தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
பாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுToday at 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Today at 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Yesterday at 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுYesterday at 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Yesterday at 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் !*Yesterday at 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்!!Sun Jan 21, 2018 7:21 pmKavithaMohanதைராய்டு நோயை குணமாக்கும் "கண்டங்கத்திரி"Sat Jan 20, 2018 3:39 pmசார்லஸ் mcகாலக் கொடுமை இதுதானோSat Jan 20, 2018 1:01 pmசார்லஸ் mcஉங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?Sat Jan 20, 2018 10:42 amசார்லஸ் mcவேதத்தில் உள்ள மாடுகள்Sat Jan 20, 2018 10:29 amசார்லஸ் mcஒளி வீசுவோம்Sat Jan 20, 2018 10:24 amசார்லஸ் mcஇந்துக்களை ஏமாற்றும் பிராமணர்கள் தந்திரம் பாரீர்Sat Jan 20, 2018 10:11 amசார்லஸ் mcதேவனுடைய வார்த்தைSat Jan 20, 2018 10:02 amசார்லஸ் mcஇஸ்ரேல் விவசாயம்Sat Jan 20, 2018 9:56 amசார்லஸ் mcஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தவசு முருங்கை! Wed Jan 17, 2018 12:34 pmAdminஎதில் என் கவனம்?Wed Jan 17, 2018 12:29 pmAdminபிசாசினால்பிடிக்கப்பட்ட குடும்பங்களின் 12 அடையாளங்கள்...Tue Jan 16, 2018 6:16 amAdminநன்றியுள்ள பிராணியிடம் கற்க வேண்டிய நற்குணங்கள்Sat Jan 13, 2018 9:42 pmAdmin*சாத்தானின் 10​ செயல்பாடுகள்*..! Sat Jan 13, 2018 4:32 pmAdminஅன்பால் இயங்குகிறது பேரண்டம் ; பிற உயிர்களின் மீது அன்பு கொள்வோம்.!Thu Jan 11, 2018 4:37 pmKavithaMohanவீட்டில் இருந்தே ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி?Fri Jan 05, 2018 5:56 pmசார்லஸ் mcபுது பைக் வாங்க - ஒரு ஆலோசனை - பைக் ஒப்பீடுFri Jan 05, 2018 12:47 pmசார்லஸ் mcபுது கார் வாங்க ஆலோசனை - கார்கள் ஒரு ஒப்பீடுFri Jan 05, 2018 12:42 pmசார்லஸ் mcசாத்தானின் 10 வித பொய்கள்Sat Dec 30, 2017 7:45 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
9 Posts - 27%
2 Posts - 6%
Keywords

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
January 2018
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
View previous topicGo downView next topic
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஒருங்கிணைந்த மீன் உடனான கோழி வளர்ப்பு

on Fri Nov 13, 2015 8:35 am

 • அறிவியல் ரீதியிலான மேலாண்மை முறைகளை கொண்டு கோழி பண்ணை அபிவிருத்தி செய்வதில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. கோழி வளர்ப்பு தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பிரபலமான கிராமப்புற நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

 • முட்டை மற்றும் இறைச்சியை தவிர கோழி உயர் மதிப்பு கொண்ட உரத்தையும் அளிக்கிறது.

 • இந்தியாவில் கோழி எரு உற்பத்தி சுமார் 1300 ஆயிரம் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 390 மெட்ரிக் டன் புரதம் அடங்கியுள்ளது.

 • மண் வளர்ப்பில் இது போன்ற உர வளத்தை பெரிதாக  பயன்படுத்தும் போது நிச்சயமாக விவசாயத்தை காட்டிலும் சிறந்த மாற்றத்தை அளிக்கும்.


   மீனின் வைப்பு அடர்த்தி: • குளத்தில் கோழி உரத்தை பயன்படுத்துவதால் அடர்ந்த மலர்ந்த பைட்டோபிளாங்க்டனுக்கு குறிப்பாக தீவிர (zoo plankton) மிதவை வளர்ச்சிக்கு உதவும் நானோ மிதவைகளுக்கு அடிப்படை ஊட்டசத்தை வழங்குகிறது.

 • கோழி எருவின் கரிம பகுதி மீது செழித்து வளரும் பாக்டீரியா விலங்கியல் மிதவைகளுக்கு கூடுதல் உணவு ஆதாரமாக உள்ளது. இவை Phytoplanktophagons மற்றும் zoo plank to phagohs மீன்கள் குளத்தில் வைத்திருப்பதற்கான தேவையை உணர்த்துகிறது.

 • Phytoplankton மற்றும் zoo plankton கூடதலாக குளத்தின் அடியில் கழிவுகள் அதிக உற்பத்தியில் உள்ள. இவை நுண்ணிய உயிரினங்கள் மற்றும் மற்ற கடலடி விலங்கினங்கள் குறிப்பாக க்ரிகோனிமிட் குஞ்சுகள் பெருக மூலக்கூறாக அமைகிறது.

 • இவற்றிற்கும் கூடுதலாக மேக்ரோ தாவர உண்ணி புல் கெண்டை மேக்ரோபைட்ஸ் அற்ற நிலையில் குளத்தின் மூலைகளில் வளர்க்கப்படும் பச்சை கால்நடை தீவணத்தினை உணவாக உட்கொள்ளும்.

 • அரைகுறையாக செரிக்கப்பட்ட மீனின் கழிவு கீழ்வாழ் உயிரினங்களுக்கு உணவாக பயன்படுகிறது.

 • மேற்கண்ட உணவு வளங்களை சுரண்டுவதற்கு பல்கலாச்சார் வாய்ந்த இந்தியாவின் மூன்று முக்கிய கெண்டைகள் மற்றும் மூன்று அயல்ரக கெண்டைகளும் மீன் சார் கோழி வளர்ப்பு குளங்களில் கொண்டு வரப்படுகிறது.

 • குளத்தின் நீரானது முறையாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின் குளமானது வைப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.

 • அதிக மீன் உற்பத்தியை பெற 8000-8500 மீன்குஞ்சுகள்/ஹெக்டேர், மற்றும் 40% மேற்பரப்பு தீவன உயிர்களும், 20% இடைப்பட்ட தீவன உயிர்களும், 30% அடிப்பரப்பு தீவன உயிர்கள் மற்றும் 10-20% களை உண்ணிகள் என்ற சிற்றின விகிதம் வேறுப்பட்ட விகிதங்களில் குளங்களின் வைப்புக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

 • இந்திய கெண்டைகள் மட்டும் கொண்ட கலப்பு உற்பத்தி முறையில் 40% மேற்பரப்பு, 30% இடைப்பட்ட மற்றும் 30% அடிப்பரப்பு உண்ணிகள் என்ற விகிதத்தில் சிற்றினங்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

 • கடும் குளிர் காலங்களில் மீன்கள் வளர்ப்பு பாதிக்கப்படும் என்பதால் இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் குளங்கள் மார்ச் மாதத்தில் வைப்பிற்கு ஆயத்தப்படுத்தப்பட்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

 • இந்தியாவின் தெற்கு, கடலோர மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் குளிர்காலம் மிதமாக இருப்பதால் ஜீன்-செப்டம்பர் மாதங்களில் குளமானது வைப்பிற்கு தயார்படுத்தப்படுகிறது மற்றும் மீனின் 12 மாத அபிவிருத்திக்கு பிறகு அறுவடை செய்யப்படுகிறது.


கோழி எரு உரமாக பயன்படுத்துதல்:
நன்கு கட்டமைக்கப்பட்ட கோழி பண்ணையிலிருந்து அகற்றப்பட்ட கழிவானது மீன் குளதத்தில் உரமாக சேர்க்கப்படுகிறது.
மீன் வளர்ப பண்ணைக்கு கோழி எருவை மறுசுழற்ச்சி செய்யும் இருமுறைகள்
1.கோழி பண்ணையிலிருந்து கோழி எரு சேகரிக்கப்பட்டு, தகுந்த இடங்களில் வைக்கப்பட்டு மற்றும் தகுந்த இடைவெளிகளின் குளங்களில் அளித்தல்.

 • சூரிய உதய்த்திற்கு பின் 50 கி.கி/ஹெக்டேர்/நாள் என்ற விகிதத்தில் குளத்தில் இட வேண்டும்.

 • குளத்தில் எரு இடுதலானது பாசிகள் வளர்ந்துள்ள சமயத்தில் வேறுபடும். இம்முறை வாயிலாக உரமிடுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.


2.கோழி வளர்ப்பு வீட்டமைப்புடன் பகுதி இணைந்த மீன்குளம் மற்றும் மீன் உற்பத்திக்கு நேரடியாக எருவை மறுசுழற்சி செய்யும் கட்டமைப்பு.

 • நேரடி மறுசுழற்சி மற்றும் மிதமிஞ்சிய உரமானது, சிதைவு மற்றும் ஆக்ஸிஜன் குறைபாட்டிற்கு அழிவகுத்து மீன்கள் இறப்பினை அதிகரிக்கும். ஒரு வருடத்தில் 30-40 பறவைகளினால் உற்பத்தியாகும் உரமானது 1 டன் என கணக்கிடப்பட்டுள்ளது.

 • இவை போல 500 பறவைகள், 450 kg மொத்த உயிர் எடை கொண்டவை 25 கி.கி நாளொன்றிக்கு ஈரமான உரத்தை தயாரிக்கும். இவை ஒரு ஹெக்டேர் நீர்பரப்பு கொண்ட பல்உற்பத்தி பெருக்கத்திற்கு போதுமானதாக அமையும்.

 • நன்கு கட்டமைக்கப்பட்ட எருவானது 3% நைட்ரஜன், 2% பாஸ்பேட், மற்றும் 2% பொட்டாஷ் உடையது. கட்டமைக்கப்பட்ட ஆழ்கூளம் பெரிய கோழிப்பண்ணைகளில் கிடைக்கும்.

 • கோழிப் பண்ணைகள் இல்லாத விவசாயிகள் கோழி எருவை வாங்கி தனது பண்ணைகளில் கிடைக்கும்.

 • கோழிப் பண்ணைகள் இல்லாத விவசாயிகள் கோழி எருவை வாங்கி தனது பண்ணைகளில் பயன்படுத்தலாம்.

 • புல்கெண்டைகளுக்கு நீர்வாழ்களைகள் உணவாக அளிக்கப்படுகிறது.

 • மீனின் வளர்ச்சியை சரிப்பார்க்க தகுந்த பருவத்தில் வலையிட வேண்டும். பாசிகளின் வளர்ச்சி குளத்தில் காணப்பட்டால் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

 • மீனின் சுகாதாரமானது சரிபார்க்கப்பட்டு, நோயுற்ற மீன்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.


கோழி வளர்ப்பு முறைகள்:
கோழி முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி செய்வது பல்வேறு காரணிகளை சார்ந்துள்ளது. அவை இனம், கலப்பு, நல்ல கட்டமைப்பு சீரான உணவளித்தல், சுகாதார பராமரிப்பு முதலியன.
அ.பறவைகளுக்கு வீடமைத்தல்:

 • ஒருங்கிணைந்த மீன்சார்ந்த கோழி வளர்ப்பில் பறவைகள் தீவிரமுறையின் கீழ் வைக்கப்படுகின்றன. பறவைகள் முற்றிலும் வீட்டினுள் வைத்து வளர்க்கப்படுகின்றன.

 • தீவிர முறை மேலும் இருவகைப்படும் அவை கூண்டு மற்றும் ஆழ்கூள முறை ஆகும்.

 • கட்டியெழுப்பட்ட ஆழ்கூளத்தில் உரமதிப்பீடு அதிகமாயிருப்பதால் கூண்டு முறையை காட்டிலும் ஆழ்கூள முறை பெரிதும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

 • ஆழ்கூள முறையில் 250 பறவைகள் வளர்க்கப்படும் அதன் தரைப்பகுதி குப்பைகள் (உதிரிகளால்) மூடப்பட்டிருக்கும். உலர்ந்த கரிம பொருட்களான வெட்டப்பட்ட வைக்கோல், உலர்ந்த இலைகள், வைக்கோல், நிலக்கடலை தொக்குகள், உடைந்த சோளத்தண்டு, மரத்தூள் போன்றவற்றைக் கொண்டு 6 இசை ஆழமாவிற்க தரையாது மூடப்பட்டிருக்கும்.

 • பறவைகள் இவைகளின் மீது வைக்கப்படும் மற்றும் ஒவ்வாரு பறவைக்கும் இடையில் 0.3-.0.4 சதுர மீட்டர்கள் இடைவெளி இருக்கும்.

 • காற்றோட்டத்திற்காக குப்பைகள் தொடர்ச்சியாக அரைக்கப்பட்டும் மற்றும் சுண்ணாம்பு இடத்தை உலர்வாகவும் சுகாதாரமும் வைக்கப் பயன்படுகிறது.

 • இரு மாதங்களில் குப்பைகள் ஆழ்கூளமாக மாறும் மேலும் 10 மாதங்களில் அவை முற்றிலும் ஆழ்கூளமாக (உரமாக) மாறும். இவை குளத்திற்கு உரமாக பயன்படுத்தலாம்.

 • அதிக மற்றும் பெரிய முட்டைகளை இடும் தன்மையுடைய கோழிகள் அல்லது அதிக உடல் எடையடைய பிராய்லர் கோழிகளை மீன் வளர்ப்பு கேற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும்.

 • கோழிகள் ஆழ்கூள முறைப்படி தகுந்த சமசீரான உணவினை அதன் வயதிற்கேற்றவாறு அளிக்க வேண்டும்.

 • 9-20 வாரங்கள் வயதுள்ள பறவைகளுக்கு வளர்ச்சி மேஷ் நாளொன்றிற்கு 50-70கி/பறவைக்கு கொடுக்க வேண்டும். மேலும் 20 வாரங்களுக்கு மேற்பட்ட பறவைகளுக்கு நாளொன்றிற்கு 80-120 கிராம்/பறவை என்ற அளவில் அடுக்கு மேஷ் வழங்க வேண்டும்.

 • உணவுப்பொருட்கள் வீணவாவதை தடுக்க உணவு தட்டுகளில் வைக்க வேண்டும். மற்றும் கூண்டை (வீட்டை) சுத்தமாக பேணி பாதுகாக்க வேண்டும்.


ஆ.முட்டையிடுதல்:

 • ஒவ்வொரு முட்டையிடும் கோழியும் முட்டையிட வசதியாக கூண்டுக்குள் வளர்க்கப்பட வேண்டும்.

 • காலியான மண்ணெண்ணெய் டின்கள் கூண்டுகள் அமைக்க சிறந்தது.

 • ஒரு கூண்டில் 5 முதல் 6 பறவைகள் வளர்க்கலாம்.

 • முட்டை உற்பத்தி வாரங்கள் வயதில் துவங்கி, பின் படிப்படியாக குறைந்து விடும்.

 • 18 மாத வயது வரை கோழிகள் அடுக்குகளில் வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கோழியும் 200 முட்டைகள், வருடத்திற்கு இடும்.


இ.அறுவடை:

 • சில மீன்கள் குறைந்த மாதங்களிலேயே விற்பனைக்கேற்ற அளவை எட்டி விடும்.

 • மீனின் அளவு, தற்போதைய விலை மற்றும் உள்ளூர் சந்தைகளில் மீனுக்கான தேவை கருத்தில் கொண்டு பகுதி அறுவடை செய்யப்படுகிறது.

 • பகுதி அறுவடைக்குப் பின், குளத்தினை மீன் விதை இருப்பதற்கேற்ப அதே மீன் இனம் மற்றும் மீன் குஞ்சுகளை கொண்டு மீண்டும் நிரப்ப வேண்டும்.

 • இறுதி அறுவடை 12 மாத வளர்ச்சிக்கு பின் செய்ய வேண்டும். மீன் மகசூல் 6 வகை இனங்களை வளர்க்கும் போது 3500-4000 கி.கி/ஹெக்டேர்/வருடம் எனவும், 3 இனங்களை வளர்க்கும் போது 2000-2600 கி.கி/ஹெக்டேர்/வருடம் எனவும் கிடைக்கும்

 • முட்டைகளை தினசரி காலையம் மாலையம் சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு பறவையும் 1 வருடத்திற்கு 200 முட்டைகளை இடும்.

 • 18 மாதங்களுக்குப் பிறகு முட்டையிடும் திறன் குறையும் போது அவைகளை விற்று விட வேண்டும்.

 • இரண்டு அடுக்கு முறையில் ஒருங்கிணைந்த மீன் மற்றும்  கோழி வளர்ப்புடன் பன்றியும் வளர்க்கலாம். கோழி எரு பன்றிகளுக்கு நேரடி உணவாக அளிக்கப்பட்டு இறுதியாக உரமாக மீன் குளத்தில் இடலாம்.

 • மீன் குளத்தின் அளவு மற்றும் உர தேவைக் கேற்ப, மீன்குளம் ஒரு மேட்டை (அ) வரப்பை கொண்டு இரு குளங்களாக பிரித்தோ அல்லது உலர்ந்த வரப்பின் மீதோ குளத்தை அமைக்கலாம்.

 • மேல் அடுக்கில் கோழிகளையும், கீழ் அடுக்கில் பன்றிகளையும் வளர்க்கலாம்.


கோழிகளுக்கான தடுப்பூசி:
சில நாடுகளில் தடுப்பூசி மற்றும் மருந்துகள் அருகிலுள்ள கால்நடை அலுவலகத்தில், இலவசமாக வழங்கப்படுகிறது. மருந்துகள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.

 • நல்ல Thermoflask மற்றும் சிறிதளவு பஞ்சை கொணரவும்.

 • மருந்தினை வீணாக்காமல் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். தடுப்பு மருந்துகள் அரசினால் பெரும் செலவில் உற்பத்தியாகிறது.

 • தடுப்பூசி மருந்துகளை குறைந்த வெப்பநிலையில் வைத்து, குறிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைத்து அதன் செயல்திறனை பராமரிக்க வேண்டும்.


தடுப்பூசியின் போது தேவைப்படும் உபகரணங்கள்:

 • தடுப்பு மருந்துகளை தூக்கி செல்ல போதுமான Thermoflask.

 • 1.மி.லி இடைவெளி கொண்ட ஒன்று அல்லது இரண்டு நைலான் ஊசி. சிறிய திறனுடைய ஊசி ஏற்புடையது.

 • ஊசியின் பாதை அளவு 20 அல்லது 21 மற்றும் 14 அல்லது 15 கோழி தடுப்பூசிக்கு 1-2 செ.மீ. நீளமுடைய சிறிய ஊசி சிறந்தது. ஒரு சில பெரிய மாற்றம் செய்யப்பட்ட ஊசிகள் பறவைகள் அம்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.

 • அளவிடும் கொள்கலன்.

 • இரு அகன்ற திறப்புடைய புட்டிகள் ஒன்று வடி நீரை கொண்டு செல்லவும்  மற்றொன்று தடுப்பு மருந்தை கலக்கவும் பயன்படுகிறது. இவை நைலான் அல்லது பாலி புரப்பலீனால் தயாரிக்கப்பட்டு நன்கு சூடுபடுத்தி சுத்திகரித்திருக்க வேண்டும்.


தடுப்பு மருந்திடு முன் கவனிக்க வேண்டியவை:

 • தடுப்பூசி, ஊசி மற்றும் மற்ற கொள்கலன்களை சுத்திகரிக்க வேண்டும்.

 • ஐஸ்துண்டுகளை Thermoflask அடிபறத்தில் வைத்து, கலனை, பஞ்சினால் ஒரு அடுக்கு வைத்து, அதனை மூடிக்கொள்ளவும்.

 • தடுப்பு மருந்து சரியாக உள்ளதா அல்லது ஏதேனும் கலப்படமாகி உள்ளதா என சரிபார்ககவும்.

 • தடுப்பு மருந்தினை கரைக்கும் போது வடிநீரை பயன்படுத்தவும். அல்லது 10 முதல் 15 நிமிடங்கள் வெப்படுத்தவும். பின் குளிர்வித்து கலவையை ஒரு தூய கலனில் எடுத்து கொள்ளவும்.

 • சிறிதளவு வடி நீர் மட்டும் சேர்த்து குறிப்பிட்ட அளவு மருந்தினை சுத்திகரிக்கப்பட்ட ஊசியில் எடுத்துக் கொண்டு அதனை சிறிய கலனில் செலுத்தவும். கலனை நன்றாக அசைத்துக் கலக்கவும்.

 • மிதமுள்ள வடிநீரை கலக்கும் கலனில் ஊற்றவும். கலக்கப்பட்ட தடுப்பு மருந்தை ஊசியில் எடுத்துக் கொள்ளவும். அதனை கலக்கும் கலனில் மீதமுள்ள வடிநீரில் ஊற்றவும். நன்றாக சுத்திகரிக்க்பட்ட கலக்கியைக் கொண்டு கலக்கவும்.

 • ஒரு வேளை பறவை அம்மையாயிருப்பின், தேவையான தடுப்பு மருந்தை சுத்தகரிக்கப்ட்ட வெற்று கலனில் (அ) குழாயில் எடுத்துக் கொண்டு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம். இவை வீணான கலப்படத்தையும் மீதமான மருந்து வீணாவதையும் தடுக்கும்.

 • தடுப்பு மருந்தினை தெளிக்க கூடாது அவை கோழிகளுக்கு ஆபத்தாகும்.

 • ஊசியை அதன் மூடியோடு எடுத்துக் கொள், ஊசியின் முனையை தடுப்பு மருந்தேற்றிய முன்போ பின்போ தொடக்கூடாது. அசுத்தமான ஊசிகளை சுத்திகரிக்காமல் பயன்படுத்தக்கூடாது.

 • பறவைகள் நோயுற்ற அல்லது அசாதாரண நிலையில் உள்ள போது பயன்படுத்தக் கூடாது. அவை இயல்பு நிலைக்கு மாறிய பிறகே பயன்படுத்த வேண்டும்.

 • தடுப்பூசி ஒரு நாளுக்கு இருமுறை தரக்கூடாது. இரு தடுப்பூசிகளுக்கு இடையே 10 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

 • தடுப்பூசியிட்ட பதிவுகள் பதிவேட்டில் குறிக்க வேண்டும். ஒரு வேளை நாள் தெரியாதிருப்பின் கரைக்கப்பட்ட தடுப்பு மருந்தை குறுகிய காலத்திற்கு பயன்படுத்தலாம். மருந்து ஒரு பாலிதீன் பையில் வைத்து ஐஸ்  நிரப்பப்பட்ட  Flask ல் வைக்கவும்.

 • அனைத்து உபகரணங்களும் சோப்பை கொண்டு சுத்தமான நீரினால் கழுவி பின் சூடு நீரில் சுத்திகரிக்க வேண்டும்.

 • தகுந்த நேரத்தில் பறவைகளுக்கு தடுப்பு மருந்து  அளித்திட வேண்டும். மீனும் கோழியும் இரட்டை இலாபம்.


 • ஆதாரம்:TNAU


மேலும் தகவல் பெற:
விரிவாக்க கல்வி இயக்ககம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
எம்விசி, சென்னை – 600 051, தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி: + 91-44-25551586 / 87, 25554555/56
View previous topicBack to topView next topic
Permissions in this forum:
You cannot reply to topics in this forum