தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
November 2018
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16176
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிவில் துறையில் பொறியாளர் சிறந்து விளங்க 40 டிப்ஸ்கள்

on Thu Jul 02, 2015 2:18 am
சிவில் துறையில் பொறியாளர் சிறந்து விளங்க பில்டர் லைன் அளிக்கும் 40 டிப்ஸ்கள் :

1.படிக்கும்போது நமக்கு இருக்கும் கல்வி அறிவு வேறு. ஆனால், அதே சமயம் களப்பணிக்குள் நுழையும்போது நாம் கற்க வேண்டிய கல்வி வேறானது. இன்னும் சொல்லப்போனால் களப்பணியில் நாம் நுழையும்போது அங்கு பயன்படுத்தப்படும் பல்வேறு வார்த்தைகளையும், உபகரணங்களையும், பணி முறைகளையும் நாம் கல்லூரியில் அறிந்தே இருக்க மாட்டோம். எனவே, நீங்கள் புதிதாகக் கேட்கிற எந்த விக்ஷயத்தையும் குறிப்பேட்டில் எழுதிப் பழகுங்கள். நீங்கள் எழுதும் விக்ஷயங்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்றால் உங்களது களப்பணி அறிவு விரிவாகிறது என்று பொருள்.

2. களப்பணியில் நுழைவதற்கு முன்பே ஒரு புராஜெக்ட் பொறியாளருக்குத் தேவையான அனைத்து விதமான கணினி சார்ந்த படிப்புகளையும் கற்றுத் தேறிவிட வேண்டும்.

3, கல்லூரியின் செய்முறைக் கல்வியின் போது நீங்கள் எடுத்து வைத்திருந்த குறிப்புக்களை தற்போதைய களப்பணியுடன் ஒப்பிட்டுப் பார்க்க பழக வேண்டும்.

4. தன்னுடைய துறை மட்டுமல்லாது, தன்னுடைய துறை சார்ந்த 
மற்ற பணிகளான மண் பரிசோதனை, பெஸ்ட் கன்ட்ரோல், நீரோட்டம் கண்டறிவது, நிலத்தை அளவிடுவது, ஸ்ட்ரக்சுரல் வடிவமைப்பு, கட்டுமான ரசாயனங்களின் பயன்பாடு, ஆர்க்கிடெக்டின் செயல்திறன், இன்டிரியர் அலங்காரம், கார்டனிங் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற பணிகள் சார்ந்த அறிவினை ஒரு சிவில் பொறியாளர் ஓரளவிற்கேனும் கற்றிருக்க வேண்டும்.

5.பிளம்பிங், எலெக்ட்ரிகல், பெயிண்டிங், கார்பென்டிங், கிரில் போன்ற பணிகளைப் பற்றி நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

6. எடுத்த உடனே நான் ஒரு சிவில் பொறியாளர் என்ற நினைப்பிலிருந்து தன்னுடைய பணியினை ஒரு சைட் சூப்பர்வைசர் நிலையிலிருந்து செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

7. சிவில் டிராயிங் மற்றும் ஸ்ட்ரக்சுரல் டிராயிங் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். பிளான்படி நடைமுறைப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். கட்டுமானம் வரைபட அளவுகளின்படி கட்டப்படுகிறதா? என்று கண்டறியப்பட வேண்டும்.

8. எந்த வேலையை, எந்தத் தேதிக்குப் பிறகு, எவ்வாறு வரிசைவாரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

9. முதற்கட்டப் பணிகள் மற்றும் அஸ்திவாரப் பணிகளுக்கான அனைத்து வேலைகளையும் செயல்முறைப்படுத்த அறிந்திருக்க வேண்டும்.

10.மண்ணின் தன்மைக்கேற்ப அஸ்திவாரம் அமைத்திட வேண்டும். சாயில் டெஸ்ட் செய்து அதன் ‘N’ வேல்யூ எவ்வளவு என்று தெரிந்திருத்தல் அவசியம். அதன் பிறகு கட்டுமானத்தின் உயரம் எவ்வளவு என்று தெரிந்து அதற்கேற்ப அஸ்திவாரம் அமைத்திட வேண்டும்.

11.கான்கிரீட் பணி களின் போது அதில் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் தரத்தையும், அளவுகளையும் சரியான விகிதத்தில் கலந்திடவும், எந்த கிரேடு சிமெண்ட் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். அது டிராயிங்கில் உள்ள கிரேடுதானா? என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

12. கல், மணல், சிமெண்ட், தண்ணீர் எல்லாமே எடை அளவுகளின்படி கலந்து கொள்ள வேண்டும். பாக்ஸ் அளவு முறையில், கொள்ளளவு முறையில் கலப்பது கூடாது.

13. பிரிக் ஒர்க்கின் போது கட்டுமானத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு அதை தண்ணீரில் நனைத்து பயன்படுத்த வேண்டும். உலர் செங்கல் பயன்பாடு கூடாது.

14. காரை விகிதம் சரியான அளவில் இருக்கிறதா? என்று கண்கானிக்க 
வேண்டும்.

15. செங்கல் கட்டுமானத்தின்போது, செங்குத்தாக கட்டப்படுகிறதா? என்று சரி பார்க்க வேண்டும்.

16. கட்டுமானப் பணிகளின் போது பணிகள் தடைபட நேர்ந்தால், அதற்கான மாற்று வழிகள் மாற்று உபகரணங்கள், கருவிகள் முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும்.

17. ஏற்கனவே திட்டமிடப்பட்ட அறையினுடைய அளவுகள் கட்டு
மானத்தின்போது சரியாக கண்காணிக்கப்பட வேண்டும்.

18. Form work erection-ஐ செய்யும்போது ஓட்டை உடைசல், சந்து பொந்துகள் இன்றியும், சென்ட்ரிங் பலகைகள் அல்லது தகடுகள் சமமானதாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

19. பயன்படுத்தக்கூடிய கம்பிகளின் விட்டங்கள் சரியான அளவில் இருக்கிறதா? தேவையான இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கிறதா? துருப்பிடித்தோ, கிரீஸ், ஆயில் போன்றவை இல்லாமல் இருக்கின்றதா? என்றும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

20. கட்டிடத்தின் செட்பேக் அளவுகள் எதிர்காலத்தில் எவ்வளவு இருக்க வேண்டுமென்று கருத்தில் கொண்டு அமைத்திட வேண்டும். Front Setback, Rear Setback, Side Setback மற்றும் எதிர்கால சாலைகள் விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு அமைத்திட வேண்டும்.

21. Measurement Diagonal யி செய்து, அறைகள் மற்றும் சுவர்களின் இணைப்பு அளவுகள் Perpendicular-90 Degree ஆக இருக்கும்படி அமைத்திடல் வேண்டும்.

22. கட்டுமானத்தின் உயரத்திற்கு ஏற்றாற்போல் அதன் தாங்குதிறன் எவ்வளவு? என்று கணக்கிட்டு அதன்படி அமைத்திட வேண்டும். தேவையற்ற சுமைகளைத் தவிர்க்க வேண்டும்.

23. மாடிப்படிகள் அமைக்கும்போது உயரம், நீளம், அகலம் மிகத் துல்லியமாக அமைத்திட வேண்டும்.

24. ஒவ்வொரு அறையையும் காற்றோட்டமாக அமைத்திட வேண்டும். வெண்டிலேக்ஷன் 12 சதவீதத்துக்கு மேல் அமைத்திட வேண்டும்.

25. கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களையும் ஆய்வக சோதனைகளுக்குப் பிறகே பயன்படுத்துதல் வேண்டும். கட்டுமானப் பொருட்களின் தரத்தை அளவிடுதல் பற்ஷூ தெரிந்திருக்க வேண்டும்.

26. Sand analysisவி செய்து செட்டில்மென்ட் செய்ய வேண்டும். Consolidation ஐ செய்யும்போது Earth Rammer கொண்டு நன்றாக செய்திட வேண்டும். இதை சரியாகச் செய்யவில்லையெனில் ஃப்ளோரிங் உட்கார்ந்து விடும்; கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்படும்.

27. எல்லோருக்கும் முன்பாகவே, அதாவது காலை 8.30க்கு சைட்டிற்குச் செல்ல வேண்டும்.

28. முதல் நாள் செய்த கட்டிடப் பணி அல்லது ஒரு வாரத்
திற்கு முன்பு செய்து முடிக்கப்பட்ட கட்டிடப் பணிகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிறதா? என்று கண்காணிக்கப்பட வேண்டும்.

29. சிமெண்ட் இருப்பை கணக்கிட வேண்டும். ஏதேனும் திருடப் பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.புராஜெக்டைச் சுற்றிலும் உள்ள காவலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

30. கலவை போடும்போது சரியான விகிதத்தில் கலக்கப்
பட்டிருக்கின்றதா? என்று கண்காணிக்க வேண்டும்.

31.சாரம் கட்டும்போது பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளதா? என்று கவனிக்க வேண்டும். சாரத்தில் பணிபுரியும் போது, பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துகிறார்களா? என்று முழுமையாக கண்காணிக்க வேண்டும்.

32. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அசௌகரிய குறைவு யாவை? என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும்.

33. அன்றாடம் கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர் மீதக் கலவை எங்கேனும் கொட்டிக் கிடக்கிறதா? வீணடிக்கப்பட்டிருக்கிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.

34. நாள் ஒன்றுக்கு கட்டிடத்திற்கு 3 முறை க்யூரிங் செய்வதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும்.

35. கான்கிரீட் சம்பந்தப்பட்ட காலம், பீம் போன்றவைகளுக்கு சாக்கு கட்டி தண்ணீர் ஊற்ற வேண்டும்.

36. சைட்டிற்குத் தேவையான பொருட்களின் இருப்பை தினமும் கணக்கிட வேண்டும். தேவையானவற்றை ஒரு வார காலத்திற்கு முன்பாகவே கொள்முதல் செய்து வைத்திட வேண்டும்.

37. கான்ட்ராக்டர், மேஸ்திரி போன்றோருடன் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் அவர்களது ஆலோசனைக்கு செவி சாய்க்க வேண்டும்.

38.நாள்தோறும் அறிமுகமாகும் நவீன தொழிற்நுட்பங்கள், இயந்திரங்கள், இரசாயனங்கள் ஆகியன பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும்.

39.கட்டுமானத் துறை சார்ந்த, கருத்தரங்குகள், கண்காட்சிகள் ஆகியவற்றிற்கு தவறாமல் செல்ல வேண்டும்.

40. கட்டுமானத்துறை சார்ந்த செய்திகளை இணையம், பத்திரிகைகள் வாயிலாக எப்பொழுதும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum