தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
குண்டூசி  இரட்சிப்பு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

குண்டூசி  இரட்சிப்பு Empty குண்டூசி இரட்சிப்பு

on Fri Jun 12, 2015 8:21 am
ஒரு ஊரிலே ஒரு கோடீஸ்வரன் ஒருவன் இருந்தான். தன்னிடம் எத்தனை கோடி ரூபாய் இருக்கிறது என்பதைக் காண்பிக்க வீட்டின் மேல் அத்தனை கொடி கட்டி வைத்தானாம். இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அவனை விடவில்லை. சேர்த்துக் கொண்டேயிருந்தான்.


ஒரு நாள் அவனைச் சந்திக்க ஊழியர் ஒருவர் சென்றார். ஊழியத்திற்கு காணிக்கைக் கேட்டுத்தான் வந்திருக்க வேண்டும் என்று அந்த செல்வந்தன் எண்ணினான். ஆனால் வந்த ஊழியரோ அந்த செல்வந்தனிடம் ஒரு குண்டூசியைக் கொடுத்து, 'ஐயா இதை பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள். பரலோகம் வரும்போது அங்கே வந்து அதை உங்களிடம் வாங்கிக்கொள்கிறேன்' என்று கூறி புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதன் அர்த்தம் தெரியாமல் செல்வந்தர் திகைத்தபோது செல்வந்தனின் மனைவி அர்த்தம் சொன்னாளாம். "ஐயா நீங்கள் எத்தனை கோடி சம்பாதித்தாலும், மாடி மேல் மாடி கட்டினாலும் பூமியிலிருந்து செல்லும்போது எல்லாவற்றையும் விட்டு விட்டுத் தான் போக வேண்டும். ஒரு குண்டூசியைக் கூட உங்களால் பரலோகம் கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்த்தவே இந்த ஊழியர் இப்படிச் செய்திருக்கிறார்'' என்று சொன்னாளாம். எத்தனை அர்த்தம் நிறைந்துள்ளது பார்த்தீர்களா.


அப்படியானால் சம்பாதிப்பதும், சேமிப்பதும் தவறா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். தவறல்ல. எது முக்கியம்? சம்பாதிக்கவும், சேமிக்கவுமே நேரத்தை செலவிட்டு நித்தியத்தைக் குறித்து எண்ணமற்றுப் போனால் பிரயோஜனமில்லையே. உலகைப் பற்றி அக்கறை தேவைதான். ஆனால் அதைக் குறித்த கவலை தேவையில்லை அது அர்த்தமற்றதும் கூட.

சகோதரர்களோ! ஓடி ஓடி பேரரசுகளை கைப்பற்றின பேரரசர் அலெக்ஸாண்டர் தான் சாகும் போது ஒன்றையும் கொண்டுபோகவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தும்படி கைகள்
இரண்டும் விரித்து சவப்பெட்டியில் கொண்டு செல்லுங்கள் என்று சாகும் முன்பே கூறினாராம்.


"பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும் இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்; பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை'' மத் 6:19,20
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum