தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அப்பா பட்ட காயங்கள்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அப்பா பட்ட காயங்கள்  Empty அப்பா பட்ட காயங்கள்

Fri Jan 08, 2016 6:29 pm
காட்டை ஒட்டி ஒரு கிராமம் இருந்தது. காட்டில் கிடைக்கும் தேன், மூலிகைகள் போன்ற பொருட்களினால் அந்த கிராமம்
எப்பொழுதும் செழிப்பாக இருந்தது

. ஆனாலும் அங்கே ஒரு பெரிய பிரச்சனையும் இருந்தது. அவர்களை வாழ வைத்த காட்டில் ஒரு வகை மரம் இருந்தது. அதன் கனி அழகானது. பலமான அதன் வாசனை அதை உண்ணத் தூண்டும் .

ஆனால் தப்பித்தவறி அதை உண்டு விட்டால் அவ்வளவுதான் . உண்டவர்கள் பத்து நாட்கள் வரை தன்னை மறந்து வெறி பிடித்து அலைவார்கள் . கண்ணில்படும் எவரையும் தாக்குவார்கள். கொடூரமாய்ப் பசிக்கும். எது கிடைத்தாலும் தின்பார்கள். பெரும்பாலும் பத்து நாட்களில் பசியில் மடிவார்கள் .

ஒரு வேளை புத்தி தெளிந்தாலும் , அந்த கனியின் ஆசை மீண்டும் அதைப் புசிக்க வைத்து விடும் . இதனாலேயே அங்கே ஒரு வழக்கம் இருந்தது. பழத்தை உண்ட வெறியோடு யாராவது கண்ணில் பட்டுவிட்டால் அவனைக் கல்லெறிந்து கொன்று விடுவார்கள் . ஏனென்றால் அவன் திருந்த வாய்ப்பே இல்லை என்பதுடன் அவனால் பிறருக்கு ஆபத்தும் நேரிடும் .

வருடத்தில் ஒருவரேனும் இப்படிக் கல்லெறியப்பட்டு சாவது வழக்கமாகிப் போனது .

அந்த கிராமத்தில் அன்பான ஒரு தகப்பன் இருந்தார் . அவர் தன் மகன் மீது உயிரையே வைத்திருந்தார். அவனிடம் அந்த மரத்தின் தீமைகளைப் பற்றிச் சொல்லி இருந்தார் . அவனும் எச்சரிக்கையாகவே இருந்தான்.

ஒரு நாள் அவன் காட்டுக்குள் தேனெடுக்கச் சென்ற போது அவன் கொண்டு சென்றிருந்த கஞ்சிக் கலயம் தவறுதலாகக் கீழே விழுந்து
உடைந்தது . அன்றைக்கென்று சோதனையாய் தேன் கூடு எதுவுமே கண்ணில் படவில்லை . பசி குடலைத் தின்றது. வீடு திரும்பிச் செல்வதென்றால் சில மணி நேரங்களாகும் .

பசி மயக்கத்தில் விஷக்கனியின் வாசனை மூக்கைத் துளைத்தது. ஒரு யோசனை தோன்றியது.

தின்றால்தானே பிரச்சனை ?

முகர்ந்தால் கொஞ்சம் பசி அடங்குமே.

முகர்ந்தபடியே ஊர் போய் சேர்ந்து விடலாம் என்ற முடிவுடன் மரத்தருகே வந்து கீழே கிடந்த ஒரு கனியைக் கையில் எடுத்துக் கொண்டான் .
அவன் யோசனை சரிதான். பழத்தை முகர்ந்தவுடனே பசி குறைந்தது . வேகமாய் வீடு நோக்கி நடந்தான்.

பழத்தின் வாசனை கொஞ்சம் கொஞ்சமாய் அவனை வெறி கொள்ள வைத்தது . சிறிது நேரத்தில் தன்னை மறந்தான் . தின்று விட்டான். மிருகமாக கத்தியபடி ஊருக்குள் ஓடினான். கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கப் பாய்ந்தான்.

செய்தி ஊருக்குள் பரவியது. எல்லோரும் கல்லோடு கூடி வந்தார்கள் . இல்லையென்றால் அவர்களுக்கல்லவா ஆபத்து ?

செய்தி அறிந்த தந்தை கதறி ஓடி வந்தார். ஊர்த் தலைவரிடம் அழுது , கெஞ்சி மகனால் யாருக்கும் ஆபத்து வராது என்று வாக்களித்தார் .

ஏற்கனவே மகன் இரண்டு மூன்று கற்களால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்து கிடந்தான் . ஊர்த்தலைவர் சொன்னார், "ஜாக்கிரதை . அவன் உங்களையே கொல்லலாம் . அது மட்டுமில்லாம மறுபடியும் பழத்தை தின்னாம அவனால இருக்கவே முடியாது ". 

தந்தையின் நல்ல பெயரால் , அந்த ஊரில் முதல் முதலாய் அவன் கல்லடிக்குத் தப்பினான்.

பத்து நாட்கள் ஓடின . மகன் வெறி தெளிந்து எழுந்தான் . பழத்தைத் தின்றது நினைவுக்கு வந்தது . தான் உயிருடன் இருப்பதை நம்ப
முடியவில்லை .

மகன் தெளிவாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து அப்பா ஓடி வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார்.

மகன் அழுதபடி கேட்டான்" ஏம்ப்பா இப்படி இளைச்சுட்டீங்க?

அப்பா "நான் பத்து நாளா சரியா சாப்பிடலப்பா"

"ஏம்ப்பா கண்ணெல்லாம் இப்படி வீங்கிக் கிடக்குது "

"தூங்கவே இல்லை. அதோட தொடர்ந்து அழுதுட்டே இருந்தேன் "

திடீரென்று பதறிக் கேட்டான் " என்னப்பா கையில காயம்?"

"அது உனக்கு சாப்பாடு ஊட்டும் போது நீ கடிச்சது. உனக்கு அப்பல்லாம் ரொம்ப பசிக்குமே "

"கழுத்தில இருக்கிற காயம் ?"

"தரைல தூங்கறியேன்னு தூக்கி மெத்தைல படுக்க வச்சேன் . அப்ப நீ கடிச்சது ".

மகன் கதறி அழுதான். "எனக்காக இவ்வளவு பாடுபட்டீங்களே அப்பா ! எல்லாரையும் போல சாக விட்டிருந்தா இந்தப் பாடுகள் உங்களுக்கு வந்திருக்குமா ? "

அப்பா சிரித்தபடி சொன்னார் , " நீ புத்தி தெளிந்து அழுவதைப் பார்த்ததும் என் காயத்தின் வலியெல்லாம் மறைஞ்சே போச்சுடா !"

ஒரு வாரம் கழித்து மகன் மீண்டும் காட்டுக்குப் போனான் . பழத்தின் நினைவு வந்து கை கால் நடுங்கியது . சகலமும் மறந்து பழத்தைக் கையிலெடுத்தான்.

கடிக்கப் போன வேளையில் நினைவுக்கு வந்தது அவனுக்காக அப்பா பட்ட காயங்கள்.

"இல்லப்பா ! இனிமே நீங்க என்னால காயப்பட விடமாட்டேன்". பழத்தைத் தூக்கி வீசிவிட்டு வீடு திரும்பினான்.

செல்லமே! பிசாசு உனக்குள் பாவ இச்சையைக் கொண்டு வர முயன்றால் நீ அவரது காயங்களை நினை . பிசாசும் அவன் கொண்டு வரும் பாவங்களும் ஓடிப்போகும்.

- http://www.worldgospelarmy.com/
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum