விந்தையிலும் விந்தை!
Thu Jan 14, 2016 8:19 am
ஒரு மோசடிப்பேர்வழி சீட்டுக் கம்பெனி நடத்தி ஒடத் திட்டமிட்டுள்ளான் என்பதைப் புரிந்துகொண்டு நீங்கள் அதில் பணத்தைப் போட நினைக்கும் உங்கள் நண்பரை முதலில் எச்சரிப்பீர்களா, இல்லை சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று விட்டுவிடுவீர்களா?
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றாலும், தன் நண்பனைக் காப்பாற்ற எச்சரிப்பு விடுப்பது மிகவும் இயல்பானதும், உண்மையானதும் கூட. அந்நேரத்தில், சீட்டுக் கம்பெனிக்காரனைக் குற்றப்படுத்த நாம் யார் என்று பேசாமல் இருந்துவிடுவோமா?
சாதாரணமாக உலகப் பொருளைக்கூடக் காப்பாற்ற எச்சரிப்பு விடும் நாம் விலையேறப்பெற்றதான ஒரு ஆத்துமா தவறான பாதையில் சென்று ஏமாற்றமடையப் போகிறது என்று அறிந்தபின் "எனக்கென்ன போச்சு" என்று ஒதுங்கி இருப்பதா ஒரு கிறிஸ்தவனின் இயல்பாக இருக்க முடியும்?
வேதம் என்ன சொல்கிறது, பொய்போதகம் என்ன சொல்கிறது என்பதை வேறுபடுத்திக்காட்டி எச்சரிப்பதல்லவா கிறிஸ்து விரும்பும் ஒரு செயலாக இருக்கமுடியும். கள்ளத்தீர்கதரிசனமும், வேதத்துக்குப் புறம்பான உபதேசமும் கர்த்தருக்கு அருவருப்பானது என்றால், ஒரு சகோதரனை அப்பாதையை விட்டு விலகச் செய்ய விடுப்பது எச்சரிப்பா, குற்றப்படுத்துதலா?
போலி உபதேசத்தை ஒருமுறை சொன்னாலும் நம்பிவிடும் இதயம், நூறுமுறை அதைச் சுட்டிக்காட்டினாலும் திருந்த மறுப்பது விந்தையிலும் விந்தை!
- Ben Ny

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|