தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அல்லேலூயா” & ஆமென்Yesterday at 7:08 amசார்லஸ் mcவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdmin
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests :: 1 Bot

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
June 2018
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஐவகை நிலங்கள்

on Wed Dec 16, 2015 8:41 pm
தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். 

தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன. 

மலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி
காடும் காடுசார்ந்த நிலமும் - முல்லை
வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம்
கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல்
மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் - பாலை

மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி நிலம் என்று அழைத்தனர். மலைக்கு அடுத்து இருந்த நிலப்பகுதி காடும், காட்டைச் சார்ந்த இடமும். இப்பகுதியை முல்லைநிலம் என்று கூறினர். முல்லைக்கு அடுத்து இருந்த வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்று குறிப்பிட்டனர்.

பண்டைத் தமிழ்நாட்டின் கிழக்கும், மேற்கும், தெற்கும் கடல் எல்லையாக இருந்தது. இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர். பருவகாலத்தில், பெய்ய வேண்டிய மழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டு, நிலம் பசுமை இல்லாமல் வறண்டு இருக்குமானால் அப்பகுதியைப் பாலை என்று சுட்டினார்கள்.

ஆக்குனர்: பல்கலைக்கழகம்  ;  பகுப்பு: தமிழ்ச் சங்கம் (சங்ககாலம்); எழுத்தாளர்: பல்கலைக்கழகம்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: ஐவகை நிலங்கள்

on Wed Dec 16, 2015 8:42 pm
பழந்தமிழகப் புவியியல் கூறுகள்

இன்றைய தமிழகம் பண்டைய தமிழகத்தை விடப் பரப்பளவில் குறைந்தே காணப்படுகிறது. இது இந்தியாவின் தென்கிழக்கு மூலையிலே உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய தமிழகம் இன்றைய கேரளம், ஈழம் (இலங்கை) ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இதுவே கலாச்சார வட்டத்தில் இணைந்திருந்தது.

  புவியியல் அமைப்பு

பொதுவாகத் தமிழகத்தின் புவியியல் அமைப்புகளை உற்று நோக்கும்போது தோற்ற அமைப்பில் இது தலைகீழாக அமைந்த முக்கோணம் போலவே காட்சியளிக்கிறது. தரைத் தோற்ற அமைப்பிலும் பொதுவாகக் கிழக்கே சரிந்துதான் உள்ளது. வட இந்தியாவில் உள்ளது போன்று மிக உயர்ந்த மலைகளோ, மிக நீண்ட ஆறுகளோ, தார்ப்பாலைவனம் போல் அகன்ற மணற்பாலை நிலங்களோ இல்லாத ஒரு பகுதியாகவே தமிழகம் விளங்குகிறது. இது நிலநடுக் கோட்டின் வடக்கில் வெப்ப மண்டலத்தில் அமைந்திருப்பதாலும், மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதாலும், கடலிலிருந்து பருவக்காற்று வீசுவதாலும் சம தட்பவெப்ப நிலையை உடையதாக விளங்குகிறது.

பழந்தமிழர் ஓர் ஆண்டின் காலநிலையை ஆறு பிரிவுகளாகப் பிரித்துப் பார்த்தனர். இவை முறையே கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் ஆகும்.

தமிழகத்திலுள்ள மலைத் தொடர்கள், குன்றுகள், காடுகள், ஆறுகள் ஆகியன இந்நிலப்பகுதியைப் பல்வேறு கூறுகளாகப் பிரித்துள்ளன. இதனையே சங்க இலக்கியங்களில் வரும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் போன்ற நிலப்பிரிவுகள் உணர்த்துகின்றன. இப்பிரிவுகளைத் திருத்தொண்டர் புராணம் பின்வரும் பாடலில் விளக்கிக் கூறுகிறது.

தா இல் செம்மணி அருவியாறு இழிவன சாரல் ;
பூவில் வண்டினம் புதுநறவு அருந்துவ புறவம் ;
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் ;
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.

(திருத்தொண்டர் புராணம், 1083)

(சாரல்=மலைப்பகுதி; நறவு=தேன்; புறவம்=காடு; வாவி=குளம்; நித்திலம்=முத்து; பரத்தியர்=மீனவ மகளிர்; உணக்குதல்=உலர்த்துதல்)

இவ்வாறு பிரித்துக் கூறப்பட்ட நிலப்பகுதிகள் ஒவ்வொன்றும் தனித்தனி உலகமாகவே இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த ஆற்றுப் படுகைகளே வரலாற்றுக் காலத் தமிழக அரச வம்சங்களின் மையமாக விளங்கின. சேரர் பெரியாற்றையும், சோழர் காவிரியாற்றையும், பாண்டியர் தாமிரபரணியையும், வைகையையும் மையமாக வைத்து எழுச்சி பெற்றனர். இம்மூவேந்தரில் பாண்டியர் ஆட்சி செய்த நிலப்பரப்பே பெரிதாகக் காணப்பட்டது. சங்க இலக்கியங்கள் சித்திரிக்கும் நிலப்பாகுபாடு கூட நாகரிக நிலையில் பல்வேறு படிகளிலிருந்த சங்க காலத் தமிழகத்தின் நாகரிகத்தையே எடுத்துக் காட்டுகின்றது. எதிர்வரும் பகுதிகளில் ஐவகை நிலப்பாகுபாடுகளைப் பார்ப்போம்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: ஐவகை நிலங்கள்

on Wed Dec 16, 2015 8:44 pm
குறிஞ்சி
------------


தமிழகத்தின் மலைப்பகுதிகளில் குறிஞ்சிப் பூ அதிகமாகக் காணப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு பழந்தமிழர் மலைகளையும், அவற்றைச் சார்ந்த இடங்களையும் குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். 


தமிழகத்தின் குறிஞ்சி நிலப் பகுதியாக மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், நீலகிரி, பழனி, ஆனைமலை போன்றவற்றைக் கூறலாம். இவற்றுள் மேற்குக் காற்றாடி மலைத் தொடர்கள் அரபிக்கடலை அண்டியும், கிழக்குக் காற்றாடி மலைத்தொடர்கள் வங்கக்கடலைச் சார்ந்தும் அமைந்துள்ளன.


இவ்வகையான மலைகளில் வாழ்ந்த மக்கள் குறவர் என அழைக்கப்பட்டனர். இம்மலைப் பகுதியிலும், அடர்ந்த பெருங்காட்டிலும் யானை, புலி, கரடி போன்ற விலங்குகளும், மயில் போன்ற அழகிய பறவைகளும் காணப்பட்டன. 


சிறுசிறு ஆறுகள், அருவிகள் இக்குறிஞ்சி நிலப்பகுதிக்கு நீர்வளம் தந்தன. இங்கு வாழ்ந்த மக்கள் அவர்களின் நிலப்பகுதியில் அவ்வளவாக மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும் தினை விதைத்தலையும், வேட்டையாடுதலையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இந்நிலப்பரப்பில் முருக வழிபாடு இருந்தது. 


மேலும் வழிபாட்டு நெறிகளாகப் பலியிடுதல், வெறியாட்டு போன்றவை இருந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைச் சிறுகுடி என்று அழைத்தனர். குறிஞ்சி நில மக்களின் தலைவர்கள் வெற்பன், சிலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: ஐவகை நிலங்கள்

on Wed Dec 16, 2015 8:45 pm
முல்லை
------------


காடு அடர்ந்த நிலப்பரப்பே முல்லை நிலமாகும். இந்நிலப்பரப்பிற்கு ஒரு தனித்துவம் அங்கே காணப்படும் முல்லைப் பூவாகும். 

இன்றைய திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள் முல்லை நிலத்தைச் சேர்ந்தவைகளாகும். 

இங்கு வாழ்ந்தோர் ஆயர் அல்லது இடையர் என அழைக்கப்பட்டனர். இவர்களின் முக்கியமான தொழில் ஆடு மாடுகளை மேய்ப்பதாகும். இவர்கள் இந்நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களான பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றைப் பிற நிலப்பரப்பில் உள்ளவர்களிடம் கொடுத்துப் பண்ட மாற்றாகத் தமக்கு வேண்டியவைகளைப் பெற்றனர். 

இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைச் சேரி என்று அழைத்தனர். இவர்களின் தலைவர்கள் குறும்பொறை நாடன் என்று அழைக்கப்பட்டனர்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: ஐவகை நிலங்கள்

on Wed Dec 16, 2015 8:46 pm
மருதம்
-------------


ஆற்றுப்படுகைகள் சேர்ந்த வளமான இடங்கள் மருதம் எனஅழைக்கப்பட்டன. இங்குக் காணப்பட்ட மருதப் பூவே இந்நிலத்திற்கு இப்பெயரை வழங்கியது. 

தமிழக ஆறுகளாகிய காவிரி, பெண்ணாறு, பவானி, நொய்யல், அமராவதி, பாலாறு, தாமிரபரணி, வைகை போன்றன இந்நிலப்பரப்பில் அடங்கும். இந்நில அமைப்பில் அடங்கும் தரை அமைப்பிற்கு ஏற்பத் தமிழக ஆறுகள் வட இந்திய ஆறுகளைப் போல் அல்லாது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியே பாய்கின்றன.

காவிரி ஆறு மைசூர் மாநிலத்திலுள்ள பிரமகிரியிலிருந்து ஊற்றெடுக்கிறது. இவ்விடம் தலைக்காவிரி எனவும் அழைக்கப்படுகிறது. தஞ்சை வரை ஓடி அங்கிருந்து முக்கோண வடிவில் வங்கக்கடலில் இணைகின்றது. கங்கையைப் போன்று காவிரியும் புனித நதியாகக் கருதப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களது தலைநகர்கள் ஆற்றங்கரைகளிலேதான் அமைந்திருந்தன. 

சேர மன்னருள் ஒரு குறிப்பிட்ட மரபினரது தலைநகரான கரூர் அமராவதி ஆற்றங்கரையிலும், பாண்டியரின் தலைநகராகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும் அமைந்திருந்தன.

மருத நிலத்தில் காணப்பட்ட சமமான தரைப் பகுதி, செழிப்புள்ள மண், போதிய நீர் வசதி ஆகியன ஏனைய நிலங்களைவிட இதனை வளமானதாக ஆக்கின. நெல், கரும்பு போன்றவை விளைய ஏற்ற இடமாக அமைந்ததால் இந்நிலப்பரப்பு தன்னிறைவு அடைந்து மக்கள் நிலையாகத் தங்கும் நகர வளர்ச்சிக்கு அடிகோலியது எனலாம். 

இப்பகுதியில் மக்கள் வாழ்ந்த இடங்கள் நகர், ஊர் என அழைக்கப்பட்டன. இம்மக்களின் தலைவர்கள் ஊரன், மகிழ்நன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: ஐவகை நிலங்கள்

on Wed Dec 16, 2015 8:48 pm
நெய்தல்
-----------


நெய்தல் பூவே நெய்தல் நிலத்திற்குத் தனித்துவத்தை அளித்தது. தமிழகத்தைச் சுற்றியுள்ள கடற்கரை நிலப்பரப்பு நெய்தல் நிலமாகும். 

இங்கு வாழ்ந்த மக்கள் பரதவர், நுளையர், வலைஞர் என அழைக்கப்பட்டனர். மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல் போன்றவை இங்கு வாழ்ந்த மக்களின் முக்கியத் தொழிலாக அமைந்திருந்தன.

 பண்டமாற்று முறையே இந்நிலத்தில் நடைபெற்றதாகத் தெரிகின்றது. இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைப் பாக்கம், பட்டினம் என அழைத்தனர். இவர்களின் தலைவர்கள் சேர்ப்பன், புலம்பன் என்று அழைக்கப்பட்டனர்.

கடற்கரைப் பகுதிகளான இந்நிலப் பகுதியில் துறைமுகங்கள் யாவும் அமைந்திருந்தன. கடல் வழியாகப் பல அயல்நாடுகளுடன் வாணிபம் நடைபெற்றது. தமிழகத்து மிளகு முதலிய நறுமணப் பொருள்களுக்கும் முத்துகளுக்கும் ஈடாகப் பொன்னையும், மதுவையும் பண்டமாற்றாகப் பெற்றுச் செல்லக் கிரேக்கரும், உரோமானியரும் மரக்கலங்களில் வந்து சென்றதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

 எளிய மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தாலும் செல்வச் செழிப்பாக வாழ்வைக் களித்தனர். வாணிபம் வளர்ச்சியுற்றதால் துறைமுகப்பட்டினங்கள், நகரங்கள் வளர்ச்சி பெற்றன. 

சேரரின் துறைமுகங்களாக முசிறி, தொண்டி, மாந்தை, நறவு ஆகியன விளங்கின. சோழரின் துறைமுகப் பட்டினங்களாகக் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், பொதுகை அல்லது அரிக்கமேடு ஆகியன விளங்கின. 

கொற்கை, சாலியூர், காயல் ஆகியன பாண்டியரின் துறைமுகங்களாகும். சங்க இலக்கியம் பெருமைப்படுத்திக் கூறும் ‘மருங்கூர்ப்பட்டினமும்’ நெய்தல் நிலப்பரப்பில் இருந்தது.

விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் 
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து’

(அகநானூறு -227: 19 -20)
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: ஐவகை நிலங்கள்

on Wed Dec 16, 2015 8:50 pm
பாலை

பழந்தமிழகத்தின் வறட்சியான நிலப்பரப்பினைப் பாலை நிலம் என அழைத்தனர். 

இப்பகுதியில் காணப்பட்ட பாலைப்பூவே இப்பெயருக்குக் காரணமாக அமைந்தது. மேற்கூறிய நால்வகை நிலங்களும் வறட்சி அடையும்போது அவை பாலை நிலம் என்று அழைக்கப்பட்டன.

முல்லை நிலமாகிய காடுகளும், குறிஞ்சி நிலமாகிய மலைகளும் நெடுங்காலம் மழை பெய்யாமையால் காய்ந்து வறட்சி அடையும் போது பாலை என்னும் நிலப்பரப்பாகக் காட்சி அளிக்கும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

 இந்நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களை மறவர், எயினர், வேடர் எனப் பலவாறு அழைத்தனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதிகளைக் குறும்பு என அழைத்தனர். 

இவர்களின் தலைவர்களாக மீளி, காளை என்ற விருதுப்பெயர் கொண்டோர் விளங்கினர்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: ஐவகை நிலங்கள்

on Wed Dec 16, 2015 8:55 pm
TAMIL DICTIONARY குறிஞ்சி 
-------------------
குறிஞ்சி

n. 1. Hilly tract, one offive kinds of nilam, q.v.; ஐவகை நிலத்துள்ஒன்றாகிய மலையும் மலைசார்ந்த நிலமும். குறிஞ்சியெல்லையி னீங்கி (சீவக. 1563). 

2. See குறிஞ்சிப்பண். குறிஞ்சி பாடி (திருமுரு. 239). 

3. (Mus.) Aspecific melody-type; ஓர் இராகம். (பரத. இராக.56.)

 4. Clandestine union of lovers assignedby poetic convention to the hilly tract; புணர்தலாகிய உரிப்பொருள். குறிஞ்சி சான்ற . . . மலை (மதுரைக். 300). 

5. A poem. See குறிஞ்சிப்பாட்டு. கோல்குறிஞ்சி பட்டினப்பாலை (பத்துப்பா. தனிப்பா.). 

6.Henna. See மருதோன்றி. (மலை.)

 7. A species ofconehead. See பெருங்குறிஞ்சி. (L.) 

8. A speciesof conehead. See சிறுகுறிஞ்சி. (L.) 

9. Thornynail dye. See செம்முள்ளி. (சூடா.)

10. Conehead,

---- 

குறிஞ்சி


மலையும்மலைசார்ந்தஇடமும்; குறிஞ்சிப்பண், ஒருபண்வகை;

 புணர்தலாகியஉரிப்பொருள்; குறிஞ்சிப்பாட்டு; மருதோன்றி; செம்முள்ளி; குறிஞ்சிமரம்; ஈந்துமரம்; குறிஞ்சிப்பூ.

-----

குறிஞ்சி

s. a hilly tract or country, மலை சார் நிலம்; 2. a specific melody type, ஓர் இராகம்; 3. a lute peculiar to agricultural districts, குறிஞ்சியாழ்; 4. clandestine union of lovers in the hilly tract; 5. names of henna, conehead, thorny nail dye; 6. the wild date palm, ஈந்து.
குறிஞ்சித்தேன், wild honey.

குறிஞ்சிவேந்தன், Skanda. Also குறிஞ் சிக் கிழவன், குறிஞ்சிக்கிறைவன், & குறிஞ்சிமன்.

------
குறிஞ்சி

s. A species of large tree in hilly districts, குறிஞ்சிமரம்.
 2. Thorny shrubs growing in marshes, the செம்முள்ளி. 
3. The மருதோன்றி shrub. 
4. A tract of land in a hilly country, one of the five kinds of திணை. 
மலைச்சார்நிலம். 
6. Classes of tunes peculiar to agricultural districts, மருதநிலத்தினோர்வகையிசை.
 7. Tunes peculiar to hilly tracts, குறிஞ்சிநிலத்திராகம். 
8. Lutes peculiar to agricultural districts. மருதயாழ்த் திறம்.
 9. A tune, melody, ஓர்பண் (சது.) 
10. [in love poetry.] Illicit intercourse. (See திணை.) 
11. (Rott.) The ஈந்து palm.

குறிஞ்சிக்கருப்பொருள், s. Men, beasts, birds, vegetables, employments, &c., in digenous and peculiar to hilly tracts; viz.: 

1. குறிஞ்சித்தலைவர், chiefs heads and superiors--as பொருப்பன், வெற்பன், and சிலம் பன் with their females. 

2. குறிஞ்சித்தெய் வம், the god, Skanda. 

3. குறிஞ்சித்தொழில். employments--as sowing mountain paddy, watching the millet, collecting honey, digging up roots, &c.

 4. குறிஞ்சி நீர், mountain streams--as அருவி and சுனை. 

5. குறிஞ்சிப்பண், melody, known by the name of குறிஞ்சிப்பண். 

6. குறிஞ்சிப் பறை, drum--as தொண்டகம். 

7.குறிஞ்சிப் புள், birds--as parrots and peacocks. 

8. குறிஞ்சிப்பூ, flowers--as November flower, &c.

 9. குறிஞ்சிமரங்கள், trees--as வேங்கை, a kind of Pterocarpus, குறிஞ்சிமரம்; சந்தனம், sandal-tree; தேக்கு. teak; அகில், Aquila; அசோகு, Ashoka; புன்னை, Calo phyllum inophyllum.

 10. குறிஞ்சிமாக்கள், inhabitants--as குறவர், கானவர், குறத்தியர். 

11. குறிஞ்சியாழ், lute, known by the name of குறிஞ்சியாழ்திறம்.

 12. குறிஞ்சியுணவு. food --as bamboo rice, மூங்கிலரிசி; mountain rice, ஐவனநெல்; another hill-rice, தோரை நெல்; millet, தினை; bulbous roots, கிழங்கு; honey, தேன், &c. 

13. குறிஞ்சியூர், villages --as சிறுகுடி.

14. குறிஞ்சிவிலங்கு, beasts --as the tiger, bear, elephant, lion, &c.

குறிஞ்சிக்காலம், s. The months of October and November, December and January, in குறிஞ்சி tracts.

குறிஞ்சிமுதற்பொருள், s. As முதற் பொருள் under அகப்பொருள், describing the soil, the season of the year, &c., of hilly places.

குறிஞ்சியுரிப்பொருள், s. As உரிப்பொ ருள் under அகப்பொருள், describing sexual intercourse, See அகப்பொருள்.

குறிஞ்சித்தேன், s. Mountain honey, celebrated for its sweetness.

குறிஞ்சிவேந்தன், s. Skanda--as lord of the hilly country, முருகன்.

நன்றி ;TAMIL DICTIONARY
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: ஐவகை நிலங்கள்

on Wed Dec 16, 2015 8:58 pm
நிலத்தின் வகைகள்
----------------


1. ஆற்றுவைப்பு - ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடியாகும் நிலம்
 2. அருக்கக் கொல்லை - ஆற்றோரத்தில் உள்ள நிலம்
 3. படுகை - ஆற்றோரத்து நிலம். 
4. கரைவழி - ஆற்றோரமான நிலம். 
5. காற்புரவு - ஆற்றுப் பாய்ச்சல் நிலம்.
 6. வெளிவாய்ப் படுகை - ஆறு, குளங்களை அடுத்துப் புறம்பாக உள்ள நிலம். 
7. இறைப்புப் பட்டரை - கிணற்றுப் பாய்ச்சலுள்ள நிலம்.
 8. ஏற்றப்பட்டரை - ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழ்ந்த நிலம். 
9. தூர்வை - கிணற்றைச் சேர்ந்த நிலம். 
10. ஆயக்கட்டு - ஒரு நீர்நிலையை ஆதாரமாகக் கொண்ட நிலம்.
 11. நன்செய்நிலம் - நீர்வளம் நிறைந்துள்ள நிலம். 
12. புன்செய் நிலம் - வானம் பார்த்த நிலம், கொல்லை நிலம்.
 13. அளக்கர் திணை - கடலாற் சூழப்பட்ட நிலம். 
14. வானம் பார்த்த நிலம் - மழைநீரால சாகுபடி செய்யப்படும் நிலம் 
15. எரங்காடு - பருத்தி விளையும் புன்செய் நிலம். 
16. நாற்றங்கால் - விதைகளை விதைத்து நாற்று பயிரிடும் நிலம். 
17. சாட்டி - அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம், உரமிடப்பட்டிருக்கும் நிலம்.

18. குளக்கீர் - குளத்தில் மதகையடுத்துள்ள வயல், குளம் பார்த்த வயல் 
19. நகரி - அரசுக்குரிய புறம்போக்கு. 
20. பெரும்பேறு - அரசுக்குரிமையான நிலம்.
 21. சூன் - புறம்போக்கு நிலம். 
22. குடிவார நிலம் - குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம்.
 23. பள்ளத்தாக்கு - இரண்டு மேடுகட்கு நடுவேயுள்ள நிலம். 
24. பள்ளம் - பள்ளத்தில் உள்ள நிலம், தாழ்ந்த நிலம்.
 25. தில்லியம் - புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம். 
26. உறாவரை - பிறர் உள்ளே வராத எல்லையை உடைய நிலம். 
27. எடார் - வெளிநிலம்.
 28. செய்யுள் - விளைநிலம் 
29. தொய்யில், செறிப்பு - உழுநிலம். 
30. பண்ணை - வயல் 
31. செந்திரம் - செய்தல் நிலம். 
32. பாசல் - பசிய விளைநிலம் 
33. நன்னிலம், நன்செய் - நெல் விளையும் புலம். 
34. படப்பு - கொல்லை. 
35. துடவை - உழவுக் கொல்லை. 
36. விதைப்புனம் - புதுக்கொல்லை.
 37. முதை - பழங்கொல்லை. 
38. பின்ை - வீட்டுக் கொல்லை
 39. திருத்து - நன்செய் நிலம். 
40. தாக்கு - நெல் வயல்.
 41. வற்புலம் - மேட்டு நிலம். 
42. தகர், தராய் - மேட்டு நிலம். 
43. கருஞ்செய் - நன்செய் நிலம்.
 44. காங்கவீனம் - தினைவிளையும் நிலம்.
 45. தினைப்புனம் - தினைவிளையும் நிலம். 
46. மலைப்புனம் - தினைவிளையும் நிலம். 
47. சேற்றுப்புழி - உழப்பட்ட நிலம். 
48. விரைகால் - விதைக்குரிய நிலம். 
49. தடி - சிறு வயல். 
50. காணியாட்சி - உரிமை நிலம்.
 51. காடாரம்பம் - நீர்ப்பாசனமில்லாத நிலம்.
 52. வட்டகை - அடைப்பு நிலம். 
53. எகபலி - ஒருபோக நிலம்.
 54. ஓராண் காணி - ஒருவனுக்கே உரிய நிலம்.
 55. காணி நிலம் - நூறு குழி அளவுள்ள நிலம். 
56. கந்தக விரைப்பாடு - ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம். 
57. முழுமனை - 60 அடி நீளமும் 40 அடி அகலமும் உள்ள நிலம். 
58. அரைக்காணி - நூற்றறுபதில் ஒரு பங்கு.

நன்றி ; பதிவு தளம்
Sponsored content

Re: ஐவகை நிலங்கள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum