தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
விழிமூடும் கத்தோலிக்கர்கள் விண்ணுலகம் சேர்வார்களா?Tue Nov 21, 2017 10:04 pmசார்லஸ் mcவேதத்தில் இல்லாததை போதிக்கலாமா?Tue Nov 21, 2017 10:00 pmசார்லஸ் mc அறிந்தும் தவறுசெய்தால்?.....Tue Nov 21, 2017 9:50 pmசார்லஸ் mcதூதர்களுக்கு வணக்கம் செலுத்துவது இயேசுவுக்கு பிடிக்காத காரியம்Tue Nov 21, 2017 9:48 pmசார்லஸ் mcமரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?Tue Nov 21, 2017 9:45 pmசார்லஸ் mcகல்லறைகளுக்கு முன்பாக அல்ல.......!Tue Nov 21, 2017 9:42 pmசார்லஸ் mcகுழந்தை இயேசு - ஒரு விளக்கம்Tue Nov 21, 2017 9:39 pmசார்லஸ் mcஇயேசு சொன்ன கல் - கத்தோலிக்கம் சொன்ன கல்?! எது?Tue Nov 21, 2017 9:38 pmசார்லஸ் mcவிவிலியத்தில் கத்தோலிக்க சபை எங்கே உள்ளது?Tue Nov 21, 2017 9:34 pmசார்லஸ் mcஅழகிய பறவைகள்Sun Nov 19, 2017 9:08 amAdminஜெபத்தைப்' பற்றிய ஒரு கருத்துSun Nov 19, 2017 8:37 amAdminதக்காளி ரசம் !!!Sun Nov 19, 2017 8:33 amAdminவில்லியம் டின்டேல் William tyndaleSun Nov 19, 2017 8:31 amAdminவெட்கப்படாத ஊழியக்காரர்களாயிருக்கSun Nov 19, 2017 8:29 amAdminதொடர்ந்து இருக்க அனுமதிப்பாரா? Sun Nov 19, 2017 8:28 amAdminநாம் யாருக்கு முதலிடம் கொடுக்கிறோம்?Sun Nov 19, 2017 8:27 amAdminகசப்பான வைராக்கியம்Sun Nov 19, 2017 8:26 amAdminஅவனுக்காக நான் மரிக்கிறேன்Sun Nov 19, 2017 8:25 amAdminநீ பண்ண வேண்டிய பிரயாணம்Sun Nov 19, 2017 8:25 amAdminகண்கவர் கிராமத்து ஓவியங்கள்Sat Nov 18, 2017 6:07 pmசார்லஸ் mcஎங்கே நீயாகவே விழுந்து விடுவாயோ என்றுSat Nov 18, 2017 2:26 pmசார்லஸ் mcRSS உருவான பிறகே அயோத்தியில் ராமர் பிறந்தார் - வரலாற்றில் பாதுகாக்க வேண்டிய காணொளி....!!Sat Nov 18, 2017 10:15 amசார்லஸ் mcகார் சாவியை உள்ளே வைத்து விட்டால் திறப்பது எப்படி?Sat Nov 18, 2017 10:13 amசார்லஸ் mcயெகோவா விட்னஸ் மற்றும் யோகாSat Nov 18, 2017 10:12 amசார்லஸ் mcஅழகான சில வரிகள்Sat Nov 18, 2017 10:10 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
54 Posts - 64%
Keywords

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

Social bookmarking
Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
November 2017
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
View previous topicGo downView next topic
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16012
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவம் வெளிநாட்டு மதம். அதை ஏன் இந்தியாவில் பரப்புகிறீர்கள்?

on Sat Jul 25, 2015 4:13 am
உங்கள் வீட்டிலிருக்கும் சுவர் கடிகாரம், Wrist Watch, Mobile Phone, Computer, Printer, Water Heater, TV, Washing Machine, Micro Wave Oven, Cooker, Refrigerator, Air Conditioner, Mixie, Fan, Grinder, Tube Light எதுமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. இவற்றை உயோகிக்காமல் உங்களால் வாழ முடியுமா? 


வீட்டை விட்டு வெளியே வந்தால் Bicycle, Auto Rickshaw, Car, Bus, Motor Bike, Train, Aeroplane, Helicopter-ல் பயணம் செய்கிறோமே, இவை எதுவுமே இந்தியர்கள் கண்டுபிடித்தவை அல்ல. உண்மையான தேசபக்தி என்பது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றை மட்டும் பயன்படுத்துவதா? அது இனவெறி அல்லவா? 


ஒரு ஆஸ்பத்திரிக்கு போனால் அதற்குள் நீங்கள் பார்க்கும் எல்லா பொருட்களையும் கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் அல்லவா! உங்கள் குழந்தைக்கு நோய் வந்தால், அதற்கான மருந்தை வெளிநாட்டுக்காரர்கள் கண்டுபிடித்ததால், அந்த மருந்தே வேண்டாம் என்று தீர்மானிப்பீர்களா? 


இரத்ததானம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தவர்கள் வெள்ளையர்கள் தான். அதை வெள்ளையர்கள் கண்டுபிடித்ததால் இந்தியர்கள் இரத்ததானம் செய்வது தவறு என்று கூறப்போகிறீர்களா? 


வெளிநாட்டு மொழியான ஆங்கிலத்தை நீங்கள் உபயோகிக்காமல் ஒரு நாளைத்தாண்ட முடியுமா? Paint, Cement, Rubber, Orange, Apple வாங்கும்போது தமிழில் கேட்டுவாங்கும் பச்சைத்தமிழர்கள் உங்களுக்கு யாரையாவது தெரியுமா?


 வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு, இன்று அந்த வெள்ளையர்களிடமே போய் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை கேட்டு கெஞ்சி நிற்கிறோமே! நாம் தன்மானம் உள்ளவர்களா? அல்லது மானங்கெட்டவர்களா? பணமுள்ள நீங்கள் உங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில்தான் படிக்க வைக்கிறீர்கள், பணம் இல்லாத ஏழைகள் தங்கள் குழந்தைகளை வேறுவழியின்றி தமிழ்ப் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். இங்கிருந்து நம் இளைஞர்கள் அமெரிக்கா, U.K, ஆஸ்திரேலியா என்று வேலைக்குப் போய், அங்குள்ள வெள்ளைக்காரர்களை திருமணமே செய்கிறார்களே! இதை தேசதுரோகம் என்று கூறமுடியுமா? 


இந்திய அரசாங்கம் கொடுத்த உதவிப் பணத்தைப் பயன்படுத்திப் படித்த லட்சக்கணக்கான இந்தியர்கள் பிழைப்பிற்காக வெளிநாடுகளுக்கு போய் வேலை செய்கிறார்களே, இதை சரி என்கிறீர்களா, தவறு என்கிறீர்களா? அவர்கள் தேசப்பற்று அற்றவர்களா? நின்று நிதானமாக யோசியுங்கள். 


இன்று இந்தியரில் பெரும்பான்மையானவர்கள் அணியும் Coat, Pant, Tie இவை எல்லாம் இந்திய ஆடையா? இப்படியிருக்க இயேசுநாதருடைய அகிம்சை கொள்கையை, அந்த கருணாமூர்த்தியின் அன்பு ஆலோசனைகளை நாம் ஏன் வெளிநாட்டு சரக்கு என்று புறக்கணிக்க வேண்டும்? 


நல்ல விஷயத்தை ஒரு குழந்;தை சொன்னாலும் ஏற்றுக்கொள்பவன்தான் பெரிய மனிதன். இன்று இந்துமுன்னணி, பஜ்ரங்தள், பாரதிய ஜனதா கட்சி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, இந்து மகா சபை, விஷ்வ ஹிந்து பரிஷத் என்னும் கட்சியினர் இந்தியாவில் கிறிஸ்தவத்தைப் பரப்பக்கூடாது என்று கூறுகின்றனர். ‘மதமாற்றம் தேசிய குற்றம்’ என்று வாதாடுகிறார்கள். நான் கேட்கிறேன்: இந்தியாவிலிருந்து இந்துக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களை இந்துக்களாக மாற்றுவதைத் தவறு என்று இவர்கள் சுட்டிக்காட்டுவார்களா? 


இந்திய விவேகானந்தர் அமெரிக்க சிக்காகோவில் உரையாற்றியபோது அங்குள்ளவர்கள் “இவன் இந்தியன், இவனை அடித்து துரத்து” என்று கூறினார்களா? பரந்த மனப்பான்மை உடையவனுக்கு யாதும் ஊரே, யாவரும் உறவினர், உலகம் என் சொந்த ஊர் என்பது மூச்சு மந்திரமாயிருக்கும். 


மதுரை அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் நடக்கும் ஜல்லிக்கட்டு என்னும் ஆபத்தான, மூடத்தனமான விளையாட்டில் எத்தனை ஆயிரம் வாலிபர்களைக் காவு கொடுத்துவிட்டோம்! எத்தனை லட்சம் இளைஞர்களை ஊனப்படுத்திவிட்டோம்! இந்த அநியாயத்தை தவறென்று எந்த நாட்டுக்காரன் சுட்டிக்காட்டினால் என்ன?


இலங்கை அரசு அங்கிருக்கும் தமிழர்களை வதைத்து, தங்கள் இனவெறிக்கு பல்லாயிரங்களை பலியாக்கிக்கொண்டிருப்பதை மதுரைத் தமிழன் மீடியாவில் தட்டிக் கேட்பதை தேசத்துரோகம் என்று கூறுகிறீர்களா? 

ஈரான், ஈராக் என்னும் நாடுகளுக்கிடையே போர் நடந்தபோது செத்து மடிந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைத்து குமரிமாவட்ட மக்கள் குமுறவில்லையா? 


ராஜபாளையத்தை சார்ந்த ஆவரம்பட்டியிலுள்ள டிப்ளமோ படிப்பு முடித்த முரளி கிருஷ்ணன் என்ற வாலிபரை ஜீவசமாதி என்ற பெயரில் உயிரோடு புதைத்த சம்பவம் கேட்டு, காவல் நிலையத்தினர் விரைந்து சென்று குழியிலிருந்து அவரை மீட்டனர். இந்த ‘உயிரோடு புதைக்கும்’ கலாச்சாரத்தை தவறென்று எந்த நாட்டுக்காரன் நம்மை அறிவுறுத்தினால் என்ன? 


தெய்வங்களை திருப்திப்படுத்துவதாக நினைத்து கொண்டு, தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளையே நரபலி கொடுக்கும் கொடூர பாரம்பரியத்தை தவறு என்று எந்த நாட்டுக்காரன் குற்றம் சாட்டினாலென்ன? இந்தியாவில் சோதிடர்கள், சாமியார்கள், மந்திரவாதிகளுடைய வார்த்தைகளை தெய்வவாக்காக நினைத்து மூடநம்பிக்கையால் ஆயிரங்கள் மாண்டு போகிறார்களே! இந்த அவலநிலையை இந்தியாவில் பத்திரிக்கைகள், அரசியலறிஞர்கள், சமூகஆர்வலர்கள், உரத்த சிந்தனையாளர்கள் ஆயிரமிருந்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லையே! இதை வெளிநாட்டுக்காரன் சுட்டிக்காட்டுவதில் தவறு என்ன இருக்கிறது?


130 கோடி மக்கள் இருக்கும் நமது பரந்த பாரதத்தில் ஒரு வேளை உணவுகூட சரியாக இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் கஷ்டப்படும்போது பாலபிஷேகம், நெய்யபிஷேகம், அன்னாபிஷேகம் என்று கோடிக்கணக்கான பணத்தை வீணாக்குவது அநியாயமென்று யார் சுட்டிக்காட்டினால் என்ன? தவறை யார் செய்தாலும் தவறுதானே!


விவேகானந்தர் என்ற வங்காள பிராமணர் அமெரிக்க சிக்காகோவுக்கு சென்று அங்குள்ள வெள்ளைக்காரர்களை, “சகோதரர்களே, சகோதரிகளே” என்று அழைத்து உரையாற்றினார் என்று பெருமையாக பேசுகிறார்கள். வெள்ளைக்காரர்களை “சகோதரர்களே” என்று அழைத்த விவேகானந்தர், இந்திய நாட்டிலுள்ள தலித் இந்துக்களை “சகோதரர்களே” என்று அழைக்க முடியுமா?


 ஒரு தலித், ஒரு பிராமணருடைய வீட்டில் நுழைந்தால் அதை மனதார அனுமதிக்கும் மனப்பக்குவம் இங்குள்ள பிராமணர்களுக்கு உண்டா? அப்படியே அவர்களை உள்ளே அனுமதித்தாலும் அவர்கள் எதுவரைக்கும் போகிறார்களோ அதுவரைக்கும் ஜலம் விட்டு கழுவி விடுகிறார்களே! இதுதான் மனிதநேயமா? 


இந்த ஈனத்தனமான ஜாதிவெறியை ஒழிக்கவேண்டுமென்று யார் சுட்டிக்காட்டினாலென்ன? மதவெறி பிடித்த இந்துக்கள் இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ ஆராதனைத் தலங்களை சேதப்படுத்தி, பாதிரியார்களைக் கொன்று, கன்னியாஸ்திரீகளைக் கற்பழித்த கொடுமைகள், எல்லா வரலாற்று அறிவுள்ள இந்தியர்களுக்கும் தெரியும். 


அதனால்தான், இந்துத் தீவிரவாத கட்சிகளுக்கு, பகுத்தறிவும் மனசாட்சியுமுள்ள எந்த இந்துக்களும் வாக்களிப்பதில்லை. இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே உரியது’ என்று கூறும் மதவெறியர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்தியாவைத்தவிர மற்ற எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா இந்தியர்களையும் இந்தியாவிற்கு திரும்பி வரச் சொல்ல முடியுமா? அவர்கள் வந்தால், இந்திய கிறிஸ்தவர்கள் எல்லாருமே அமெரிக்காவுக்கு போய்விடுகிறோம்.

- Benjamin Thomas Pastor
View previous topicBack to topView next topic
Permissions in this forum:
You cannot reply to topics in this forum