தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
தத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை! ஏன்?Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயா!Mon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc "பிழைக்க தெரியாத மனுஷன்" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests :: 1 Bot

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
July 2018
MonTueWedThuFriSatSun
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16176
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பரலோகத்தைப் பார்த்தேன்

on Mon Jun 15, 2015 4:00 pm
தலைப்பைப் பார்த்தவுடன் அடுத்த கதையா என்று நினைக்க வேண்டாம். பரலோகத்தைப் பார்த்தேன், பரலோக அனுபவங்கள், பரலோக தரிசனம், என் பரலோகப் பயணம் என்று தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களாக ஏகப்பட்ட கதைகள் பலர் கூறவும், அவர்கள் கூறியதைக்கேட்டி பலரும் பரவச அனுபவம் அடைதையும் அனுதினமும் வாசிக்கக கேட்டிருக்கிறோம். இதில் பெரும்பாலான கதைகள் ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு பாஸ்டர் பார்த்ததாகவும், தென்னமெரிக்க தேசத்தில் ஒரு இளம் பெண் பார்த்து வந்ததாகவும் அமைந்திருக்கின்றன. நம் ஊர்க் கதைகளும் நமக்குப்பரிச்சயம். கானா நாட்டைச்சேர்ந்த பாஸ்டர் ஒருவரது அனுபவம் என்று whatsapp-ல் ஒரு கதை பயணித்துக் கொண்டிருக்கிறது.

வசனங்கள் எவையும் இம்மாதிரி அனுபவங்களை ஆதரிப்பதாக இல்லை. அப்படி சிலர் காட்டும் வசனங்களும் பொருத்தமானதாக இல்லை.

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை என்று யோவான் 3:13 ல் கிறிஸ்துவே தெளிவாகக் கூறியிருக்க இவர்கள் பெறும் அனுபவங்கள் எல்லாம் என்ன வகை? 

இதைப்பாஸ்டர் பால் பிரபாகர் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்ன விளக்கம்:

நம் அடிமனதில் அசைபோட்டுக்கொண்டே இருக்கும் காரியங்கள் நம்மையும் நம் குணங்களையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இது மனோத்தத்துவ ரீதியில் ஆராயப்படுமபோது வெகுசிலருக்கு மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸார்டர் (Multiple Personality Disporder) என்பது உருவாக்கிகொண்டிருப்பது தெரியவரும். 

நம் அனைவருக்குமே பரலோகத்தைக்குறித்த வாஞ்சை இருந்தாலும், சிலருக்கு மாத்திரம் அதைக்கற்பனை செய்துபார்க்கும் அதீதவிருப்பமும் அதைக்குறித்த அதிகப்படியான போதனைகளும் கிடைக்கின்றன. சிலர் பரலோகம் முழுவதும் தரை தங்கத்தால் ஜொலிஜொலிக்குமா என்று வியப்பதுடன் நிறுத்திக் கொள்வார்கள். சிலர் மட்டும் இன்னொரு எக்ஸ்ட்ரீமுக்குச் (extreme)சென்று விடுகிறார்கள்; தாங்கள் அங்கு சென்றுவிட்டதாகவே உணர்கிறார்கள். இதில் உருவாகும் உருவகங்கள்தான் போலிப் பரலோக தரிசனங்களும் அனுபவங்களும, இதையே சரடாகக்கோர்த்து கதை விடுபவர்களும். 

இதில் எளியமக்களும் விழுவது சாத்தானின் வஞ்சகத்தில் தான். மத்தேயு 13:25ல் கிறிஸ்து சொல்கிறபடி மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான் என்பது இதுதான். பெரும்பாலான அனுபவங்கள் தூங்கும்போது கிடைத்ததாகவும், நள்ளிரவில் நடந்ததாகவும் இருக்கக்காரணம் இதுதான்.

காலம் சமீபம் என்ற எச்சரிக்கை கிறிஸ்துவை அறிந்த அனைவருமே விசுவாசித்திருக்க புதிது புதிதாக வெளிவரும் இப்படிப்பட்ட அனுபவங்கள் தரும் பலன் என்ன? இவைகள் ஆவிக்குறிய வளர்ச்சி தருமா? தனிப்பட்ட நபர்கள் கூறும் இவ்விதமான அனுபவங்கள் வேதத்துடன் ஒத்துப்போகிறதா?

இவற்றை நம்புகிறவர்கள் மேற்சொன்ன யோவான் 3:13 ஐ - கிறிஸதுவின் வார்த்தைகளை மறுதலிக்கிறார்களா?

இங்கு நமக்குக் கிடைக்கும் போலிப் பரவசங்கள் அல்ல; பாவத்தினுன்று விடுதலைபெற்றுப் பரலோக வாழ்வை எதிர்னோக்கிய பரிசுத்த வாழ்வின் அனுபவங்களே இன்றைய தேவை.

ஒரு ஊருக்குச்செல்லும் போது குழந்தைகள் மகிழ்ச்சியடைவது இயல்புதான். ஆனால் சொப்பனத்தில் ஊரைப்பார்த்துவிட்டேன் என்று இ்ங்கே புளகாங்கிதப்பட்டுக் கொண்டு பஸ்ஸில் ஏறாமல் இருப்பது பரிதாபமல்லவா?

ரோமர் 10:6 கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்?


நன்றி: சகோ.பென்னி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum