தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
உங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 50%
பார்வையிட்டோர்

Share
Go down
avatar
CHARLES MSK
புதியவர்
புதியவர்
Posts : 5
Join date : 09/01/2016

மகிமையான புதிய ஆரம்பம்!

on Sat Jan 09, 2016 11:32 pm
Message reputation : 100% (1 vote)
மகிமையான 
புதிய ஆரம்பம்!

மிக மோசமாய் பின்மாற்றமடைந்த தன் ‘கெட்ட குமாரனுக்கு’ அந்த தகப்பனோ, விலையுயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டு வந்தார்! 

சுவிசேஷம் மிளிர்ந்திடும் செய்தி கேளுங்கள்: 

“தோல்வியடைந்த
வர்களுக்கும், தேவன் ‘தன்னுடைய மிக அருமையானதைக்’ கொடுக்கிறார்! அவர்களும் ஓர் ‘புதிய துவக்கம்’ பெற்றிட முடியும்! தேவன் ‘ஒருவரையும்’ 
கைவிடுவதேயில்லை!” இதுவே கடந்த வருடத்தில் வீழ்ச்சியடைந்தவர்களுக்குத் தேவன் வழங்கும் விலையேறப் பெற்ற ஆறுதல்! 

உங்களின் தோல்விகள் எதுவாயிருந்தாலும், நீங்கள் தேவனுக்குள் ஓர் புதிய துவக்கத்தை ‘இன்றே’ துவங்கமுடியும்! இதற்கு முன், ஆயிரம் புதிய துவக்கம் செய்து, ஆயிரம் முறையும் வீழ்ச்சியே அடைந்திருந்தாலும்..... இன்று, 1001 - ம் புதிய துவக்கத்தை நீங்கள் துவங்க முடியும்! 

இப்போதுகூட “மகிமையான விசேஷங்களை” உங்களிடத்தில் தேவன் செய்திட முடியும்! 

இன்றுவரை ‘இனி முடியாது!’என நீங்கள் எண்ணியிருந்த ஜீவிய பகுதிகளில்......‘தேவனால் முடியும்!’என அவர் மீது உறுதியான விசுவாசமும், நம்பிக்கையுடனும் இருங்கள்!!
                             (ரோ 4:20).

தேவனுடைய வாக்குதத்தத்தில் உரிமை கொள்ளுங்கள்:

நீங்கள் தேவனுடைய வாக்குதத்தங்களை ஒவ்வொரு நாளும் உரிமையோடு சொந்தம் கொண்டிருந்தால், கடந்துபோன எல்லா வருடங்களைக் காட்டிலும், இந்த புதிய வருடம் உங்களுக்கு மேன்மை கொண்டதாய் மாறும்! 

எப்படியெனில், 

எல்லா இஸ்ரவேலர்களையும் கானான் தேசத்திற்குள் அழைத்துச் செல்வேன் என தேவன் வாக்குரைத்தும்...... யோசுவாவும், காலேப்பும் மாத்திரமே
விசுவாசித்தபடியால்,
அவர்கள் மாத்திரமே பிரவேசித்தார்கள்!
                         (யாத் 3:17).

உங்கள் இருதயத்தில் விசுவாசித்ததை, வாயினால் அறிக்கை செய்யவும் வேண்டும்!!
                           (ரோ 10:8-9) 

என்றே வேதம் கூறுகிறது!!
கீழ்காணும் 8 
வாக்குதத்தங்களை அறிக்கை செய்து, அதை இந்த ஆண்டே சுதந்தரியுங்கள்:

1. பிதாவாகிய தேவன், இயேசுவை நேசித்தது போலவே என்னையும் நேசிக்கிறார்..... ஆகவே, நான் எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பேன்! 
                         (யோ 17:23).

2. தேவன் என் 
பாவங்களையெல்லாம் மன்னித்துவிட்டார்..... இனியும் ‘குற்ற உணர்வோடு’ நான் வாழ்ந்திடமாட்டேன்! 
                  (1யோ 1:8,எபி 8:12).

3. பரிசுத்த ஆவியினால், தேவன் என்னை நிரப்புவார்..... ஆகவே, ஒவ்வொரு செயலிலும் நான் பெலவானாயிருப்பேன்!
                           (லூக் 11:13).

4. தேவன், எனது குடியிருப்பின் எல்லையை தீர்மானித்திருக்கிறார்... ஆகவே, அதில் நான் ‘போதுமென்று’ இருப்பேன்!
                 (அப் 17:26,எபி 13:5).

5. என் நன்மைக்கென்றே, எல்லா கட்டளைகளையும் தேவன் தந்துள்ளார்!... ஆகவே, அவரது எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவேன்!
             (1யோ 5:3,யாத் 10:13).

6. என்னை பாதிக்கும், எல்லா ஜனங்களையும் சம்பவங்களையும் தேவன் கண்காணிக்கிறார்...... ஆகவே, எல்லாவற்றிற்காகவும் நான் எப்போதும் 
ஸ்தோத்தரிப்பேன்!
                      (ரோம 8:28,
                          எபே 5:20,
                          1தெச 5:18).

7. இயேசு சாத்தானை ஜெயித்து, அவன் சத்துவத்திலிருந்து என்னை விடுவித்துவிட்டார்..... ஆகவே, நான் ஒருபோதும் பயப்படேன்!
                        (எபி 2:14-15; 
                          எபி 13:6).

8. தேவன் என்னை ஆசீர்வாதமாய் மாற்ற விரும்புகிறார்..... ஆகவே, நானும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பேன்!
                 (ஆதி 12:2,கலா 3:14).

தேவனுடைய வாக்குதத்தமும், நம்முடைய விசுவாசமும் இரண்டு மின்சார வயர்களைப்போல் உள்ளது! 

அந்த மின்சார வயர்களைப் போலவே, ஒரு வயர் மற்றொரு வயரைத் தொடும்போதுதான், ‘வல்லமை’ அந்த வயர்களில் பாய்ந்து சென்றிட முடியும்! 

அதுபோலவே, தேவனுடைய வாக்குதத்தத்தை, நம் விசுவாசம் தொடும்போது, ஜீவன் தரும் ‘வல்லமை’ நம்மில் பாய்ந்தோடும்!!

————————————
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: மகிமையான புதிய ஆரம்பம்!

on Sun Jan 10, 2016 9:09 am
ஆசீர்வாதமான தேவ செய்திக்கு மிக்க நன்றிகள்  Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven  
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum