தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
உங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 50%
பார்வையிட்டோர்

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அன்ரோயிட் போனிலுள்ள நமக்குத் தெரியாத சில வசதிகள்…

on Thu Jul 09, 2015 10:08 am
           


 இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் அன்ரோயிட் இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, அன்ரோயிட் சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம். அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் அன்ரோயிட் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.போனுடன் வந்த மென்பொருள்

மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய மென்பொருள் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் மென்பொருள் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன. இவற்றை bloatware packing அல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கணனியிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் “All” என்பதனைக் காணவும். இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும்.

குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக:

மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலது மேலாகச் செல்லவும். சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும். இங்கு “Bandwidth management” என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Reduce data usage” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும்.

ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு:

நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில் அன்ரோயிட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.

டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு:

ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம். மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம்.

காட்சியை அழகுபடுத்த 

உங்கள் அன்ரோயிட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl. இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும். இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.

தானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை:

ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன் ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது. திரையின் ஒளி விடும் தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின் சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும்.

கீ போர்ட் மேம்படுத்தல்:

பெரும்பாலான அன்ரோயிட் போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word prediction வசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு:

அன்ரோயிட் சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக் காட்டப்படுவதாகும். லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த நிகழ்வுகள் (,upcoming appointments), பேட்டரியின் மின் திறன் அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும். இவற்றுடன் மேலும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை அமைக்கலாம். போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும். அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.

அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த: 

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும். இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும். குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் “Show notifications” என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது.

முக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர:

உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு “Manage labels” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள் மீது டேப் செய்திடவும். தொடர்ந்து “Sync messages” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Sync: Last 30 days” என்பதற்கு மாற்றவும். இறுதியாக, “Label notifications” என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.

திரைக் காட்சி ஸூம் செய்திட: 

பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம். பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில் காட்டப்படும். ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டைப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில் Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு “Force enable zoom” என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.

மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இவை அனைத்துமே, உங்களுக்கு எப்போதாவது தேவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.ளுக்கு எப்போதாவது தேவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: அன்ரோயிட் போனிலுள்ள நமக்குத் தெரியாத சில வசதிகள்…

on Thu Jul 09, 2015 10:11 am
அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எச்சரிக்கை!


ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் தம்மை புகைப்படம் எடுத்து மகிழ்வது சாதாரண விடயமாகும்.

இதில் சில அந்தரங்கமான விடயங்களையும் புகைப்படம் எடுத்து பின்னர் அதனை அழித்து விடுவார்கள்.
ஆனால் அவ்வாறு அழித்த பின்னரும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளிலிருந்து குறித்த படங்களை மீட்டெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உதாரணமாக eBay தளத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 20 அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளில் Avast நிறுவனத்தின் விசேட மென்பொருள் ஒன்றினைப் பயன்படுத்தி 40,000 அந்தரங்க புகைப்படங்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை அன்ரோயிட் மென்பொருளை உற்பத்தி செய்யும் கூகுள் நிறுவனம் 3.0 பதிப்பு பிந்திய இயங்குதளங்களில் அழித்த புகைப்படங்களை மீட்டெடுக்க முடியாது என தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேபோன்று புதிய iPhone மற்றும் iPad களிலும் இதே பிரச்சினை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum