தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மேட்டூர் அணை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மேட்டூர் அணை Empty மேட்டூர் அணை

Tue Dec 15, 2015 4:40 pm
சேலத்துக்கு மாம்பழம் போல,  மேட்டூருக்கு மேட்டூர் அணைதான் பெருமை. பரந்து விரிந்து கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணைக்கு விசிட் அடித்து, நாங்கள் தேக்கிய செய்திகள்...
மேட்டூர் அணை P80
மேட்டூர் அணை Red-dot(1) இந்த அணை 20.7.1925-ல் தொடங்கி, 21.08.1934-ல் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது இதுதான் உலகிலேயே உயரமான நேர்க்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கம் மற்றும் ஆசியாவிலேயே பெரிய நீர்த்தேக்கம்.
மேட்டூர் அணை P80a
மேட்டூர் அணை Red-dot(1) இந்த அணையின் பொறியாளர், கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ். 4 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அன்றைய சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி பெயரால், ‘ஸ்டான்லி நீர்த்தேக்கம்’ என்று அழைக்கப்பட்டது.  
மேட்டூர் அணை P80b
மேட்டூர் அணை Red-dot(1) அணையின் மொத்த நீளம் 5,300 அடி. ஆற்றின் படுகை மட்டத்தில் இருந்து 176 அடி உயரம். கீழ்மட்ட மதகின் அடிமட்டத்தில் இருந்து 120 அடி உயரம். உபயோகப்படுத்தும் நீரின் கொள்ளளவு 93.470 டி.எம்.சி. முழுக் கொள்ளளவு 95.660 டி.எம்.சி. 81 ஆண்டுகளில் 38 முறை முழுக் கொள்ளளவை இந்த அணை எட்டியுள்ளது.
 மேட்டூர் அணை P80c
மேட்டூர் அணை Red-dot(1) ஒவ்வொரு வருடமும் அணையின் நீர் இருப்பைப் பொறுத்து, டெல்டா பாசனத்துக்காக, ஜூன் மாதம் 12 முதல் ஜனவரி 28 வரை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணைப் பகுதியைச் சுற்றி 4,000 மீனவக் குடும்பங்கள் உள்ளன.
மேட்டூர் அணை P80d 
மேட்டூர் அணை Red-dot(1) இங்கே உள்ள சுரங்க மின் நிலையத்தில் தினமும் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணை P80e 
மேட்டூர் அணை Red-dot(1) மேட்டூர் அணையின் கீழ்ப் பகுதியில், சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் ‘லேடி ஃபெடெரிக் ஸ்டேன்லி’ பூங்கா உள்ளது. இது, மக்களின் பயன்பாட்டுக்கு 21.08.1934-ல் திறந்துவைக்கப்பட்டது.
மேட்டூர் அணை Red-dot(1) கிராமப்புற மக்களுக்கு சிக்கனமான சுற்றுலா தலமாக இந்தப் பூங்கா உள்ளது. ஆடிப் பெருக்கு, வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறையின்போது, பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் பார்வையிட்டுச், செல்கின்றனர்.
மேட்டூர் அணை P80f
மேட்டூர் அணை Red-dot(1) அணையின் அடிப் பகுதியில் 4,400 அடி நீள சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 2011-ம் ஆண்டு 75 அடி உயர பவள விழா நினைவுக் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது, ஆறு தளங்களைக்கொண்டது. 





மேட்டூர் அணை Red-dot(1) இந்த அணையின் பாதுகாப்புக்காக தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் கழகத்தின் மூலம் 34 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களும் உண்டு.
- -மா.விஜய் ஆகாஷ், எஸ்.ஹரிஸ் பிரசன்னா, எஸ்.தீபிகா, கனிமொழி, சாந்தகுமார் ராஜ், எம்.விஜய், தேவதர்ஷிணி, அம்சவேணி, இளமதி, ஸ்ரீநாத்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum