தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
December 2018
MonTueWedThuFriSatSun
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16176
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கட்டுமான செலவைக் குறைக்க அரிய 35 டிப்ஸ்கள்

on Thu Jul 02, 2015 2:27 am
கட்டுமான செலவைக் குறைக்க பில்டர்ஸ் லைன் கட்டுமான மாத இதழ் அளிக்கும் அரிய 35 டிப்ஸ்கள் :

என்ன விலை கொடுத்தாவது ஒரு வீட்டைக் கட்டுவோம் என்ற எண்ணம் நம் மனதை விட்டுப் போவதே இல்லை. இங்கு சொல்லப்பட்டிருக்கும் டிப்ஸ்கள் நிச்சயம் உங்களது பட்ஜெட்டில் 10 சதவீதத்தையாவது மிச்சப்படுத்தும் என்பது உறுதி.

நிலம் வாங்கும் போது : 

1. எந்த வழக்குகளிலும், வில்லங்கத்திலும் இல்லாத நிலத்தை, நல்ல லொகேக்ஷன் பார்த்து வாங்குங்கள். இதற்காக ஆகும் வழக்கஷூஞர் செலவை, செலவாகக் கருதாதீர்கள்.
2. நெடுஞ்சாலைக்கு அருகே அரசுக்கு சொந்தமான இடங்களுக்கு அருகே நிலங்களை வாங்குவதைத் தவிருங்கள். நீங்கள் நிலம் வாங்கும் பகுதிக்கருகே அரசின் எதிர்காலத் திட்டங்கள் என்ன? என்று விசாரியுங்கள்.
3. நிலம் வாங்குவதற்கு முன்பே, அந்த நிலத்தை நீங்கள்தான் வாங்கப் போகிறீர்கள் என்பதை அப்பகுதி மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவியுங்கள்.
4. மனை வாங்கிய கையோடு காம்பவுண்டு சுவர் கட்டுகிறீர்களோ இல்லையோ, சுற்றிலும் மரக்கன்றுகளை நடுங்கள். கட்டு
மானத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
5. கூடியவரை மனையின் தண்ணீர் வளத்தை தெரிந்துகொள்ளுங்கள். கிணற்று நீர் உப்பு நீராக இல்லையெனில், கட்டுமானத்திற்கு வெளியில் இருந்து நீர் வரவழைக்க வேண்டியதில்லை.
6. மனையின் தோற்றம் சதுரமாகவோ, செவ்வகமாகவோ இருக்கு
மாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

அஸ்திவாரத்தின் போது :

7. கட்டுமானம் துவங்குவதற்கு முன்பாக நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள மனையின் மண்பரிசோதனை, அதன் தாங்குதிறன் பரிசோதனை ஆகியவற்றைச் செய்வதன் மூலமாக குறைந்த செலவில் அடித்தளம் அமைக்கலாம்.
8. பெஸ்ட் கண்ட்ரோல் செய்யாமல் அஸ்திவார வேலைகளைத் துவங்காதீர்கள். என்றென்றைக்கும் உங்கள் கட்டிடம் நிலைத்திருக்க பெஸ்ட் கண்ட்ரோல் மிக அவசியம்.
9. ஸ்டிரக்சுரல் பொறியாளரின் ஆலோசனைப்படியே அஸ்திவாரத்தை டிசைன் செய்யுங்கள்.

திட்டமிடும்போது :

10. எதற்கு அவசரப்பட்டாலும் வீடு கட்டுவதற்கு அவசரப்படாதீர்கள். ஒரு மாதமல்ல, இரு மாதமல்ல ஆறு மாதங்கள் வரைகூட யோசித்து உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து வீட்டின் முகப்பினையும், உள் அமைப்பையும் இறுதி செய்யுங்கள்.
11. எத்தனை தடவை வேண்டுமானாலும், மாற்றி மாற்றியோசியுங்கள். ஆனால், ஒரு தடவை இறுதி செய்து விட்டால், பிறகு எக்காரணம் கொண்டும் மாற்றாதீர்கள்.
12. வீட்டின் எல்லா பகுதிகளிலும் கனமான சுவர் இருக்க வேண்டுமென அடம் பிடிக்காதீர்கள்.
13. அதிகபட்ச அளவு வீட்டில் காற்றோட்டமும், வெளிச்சமும் வரக்கூடிய வகையில் வீட்டின் வரைபடத்தை திட்டமிடுங்கள்.
14. உங்களது எதிர்கால தேவைகளுக்கும் ஏற்றாற்போல இப்போதே வீட்டின் அளவையும், வடிவத்தையும் நிர்ணயித்து விடுங்கள்.
15. எந்தெந்த உபயோகங்களுக்கு, எந்தெந்த பிராண்டட் பொருட்களை உபயோகிப்பது என்பதையும் முன்கூட்டியே திட்டமிட்டு விடுங்கள். சிக்கனமான கட்டிடம் என்பது தரம் குறைந்த பொருட்களால் கட்டுவதல்ல, என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
16. வீடு கட்டத் தேவையான பணத்தை முழுவதையுமே கடனாக வாங்கிவிடலாம் என எண்ணாதீர்கள். குறைந்தது 40 சதவீத நிதியாவது நீங்கள் கையில் வைத்திருந்தால்தான் வீடு கட்ட மனைப்பக்கமே போக வேண்டும்.
17. வீட்டின் எல்லா சதுர அங்குலங்களிலும் ஆடம்பரமே வெளிப்பட வேண்டும் என எண்ணாதீர்கள். செருப்புகளை விடும் முகப்பு படிக்கட்டிற்கு இத்தாலியன் மார்பிள் எதற்கு?

வீடு கட்டும் போது :

18. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.
19. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள் அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.
20. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி?முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.
21. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்ச
மாகும்.
22. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.
23. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரஹப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.
24. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், U.PVC, மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளை பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.
25. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.
26. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட எம்.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
27. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.
28. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொறியாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.
29. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.
30. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.
31. பழைய பொருட்கள் என்பதை கேவலமாக நினைக்காதீர்கள்.
மறுசுழற்சி பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை உங்கள் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
32. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.
33. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.
34. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்
மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.
35. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்திற்குப்
பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum