தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
பைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் !*Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்!!Sun Jan 21, 2018 7:21 pmKavithaMohanதைராய்டு நோயை குணமாக்கும் "கண்டங்கத்திரி"Sat Jan 20, 2018 3:39 pmசார்லஸ் mcகாலக் கொடுமை இதுதானோSat Jan 20, 2018 1:01 pmசார்லஸ் mcஉங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?Sat Jan 20, 2018 10:42 amசார்லஸ் mcவேதத்தில் உள்ள மாடுகள்Sat Jan 20, 2018 10:29 amசார்லஸ் mcஒளி வீசுவோம்Sat Jan 20, 2018 10:24 amசார்லஸ் mcஇந்துக்களை ஏமாற்றும் பிராமணர்கள் தந்திரம் பாரீர்Sat Jan 20, 2018 10:11 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
1 Post - 13%
Keywords

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests :: 1 Bot

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
February 2018
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728    

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

"தரிசனத் தளங்களும் குப்பைக்கூளமும்!

on Wed Sep 23, 2015 8:26 am
கண்ணில் பட்டு அதிரவைத்த செய்தி!

எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

"தரிசனத் தளங்களும் குப்பைக்கூளமும்!
சூடு சுரணை இல்லாத மானங்கெட்ட சமூகமொன்று இருக்குமானால்
அது நமது கிறிஸ்தவ சபை மக்கள்தான்!
எப்படி வந்தோம்,
எவ்வளவு பெரிய கிருபையினால் தேவன் மிஷனெரிகளை அனுப்பி நம்மை, நம் மூதாதயரை இரட்சித்துக்கொண்டார் என்ற வரலாற்றை அறியாதபடியினால், நம்மை கிழிக்க வரும் ஓநாய்களோடும் கைகுலுக்கத் தீர்மானித்துவிட்டோம்.
இன்று உலகில் மனிதர்களைக் கவரும் ஆடைகளோ, அணிகலன்களோ, திரைப்படங்களோ,
டிவி நிகழ்ச்சிகளோ, எதுவாகவுமிருக்கட்டும்,

அவை அனைத்தின்
மூல எண்ணம், நோக்கம்,
அதாவது basic concepts,
"இலுமினாட்டி"கள் என்று சொல்லப்படும், சைத்தானின் இரகசிய சங்கத்தில் அங்கம் வைத்திருக்கும் சாத்தானின் ஏஜெண்டுகளாலேயே இவை அறிமுகப்படுத்தப்படுகின்றன!
"இலுமினாட்டி''களின் முக்கிய தந்திரங்களில் ஒன்று கிறிஸ்தவர்களை கர்த்தரிடமிருந்து பிரித்து
மனிதக் கதாநாயகர்களின் பின் அலையச்செய்வது!
அதில் அவர்கள் அமோக வெற்றி கண்டிருக்கிறார்கள்,
சினிமா உலகத்தில் மட்டுமல்ல கிறிஸ்தவ உலகத்திலும்! 

கிட்டத்தட்ட சினிமா கதாநாயகர்களின் லெவலுக்கு பந்தா பண்ணும் இவர்களே, கூகுள் தலைமுறைக் கிறிஸ்தவர்களை கையிலெடுக்கத் துடிக்கும் நவீனகால ஓநாய்கள்!
யாரிவர்கள்?
"கிறிஸ்தவ ஆராதனை வீரர்களாகவும்,
தெய்வீக சுகமளிப்பவர்களாகவும் தங்களைக் காட்டிக்கொள்ளும் திருடர்கள்"
பட்டணங்களையெல்லாம் குழப்பியாகிவிட்டது,

இபோது சிறு நகரங்களையும் கிராமங்களையும், குறிப்பாக விசுவாசிகள் அதிகம் வாழுமிடங்களுக்கு விருப்பத்தோடு வருகிறார்கள், 
எனென்றால் கூட்டம் அலைமோதவேண்டும் இவர்களுக்கு, அப்போதுதான் புகைப்படங்களை எடுத்து அப்புகைப்படங்களை ஸ்பான்ஸர்களிடம் காட்டி காசுபார்க்க முடியும்!
மேடைகளில் எலியாக்களாகவும், எலிசாக்களாகவும் முழங்கும் இவர்கள் மேடைகளுக்குப் பின்னால் 'தெலீலாள் மடி சிம்சோன்'கள்! இவர்களில் பாதிப்பேரின் மனைவியர் பிரிந்துபோய்விட்டார்கள், இவர்களின் சாட்சியற்ற ஜீவிதத்தினால்..........!

சிலர் இரண்டு பொண்டாட்டிக்காரர்கள்,

இன்னும் பலர் ரகசியக் குடிகாரர்கள்,

பலருக்கும் பல பெண்களோடும் உடல் தொடர்பு இருக்கிறது, பணவிஷயத்தில் அத்தனைபேரும் பழம்போட்டு கொட்டை போட்டவர்கள், உண்மையான கணக்கும் காட்டுவதில்லை, அரசாங்கத்துக்கு
சரியான வரியும் கட்டுவதில்லை!

ஓரிருமுறை பிடிபடுவோமோ என்ற அச்சத்தில் ரூபாய் நோட்டுகளை எரித்த கள்ளர்கள்!
அடிக்கடி தாய்லாந்திற்கோ அல்லது இன்னபிற நாடுகளுக்குகோ போய்
மசாஜ் என்ற நவீன விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள்! பணவெறியர்கள்!
புகழ் வெறியர்கள்! காமவெறியர்கள்!
இவர்களின் ஆராதனை நிகழ்ச்சிகள் பொதுவாக பெரும் அலறல் சத்தங்களுடனும்,
ஆடல் பாடல்களோடு அவ்வப்போது ஆட்டும் அரைகுறை நடன மங்கையரோடும், போலித்தனமான புகை கக்கும் இயந்திரங்களோடும், கண்ணைப்பறிக்கும் விதவிதமான பிரம்மண்டமான வெளிச்சந்தரும் விளக்குகளோடும் இருக்கும்,
அத்தனையும் சைத்தானின் தூதுவனாகிய மைக்கேல் ஜாக்ஸனிடமிருந்து அப்பிக்கொண்டு வந்த அசிங்கங்கள்!
பெரும்பாலும் இவர்களின் கூட்டத்தை நிறைப்பவர்கள் பெந்தேகோஸ்தேக்காரர்கள். ஆனால் தந்திரமாக இவர்கள்
CSI மைதானங்களையே தேடித்தேடி வருவார்கள்.

நம் பிஷப்புகளையே தலைமைதாங்க வைப்பார்கள்!
கக்கூஸ் கட்டினாலும் 'நாந்தேய்ன் திறந்து வைப்பேன்'
என் பெயர்தான் கல்வெட்டில் வரவேண்டும் என
"பெயருக்கு" ஆசைப்படும் நம்ம தலைமைகளும் ஈ ஈ என இளித்துக்கொண்டு, உப்புச்சப்பில்லாமல் நாலுவார்த்தைகளில்,
இந்த ஓநாய்களைப்புகழ்ந்து தள்ளி,
ஒரு பொன்னாடைபோட்டு அல்லது வாங்கி, செங்கோல் சகிதம் வீற்றிருப்பார்கள் மேடைகளில்!
பிரதான மேய்ப்பனே மேடையிலிருக்கிறார் நாங்களென்ன .....? என கேள்வி கேட்டு நம் மேய்ப்பர்களும், ஆடுகளும், குட்டிகளும் மளமளவென்று மைதானத்தை நிறைப்பார்கள்!

ஓநாய்களின் திட்டம் மெகா சக்ஸஸ்!
பெரும் இரச்சலோடும், புகையோடும், ஆடல்பாடல் தொடங்கும், ஓநாய்கள் ஊளயிடும், விசிலடிக்கும்,

நம் பெண்பிள்ளைகளை, மேலாடைகளைக் கழற்றச்சொல்லி தலைக்குமேல் சுற்றி சுற்றி ஆடச்சொல்லும்! பிள்ளகள் என்ன செய்வார்கள்? மாஸ் ஹிஸ்டிரியாவில் பீடிக்கப்பட்டு ஆடுவார்கள்! அபிசேகம் என்பார்கள்,

ஆவியின் அனல் என்பார்கள். தாவீது நிர்வாணமாக ஆடினான் நீ ஆடையோடாவது ஆடு என்பார்கள். தேவன் விசிலடித்து அழைக்கிறார் என சகரியாவிலிருந்து ஆதாரம் காட்டுவார்கள்.

புரியாத ஆடுகள் வாய்பிளக்கும்!

சொன்னதை எல்லாம் செய்யும்! கூட்டமுடிவில்
"ச்ச கலக்கிட்டாங்க, இவிய்ங்கதான் உண்மையான தேவ மனுசங்கயா" என ஏமாறும்;
ஆடுகள் அடுத்த வாரம் ஆராதனைக்கு வரும்.

"இங்கு ஆவி இல்லை பிரதர்"
என கொட்டாவிவிடும்!
குறை சொல்லும்.

ஓநாய் புகழ் பாடும். "தன்னாலியன்றதை
அந்த ஓநாய்களுக்கு அனுப்பிவைக்கும்"
ஆண்டவரின் பெயரச்சொல்லும் அத்தனைபேரும் ஊழியர்கள், அவர்களைச் சாடுவது பாவம் என்று சொல்லும்!

பிசாசுகளும்
"ஆண்டவரை நீர் தேவனுடைய பரிசுத்தர்" என்று கூறி இருக்கிறதே, அப்படியானால் பிசாசுகளையும் தேவனுடைய ஊழியர்கள் எனச் சொல்லலாமா என்று கேட்டால்,
"பே பே " என்று பிதுங்கும்!
ஓநாய்களும் இயேசுவைத்தான் சொல்லுவார்கள், அவரைத்தான் பாடுவார்கள், அவரைத்தான் ஆராதிப்பார்கள்! ஆனால் இரட்சிப்பைக்குறித்து வாய்திறக்கமாட்டார்கள்! பரிசுத்தத்தைக்குறித்து பேசவேமாட்டார்கள்!

ஆவியின் கனியை ஒளித்துவிடுவார்கள்!

சாட்சியின் ஜீவியத்தை குழிதோண்டி புதைத்துவிடுவார்கள்,

மிஷனரிகளையோ அவர்களின் தியாகங்களையோ நினைவுபடுத்தமாட்டார்கள்,

CSI என்றால் ஆவியற்ற கூட்டம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு செல்வார்கள். அந்த ஆவியற்ற கூட்டத்தைக் கொண்டு கர்த்தர் இந்திய தேசத்தில் எவ்வளவு அருட்பணிகளை செய்கிறார் என்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்!
நம் ஆலயங்களுக்குள்
இவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழக்கப்பட்டு சமயங்களில் செய்தியும் கொடுத்துவிட்டுச்செல்கிறார்கள். ஆனால் அவர்களது ஆலயங்களின் மேடைகளில் ஒருபோதும் நம்மவர்களை ஏற்றவே மாட்டார்கள்! பரிசுத்தம் கெட்டுவிடும் என்பார்கள்!
தூங்கும் திருச்சபைகள் அல்லது செத்துப்போன சபைகள் என இவர்களால் வருணிக்கப்படும்

CSI சபைகளின் காணிக்கை வேண்டும், மக்கள் கூட்டம் வேண்டும், அடுத்த தலைமுறை இளைஞர்கள் வேண்டும்.
பெரும் தொழில் செய்து பொருளீட்டும் வியாபாரிகள் வேண்டும்,

ஆனால் அவற்றின் ஆழ்ந்த
இறை இயல் வேண்டாம்!
இறை மக்கள் வேண்டாம்.
இரத்த சாட்சியாக மடிந்த மிஷனரிகளின் வரலாறுகள் வேண்டாம். இன்றய மிஷனரித்தலைவர்கள் வேண்டாம்! நல்ல இலக்கியங்கள் வேண்டாம்! 

எச்சரிக்கை!
"எக்கச்சக்கமான குப்பைக்கூளங்களை" அள்ளிக்கொண்டு மீண்டும் இக்கூட்டம் சாயர்புரம் வந்துபோயிருக்கிறது!
போய் உட்கார்ந்திருப்பீர்கள், உங்கள் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு போயிருப்பீர்கள்,
இயேசுவுக்கு ஓ போட்டிருப்பீர்கள்!
நியாத்தீர்ப்பின் நாளில் அவர் உங்களுக்கு "ஐயோ" போடுவார்!!
எச்சரிக்கை!!!

-Christian awareness. Tamil Nadu.
புதியவன் வியாசர் லாரன்ஸ்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum