தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
உங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்

Share
Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அமெரிக்க அரசியல் சாசன சட்டம்

on Wed Jan 20, 2016 10:37 pm
ஆர்ட்டிகிள்-1ல் காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தபட வேண்டும் என்றும், அதில் செனட்டர்கள் இருக்கவேண்டும் என்றும், ஒரு மாநிலத்துக்கு இரண்டு செனட்டர்கள் வீதம், அமெரிக்காவில் உள்ள மொத்த 50 மாநிலங்களில், மாநிலத்துக்கு இரண்டு செனட்டர் வீதம் மொத்தம் 100 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் மேல்சபை உறுப்பினர்கள் என்றும், அது இல்லாமல் எம்.பி.க்கள் ஒவ்வொரு எம்பி தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 435 எம்பிக்கள் உள்ளனர். இதை மக்கள்சபை அல்லது கீழ்சபை என்பர்.

இந்த இரண்டும் சேர்ந்ததுத்தான் காங்கிரஸ். இந்த காங்கிரஸுக்கும்தான் சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு. அதை மாற்ற வேறு யாருக்கும் அதிகாரமில்லை. ஆனாலும், அது அமெரிக்க அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தனது Judicial Review அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த சட்டம் சரியா தவறா என்று கூறும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: அமெரிக்க அரசியல் சாசன சட்டம்

on Wed Jan 20, 2016 10:39 pm
அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தின் முதல் 10 திருத்தங்களும் 1791லேயே நடந்து விட்டன. திருத்த சட்டம் என்றால் Amendment Act எனப்படும். ஒரு சட்டத்தின் பிரிவுகளை திருத்தினாலும், புதிய பிரிவுகளை உண்டாக்கினாலும் இந்த திருத்த சட்டம் மூலம் செய்ய வேண்டும். திருத்தம் என்பது திருத்தி எழுதும் சட்டப் பிரிவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த முதல் 10 திருத்தங்களை Bill of Rights மனித உரிமைகளின் சட்டம் என்று செல்லமாக அழைக்கிறார்கள். இதில்தான் அமெரிக்க மக்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகள் வழங்கி இருந்தனர். அமெரிக்க சாசன சட்டத்தை முதன்முதலில் தயாரித்து கொண்டு வரும்போது, வெறும் ஏழு ஆர்ட்டிகிள் Articles தான் இருந்தன. ஆர்ட்டிகிள் என்பது பிரிவு என்று பொதுவாகச் சொன்னாலும் அது பிரிவு Section என்று எடுத்துக் கொள்ள முடியாது. எல்லா சட்டத்திலும் உள்ள பிரிவுகளை Sections என்று சொல்கிறார்கள். ஆனால்,அரசியல் சாசன சட்டத்தின் பிரிவுகளை அப்படி Sections என்ற பெயரில் சொல்வதில்லை. ஏனென்றால்,அரசியல் சாசன சட்டம்தான் ஒரு நாட்டின் முதுகெலும்பான அடிப்படை சட்டம். அதை வைத்துத்தான் ஒரு நாடு தன் ஆட்சியையே அமைக்கும். அந்த நாடே அந்த சட்டத்தால்தான் உருவாகும். அப்படி இருக்கும்போது, அதிலுள்ள பிரிவுகள் கை, கால்கள், முகம், தலை என்று உடல் உறுப்புகள்போல, ஒரு பிரிவாகவே இருக்கும் என்பதால் அதை ஆர்ட்டிகிள் Article என்றே அழைக்கிறார்கள். மற்ற சட்டங்களில் உள்ள பிரிவுகளை ஆர்ட்டிகிள் என்று சொல்வதில்லை, அதை வெறும் Section என்றே சொல்கிறார்கள். அவ்வாறு பழக்கி விட்டார்கள்.

அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் திருத்த சட்டங்கள்;
11வது திருத்தம் முதல் 27 வது திருத்தம் வரை உள்ள திருத்த சட்டத்தில் சிலவற்றை மட்டும் இங்கு கவனிக்கலாம்.

11-வது திருத்தம் (1795-ல்) ஒரு மாநிலத்தில் உள்ளவர் வேறு மாநிலத்தின் மீது வழக்குப் போட்டால் அதை பெடரல் கோர்ட்தான் விசாரிக்க வேண்டும். அதே மாநில கோர்ட் விசாரிக்க அதிகாரமில்லை என்று விளக்கி உள்ளது

13-வது திருத்தம் (1865-ல்) அடிமைதனத்தை ஒழித்தனர்.

14-வது திருத்தம் (1868ல்) முன்னாள் அடிமைகளுக்கு அமெரிக்க குடிமகன் என்ற உரிமையை அளித்தது.

15-வது திருத்தம் (1879ல்) எல்லோருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டது.

18-வது திருத்தம் (1919-ல்) ஆல்ஹகால்/மதுவை தடை செய்தார்கள். ஆனால் நடைமுறைபடுத்த முடியாமல் 21-வது திருத்ததில்  மதுவிற்பனைக்கு அனுமதி கொடுத்து விட்டார்கள்.

19வது திருத்தம் (1920ல்) பெண்களுக்கு ஓட்டுரிமையை எந்த மாநிலமும் மறுக்க கூடாது என்று அறிவித்தது.

23-வது திருத்தம் (1961ல்) கொலம்பியா மாநிலத்தில் அதுவரை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடமுடியாமல் இருந்த நிலையை மாற்றி, ஓட்டுரிமை வழங்கினார்கள்.

24-வது திருத்தம் (1964ல்) ஓட்டுப்போடவதற்கு ஒரு வரி இருந்ததை ஒழித்தார்கள்.

25-வது திருத்தம் (1967ல்) ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி இறந்தால் எப்படி அடுத்த கட்ட முடிவு என்பதைப்பற்றிய திருத்தம்.

26வது திருத்தம் (1971ல்) 18 வயது முடிந்த அனைவரும் ஓட்டு அளிக்க எந்த மாநிலமும் மறுக்க கூடாது என்று திருத்தம்.

27வது திருத்தம் (1992ல்) இதன்படி அப்போதுள்ள காங்கிரஸ் என்னும் செனட்டர்களும், எம்பிக்களும் அப்போதுள்ள செனட்டர், எம்பிக்கள் சம்பளத்தை அவர்களே உயர்த்திக் கொள்ள முடியாது என்று சட்டம். (அடுத்துவரும், வருங்கால செனட்டர்களுக்கும் எம்பிக்களுக்கு மட்டுமே சம்பளத்தை உயர்த்த முடியும் என்று சட்ட திருத்தம்).
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: அமெரிக்க அரசியல் சாசன சட்டம்

on Wed Jan 20, 2016 10:39 pm
அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தை 1789ல் கொண்டுவந்துள்ளனர். இதை முதன்முதலில் உருவாக்கும்போது மொத்தமே ஏழு பிரிவுகளை (ஆர்ட்டிகிள்களை) மட்டுமே கொண்டதாக இருந்தது. இதுதான் எல்லா நாட்டு அரசியல் சாசன சட்டங்களிலும் மிகச் சிறிய சட்டம் என்னும் பெருமையையும் கொண்டிருந்தது. பின்னர், மிக அவசியம் என்று கருதிய உரிமைகளை இதில் சேர்ப்பதற்காக, இதை 27முறை திருத்தம் செய்து, பல புதிய திருத்த பிரிவுகளையும் கொண்டு வந்துள்ளனர்.

அமெரிக்க உருவாகும்போது மொத்தமே 13 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. அவைகள்தான் இந்த அரசியல் சாசன சட்டத்தை வகுத்து கூட்டு சேர்ந்து யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று கூட்டாச்சி முறையை கொண்டு வந்தனர்.
ஆரம்பகால அமெரிக்க அரசிலயமைப்புச் சட்டத்தில் இருந்த ஏழு ஆர்ட்டிகிள்களில் முதல் ஆர்ட்டிக்கிள் காங்கிரஸ் என்ற ஒரு கூட்டுசபையை உருவாக்கி அதன்படி இந்த நாட்டை ஆளும் சட்டங்களை இயற்றும் அதிகாரமும், பதவிகளை உருவாக்கும் அதிகாரமும் அந்த காங்கிரஸூக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆர்ட்டிகிள்-2ல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பதவியை ஏற்படுத்தி, அவர் அந்த கூட்டாச்சி அமெரிக்கவுக்கு ஆட்சித் தலைவராக இருக்க வகை செய்துள்ளது.
ஆர்ட்டிகிள் 3-ல் கூட்டாச்சி அமெரிக்காவுக்கு ஒரு உயர்ந்த நீதிமன்றதை ஏற்படுத்தி வைத்து நீதியை நிலைநாட்டவும், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், அமெரிக்காவின் மாநிலங்களுக்குள் நிகழும் பிரச்சனைகள் தீர்த்துவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆக இந்த முதல் மூன்று ஆர்ட்டிகிள்களில், ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் என்று சொல்லிக்கொள்ளும்,சட்டமியற்றல், ஆட்சி நிர்வாகம், நீதி நிர்வாகம் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமெரிக்க அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்ட்டிகிள் 4-ல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள உறவு, மற்றும் அந்த மாநிலங்களுக்கும் அமெரிக்க மாநில கூட்டமைப்புக்கும் உள்ள உறவு, மற்றும் இவைகளை எப்படி பாதுகாப்பது, அதன் அதன் உரிமைகள் என்ன என்பதை சொல்கிறது. (கூட்டாச்சி முறையை சொல்கிறது).
ஆர்ட்டிகள் 5-ல் காங்கிரஸ் என்ற இந்த மாபெரும் சபை, எப்போது வேண்டுமானாலும் இந்த அரசியலைமைப்பு சட்டத்தை தங்களின் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது என்ற உரிமையை வழங்குகிறது.
ஆர்ட்டிகிள் 6-ல் இந்த அமெரிக்க அரசிலமைப்பு சட்டம் மட்டுமே முதன்மை சட்டம் என்றும், இதில் சொல்லப்பட்டுள்ளதை மீறி யாரும் வேறு மாதிரி சட்டங்களை இயற்ற அதிகாரமில்லை என்றும் சொல்கிறது. இதற்கு உட்பட்டே சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கூறுகிறது.
ஆர்ட்டிகிள் 7-ல் புதிய மாநிலங்களை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் அதிகாரமும் இதற்கு அளிப்பட்டுள்ளது.
இதை பின்னர் 27 முறை திருத்தம் செய்துள்ளனர்.
முதல் மூன்று திருத்தங்கள் "தனிமனித உரிமைகளை" கொடுத்துள்ளது. இதன் 1-வது திருத்தத்தின்படி (1791ல்) ஒவ்வொரு அமெரிக்கரும் அவர் விருப்பம்போல மத கொள்கைகளை அனுசரித்துக் கொள்ளவும்,விருப்பம்போல பேசவும், எழுதவும், அவைகளை பிறருக்கு வெளியிடவும்,  ஒரு குழுவாக கூடவும், தன் உரிமைகளை கேட்டுப்பெறவும் உரிமை அளிக்கிறது.
2-வது திருத்தத்தின்படி (1791ல்) ஒவ்வொருவரும் தற்காப்பு ஆயுதங்களை வைத்துக் கொள்ள உரிமை கொடுக்கப் பட்டுள்ளது.
3-வது திருத்தத்தின்படி (1791ல்) போர் காலங்கள் தவிர, மற்ற நேரங்களில் போர் வீரர்களுக்கு இடம் அளிக்கும்படி, தனி மனதனை கட்டாய்படுத்த அரசுக்கு அனுமதியில்லை என்று தனி மனித உரிமையை கொடுக்கின்றது.
4-வது திருத்தத்தின்படி (1791ல்) யாரையும், சட்ட தேவையில்லாமல், சோதனை செய்யவும், அவர் பொருள்களை, சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அரசுக்கு அதிகாரமில்லை என்று தனிமனித உரிமையை கொடுக்கிறது.
5-வது திருத்தத்தின்டி (1791-ல்) பெரிய குற்றங்களை செய்திருப்பவரை முதலில் கிராண்ட் ஜூரி விசாரித்து அடிப்படை உண்மைகள் இருந்தால் மட்டுமே அவரை குற்றவாளி என கருதி தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். நேரடியாக கோர்ட் சட்ட விசாரனை செய்யக் கூடாது.
6-வது திருத்தத்தின்படி (1791ல்) குற்றவாளிக்கு பல சட்ட உரிமைகளை கொடுக்கிறது. அதில் முக்கியமாக,குற்றவாளியை விசாரித்து தண்டனை வழங்குவதில் கால தாமதம் செய்யக்கூடாது என்பது முக்கியமான சலுகை.
7-வது திருத்தத்தில் (1791-ல்) சில சிவில் வழக்குகளுக்கும் ஜூரி விசாரனை வேண்டும் என்று சலுகையை கொடுத்துள்ளது.
8-வது திருத்தத்தில் (1791-ல்) எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரே மாதிரி அபராதம் விதிக்கக் கூடாது. பணக்காரன் அபராதத்தை சுலபமாக செலுத்திவிடுவான். எனவே அவன் தகுதிக்கு ஏற்ப அதிக அபராதம் விதிக்க சட்டம் வழி செய்தது.
9-வது திருத்தத்தில் (1791-ல்) தனிமனிதன் ஓட்டுப்போடும் உரிமை, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பிரயாணம் செய்யும் உரிமை, தன் தனிமைக்கு உரிமை இவைகளை கொடுத்தது.
10-வது திருத்தத்தில் (1791-ல்) மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள தனி அதிகாரங்களை வரையறுத்து கூறியுள்ளது. குறிப்பாக, மத்திய அரசு போர்களை நடத்தவும், வரிகளை விதிக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான விவகாரங்களில் தலையிடவும் அதிகாரம் அளிக்கிறது.
இந்த 10 திருத்தங்களையும் பொதுவாக, மனிதனின் அடிப்படை உரிமைகளை பற்றி சொல்வதால் இதை பில் ஆர் ரைட்ஸ் Bill of Rights என்றே பொதுப் பெயரில் அழைக்கின்றனர்.
மீதிமுள்ள 11 முதல் 27 வரையிலான திருத்தங்கள் பல காரணங்களுக்காக ஏற்பட்டன. கடைசியாக செய்த 27வது திருத்தம் 1992ல் செய்யப்பட்டது. (வித்தியாசமான திருத்தம் இது: காங்கிரஸில் உள்ள உறுப்பினர்கள்,அதாவது செனட்டர், எம்பிக்கள் தங்களின் சம்பளத்தை தாங்களாகவே உயர்த்தி சட்டம் இயற்றிக் கொள்ள முடியாது. இனி வரும் எம்பிக்களுக்கு வேண்டுமானால் உயர்த்தி சட்டம் இயற்றலாம்.)
Sponsored content

Re: அமெரிக்க அரசியல் சாசன சட்டம்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum