாக இவர்களது குணம் இடியின் தன்மையைக் கொண்டிருந்ததையே சுட்டிக் காட்டியுள்ளார். (மாற். 3;17) அதேபோல, பர்னபா “ஆறுதலின் மகன்“ என்று அழைக்கப்பட்டுள்ளமை (அப். 4:36) அவன் ஆறுதலுக்குப் பிறந்தவன் என்பதனால் அல்ல. மாறாக, அவன் மற்றவர்களுக்கு ஆறுதலளிப்பவனாக இருந்தமையினாலேயாகும். இதேவிதமாகவே இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று வேத்தில் குறிப்பிட்டிப்பட்டிருப்பற்குக் காரணம் அவர் தேவனுக்குப் பிறந்தவர் எனும் அர்த்தத்தில் அல்ல. மாறாக அவர் தேவத்தன்மையுடையவர் என்பதனாலேயாகும்.


கிரேக்க மொழியில் குமாரன் என்பதைக் குறிக்க பொதுவாக இண்டு வார்த்தைகள் உள்ளன.
 இவற்றில் ஒன்று சரீரப்பிரகாரமாகப் பிறக்கும் மகனை மட்டுமே குறிக்கும். ஆனால் மற்ற பதம், சரீரப் பிரகாரமான மகனை மட்டுமல்ல மற்றவர்களையும் மகனாக அழைக்க உபயோகிக்கப்படும் (55) புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று குறி்ப்பிடப்படும் இடங்களில். சரீரப் பிரகாரமான மகனை மட்டும் குறிக்கும் கிரேக்கப் பதம் அல்ல, மாறாக உருவகமாகவும் உபயோகிக்கப்படும் பதமே உள்ளது. 


இதிலிருந்து இயேசு கிறிஸ்து தேவத்தன்மையுடையவர் என்பதைக் குறிப்பிடவே அவர் தேவனுடைய குமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இதன் மூலம் “இயேசு கிறிஸ்துவின் வழமையான தேவத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. (56) இயேசு கிறிஸ்து தேவனைவிடத் தாழ்வானர் என்பதை இது எவ்விதத்திலும் காண்பிக்கவில்லை. அவர் தேவனுக்கு சமமானவராக, தேவத் தன்மையுடையவராக இருப்பதையே இவ்விவரணம் அறியத் தருகிறது. (57)


இயேசு கிறிஸ்து தம்மைத் தேவனுடைய குமாரனாக அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல (யோவான் 10:36) மற்றவர்கள் தம்மை இவ்விதமாக அழைத்தபோது அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. (மத். 26:63-64). தம்மைத் தேவனுடைய குமாரனாகவும் தேவனைத் தம்முடைய பிதாவாகவும் இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட போது அவர் தம்மைத் தேவன் என்று கூறுகிறார் என்றே யூதர்கள் விளங்கிக் கொண்டனர். “யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்று இயேசு கிறிஸ்துவின் மீது குற்றம் சாட்டினார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து நேரடியாக, தாம் தேவன் என்று அவர்களிடம் கூறியிருக்கவில்லை. மாறாக, தம்மைத் தேவனுடைய குமாரன் என்றே அவர்களிடம் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் யூதர்கள் இதன் மூலம் அவர் தம்மைத் தேவனாகக் காண்பிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டனர். 


இதனால் தான் இயேசு கிறிஸ்து “நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே, தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?“ எனறு கேட்டார். (யோவான் 10:33-36) தேவனுடைய குமாரன் எனும் வார்த்தையின் மூலம், தம்மை தேவன் என்று கூறியமை, யூதர்களுக்கு தேவதூஷணமாக இருந்தமையினால் அதற்காக நியாய்பபிரமாணச் சட்டத்தின்படின் கல்லெறிந்து கொல்வதன மூலமாக அவருக்கு மரண தண்டனை கொடுக்க அவர்கள் முற்படடனர். (58 “தேவனுடைய குமாரன்“ என்னும் விபரணம் இயேசு கிறிஸ்து தேவன் என்பதற்கான உறுதியான ஆதாரமாய் உள்ளது. (59)
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: யெகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்கள்

on Tue Jan 26, 2016 8:59 am

என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் (யோவான் 14:28)நூல்: கர்த்தரின் வார்த்தையில் கடினவரிகள்
(யோவான் சுவிஷேசத்திலுள்ள இயேசுகிறிஸ்துவின் கடின வரிகளுக்கான விளக்கங்கள்)
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி


(வேதபுரட்டர்கள் இயேசுவின் தெய்வீகத் தன்மையை மறைப்பதற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும். இயேசுவை பிதாவினை விட தாழ்வானவராக காட்டுவதற்கு இவ்வசனத்தை பாவிக்கின்றனர. இக்கட்டுரையில் ஆசிரியர் இத்தகைய கருத்து சரியானதுதான என ஆராய்ந்துள்ளார்.)

இயேசுக்கிறிஸ்துவின் போதனைகளில் சில வாக்கியங்கள் முழுமையாக விளங்கிக் கொள்வதற்குச் சிரமானவைகளாக இருப்பதனால், பலர் அவரை தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளனர். யோவான் எழுதிய சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தகைய கூற்றுக்களில் ஒன்று. அவரது தன்மையையும் தேவத்துவத்தையும் சர்வவல்லமையையும் அநேகர் சந்தேகிப்பதற்கும் மறுதலிப்பதற்கும் காரணமாயுள்ளது. ஏனென்றால் அவர் பிதாவாகிய தேவனைப் பற்றிக் குறிப்பிடும்போது யோவான் 14:28 இல் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என தெரிவித்துள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கும் அனைவரும் தங்களின் உபதேசத்திற்கு ஆதாரமாக உபயோகிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.(1) இயேசுக்கிறிஸ்துவே பிதா தம்மிலும் பெரியவர் என்று கூறியமையால் அவர் பிதாவைவிடத் தாழ்மையானவர் என்றும் பிதாவுக்குச் சம்மான வல்லமையும் தெய்வீகமும் அற்றவர் என்றும் போதிப்பதற்கு வேதப்புரட்டர்கள் இவ்வசனத்தை உபயோகித்து வருகின்றனர்.

இயேசுக்கிறிஸ்துவின் கூற்றுக்களை சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு அவை எச்சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டன என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இன்று பலகையான உபதேசக்குழப்பங்கள் கிறிஸ்தவத்திற்குள் புகுந்துள்ளதற்குப் பிரதான காரணம், கிறிஸ்தவர்கள் வேத வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது(2) அவை சொல்லப்பட்ட சந்தர்ப்பத்தைக் கருத்திற் கொள்ளாமல் அவற்றை வியாக்கியானம் செய்வதேயாகும். உண்மையில் இயேசுக்கிறிஸ்து மனிதராக வாழ்ந்த காலத்திலேயே “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்“ என்று கூறினார். பிதாவுக்குச் சம்மான நிலையில் பிதாவைப் போல தேவமகிமையுடன் இருந்த இயேசுக்கிறிஸ்து தமது பரலோக மகிமையைவிட்டு, மனிதராக தாழ்வான நிலைக்கு வந்தார். இதைப் பற்றி வேதாகமம் விளக்கும்போது பிலிப்பியர் 2:6-7 ல் அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொற்பிரயோகம் மூலமொழியில் “பற்றிப்பிடித்துக் கொண்டிராமல்“(3) என்னும் அர்த்தமுடையது. எனவே, இயேசுக்கிறிஸ்து தேவனுக்குச் சம்மாயிருக்கும் நிலையைப் பற்றி பிடித்துக் கொண்டிராமல், அதை விட்டுத் தாழ்வான நிலைக்குப் பூமிக்கு வந்துள்ளார்.

இயேசுக்கிறிஸ்து பிதாவைவிட தாழ்வான நிலைக்கு வநதாலும் அவர் தமது தேவத்துவத்தைத் துறந்து விட்டு வரவில்லை. என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். தேவனோடு சமமாக பரலோகத்தில் இருக்கும் நிலையையே அவர் விட்டு வந்துள்ளார் என்பதை நாம் மறக்கலாகாது. இயேசுக்கிறிஸ்து இவ்வுலக விட்டு மறுபடியுமாக பிதாவிடம் செல்லும்முன்பு அவரோடு பேசும்போது பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும் என்று யோவான் 17:5 இல் கூறியமை அவர் தமக்கிருந்த மகிமையையே பரலோகத்தில் விட்டு இவ்வுலகத்திற்கு வந்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. பிலிப்பியர் 2:6-7ல் “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்“ என்னும் வாக்கியத்தில் “ரூபம்“ என்பதற்கு மூலமொழியில உபயோகிக்கப்பட்டுள்ள “மோர்பே“ (Morphe) என்னும் கிரேக்கப்பதம் “உட்புறத் தன்மையை குறிக்கும் கிரேக்கப்பதமாகும்.(4) எனவே, இது இயேசுக்க்கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையையும் குணவியல்பையும் சுட்டிக் காட்டுகிறது.(5) இயேசுக்கிறிஸ்து இவற்றை விட்டு வந்ததாக வேதாகமம் கூறவில்லை. ஆதியிலிருந்தே தெய்வீக வார்த்தையாக இருந்த அவர் (யோவா. 1:1) மாம்சமாகியபோது, தெய்வீகத்தன்மையை இழந்து மாம்சமாக மாறிவிடவில்லை. யோவான் 1:14 இல் வார்த்தை மாம்சமாகி“ என்னும் வாக்கியத்தில் “ஆகி“ என்னும் பதம் மூலமொழியில் சிறப்பான அர்த்தம் உடையது. இது, “ஒன்றிலிருந்து இன்னுமொன்றாக மாறியதை அல்ல. மாறாக, முன்பு இருந்த நிலையோடு இன்னுமொரு புதிய நிலை சேர்க்கப்பட்டதையே குறிக்கின்றது.(6) அதாவது இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகிற்கு வந்தது தெய்வீகத் தன்மையைத் துறப்பதை அல்ல மானிடத் தன்மைகளை சேர்ப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது(7). எனவே, அவர் இவ்வுலகத்தில் மனிதராக வாழ்ந்த காலத்திலும் தேவனாகவே இருந்தார் இதனால்தான் ‘தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. (கொலோ 2:9 என்றும் “தேவனே மாமிசத்தில் வெளிப்பட்டார்’ (1 தீமோ 3:16) என்றும் வேதாகமம் அறியத்தருகிறது.

இயேசுக்கிறிஸ்து இவ்வுலகத்தில் வாழ்ந்த காலத்தில் முழுமையான தேவனாக இருந்தபோதிலும், பிதாவை விடத் தாழ்வான நிலையிலேயே இருந்தார். ஏனென்றால் பிதா பரலோகத்தில் மகிமை பொருந்தியவராய் இருந்தார். ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ, பூலோகத்தில் ஏழ்மை நிலையில் வாழ்ந்தார். உண்மையில், இத்தகைய நிலையைக் கருத்திற் கொண்டே இயேசுக்கிறிஸ்து என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என்று கூறினார். அதாவது “இயேசுக்கிறிஸ்து தாம் அச்சமயம் இருந்த நிலையையும் பிதாவின் நிலையையும் ஒப்பிட்டே இவ்வாறு கூறியுள்ளார்.( எனினும் அவர் எப்போதும் இவ்வாறு தாழ்த்தப்பட்ட நிலையிலேயே இருந்து விடவில்லை. உலக மாந்தருடைய பாவங்களைப் போக்குவதற்காக தம்மை பலியாக இவ்வுலகத்திற்கு வந்த அவர், பாவப் பலியாக சிலுவையில் மரித்த பின்னர், உயிரோடெழுந்து மறுபடியுமாகத் தாம் முன்பிருந்த உன்னத நிலைக்குச் சென்றுவிட்டார். அவர் எல்லாவற்றுக்கும் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டதை பிலி 2:9-11 அறியத்தருகிறது.(9). உண்மையில் தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தபோது அவர் கூறியவை உயர்த்தப்பட்ட நிலைக்கு பொருந்தாது. எனவே, அவர் தாழ்வான நிலையில் இருந்தபோது கூறியவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் பிதாவைவிடத் தாழ்வானவர் என தர்கிப்பது தவறாகும். உண்மையில், இயேசுக்கிறிஸ்துவின் இக்கூற்று “அவருடைய தற்காலிக நிலைப் பற்றியதேயன்றி, அவருடைய தன்மையைப் பற்றியது அல்ல(10) என்பதை நாம் மறக்கலாகாது.

இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலும் யோவான் 10:30 இல் குறிப்பிட்டுள்ளபடி அவரும் பிதாவும் ஒரே தன்மையுடையவர்களாகவே இருந்தனர். எனவே இயேசுக்கிறிஸ்து பிதாவை விடத் தாழ்வானவர் அல்ல. யோவான் 14:28 இல தாம் பிதாவைவிடத் தாழ்மையானத் தன்மையுடையவர் என்று இயேசுக்கிறிஸ்து குறிப்பிடவில்லை என்பதை மூலமொழியில் உபயோகித்துள்ள பதம் தெளிவாகக் காட்டுகின்றது. கிரேக்க மொழியில் “பெரியது“ (meizon) என்பதையும் “சிறந்தது“ (Kreitton) என்பதையும் வேறுபடுத்திக் காட்ட இரு வித்தியாசமான சொற்கள் உள்ளன. (11) இயேசுக்கிறிஸ்து சிறந்தது “ (Kreitton) என்று அர்த்தம் தரும் பதத்தை உபயோகித்திருப்பாரேயானால் அவரைவிட பிதா உயர்வானவர் என்றே கருத வேண்டும். ஆனால் இயேசுக்கிறிஸ்து உபயோகித்த “பெரியவர்“ என்னும் பதம் தேவத் தன்மையின் மேன்மையினைச் சுட்டிக் காட்டும் வார்த்தை அல்ல. பிதா பரலோகத்திலும் தாம் பூலோகத்திலும் அச்சமயம் இருந்தமையினாலேயே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பதனால் அவர் பிதாவைவிடத் தாழ்வானவர் என்று எவ்விதத்திலும் கூறமுடியாது.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: யெகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்கள்

on Tue Jan 26, 2016 9:01 am

நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? (மத்தேயு 19:17)

இயேசுக்கிறிஸ்து தேவனை விடத் தாழ்வானவர் என்பதற்கு யெகோவா சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னுமொரு வேதவசனம், “தம்மை நல்ல போதகரே“ என்று அழைத்தவனுக்கு இயேசுக்கிறிஸ்து கொடுத்த பதிலாகும் அதற்கு அவர்: “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே (மத்தேயு 19:17, மாற்கு 10:18) என்று இயேசுக்கிறிஸ்து கூறியமையால் அவர் நல்லவர் அல்ல என்றும், இயேசுக்கிறிஸ்துவின் கூற்றின்படி தேவன் மட்டுமே நல்லவராயிருப்பதால், இயேசுக்கிறிஸ்து தேவன் அல்ல. அவர் தேவனை விடத் தாழ்வானவர் என்று யெகோவா சாட்சிகள் கூறுகின்றனர். (34) எனினும்இயேசுக்கிறிஸ்துவின் கூற்று இத்தகைய அர்த்தம் கொண்டதல்ல. தாம் நல்லவர் இல்லை என்று அவர் இவ்வசனத்தில் கூறவில்லை. மாறாக தேவன் மட்டுமே நல்லவர் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். 

இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளில் ஒரு கேள்வியும் இருப்பதை நாம் அவதானிக்க வேண்டும். தன்னை நல்ல போதகரே என்று தம்மை அழைத்தவனிடம் (மத். 19.16) “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?“ என்று கேட்கிறார். அதாவது, நீ என்னை இவ்வாறு   அழைப்பதற்கான காரணம் யாது என்று அவனிடம் கேட்கிறார். ஏனென்றால்“அக்காலத்தில் யூதர்கள் தங்கள் மதத்தலைவர்களை இவ்வாறு “நல்ல போதகரே“ என்று அழைப்பதில்லை(35) தேவனை மட்டுமே இவ்வாறு அழைக்க முடியும் என்பதே அக்கா யூதரது கருத்தாயிருந்தது. எனவே, அவன் தேவனுக்கு மட்டுமே உரிய தன்மையை அதாவது நல்லவர் என்னும் தன்மையை இயேசுக்கி்றிஸ்துவுக்கு உபயோகித்தமையால் நீ என்னை இவ்வாறு நல்லவன் என்று சொல்வதற்கான காரணம் என்ன? தேவனை அழைப்பதைப் போல நீ என்னை ஏன் அழைக்கிறாய்? என்று அவனி்டம் கேட்டார். இதனால்தான் தேவன் மட்டுமே நல்லவர் என்பதையும் இயேசுக்கிறிஸ்து அவனுக்குச் சுட்டிக் காட்டியுள்ளார். “அவன தம்மை நல்லவன் என்று அழைக்க வேண்டுமானால், தாம் தேவன் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு கூறியுள்ளார் (36)

இயேசுக்கி்றிஸ்து வார்த்தைகள் “நான் தேவனாக இல்லாதுவிட்டால் நீ என்னை இவ்வாறு அழைக்க வேண்டாம். ஏனென்றால் தேவன் மட்டுமே நல்லவர் எனும் அர்த்தமுடையது(37) எனவே, “இவ்வசனம் இயேசுக்கி்றிஸ்து தேவத்துவத்தை மறுதலிக்கவில்லை. மாறாக அதை மறைமுகமாக அறிய தருகிறது (38)

(இவ்வாக்கமானது சகோ.வசந்தகுமார் எழுதிய யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதி்ல்கள் எனும் நூலிலிருநது பெறப்பட்டதாகும் வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: யெகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்கள்

on Tue Jan 26, 2016 9:02 am

கிறிஸ்துவிற்கு தேவன் தலைவராயிருக்கிறார் (I கொரி. 11:3)நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

(வேதப்புரட்டர்கள் பிதாவை விட இயேசு தாழ்வானவர் என்பதை நிரூபிப்பதற்காக உபயோகிக்கும் வசனங்களில் ஒன்று I கொரி. 11:3 ஆகும். கொரிந்து நிருபம் இயேசுக்கிறிஸ்து பரலோகத்திற்குச் சென்ற பின்னர் எழுதப்பட்டுள்ளமையால் தங்களின் போதனைக்கு ஏற்ற விதமாக துர்உபதேசங்களை பரப்பி வருகின்றனர். அப். பவுல் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஆசிரியர் இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்)

இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல மாறாக அவர் மகிமையடைந்து பரலோகத்திற்கு சென்ற பின்பும் தேவனைவிடத் தாழ்வானவராகவே இருக்கிறார் என்பதே யெகோவா சாட்சிகளின் போதனையாகும். இதை நிரூபிப்பதற்காக இவர்கள் சுட்டிக் காட்டும் வேதவசனம் I கொரி. 11:3 ஆகும் கொரிந்து நிருபம் இயேசுக்கிறிஸ்து பரலோகத்திற்குச் சென்ற பின்னர் எழுதப்பட்டுள்ளமையால், இந்நிருபத்தில் இயேசுகிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, அவர் மகிமையடைந்த நிலையிலும் தேவனைவிட தாழ்வானவராக இருப்பதற்கான ஆதாரமாய் இருப்பதாக யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர்(49). “ இயேசுக்கிறிஸ்து எப்போதும் தாழ்வானவராகவே இருப்பதாகவே வேதம் கூறுகிறது.(50) என்பதே இவர்களது கருத்தாகும். எனினும் நாம் ஏற்கனவே பார்த்தபடி இயேசுக்கிறிஸ்து அவர் பிதாவின் வலது பரிசத்தில் வீற்றிருப்பதாகவே வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர் தேவனுக்கு சமமானவராகவே இருக்கிறார் என்பதை மறுக்க முடியாதுள்ளது. 
I கொரி. 11:3 இயேசுக்கிறிஸ்து தேவனைவிட தாழ்வானவர் என்று கூறவில்லை. இவ்வசனத்தில் “கிறிஸ்துவுக்குத் தேவன் தலைவராயிருக்கிறார்“ என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும். இது தேவனுக்கும் இயேசுக்கிறிஸ்துவிற்கும் இடையிலான உயர்வுதாழ்வு பற்றிய விபரணம் அல்ல. ஏனென்றால் இவ்வசனம் இடம்பெறும் பகுதியில் தேவனினதும் இயேசுக்கிறிஸ்துவினதும் செயற்பாடுகள் பற்றியல்ல. மாறாக சபையில் ஆணும் பெண்ணும் நடந்துகொள்ள வேண்டிய முறைபற்றியே விளக்கப்பட்டுள்ளது. இதனால் “இயேசுக்கிறிஸ்துவையும் தேவனையும் பற்றிய குறிப்பு இதற்கான உதாரணமாகவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (52) 3ம் வசனத்தில் “தலை“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் (kephale) (53) உருவக விபரணமாய் இருக்கும்போது “அதிகாரம்“ அல்லது “ஆரம்பம்“  எனும் இரு அர்த்தங்களைத் தரும்.  எனவே தலையாயிருப்பவர் அதிகாரமுடையவராக அல்லது மற்றவரது ஆரம்பமாக இருப்பதாக இவ்வசனம் கூறுகிறது. (55) எனினும் இவ்வசனம் இடம் பெறும் பகுதியில் வழிபாட்டின் போது ஆணும் பெண்ணும் செயற்பட வேண்டிய விதம் பற்றியே விளக்கப்பட்டுள்ளமையால் அதிகாரம் எனும் அர்த்தமே பொருத்தமுடையதாக உள்ளது(56) உண்மையில். இயேசுக்கிறிஸ்து தேவனின் அதிகாரத்துக்குக் கீழாக செயற்படுவது போல சபையில் பெண்கள் ஆணினுடைய தலைமைத்துவத்திற்கு கீழாகச் செயற்பட வேண்டும் என்பதையே இப்பகுதியில் அப்..பவுல் விளக்கியுள்ளார். 
சபையில் ஆணினுடைய தலைமையின் கீழாகச் செயற்படும் பெண் ஆணைவிடத் தாழ்வானவள் என்று வேதம் கூறவில்லை. ஆணும் பெண்ணும் சம்மானவர்கள் என்பது வேத்த்தின் தெளிவான போதனையாகும். ஆண், பெண் இருவருமே தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதோடு (ஆதி. 1:26-28) கிறிஸ்துவுக்குள் இருவரும் ஒன்றாயிருக்கிறார்கள் (கலா. 3:28) எனவே, பெண் பெண்ணுக்குக் கீழாக இருந்து செயற்பட்டாலும் அவள் ஆணுக்குச் சம்மானவளகவே இருக்கிறாள். அதேபோலவே. இயேசுக்கிறிஸ்து தேவனுக்குக் கீழாக இருந்து செயற்பட்டாலும் தேவனுக்குச் சம்மானவராகவே இருக்கிறார். “இயேசுக்கிறிஸ்து தேவன் தலையாயிருப்பது அவரது தேவத்துவத்திலும் தேவதன்மையிலும் அல்ல. மாறாக அவரது செயல்களினாலாகும். (57). இது செயற்பாட்டு ரீதியிலான தலைமையே தவிர மேன்மையான தன்மை அல்ல“(58). நாம் ஏற்கனவே பார்த்தபடி இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் இருந்த காலத்திலும் அவரும் பிதாவும் ஒரே தன்மையுடையவர்களாகவே இருந்தனர். அப்படியிருந்தும் இயேசுக்கிறிஸ்து தம்மை பிதாவிற்குக் கீழ்படுத்திச் செயற்பட்டார். இதனடிப்படையிலேயெ இயேசுக்கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார். இது தேவனை விடத் தாழ்வானவர் என்பதற்கான ஆதாரம் அல்ல. 

Footnote & Reference 
(49) R. Rhodes, Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses, p.140
(50) Anonymous, Should You Believe in the Trinity? p. 20
(51) என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் (யோவான் 14:28) எனும் கட்டுரையை பார்க்கவும்
(52) ,இதனாலேயே 3ம் வசனத்தின் இறுதிப்பகுதியில் தேவனையும் இயேசுக்கிறிஸ்துவையும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (C.Blomberg 1 Corinthians: The NIV Application Commentary p 209)
(53) கெஃபாலே (keohale) எனும் கிரேக்க பதமாகும்.
(54) J. Fitzmyer, ‘Another Look at ;Kephale in 1 Corinthians: 11:3 pp503-511)
(55) இவ்வசனம் சபையில் பெண்களின் நிலை மற்றும் அவர்களது ஊழியப்பணிகள் பற்றி நிர்ணயிக்கும் வசனங்களில் ஒன்றாக இருப்பதனால், வேத ஆராய்ச்சியாளர்கள் தலை என்ற பதத்தை அப்.பவுல் என்ன அர்த்தத்தில் உபயோகித்துள்ளார் என்பது பற்றி கருத்து முரண்பாடுடையவர்களாய் இருக்கின்றனர்.பெண்கள் சபையின் ஊழியப் பணிகளில் ஈடுபடலாம். அவர்களும் சபையின் தலைமைத்துவ பதவிகளில் எனும் கருத்துடைய தேவஆராய்ச்சியாளர்கள் இவ்வசனத்தில் தலை எனும் பதம் அதிகாரம் எனும் அர்த்த்த்தில் அல்ல. மாறாக ஆரம்பம் எனும் அர்த்தத்திலேயே உள்ளது என்று கூறுகின்றனர். இவர்களது கருத்தின்படி பெண்ணுக்கு ஆண் தலையாயிருக்கிறான் எனும்போது  பெண்ணுக்கு ஆண் ஆரம்பமாயிருக்கிறான். அதாவது ஆணிலிருந்து பெண் உருவாக்கப்பட்டுள்ளாள் என்றே அப்.பவுல் குறிப்பிட்டுள்ளார். (S.Bedale, The Meaning of ‘Kephale’ in the Pauline Epistles’ pp 211-215; G.D. Fee, The First Epistle to the Corinthians: New International Commentary on the New Testament pp 501-505) ஆனால் இவ்வாதத்தின்படி கிறிஸ்துவுக்கு தேவன் தலைவராயிருக்கிறார் என்று கூறும்போது “இயேசுக்கிறிஸ்து தேவனிலிருந்து வந்தவர். அவர் தேவனால் உருவாக்கப்பட்டவர். எனும பிழையான அர்த்தத்தையே கொடுக்கும் இதனால் இவ்வசனத்தில் தலை என்பதை ஆரம்பம் என்று கருதுபவர்கள் இயேசுக்க்கிறிஸ்துவின் மானிடப்பிறப்பை பற்றிய விபரமாக இதை விளக்குகின்றனர் (Ibid, p.505) ஆனால் இவ்வசனம் இடம்பெறும் பகுதி சபையின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆணினதும் பெண்ணினதும் நிலைமை பற்றிய விபரணமாருப்பதால் அதாவது சபையின் செயறபாடு ஆண் பெண்ணுக்கு மேலானவனாக இருப்பது பற்றிய விளக்கமாயிருப்பதால் இவ்வசனத்தில் தலை என்பது அதிகாரம் என்னும் அர்த்தத்திலேயே  உபயோகிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. (C, Blomberg, I Corinthians : The NIV Application Commentary pp 208-209)

(56) சபை வாழ்வில் ஆணிணுடைய தலைமைத்துவத்தின் கீழ் பெண் இருப்பதனால் அதை வெளிப்படையாக் காட்டும் அடையாளமாகப் பெண்கள் தங்கள் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். என்று இப்பகுதியில் விளக்கியுள்ளார். (1 கொரி. 11:3-15) எனினும் இவ்வடைளம் கொரிந்து பிரதேசக் கலாசாரத்தில் உயர்ந்தவருக்கு முன்பாகத் தாழ்ந்தவர் இருப்பதைக் காட்டுவதாக இருந்துபோல் ஏனைய பிரதேசங்களில் இராதமையால் சகல பிரதேசங்களிலும் சபைகளில் கைக்கொள்ள வேண்டிய முறை இதுவல்ல என்பதையும் 16ம் வசனத்தில் பவுல் சுட்டிக் காட்டியுள்ளார். 

(57) G.B. Wilson I Corinthians : A Digest of Reformed Comment , p.115
(58) R.M. Bowman, Why You Should Believe in the Trinity, p81

 
Footnote & Reference குறித்த எனது சுருக்க விளக்கங்கள்
இக்கட்டுரையில் இலக்கமிடப்பட்டு உ-ம் (49) R. Rhodes, Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses, p.140 என இருப்பவை Citation ஆகும் 
ஆய்வுக்கட்Lரைகள் Citation உடன் எழுதப்படுவது வழமையாகும். குறிப்பிட்ட துறையில் ஆய்வு செய்யப்பட்ட விடயங்களை மீண்டுமாக ஆய்வுக்கு உட்படுத்தாமல் அதனை மேற்கோளாக பயன்படுத்த இம்முறை உபயோகிக்கப்படுகிறது. அதிக Citation உடன் எழுதப்படுபவை அதிக நம்பகத்தன்மை கொண்டவையாக விளங்கும். ஒரு ஆசிரியர் தான் அக்கருத்தை எங்கிருந்து பெற்றார் என துல்லியமாக இவ்வண்ணக்கரு சுட்டிக்காட்டும். ஆனால் Reference பாவித்த முழு நூல்களையும குறிப்பிடுவதால் குறிப்பாக எந்நூலிலிருந்து இக்கருத்தினை பெற்றார் என்பதை துல்லியமாக காட்டுவதில்லை. ஆகவே மேற்குறிப்பிட்டபடி (49) கருத்தை நிருபிக்க R. Rhodes ஆசிரியர் எழுதிய Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses, நூலில் பக்கம் 140 இலிருந்து அக்கருத்து பெறப்பட்டுள்ளது. 
Ibid , - used in formal writing to refer to a book or article that has already been mentioned
ஒரு நூலை மேற்கோளாக காட்டியபின் அதை தொடர்ந்து இன்னுமொரு முறை அதே நூல் மேற்கோள் காட்ட வேண்டிஏற்படின் அதன்போது இம்முறை உபயோகிக்கப்படுகிறது. இதன்போது முழு விபரத்தையும் கொடுக்காமல் Ibid என இட்டு பக்க இலக்கம் மட்டும் குறிப்பிடப்படும். 
Ibid, p.505 என குறிப்பிடப்படுவது The First Epistle to the Corinthians: New International Commentary on the New Testament என்ற நுலின் 505 ஆம் பக்கத்தையாகும். 
Anonymous, ஆசிரியரின் பெயர் இன்னதென்று குறிப்பிடப்பிடாதுவிட்டால் ஆசிரியர் பெயருக்குரிய இடத்தில் Anonymous என இடப்படும். யெகோவா சாட்சிகளின் எந்த வெளியீடுகளிலும் ஆசியர்களின் பெயர்கள் இடம்பெறுவதில்லை (1942 இலிருந்து Nathan Homer Knoor காலத்திலிருந்து)  
Footnote 55
கட்டுரைக்கு மேலதிகமாக எழுதப்படும் விளக்கங்களாகும். இது அக்கட்டுரையை மேலுமாக ஆய்வு செய்வதற்காகவோ அன்றேல் மாற்றுக்கருத்தை சொல்லுவதற்காகவோ உபயோகிக்கப்படலாம். அநேகமாக ஆய்வு செய்வற்குரிய குறிப்புகள் இப்பகுதியில் வழங்கப்படும். ஆய்வு செய்து படிக்கும் வாசகர்களை உற்சாகப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. 
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: யெகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்கள்

on Tue Jan 26, 2016 9:03 am

கீழ்படுத்தினவருக்குக் கீழ்பட்டிருப்பார் (1 கொரிந்தியர் 15:28)நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்

வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

இயேசுக்கிறிஸ்து தேவனைவிடத் தாழ்வானவர் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி காண்பிக்கும் வசனமாக யெகோவாவின் சாட்சிகளால் சுட்டிக்காட்டப்படுவது 1 கொரிந்தியர் 15:28 ஆகும். சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.


என்று வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுக்கிறிஸ்து சர்வல்லமையுள்ள தேவனாக இருந்தால் இவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க மாட்டார் என்று கூறும் யெகோவாவின் சாட்சிகள், அவர் யெகோவா தேவனுக்கு முழுமையாக் கீழ்பட்டவராக இருப்பதாகத் தர்க்கிக்கின்றனர். (60) எனினும் இவ்வசனமும் நாம் இதற்கு முன்னர் ஆராய்ந்த “கிறிஸ்துவுக்கு தேவன் தலைவராயிருக்கிறார்“ எனு வசனத்தைப் போலவே இயேசுக்கிறிஸ்துவினுடைய செயலை அடிப்படையாக் கொண்ட தாழ்வான நிலையாக உள்ளதே தவிர, அவரது தேவத்தன்மையின் தாழ்வைப் பற்றிய விபரணம் அல்ல. மனிதரை மீட்பதற்காகத் தம்மையே தாழ்த்தி செயற்பட்ட இயேசுக்கிறிஸ்து தேவனுடைய திட்டத்திற்குத் தம்மைக் கீழ்படுத்தினார். “இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் எவ்வாறு தம்மைப் பிதாவுக்குக் கீழ்படுத்தி செயற்பட்டாரோ அதவிதமாக உலகின் முடிவிலும் தேவனுக்குக் கீழ்பட்டு செயல்படுவார் என்பதையே இவ்வசனம் அறியத் தருகிறது. (61). உண்மையில் மகிமையடைந்த நிலையிலும் இயேசுக்கிறிஸ்து தம்மைத் தாழ்த்திச் செயற்படுபவராய் இருக்கின்றார்(62)


இயேசுக்கிறிஸ்து தாழ்வானவர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் வசனங்கள் அனைத்தும், மனிதரை மீட்கும் அவரது செயல்களோடு சம்பந்தப்பட்டதாய் இருப்பதை நாம் அவதானிக்கலாம். மானிட மீட்பைப் பற்றிய தேவ திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இயேசுக்கிறிஸ்து. மனிதரை மீட்டு இரட்சிப்பதற்காகத் தம்மைத் தாழ்த்தி செயல்பட்டார். எனினும் அவர் தம்மைத் தாழ்த்திச் செயற்பட்ட சந்தர்ப்பங்களிலும் முழுமையான தேவத்தன்மை உடையவராகவே இருந்தார். பிலிப்பியர் 2:6-7 இயேசுக்கிறிஸ்துவின் தற்காலிகமான தாழ்த்தப்பட்ட மானிட நிலையை அறியத் தருகையில், கொலோசேயர் 2:9 அவர் எப்போதும் முழுமையான தேவத்தன்மையை உடையராகவே இருந்தார் எனபதைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே அவர் தம்மைத் தாழ்த்தியபோது கூறிய விடயங்களையும். அத்தாழ்மையின் நிலையைக் குறிக்கும் வசனங்களையும் ஆதாரமாக் கொண்டு, அவர் பிதாவாகிய தேவனைவிடத் தாழ்வானவர் என்றோ, தேவத் தன்மையற்றவர் என்றோ கருவது தவறாகும்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: யெகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்கள்

on Tue Jan 26, 2016 9:04 am

தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர் (வெளிப்படுத்தல் 3:14)(இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கு வேதப்புரட்டர்களால் சுட்டிக்காட்டப்படும் வசனங்களில் இதுவும் ஒன்று. இவ்வசனம் நமக்குப் போதிப்பது என்ன? மூலமொழியில் இதற்கு எவ்வித அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன )


வெளிப்படுத்தல் 3:14 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாயுமிருக்கிறவர்“ எனும் இயேசுக்கிறிஸ்துவின் கூற்றை“தேவனுடைய சிருஷ்டிகளின் ஆரம்பமாயிருக்கிறவர்“ என்று வியாக்கியானம் பண்ணும் யெகோவாவின் சாட்சிகள். இவ்வாக்கியம், இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கான ஆதாரமாய் இருப்பதாகக் தர்க்கிக்கின்றனர்(31)இயேசுக்கிறிஸ்து தேவனால் முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதனாலேயே, அவர் தேவனுடைய சிருஷ்டிகளின் ஆரம்பமாயிருப்பதாக இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணம் என்பது யெகோவா சாட்சியினரின் தர்க்கமாகும். (32) இவ்வாக்கியத்தில் “ஆதி“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் (arche) (33)“ஆரம்பிப்பவர்“ என்றல்ல மாறாக “ஆரம்பம்“ என்று மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகிறனர்(34) அதாவது இயேசுக்கிறிஸ்து “முதலாவது சிருஷ்டிப்பாக“ இருக்கிறார் என்பதே யெகோவா சாட்சிகள் இவ்வசனத்திற்கு கொடுத்துள்ள விளக்கமாகும். 

இவ்வசனத்தில் “ஆதி“ எனறு மொழிபெயர்க்கப்பட்டள்ள பதத்தை “ஆரம்பம்“ என்றும் மொழிபெயர்க்கலாம் என்பது உண்மையாயினும் (35) இதற்கு “ஆரம்பிப்பவர்“  “ஆரம்ப ஸ்தானம்“ “தோற்றுவாய்“ “முதல் காரணம்“(36) என பல அர்த்தங்களும் உள்ளன.(37)வெளிப்படுத்தல் 3:14 இல் இப்பதம் “முதல்காரணம்“ எனும் அர்தத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. (38) எனவே இப்பதம் சிருஷ்டிப்புக்குக் காரணர் யார் என்பதையே அறியத்தருகிறது. (39) உண்மையில், இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிப்பின் காரணராய். சிருஷ்டிப்பை ஆரம்பித்தவராய் இருப்பதையே இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது (40) கி.பி 4ம் நூற்றாண்டிலிருந்து இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலி்த்து அவரை சிருஷ்டிக்கப்பட்டவராகக் கருதும் வேதப்புரட்டர்கள் இப்பதத்தை “ஆரம்பம்“ என்று மொழிபெயர்த்து இயேசுக்கிறிஸ்துவின் ஆரம்பத்தைப் பற்றியே இவ்வசனம் கூறுகிறது என்று வாதிட்டு வந்துள்ளபோதிலும(41) இப்பதம் இவ்வசனத்திற்குப் பொருத்தமற்றதாகவே உள்ளது. ஏனென்றால் வெளிப்படுத்தல் புத்தகத்தின் ஏனைய வசனங்களில்இயேசுக்கிறிஸ்து நித்தியமானவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (42) எனவே இதை முரண்படுத்தும் விதத்தில் வெளிப்படுத்தல் 3:14 இல் அவர் நித்தியமற்றவர், சிருஷ்டிக்கப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது. மேலும்வெளிப்படுத்தல் 5:13 இல் தேவனும் இயேசுக்கிறிஸ்துவும் வழிபாட்டுக்கு உரியவர்களாகவும் (43) ஏனைய சிருஷ்டிகள் அனைத்தும் இவர்களை வழிபடுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதும் இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றது. (44) அத்தோடு, வெளிப்படுத்தல் 19:10 இல் சிருஷ்டிக்கபட்டவைகளை வழிபடுவது தடைசெய்யப்பட்டிருப்பதும் வெளிப்படுத்தல் 5:13 இல் சிருஷ்டிக்கப்பட்டவைகள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதும், அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல வழிபாட்டுக்கு உரிய தெய்வம் என்பதற்கான உறுதியான ஆதாரமாய் உள்ளது. 

(இவ்வாக்கமானது சகோ. வசந்தகுமார் எழுதிய யொகோவாசின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி)

Footnote and References
(31) Let God be True, p 200


(32) Anonymous, Should You Believe in the Trinity p. 14


(33) மூலமொழியில் “அர்க்கே“ (arche) எனும் கிரேக்க பதம் 


(34) Anonymous, Should You Believe in the Trinity p. 14


(35) “அர்க்கே“ (arche) எனும் கிரேக்க பதத்தை செயற்பாட்டுவினையில் (passive voice) மொழிபெயர்த்தாலே இத்தகைய அர்த்தம் வரும்


(36) “அர்க்கே“ (arche) எனும் பதம் செய்வினையில் (active voice) இத்தகைய அர்த்தங்களைக் கொண்டுள்ளது.


(37) S. Zodhiates, The Complete Word Study Dictionay, P 260


(38) W.F. Arndt & F.W. Gingrich, A Greek-English Lexicon of the New Testament and other Early Literature, p112


(39) S. Zodhiates, The Complete Word Study Dictionay, P 261


(40) “அர்க்கே“ (arche) எனும் கிரேக்க பதத்திலிருந்தே “ஆர்க்கிடெக்“ (architect) அதாவது “கட்டிட கலைஞர்“ எனும் பதம் உருவாயுள்ளது. இயேசுக்கிறிஸ்து சகலவற்றையும் சிருஷ்டித்த கலைஞராயிருப்பதையே இதுவும் சுட்டிக் காட்டுகிறது, (யோவான். 1:3, கொலோ. 1:16, எபி. 1:2) 


(41) கி.பி. 4ம் நூற்றாண்டில் ஏரியசும் அதன் பின்னர் அவரைப் பின்பிற்றியவர்களும் இவ்விதமாகவே வசனத்தை வியாக்கியானம் செய்தனர். 


(42) வெளிப்படுத்தல் 1:18 இல் தாம் “சதாகாலங்களிலும் உயிரோடிருப்பதாக“ இயேசுக்கிறிஸ்து குறிப்பிட்டுள்ளார். அவர் எப்போதுமே இருப்பவர் என்பதே இவ்வாக்கியத்தின் அர்த்தமாகும் வெளிப்படுத்தல் 1:17 இலும் 22:13 இலும் “அல்பாவும் ஒமேகாவும்“ (கிரேக்க அரிச்சுவடியில் முதலும் கடைசியுமான எழுத்துக்கள்) எனும் விபரணத்து்டன் சேர்த்து இயேசுக்கிறிஸ்து  “ஆதியும் அந்தமுமாகவும்“இ “முந்தினவரும் பிந்தினவருமாகவும்“ இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பது இயேசுக்கிறிஸ்து நித்தியமானவர் என்பதையே அறியத் தருகிறது. (R.L. Thomas, Revelation 1-7 : An Exegetical Commentary, p.111) பழைய ஏற்பாட்டில் தேவன் நித்தியமானவர் என்பதைக் குறிக்கும் விவரணமே வெளிப்படுத்தலில் இயேசு கிறிஸ்துவுக்கு உபயோகிக்கப்பட்டுள்ளது.


(43) யெகோவா சாட்சிகள் இதையும் மறுதலித்து, இயேசுக்கிறிஸ்து மரியாதைக்குரியவராய் இருப்பதாகவும், தேவனு வழிபாட்டுக்குரியவராக இருப்பதாகவும் கூறுகின்றனர். 


(44)  வெளிப்படுத்தல் 5:13 இல் அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள்யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.“ என்று யோவான் தான் கண்ட தரிசனத்தை எழுதியுள்ளார். இவ்வசனத்தில் தேவனும் இயேசுகிறிஸ்துவும் சமமான நிலையில் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இருவரையும் சகல சிருஷ்டிகளும் வழிபடுகின்றன. எனவே இவர்களிருவரும் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் அல்லர் என்பது தெளிவாகின்றத. இவ்வசனத்தில் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பவர் தேவன் என்பதையும் ஆட்டுக்குட்டியானவர் இயேசுகிறிஸ்து என்பதையும் புத்தக விடயங்கள் அறியத் தருகின்றன. 
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: யெகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்கள்

on Tue Jan 26, 2016 9:05 am

சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் (கொலோசெயர் 1.15)


நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்

ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்

வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

(இயேசு தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதை நிரூபிப்பதற்கு வேதப்புரட்டர்கள் அதிகமாக பாவிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று.   கொலே 1.15 தொடரந்து வரும் வசனங்கள் இதன் அர்த்தத்தை சரியாக எமக்கு விளக்குகின்றது. முந்தினபேறானவர்  ஏனைய வேதவசங்களில் எவ்விதம் கையாளப்பட்டுள்ளது என்பதையும் ஆசிரியர்  விளக்குகிறார்)


இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிகர் என்பதற்கு யெகோவா சாட்சிகள் சுட்டிக் காட்டும் பிரதான வேதவசனம் கொலோ. 1.15 ஆகும். இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து “சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யெகோவா சாட்சிகள் இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு “சகலமும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னர் சிருஷ்டிக்கப்பட்டவர்“ என்று கூறுகின்றனர்(12). இதில “முந்தினபேறுமானவர்“ என்னும் வார்த்தை “முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர்“ என்னும் அர்த்தமுடையது என்பதே இவர்களது தர்க்கமாகும்(13). இதனால், இயேசுக்கிறிஸ்து “யெகோவா குடும்பத்தின் மூத்தபிள்ளை(14) என்று இவர்கள் கூறுகின்றனர். ஆங்கில வேதாகமத்தில் firstborn என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும் இவர்களது தர்க்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. எனினும் மூலமொழியில் இப்பதம் (Prototokos) “காலத்தில் முந்தினவர்“ என்றும் “தரத்தால் உயர்ந்தவர்“ என்னும் இரு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. இயேசுகிறிஸ்து முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர் என்று போதிப்பவர்கள் (16) “காலத்தால் முந்தினவர்“ என்னும் அர்த்தத்திலேயே இப்பதத்தை விளக்குகின்றனர். ஆனால் கொலோசெயர் 1.15 ஐத் தொடர்ந்து வரும் வசனங்களைக் கருத்திற் கொள்ளும்போது இயேசுக்கிறிஸ்து “காலத்தால் முந்தியவர்“ எனும் அர்த்தம் இவ்வசனத்திற்குப் பொருத்தமற்றது என்பதை அறிந்திடலாம். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்து “சபைக்குத் தலைவராகவும் “எல்லாவற்றிலும் முதல்வராகவும்“ இருப்பதாக அவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதால் (கொலோ. 1.18) “சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்“ எனும் சொற்பிரயோகம் இயேசுக்கிறிஸ்து “சிருஷ்டிக்கப்பட்ட சகலவற்றுக்கும் மேலானவராக இருக்கிறார்“ எனும் அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரமாய் உள்ளது(18) மேலும், சகலமும் இயேசுக்கிறிஸ்துவினால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்துவரும் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமையால், சிருஷ்டிக்கராகிய அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல என்பது தெளிவாகின்றது(19) உண்மையில் இயேசுக்கிறிஸ்து “முதற்தரமானவர்“ என்பதையே கொலோசெயர் 1:15 அறியத் தருகிறது. (20)

யெகோவாவின் சாட்சிகள் தங்களது உபதேசத்தை நிரூபிப்பதற்காக  கொலோசெயர் 1:15  தொடர்ந்து வரும் வசனங்களில் “சகல“ எனும் பதத்திற்கு முன் ஏனைய (Other) என்னும் பதத்தினை புகுத்தியுள்ளனர். இதன்படி இவ்வசனங்கள் “அவருக்குள் (ஏனைய)சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான (ஏனைய)சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், (ஏனைய)சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் (ஏனைய) எல்லாவற்றிற்கும் முந்தினவர், (ஏனைய)எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (21) இயேசுக்கிறிஸ்துவைத் தவிர ஏனையவை அனைத்தும் அவரால் சிருஷ்ட்டிக்கப்பட்டவை என்றும், இயேசுக்கிறிஸ்துவோ தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். ஆனால். ஒரு உபதேசத்தை நிரூபிப்பதற்காக இவ்வாறு வேதவசனங்களை மாற்றுவது முழுமையான வேதபுரட்டாகும். “ஏனைய“ என்னும் பதம் மூலமொழியில் இல்லாதபோதிலும், மூலமொழியின் சரியான அர்த்தத்தை தருவதற்காக இப்பதத்தை தாங்கள் சேர்த்துள்ளதாக இவர்கள் கூறினாலும்(22) இவர்கள் மூலமொழியின் சரியான அர்த்தத்தைத் தருவதற்குப் பதிலாக, தங்களது உபதேசத்தினையே வேதத்திற்குள் புகுத்தியுள்ளனர். உண்மையில் “இயேசுவை சிருஷ்டிக்கப்பட்டவராகக் காண்பிப்பதற்காகவே மூலமொழியில் இல்லாத இப்பதம் இவ்வசனத்தில் புகுத்தப்பட்டுள்ளது. (23) இதன் மூலம் “சிருஷ்டிகராகிய இயேசுக்கிறிஸ்துவை இவர்கள் சிருஷ்டிக்கப்பட்டவராக மாற்றியுள்ளனர். (24)

யெகோவாவின் சாட்சிகள் தங்களது தர்க்கத்திற்கு ஆதாரமாய் பழைய ஏற்பாட்டில் இப்பதம் உபயோகிக்கப்பட்டுள்ள பகுதிகளையும் சுட்டிக் காட்டுவது வழமை. எனினும் பழைய ஏற்பாட்டின் கிரேக்கமொழி பெயர்ப்பிலும், இப்பதமானது “முன்னுரிமையையும் உயர்தரத்தையும் குறிக்கும் விதத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது(25) ஆனால் பழைய ஏற்பாட்டில் “பார்வோனின் முதற்பேறானவன்“ பார்வோனின் முதற்பிள்ளையாக இருப்பதனால் இயேசுக்கிறிஸ்து முதற்பேறானவர் என்று கூறும்போது, அவர் முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர்“ அவர் “தேவனுடைய முதலாவது பிள்ளை“ எனும் அர்த்தத்திலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாக யெகோவாவின் சாட்சிகள் தர்கிக்கின்றனர் (26) எனினும் கொலோசெயர் 1:15 இல் நாம் அவதானிக்க வேண்டிய முக்கியமான விடயம், இயேசுக்கிறிஸ்து “தேவனுடைய முதற்பேறானவர் என்று இவ்வசனத்தில் குறிப்பிடப்படாதிருப்பதாகும். அதாவது “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் (முதற்பேறானவர்)  என்றே இவ்வசனம் உள்ளது. யெகோவாவின் சாட்சிகள் கூறுவதுபோல இவ்வசனத்தில் “பிறப்பித்தல்“ அல்லது “சிருஷ்டித்தல்“ எனும் அர்த்தத்துடனேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தால் இயேசுக்கிறிஸ்து தேவனுடைய பிள்ளையாக அல்ல. மாறாக சிருஷ்டிக்கப்பட்டவற்றின் பிள்ளையாக இருப்பதாகவே கருதவேண்டும்(27) எனவே இது அர்த்தமற்ற விளக்கமாகவே உள்ளது.

பழைய ஏற்பாட்டில், முதலாவது பிறந்தவர்களே முதற்பேறானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர் எனும் யெகோவாவின் சாட்சிகளின் தர்க்கத்திலும் எந்தவித உண்மையும் இல்லை. உதாரணத்திற்கு தாவீது குடும்பத்தின் கடைசி பிள்ளையாக இருந்தாலும் சங்கீதம் 89.:27ல் அவன் முதற்பேறானவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். அதேபோல். எப்பிராயீம் யோசேப்பின் இரண்டாவது மகனாக இருந்தபோதிலும் (ஆதி 41:50-51) எரேமியா 31:9 இல் அவனும் ”முதற்பேறானவன்“ என்று அழைக்கப்பட்டுள்ளான். (28) மேலும் இஸ்மவேல் பிறந்து 13 வருடங்களின் பின்னர் பிறந்த ஈசாக்கு ஆபிரகாமின் முதற்பேறானவனாக இருப்பதும் இப்பதத்தின் அர்த்தத்தை நமக்கு அறியத் தருவதாய் உள்ளது. “வேதாகமக் காலத்தில், முதற்பேறானவன் எனும் பதம் முதலாவதாக பிறந்தவன் எனும் அர்த்தத்தில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக இப்பதம் முன்னுரிமையையும் முதன்மையான இடத்தையும் முதற்தரத்தையும் குறிக்கும் சொல்லாகவே இருந்தது. (29) எனவே இயேசுக்கிறிஸ்து முதலாவதாகச் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று வேதம் கூறவில்லை. அவர் சிருஷ்டிக்கப்பட்ட சகலவற்றையும் விட மேலானவராகவும், சகலவற்றிற்கும் முதல்வராகவும் இருக்கிறார் என்பதையே சுட்டிக் காட்டுகிறது. மேலும், யெகோவின் சாட்சிகள் தர்க்கிப்பதுபோல் இவ்வசனம் இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கவில்லை. ஏனென்றால் அடுத்த அதிகாரத்தில் ““தேவத்துவத்தின் பூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது“ எனும் வாக்கியத்தின் மூலம் இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (கொலோ. 2:9) (30)

Footnote & References

(12). Anonymous, Reasoning from the Scriptures p. 408 ஆங்கில வேதாகமத்தில் Firstborn of all creation என்று இவ்வாக்கியம் உள்ளது.

(13) Anonymous, Aid to Bible Understanding p 918

(14) Anonymous, Reasoning from the Scriptures, p.408

(15) கிரேக்கத்தில் prototokos எனும் பதமே “முந்தினபேறுமானவர் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(16) நான்காம் நூற்றாண்டில் ஏரியஸ் எனும் வேதப் புரட்டின் இவ்விதமாகவே போதித்தான். இயேசுக்கிறிஸ்து பிதாவை விடத் தாழ்வானவர். பிதாவின் தன்மையற்றவர். பிதாவினால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதே இவனது உபதேசமாய் இரந்த்து. (R.E. Olson, The Story of Christian Thelogy, pp 141-150) உண்மையில் 4ம் நூற்றாண்டில் வேதப் புரட்டாக்க் கருதப்பட்டஏரியஸின் கருத்துக்களையே இன்று யெகோவாவின் சாட்சிகள் உபயோகிக்கின்றனர்.

(17) C. Vaughan, Colossians, Philemon : Bible Study Commentary, p38

(18) கொலோசேயர் 1:18, ரோமர் 8:29 எபிரேயர் 1:6 போன்ற வசனங்களிலும் இயேசுக்கிறிஸ்து இவ்விதமாக்க் குறிப்பிடப்பட்டுள்ளார்.

(19) M.J. Erickson, Christian Theology, p697

(20) R.L. Reymond, Jesus, Divine Messiah : The New Testament Witness, p247

(21) New World Translation

(22) New World Translation, Forword, p6

(23) B.M. Metzger, The Jehovah’s Witnesses and Jesus Christ p70

(24) W. Martin, The Kingdom of Cults, p96

(25) P.T.O;Brien, Colossians, Philemon : World Bible Study Commentary, p44

(26) ) Anonymous, Reasoning from the Scriptures, p.408

(27) R. Rhodes, , Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses P. 130

(28) தமிழில் இதனை சிரேஷ்டப்புத்திரன் என்று மொழிபெயர்த்துள்ளனர்

(29) L. Ryken, J.C. Wilhoit & T. Longman III, ed., Dictionary of Biblical Imagery, pp 289-290
Sponsored content

Re: யெகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்கள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum