தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
» பரலோகம் இலவசம்
by charles mc Wed Feb 22, 2017 8:18 pm

» ஆண்டவரே ஏன் இப்படி?
by charles mc Fri Feb 03, 2017 8:21 am

» உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
by charles mc Fri Jan 27, 2017 7:31 pm

» பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
by charles mc Thu Jan 26, 2017 10:28 am

» நாட்டு மாடு வளர்க்க ஆசையா..? மாடுகள் #எங்கு கிடைக்கும்?
by charles mc Thu Jan 26, 2017 10:16 am

» இதுதான் இயற்கை சூழலா?
by charles mc Wed Jan 25, 2017 8:44 am

» தெரியாத சட்டங்கள்
by charles mc Wed Jan 25, 2017 8:29 am

» பெண்களுக்கான உணவும் உடல் நலமும்
by charles mc Sun Jan 22, 2017 7:32 am

» பின்னால் உள்ள பயங்கரம் தெரிவதில்லை
by charles mc Wed Jan 18, 2017 8:13 pm

» தொழு நோயாளிகளின் ஊழியர் "ஜோசப் டேன்யன்"
by charles mc Tue Jan 17, 2017 7:21 pm

» மனித உடலின் மூலப் பொருட்களாக ...
by charles mc Sun Jan 15, 2017 9:10 am

» ஆக்கிரமிப்பது யார்?
by charles mc Sun Jan 15, 2017 9:07 am

» கண்டிப்பு அல்லது கடிந்து கொள்ளுதல்
by charles mc Sun Jan 15, 2017 8:49 am

» இருதய அறுவை சிகிச்சையும் தேவனுடைய அன்பும்
by charles mc Fri Jan 13, 2017 9:20 pm

» சுவிசேஷத்தை அறிவித்தும்
by charles mc Tue Jan 10, 2017 9:00 am

» சொல்லிமுடியாத ஈவு
by charles mc Tue Jan 10, 2017 8:58 am

» திரும்ப அளிப்பேன்
by charles mc Tue Jan 10, 2017 8:53 am

» நமக்குரிய நீதியின் கீரிடம்
by charles mc Tue Jan 10, 2017 8:50 am

» எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்
by charles mc Tue Jan 10, 2017 8:47 am

» நான் கடனாளியாயிருக்கிறேன்
by charles mc Tue Jan 10, 2017 8:40 am

» உங்கள் பாதுகாப்பின் காரணம்
by charles mc Tue Jan 10, 2017 8:34 am

» கடைசில கதற விட்டுட்டீங்களேடா
by charles mc Tue Jan 10, 2017 8:26 am

» நாட்டு மாடு வகைகள்
by charles mc Tue Jan 10, 2017 8:19 am

» இந்திய பன்னாட்டு எண் முறையில் படிப்பது எப்படி?
by charles mc Wed Dec 14, 2016 9:59 am

» நற்செய்தி: சோப்பு இருந்தால் போதுமா?
by charles mc Sat Dec 03, 2016 8:35 pm

» ஜெபம் - அறிவோம்
by charles mc Sat Dec 03, 2016 8:31 pm

» கடவுள் வரட்டும்
by charles mc Sat Dec 03, 2016 8:26 pm

» தலையில்லா முண்டம்
by charles mc Sat Dec 03, 2016 8:21 pm

» ஈஸ்டர் செய்தி
by charles mc Sat Dec 03, 2016 8:21 pm

» வேதத்தை படிக்க ஆலோசனை
by charles mc Sat Dec 03, 2016 8:18 pm

» இதற்குமா அல்லேலூயா
by charles mc Sat Dec 03, 2016 8:07 pm

» அழுவதற்கல்ல இந்த வாழ்க்கை
by charles mc Sat Dec 03, 2016 8:06 pm

» பக்தி மட்டும் போதாது
by charles mc Sat Dec 03, 2016 7:56 pm

» சகோ.அகத்தியனின் கடிதம்
by charles mc Sat Dec 03, 2016 7:43 pm

» ஞானஸ்நான உடன்படிக்கை
by charles mc Sat Dec 03, 2016 7:41 pm

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Top posting users this month

Keywords

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest :: 2 Bots

None

Most users ever online was 50 on Sat Jul 29, 2017 12:37 pm
Social bookmarking

Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website

பார்வையிட்டோர்
Add this to U r Website
September 2017
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

இயேசு என்ற தெய்வம் என்னை தேடி வந்தார்!

View previous topic View next topic Go down

இயேசு என்ற தெய்வம் என்னை தேடி வந்தார்!

Post by சார்லஸ் mc on Wed Jan 13, 2016 5:29 am

இயேசு என்ற தெய்வம் என்னை தேடி வந்தார்! என் பாவங்களிலிருந்து என்னை விடுவித்தார்! - சாட்சிஇயேசு என்ற தெய்வம் என்னை தேடி வந்தார்! என் பாவங்களிலிருந்து என்னை விடுவித்தார்!நான் கண்ணீரோடு அழுதுக்கொண்டே எழுதுகிறேன் இந்த  கடிதம், இயேசுவை அறியாதவரா? நீங்களும் இந்த கடித்தத்தை படித்துப்பாருங்கள் இயேசு என்ற தெய்வம் உங்கள் வாழ்க்கையையையும் மாற்றுவார், உங்களையும் அவர் நேசிக்கிறார், உங்களுடைய எந்த தேவைகளையும் அவர் பூர்த்திசெய்வார்.நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவன், ஒழுக்க நெறிக்கெட்டு, அசிங்கமாக வாழ்ந்துக்கொண்டிருந்தவன், அந்தரங்க வாழ்க்கையில் அசிங்கத்தை செய்துகொண்டு, வெளியரங்க வாழ்க்கையில் வேசமிட்டு வெள்ளையாய் சிரித்துக்கொண்டிருந்தவன்.பாவமானது என்னை யாருக்கும் தெரியாமல் பாவம் செய்யசெய்ய தூண்டியது, நான்கு முறைக்கு மேலாக அந்த பாவ பிசாசு வெளியரங்கமாக என்னை பிசாசு பிடித்தவன் என்று என் வீட்டாரும், அக்கம்பக்கத்தாரும் நினைக்கும் அளவுக்கு என் வாழ்க்கையை சிதைத்தது.இருட்டில் பாவசெய்துக்கொண்டு, பிறரிடத்தில் புன்னகை செய்துக்கொண்டிருந்தேன்.  எனக்கு இஷ்டமில்லாததை செய்ய ஆட்க்கொள்ளப்பட்டேன், சில நிமிட சந்தோஷத்தை விரும்பி பல நாள் சஞ்சலத்தோடும், சங்கடத்தோடும் செத்த வாழ்க்கை "வாழ்ந்துக்கொண்டிருந்தேன்"!!! 

என் குணம் மாறவேண்டும், என் அசிங்கமான மாறவேண்டும் என்று காலையிலேயே எழுந்து யோக செய்துபார்த்தேன், என் குணம் மாறவேயில்லை!

என் அந்தரங்க வாழ்க்கையை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடுவதற்க்கு முன்பாகவே நான் நல்ல பையனாகவே எல்லோருக்கும் காணப்படவேண்டும் என்று இந்து மடத்தில் - இராமகிருஷ்ணமிஷனில்  சேர்ந்தேன், பல மாதங்கள் ஆகியும் என் அந்தரங்க வாழ்க்கை அப்படியே இருந்தது! 

இந்த பாவத்தை விட விரும்பி, பாவம் செய்த ஒவ்வொரு முறையும் எனக்கு நானே தண்டனைக்கொடுக்கும் விதமாக - ( அதாவது எப்படியென்றால் ஒரு தகப்பனார் தன் மகள் காதலிக்கும் அவளுடைய காதலனை விட்டு பிரிக்கும் அளவுக்கு  எந்தளவு காயங்களையும், சூடும் அவளுக்கு கொடுப்பாரோ , அதே விதமாக ) என் இரு கன்னத்திலும் பளார், பளார் என்று எனக்கு அதிகமாக வலிக்கும் அளவுக்கு ஓங்கி ஓங்கி அடித்து பார்த்தேன் ஒரு மாற்றமும் தெரியவில்லை!  ( தகப்பனாரின் எந்த தண்டனையையையும், வலியையையும்  சகித்துக்கொண்டு, மீண்டும் மீண்டும்  தான் விரும்பிய அந்த  காதலனை நோக்கியே அவளுடைய எண்ணம் இருக்கும்,  அதேப்போல என் மனசும், மாம்சமும் கன்னத்தில் நான் வலிக்கும் அளவுகு அடித்த வலிகள் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு அந்த பாவத்தை அணைத்துக்கொண்டு அதேயே திரும்ப திரும்ப செய்துக்கொண்டிருந்தது ). 

கடவுள் சம்மந்தப்பட்ட புத்தகங்களை படித்தேன், ஒஷோ புத்தகங்களையும் படித்துப்பார்த்தேன், கடவுள் யார், எத்தனை இறைவன் இருக்கிறார்கள் என்னை திருத்த யாருமில்லையா? என் வாழ்க்கை இப்படியே இருந்து விடுமா? என் வாழ்க்கை கடைசிவரையில் இப்படியே அழுகி நாறிக்கொண்டேயிருக்குமா? என்று மருகிக்கொண்டிருந்தேன். நண்பர்கள் கற்றுக்கொடுத்த இந்த கெட்டப்பழக்கம் நாளுக்கு நாள் என்னை அதிகமாக ஆட்க்கொண்டது, இதிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள நண்பர்களிடமோ அல்லது பிறரிடமோ சொல்ல வெட்கப்பட்டேன்.  மருத்துவரிடம் இதற்க்கு மருந்து கிடைக்குமா என்று யோசித்ததுண்டு. ஆனாலும் கடைசிவரையில் யாரிடமும் சொல்லவில்லை - ஒரே ஒரு அண்ணனிடம் தவிர ( அவர் யாரென்று கீழே பார்க்கலாம் )சாமிகளை சபித்தேன், வாழ்க்கையை வெறுத்தேன், பிறர் சந்தேகம் படும் அளவுக்கு என் முகத்தின் களையும், தோற்றமும்  மாறியிருந்தது, நான் முன்னே விட அதிகமாக ஒல்லியாக மாறியிருந்தேன்.  பத்தாம் வகுப்பு படிக்கும்போது தொடங்கிய இந்த பழக்கும் பத்து வருஷமாக நீடித்தது. நிம்மதியில்லாத வாழ்க்கை, வெட்கமான வாழ்க்கை, கேவலமான வாழ்க்கை.பத்து வருஷத்திற்க்கு பிறகு ஒரு கிறிஸ்தவ நண்பரோடு தங்கும் வாய்ப்பு கிடைத்தது, அவர் ஒரு நாளைக்கு பல தடவை முழங்காலில் ஜெபம் பண்ணுவார், வாய் மட்டும் அசையும் என்ன பேசுகின்றார் என்று ஒன்றும் புரியாது, பல மணிநேரம் ஜெபிப்பார்.என்னிடம் பைபிளை பற்றியும், இறைவனைப்பற்றியும், இயேசுவைப்பற்றியும் பேசுவார் எனக்கு ஒன்றும் விளங்காது, சில நேரம் என் நடக்கைகளை அன்பாக கண்டிப்பார், என்னுடைய கருத்துக்களுக்கு விளக்கம் கொடுப்பார்.நான் அவரிடம் வெகுளியாய் பேசுவேன், இப்படி நாளுக்கு நாள் பைபிளைப்பற்றியும், இயேசுவைப்பற்றியும் பேசிப்பேசியே பின்பு பைபிளைப்பற்றி தினந்தோரும் நேரம் ஒதுக்கி பைபிளை பற்றி அவர் எனக்கு சில மணிநேரம் சொல்லிகொடுத்தார்.எனக்கு தெரிந்தவரையில் அவரிடம் நான் முதல் முதலில் உண்மையாகவே எனக்கு புரிந்த வேத பகுதி - 1 சாமுவேல் புத்தகம். அன்னாளைப்பற்றியும், சாமுவேல் என்ற சிறுவனைப்பற்றியும் அவர் எனக்கு சொல்லசொல்ல என் இருதயத்தில் ஒளி பிரகாசித்தது, சந்தோஷத்தை நான் உணரமுடிந்தது. அன்னாளின் கண்ணீர் ஜெபம் என் மனதை தொட்டது. இப்படி மனிதர்கள் இறைவனிடம் அழுதுபேச முடியுமா? நம் இருதயத்தை யாரிடம் உடைத்து அழ வேண்டும் என்ற உண்மை புரிந்தது.ஆனால் இப்போழுது உணர்ந்துக்கொண்டேன் - என் மனதில் எப்போழுதெல்லாம் நான் ரொம்ப கெட்டவன், ஒழுக்கமாக வாழமுடியாதவன், நான் நல்லவனாக மாறவேண்டும்  என்று அன்றைக்கு  என் மனதில் எண்ணம் எழும்பியதோ அந்த நேரத்திலிருந்தே இயேசு தெய்வம் என்னை அவருக்காக குறித்து விட்டார், இறைவனின் பிள்ளையாக என்னை முன்தெரிந்துகொண்டார் என்று....ஆனாலும் பின்பு பல நாள் ஆகியும் நான் இறைவனை அறியவில்லை, இயேசுவோடு பேசவில்லை. அந்த கிறிஸ்தவ சகோதரரோடு சில நேரம் பேசுவேன், பல நேரம் அவரது பேச்சு என் மனதுக்கு பிடிக்காது.ஆனாலும் இன்னும் அந்த பாவத்தை நான் விட்டுவிடவில்லை, திரும்பத்திரும்ப அதையே செய்துக்கொண்டிந்தேன் . ஒரு நாள் என் இருதயத்தில் ஒரு கேள்வி எழுந்தது - இந்த கிறிஸ்தவ நண்பரிடம்  நம்முடைய அசிங்க வாழ்க்கையைப்பற்றி சொல்லலாமா?ஒருநாள் வேதத்தைப்பற்றி சொல்லிக்கொண்டிக்கும் போது அவரிடம் என் பாவ வாழ்க்கையை சொன்னேன். அவர் அப்போழுது இயேசுவைப்பற்றியும், பாவவிடுதலையைப்பற்றியும் ஏதோ சொன்னார் ஆனாலும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் எனக்காக அனுதினமும் ஜெபித்ததுண்டு, நானும் அவரோடு ஜெபிக்கத்தொடங்கினேன்.ஆனாலும் திரும்பவும் அதே  பாவத்தையே செய்துக்கொண்டிருந்தேன், அது மகா பலமாயிருந்தது, அந்த எண்ணம் என் மனதில் எழும்போதெல்லாம் நான் அப்படியே அதற்கு கீழ்ப்படிந்து அந்த பாவத்தை செய்துவிடுவேன்.ஒருநாள் கதவைப்பூட்டிக்கொண்டு ஓ....ஓ....வென்று கதறி அழத்தொடங்கினேன்..... இயேசுநாதரே இந்த பாவத்திலிருந்து என்னை விடுவிக்கவே மாட்டீரா? என்னை ஏன் இந்த துன்பத்திலிருந்து விடுவிக்கமாட்டேங்கிறீர், ப்ளீஸ் இயேசுவே என்னை விடுவியும், நான் உமக்கு ரொம்ப நன்றி சொல்லுவேன், என் அம்மா, அப்பாவிற்க்கு நான் நல்லப்பிள்ளையாயிருக்கவேண்டும், நான் தான் வீட்டுக்கு மூத்தபையன் நான் என் குடும்பத்தை ஒழுங்காக நடத்தவேண்டும், எனக்கு ஒரு தம்பியும் இருக்கிறான் அவனுக்கும் நான் முன் உதாரணமாக இருக்கவேண்டும். எனக்கு இரங்கமாட்டீரா? என்னை காப்பாற்ற மாட்டீரா?.................. அழுதேன் அழுதேன்..... கண்ணீர் .... கண்ணீர்...... உடம்பு முழுவதும் கண்ணீர்....... 

எனக்கு இந்த சம்பவம் இன்னும் நினைவிருக்கிறது.... அந்த ஜெபத்தை செய்துவிட்டு பலநாள் ஆகியிருக்கும் அன்றிலிருந்து என் மனதில் ஒரு வெறுமையே இல்லை, எதுவும் என்னை பாவம் செய் என்று தூண்டவில்லை. என் மனது நிறைவாயிருந்தது, சந்தோஷம், மகிழ்ச்சி, சமாதானம், அமைதி....  அனுதினமும் இயேசுவோடு முழங்காலில் பேசத்தொடங்கினேன்.உண்மையை சொல்றேங்க - முழங்காலில் அப்போதிலிருந்து இப்போதுவரைக்கும் நிற்கும் எப்போதும் என் மனதில் ஒரு நிம்மதி, சந்தோஷம், உலகத்திலும், உலகப்பொருட்களிலும் கிடைக்காக சந்தோஷம் இது, கதகதப்பான ஒரு அனுபவம், மனதுக்குள் தீயெரிகிற மாதிரியிருக்கும் ஆனால் அது திரும்பதிரும்ப வேண்டும்போலிருக்கும். இயேசு என்னைப்பாவத்திலிருந்து விடுவித்தார், இயேசுகிறிஸ்து என் பாவத்திற்க்கு மரித்தார், என் மனதை சுத்தம் செய்தார், என் பாவ நோயிற்க்கு ந்ரந்தர மருந்து கொடுத்தார், என்னை பரிசுத்தமாக்கினார். என் பாவத்தை அவர் சிலுவையில் எனக்காக நம் போன்ற பாவிகளுக்காக ஒரே தரம் சுமந்தார். இயேசுகிறிஸ்து உயிர்ந்தெழுந்தார். அவரை விசுவாசித்து, அவரோடு அனுதின உறவாடுபவர்கள் பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலையாவார்கள், பரிசுத்த வாழ்க்கை வாழ்வார்கள்.இயேசு என்ற தெய்வம் என்னை தேடி வந்தார்! 


இறைவனை அறியாத உங்களிடம் இறைவன் சொல்கிறார் - " என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்."


Thanks:  http://jesusfreedmefromsins.blogspot.in/
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்

Posts : 15983
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

http://nesarin.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum