தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
வெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
June 2018
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இரத்தத்தை உறைய வைக்கும் பயங்கரம்

on Sat Feb 14, 2015 10:06 am
http://www.iraqinews.com/features/exclusive-isis-document-sets-prices-christian-yazidi-slaves/
http://shoebat.com/2014/11/04/just-discovered-isis-charges-people-172-sex-one-year-old-infants-nine-year-old-children-read-new-price-list-isis-just-released/

இந்த வலைப்பகுதிகளை படித்த பின் என் கண்களில் கண்ணீர் நிற்கவில்லை. ஏன் இந்த மனிதன் இத்துனை மிருகமாய் மாறிவிட்டான்? என்ற கேள்வி மட்டும் எழுந்து கொண்டே இருந்தது. 

கிறிஸ்தவ பெண்கள் விர்ப்ப்பனைக்கு என்ற ஓர் செய்தியை நோடீஸ் அடித்து இஸ்லாமிய ஆண்களுக்கு விநியோகித்து இருக்கிறது isis என்ற பிசாசின் அடிமைகள். போர் என்ற பெயரில் சொந்த நாடினரையே சூறையாடிய இந்த கும்பல் பெண்களையும் குழந்தைகளையும் சூறையாடியதை பல நிறங்களில் உங்களுக்கு தொகுத்திருக்கிறோம்.

ஆனால் இதை பல இஸ்லாமியர்களும் என்னுடைய இன்பாக்ஸ் ல் மறுத்தனர். இது உண்மை அல்ல என்றும், இந்த இயக்கம் யாரையும் கற்பழித்து கொலை செய்யவில்லை என்றும் கொலைகார கும்பலுக்கு ஆதரவு கரம் நீட்டினர். அவர்களுக்கு உண்மையை புரிய வைக்கும் வண்ணமாக isis தீவிரவாதிகள் பதிவு பெற்ற, தீவிரவாதிகள் பெண்களை வாங்குவதற்கு தயாராய் இருக்கும் காட்சியையும் இந்த வலைத்தளங்களில் காணலாம். 

http://elbadil.com/2014/11/04/بالفيديو-جرائم-داعش-في-العراق-وسوريا-ا/
http://syrianow.sy/index.php?d=26&id=114133
http://shoebat.com/2014/11/04/just-discovered-isis-charges-people-172-sex-one-year-old-infants-nine-year-old-children-read-new-price-list-isis-just-released/

youtube ல் காண https://www.youtube.com/watch?v=IogLjfnerhI

இந்த நோட்டீசில் உள்ளது என்ன? தமிழாக்கம்

விற்பனை விலை - விற்கப்படும் பெண் செல்வங்கள்

இஸ்லாமிய நாட்டிற்காகவும், போரிடும் வீரர்களுக்காகவும் சந்தையில் பெண்கள் குறைந்த விலைக்கு விர்க்கபடுவார்கள் என்பதை தெரிவித்துகொள்கிறோம். வணிகத்துறை விற்கப்படும் பெண்களுக்கு நிலையான விலையை குறித்திருக்கிறார்கள். ஆதலால் ஏலம் எடுப்பவர்கள் சட்டத்திற்கு உட்படவேண்டும், மீறும் பட்சத்தில் கொலை செய்யப்படுவார்கள்.

விலை (தினார் மதிப்பில்) வியாபாரச் சரக்கு 
75,000 தினார் 30 - 40 வயதுள்ள கிறிஸ்தவ பெண்கள் 
100,000 தினார் 20-30 வயதுள்ள கிறிஸ்தவ பெண்கள் 
150,000 தினார் 10 - 20 வயதுள்ள கிறிஸ்தவ பெண்கள் 
50,000 தினார் 40 - 50 வயதுள்ள கிறிஸ்தவ பெண்கள் 
200,000 தினார் 1-9 வயதுள்ள கிறிஸ்தவ பெண்கள் 
ஒருவருக்கு அதிகமாக 3 செக்ஸ் அடிமைகள் ஏலம் எடுக்கலாம். இதிலிருந்து துருக்கி, சிரியா மற்றும் அரபு நாட்டை சேர்ந்தவர்களுக்கு விளக்கு அளிக்கப்படுகிறது.

இப்படி கொடுத்துள்ள தீவிரவாதிகள் இந்த ஏலத்தை பல நிலைகளில் நடத்தி உள்ளனர். இந்த கும்பலிடம் மாட்டி இருக்கும் யஸ்டி இனத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் கிறிஸ்தவ பெண்களும் அடங்குவர். இவர்கள் சுமார் 2000 பேருக்கும் மேல் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்த கும்பலிடம் மாட்டி கொண்ட மேல் நாட்டு இஸ்லாமிய பெண்கள் பலரும் இன்று கர்ப்பமாக உள்ளனர். http://english.alarabiya.net/en/variety/2014/09/12/UK-female-jihadists-run-ISIS-sex-slave-brothels.html
என்று அராபிய செய்தி நிறுவனம் கணக்கேடுத்துள்ளது. 
http://www.straitstimes.com/news/asia/south-east-asia/story/malaysian-women-offer-their-bodies-isis-militants-sexual-jihad-repor

இந்த தீவிரவாத இயக்கம் பகிரங்கமாக "இஸ்லாமிய பெண்கள் உடல் உறவிற்கு வேண்டும்" என்றும் அறிவித்தது http://www.clarionproject.org/news/isis-issues-orders-mosul-give-over-girls-sex-jihad

இந்த isis படையில் இணைந்த இஸ்லாமிய பெண்கள் பலரும் உடல் உறவிற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளனர் http://www.christianpost.com/news/muslim-women-joining-isis-to-offer-sexual-jihad-to-comfort-fighters-teenage-girl-describes-her-experience-as-brutal-rape-125452/

isis தீவிரவாதிகளின் உடலுறவு பசியை போக்க இங்குள்ள இஸ்லாமிய பெண்களே விடுதிகளை நடத்தி வருகின்றனர். http://english.alarabiya.net/en/variety/2014/09/12/UK-female-jihadists-run-ISIS-sex-slave-brothels.html

போரில் கைப்பற்றப்படும் பெண்கள் போரில் ஈடுபடும் ஆண் isis தீவிரவாதிகளுக்கு இறையாக்கப்படுகின்றனர். இதை இந்த இயக்கத்தின் பாதுகாவல் அதிகாரி நேரடியாக தெரிவித்தார். http://www.christianpost.com/news/isis-security-official-claims-virgins-separated-from-captured-women-given-as-award-to-fighters-128355/

இதில் குழந்தைகளும் கடத்தப்படுகின்றரா? அவர்களும் பாலுறவிற்கு உட்படுத்தப்படுகின்றனரா? ஆதாரம் இதோ....http://www.aina.org/news/20140825114750.htm
http://nypost.com/2014/11/03/isis-fighters-laugh-about-buying-and-selling-female-yazidi-slaves/
http://www.christiantoday.com/article/yazidi.and.christian.women.slaves.sold.for.27.isis.document.reveals/42626.htm

https://www.youtube.com/watch?v=IogLjfnerhI

இந்த கானொளியில் ஒருவர் ஏலம் எடுக்கப்படும் பெண்கள் வாய் சரியாய் இல்லை என்றால் சுட்டு கொலை செய்யப்படவேண்டும் என்று கூறுகின்றனர். அந்த அளவிற்கு இவர்கள் மனதை சாத்தான் குருடாக்கி விட்டான். 

இந்த காணொளியை பல இஸ்லாமிய நண்பர்களிடம் காண்பித்தேன். அவர்கள் தீவிரவாதிகள் விளையாட்டாய் பேசுவதாய் கூறினார்கள். எனக்கு மிகவும் ஆச்சரியமாய் போய்விட்டது. இந்த அளவிற்கு இங்குள்ள இஸ்லாமியர்களின் மனதும் குருடாக்கப்பட்டதை குறித்து வேதனை அடைந்தேன். இப்போது இந்த விலை பட்டியல் உலக வெளிச்சத்திற்கு வந்ததும் முன் பேசிய இஸ்லாமியர்கள் இப்போது isis இயக்கம் இஸ்லாமிய இயக்கம் அல்ல என்று மறுக்கிறார்கள். 

ஆனாலும் இந்த பகுதியை பல இஸ்லாமிய நண்பர்கள் படித்து வருகின்றனர். பலரும் கேள்வி கேட்பதால் அவர்களுக்கு வேதாகமத்தின் படியும் உலக நடைமுறைப்படியும் தெளிவான காரியங்களை எடுத்து வைக்க தேவன் உதவி செய்து வருகிறார். பல இஸ்லாமியர்கள் உண்மையை புரிந்துள்ளனர். அவர்களை தொடர்ந்து தேவனுக்குள் வழிநடத்தி வருகிறேன். இந்த பதிவும் அவர்கள் இயேசுவின் அன்பையும், நோக்கத்தையும் முழுவதும் அறிந்துகொள்ள உதவும் என்று தேவனுக்குள் விசுவாசிக்கிறேன். 

இயேசு கிறிஸ்து எல்லோரையும் நேசியுங்கள் என்று தான் கூறி இருந்தார். இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட இருள் நிலைகளில் இருந்து வெளியே வர தொடர்ந்து ஜெபியுங்கள்.

முக்கியமாக அடிமைகளாக விற்கப்படும் கிறிஸ்தவ குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக பாரத்தோடு ஜெபியுங்கள்.

யோவான் 15:2. நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது

அல்லாஹ்வை / கடவுளை நேசிக்கிறோம் என்று கூறும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் எப்படி மற்ற பெண்களின் கற்பை விற்கிறது? 

1 யோவான் 4:20. தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

தன அருகில் இருக்கும் சகோதிரியை காப்பாற்ற மனம் இல்லாமல் அவர்களை செக்ஸ் அடிமைகளாக விற்கும் பிசாசின் குணத்தை வேதாகமம் பொய்யன் என்று கூறுகிறது. இந்த பொய்க்கு பிதா பிசாசு என்றும் வேதாகமம் எழுதி வைத்துள்ளது. 

காலத்தியர் 5:19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
21. பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இப்படிப்பட்ட வேசித்தனத்தை வெளிப்படையாக செய்யும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் தாங்கள் நிச்சயம் சொர்க்கம் போவதாக கூறுகின்றனர். 

இது மட்டும் அல்ல, தேவன் கொடுத்த பத்து கற்பனைகளில் ஒன்று "பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக" என்பதே. ஆனால் இங்குள்ள்ள இஸ்லாமியர்கள் திருமணம் முடிந்த பெண்களையும் திருமணம் ஆகாத பெண்களையும் தனித்தனியாக பிரித்து ஏலம் விடுகின்றனர். இதில் திருமணம் ஆன பெண்கள் குறைந்த விலைக்கு போகின்றனர். அதுவும் அவர்களின் அழகை பொறுத்தே விலைபோகும். 

கணவனை கொலைசெய்து மனைவியையும் பெண் பிள்ளைகளையும் தூக்கி வந்துள்ள இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் இன்று விதவைகளையும் இந்த ஏலத்தில் நிறுத்தி உள்ளது 
ஆனால் வேதாகமம் இதை கடுமையாக எச்சரிக்கிறது. ஏசாயா 1:17. நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.

பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும் போது 1 தீமோத்தேயு 5:1,2 முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,. முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து, புத்திசொல்லு.

முதிர்வயதுள்ளவர்களை தாயை போல பார்க்கவேண்டுமாம். இது வேதாகமம் நமக்கு கற்று தரும் பாடம். பால்ய வயது (வாலிப வயது) பெண்களை கரப்புள்ள சகோதிரிகலாக பாவித்து புத்திசொல்ல வேண்டுமாம். ஆனால் இங்கு இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் தவறான வழிநடத்துதலால் 30 வயதுக்கு மேற்ப்பட்ட திருமணம் ஆன பெண்களை விலை பேசி தெருவில் விற்கிறது. 1 வயது முதல் 10 வயது குழந்தைகளை கூட விட்டு வைக்காமல் உடலுறவு வேட்டையாட பகிரங்கமாய் அழைத்துள்ளது. 

பழைய ஏற்பாட்டின் காலத்தில் இந்த அடிமை வழக்கம் இருந்ததாக வேதாகமமும் கூறுகிறது. போரில் பிடிபட்ட பெண் விதவைகளை எப்படி நடத்த வேண்டும் என வேதாகமம் தெளிவாக கூறியுள்ளது.

உபாகமம் 21:10. நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து, 11. சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி, 12. அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து, 13. தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்கு புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள். 14. அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளை பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.

இந்த வசனங்களை உங்களுக்காக விளக்குகிறேன். போரில் சாகும் ஆண்கள் ஏராளம். இதனால் பெண்கள் தனிமையாய் விடப்படுவர். அப்படி தனித்து விடப்பட்ட சிறு வயது விதவை பெண்களை திருமணம் செய்யும் நோக்கில் மட்டுமே வீட்டிற்க்கு அழைத்து வரலாம். தவறான உறவு கொண்டாட அழைக்க கூடாது. 

அப்படி அழைக்கப்பட்ட பெண்களை திருமணம் செய்யும் முன் வீட்டில் தனிமையாய் இருக்க அனுமதிக்க வேண்டும். ஒரு மாதம் என்பது குறைந்தபட்ச நாட்கள். அதிகமாய் எத்தனை ஆண்டுகள் வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால் அவள் மனது தன் முன் கணவனுடன் வாழ்ந்த நாட்களை மறந்து இன்னொரு திருமணம் செய்யும் காலம் வரும் வரை தொந்தரவு செய்யவோ, வற்புறுத்தவோ கூடாது. வீட்டில் வேலை செய்ய வைத்துகொள்ளலாம். 

அப்படி திருமணம் செய்ய அவள் தான் சம்மதிக்க வேண்டும். அவள் சம்மதிக்கவில்லை என்றால் அவள் போக்கில் விட்டுவிட வேண்டும் என்று வேதாகமம் தெளிவாக உபாகமம் 21ம் அதிகாரத்தில் கூறியுள்ளது. அவளை தடுக்கவேண்டாம் என்றும் ஓர் எச்சரிப்பை கொடுத்திருக்கிறது. 

அவளோடு இருந்தால் கணவன் மனைவியாகத்தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் அவள் விருப்பப்படி வாழ வகைசெய்ய வேண்டும் என்று வேதாகமம் கற்றுகொடுக்கிறது.

ஆனால் இன்று isis இஸ்லாமிய தீவிரவாதிகள் குரானை பின்பற்றுகிறோம் என்று கூறி கொண்டு கதறும் பெண்களை ஏலம் எடுத்து பின் உடல் உறவு வைக்கின்றனர். இதில் 1 வயது குழந்தை முதல் 20,25 வயது திருமணம் ஆகாத பெண்களும் அடங்குவர். இந்த வகையில் அதிகமாய் விலைக்கு போவது 10 முதல் 20 வயதுள்ள சிறு பெண்களே.. இவைகளை ஊக்குவிப்பது நிச்சயம் சாத்தானை மட்டுமே இருக்க முடியும். 

ரோமர் 12:19. பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.

நாம் கண்ணீரோடும் பாரதொடும் ஜெபிப்போம். தேவன் இந்த பெண் குழந்தைகளையும், பெண்களையும் காப்பாற்றட்டும்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: இரத்தத்தை உறைய வைக்கும் பயங்கரம்

on Sat Feb 14, 2015 10:07 am


 (3/11/2014) பாகிஸ்தானிய கிறிஸ்தவர்கள் இதயத்தில் ஈட்டியை சொருகிய ஓர் கோரமான செய்தி கிட்டியது. சபாஷ் மாசீஹ் (வயது 26) மற்றும் சாமா பிபி (வயது 24) மற்றும் அழகிய பெண் குழந்தை பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கசார் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். சமா பிபி அவர்கள் தன்னுடைய கர்ப்பமாய் இருந்தார். கணவனும் மனைவியும் தங்களின் இரண்டாவது குழந்தையை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். பணம் இல்லை, பகட்டு இல்லை, அடுத்த வேலை உணவிற்கு வேர்வை நிலத்தில் விழுந்தால் மட்டுமே கிடைக்கும் என்ற மிகவும் பின்தங்கிய நிலை என்ற போதிலும் அன்பிலும், சந்தோசத்திலும் நம்மை விட பணக்கார குடும்பம். 

குடும்பமாக கசார் மாநில வெளிப்புற கிராமம் Kot Radha Kishan என்ற பகுதியில் உள்ள ஓர் இஸ்லாமியரின் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். சந்தோசமாக சென்ற இவர்கள் குடும்பத்தில் திடீரென்று ஓர் நாள் இருள் சூழ்ந்தது. இவருடைய முதலாளி Yousuf Gujjar மற்றும் அவருடைய செங்கல் சூளையில் இருந்த 30க்கும் மேற்ப்பட்டோர் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். முதலில் கைகள் கால்கள் இறந்ததையும் கடுமையாக அடித்து உடைத்துள்ளனர். தன் வயிற்றில் கருவை சுமந்திருந்த சாமா பிபி அவர்கள் உடைந்த கால்களுடன் எப்படி கதறியிருப்பார் என்று நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதைக்கிறது.

உடைக்கப்பட்ட கால்கள் கைகளுடன் கதறிய கணவன் மனைவியை இஸ்லாமியர்கள் சேர்ந்து அங்கு கடுமையான தீயுடன் எரிந்து கொண்டிருந்த செங்கல் சூளையில் தூக்கி போட்டனர். சிறிது நேரெத்தில் இரண்டு பேருடைய உடலும், சாமா பிபி யின் வயிற்றில் துள்ளி கொண்டிருந்த கருவும் சிறிது நேரத்தில் கருகி விட்டது. 

இந்த செய்து காட்டு தீயை போல பரவ காவல் துறை நிகழ்விடத்திற்கு விரைந்தது. ஆனால் அவர்களுக்கு கருகிய சில எலும்பு துண்டுகளும், சில தலை முடிகளும் மட்டுமே கிடைத்தது. நேற்று விசாரித்ததில் Yousuf Gujjar ஏறுக்கு மாறான தகல்வல்களை கொடுத்தார். அதாவது வாங்கிய முன் பணத்தை தரவில்லை என்று ஒரு முறையும் அங்கிருந்த கிராம மக்கள் தான் கொன்றனர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று பல கதைகளை மாற்றினார். 

ஆனால் இன்று அங்கிருந்த இஸ்லாமிய சங்கங்கள் ஒன்றிணைந்து நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள கதை ஒன்றை தயாரித்து விட்டனர். இந்த கொலையில் சுமார் 36 பேர் சம்பந்தப்பட்டு இருப்பதனால் அவர்களை காப்பாற்ற இஸ்லாமிய சங்கங்கள் இணைந்து காவல்த்துறையில் புதிய ஓர் கதையை கொடுத்திருக்கின்றனர்.
அதாவது சாமா பிபி அவர்களின் தந்தை கல்லறையில் எரிக்கப்பட்ட நிலையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் கிடந்ததாக புகார் கொடுத்திருக்கின்றனர். இதனை கண்ட இஸ்லாமியர்கள் நிச்சயமாய் சாமா பிபி தான் எரித்திருக்க வேண்டும் என்று நினைத்து அவரை கொலை செய்து இஸ்லாமிய சட்டத்தை நிலைநிருத்தியதாக கூறி உள்ளனர். 

ஓர் ஏழை பெண், அதுவும் கிறிஸ்தவ பெண்ணின் கைகளில் எப்படி குரான் வரும்? ஒரு வேலை வந்திருந்தால் அதை எப்படி எல்லாரும் வந்து போகும் இடத்தில் எரித்து போட்டிருக்க முடியும்? அப்படி எரித்தால் நிச்சயமாய் தன் குடும்பம் சிதறடிக்கப்படும் என்று நன்றாய் தெரியும் போது அதை எப்படி கர்ப்பமாய் இருந்த சாமா பிபி அவர்கள் தன் தந்தை கல்லறை பக்கமாக போட வேண்டும்? இப்படி ஓர் கேவலமான கதையை வழக்கம் போல இஸ்லாமிய சங்கங்கள் ஜோடித்து இன்று ஓர் அருமையான குடும்பத்தை கொன்றுவிட்டனர்.

மறைத்த சாமா அவர்கின் உறவினர் கூறும் போது சில மாதங்களாக செங்கல் சூலை அதிபர் சரியாக நடத்தாத காரணத்தினாலும், சம்பளம் சரிவர கொடுக்காமல் இருப்பதாலும் வேலையை விட்டு விலகுவதாக கூறியிருந்தனர். இந்நிலையில், கர்ப்பமாய் இருந்த மனைவியை அதிகமாக வேலை வாங்கிய காரணத்தினால் பிரச்சினை எழுந்துள்ளது. தன்னை எதிர்த்த ஷேஹ்சாத் மற்றும் மனைவியை கடுமையாக தாக்கி கொன்றுள்ளது தெரியவந்தது. இது தான் அங்குள்ளவர்கள் தெரிவிக்கும் உண்மை. ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக குரானை எரித்ததாக ஓர் பொய்யை சொல்லி இன்று நிலையை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டனர். 

இப்படி பல கிறிஸ்தவ உயிர்கள் தவறா காரணத்திற்க்காக கொலை செய்யப்பட்டுள்ளனர். உலக கண்களில் இருந்து நன்மதிப்பை பெற இவர்களை கைது செய்வது போன்று இருந்தாலும் கொலை செய்தவர்களுக்கு சிறையில் முதலாம் வகுப்பு கொடுக்கப்பட்டு மரியாதை செயப்படுவதாக "THE TIMES" நாளேடு கூறியுள்ளது. http://timesofindia.indiatimes.com/world/pakistan/Christian-couple-burned-alive-in-Pakistan-for-allegedly-desecrating-Quran/articleshow/45036018.cms

ரோமர் 8:28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

இதை குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது? இவைகள் கடைசி காலங்களில் சம்பவிக்கும் ஓர் கோரம். பிசாசு தான் தோற்கடிக்கப்பட போவதை கண்டு அஞ்சி கிறிஸ்தவர்களை வேட்டையாடும் காலம். சாதாரண மக்களையும் பொய்களை சொல்லி கூறு போடும் பிசாசானவன் வேதாகமம் "பொய்களின் பிதா" என்று பெயர் சூட்டியுள்ளது. 1 பேதுரு 4:12. பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், 13. கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.

கிறிஸ்து ஏசுவை தெய்வமாக கொண்ட ஜனம் மிகவும் பாக்கியமுள்ளது. நாம் இந்த உலகத்தில் சில காணங்களுக்காக விதைக்கப்பட்டுள்ளோம். ஆனால் ஒவ்வொரு கிறிஸ்தவனின் நோக்கமும் பரலோகம் தான். இந்த பூமி நமக்கு நிரந்தரமானது அல்ல. நித்திய நித்தியமாய் நாம் பிதாவோடும், அவருடைய ஜனங்களோடும் உயிருடன் இருப்போம். 

வெளிப்படுத்தல் 11:7. அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.

பாதாளத்தில் உள்ள ஓர் மிருகம் இந்த பூமியில் ஏவப்பட்டுள்ளது. இது தான் சுமார் 2000 வருடங்களாக கிறிஸ்தவர்களை கொன்று குவித்து வருகிறது. இப்படி கொன்று குவிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் இன்று பூமியில் வாழும் மக்கள் தொகையில் ஒரு பங்கு பெரும். அத்தனை பில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் சுவிசேஷம் என்னும் தீ வேகமாய் உலகமெங்கும் பற்றி எரிந்து வருகிறது. இதை எந்த சாத்தானின் சேனையாலும் அழிக்க முடியாது. 

ரோமர் 5:3,4,5. அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: இரத்தத்தை உறைய வைக்கும் பயங்கரம்

on Sat Feb 14, 2015 10:08 am


அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து, கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். 1 பேதுரு 3:14, 15

மகேர், இவர் ஓர் மருத்துவர். இவர் வீட்டின் கீழ் வசித்து வந்த சில இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருந்தனர். தினமும் அதிகாலையில், அதாவது சூரியன் உதிக்கும் முன் சாப்பிட்டுவிட வேண்டும். இப்படி ஓர் நாள் காலையில் எழுந்த இவர்கள் மகேர் வீட்டின் முன் துப்பாக்கியால் சுட்டு கத்த ஆரம்பித்தனர். அதோடு நிற்காமல் வீட்டின் கதவை வேகமாக தட்டவும், உதைக்கவும் ஆரம்பித்தனர். காரணம் என்ன தெரியுமா? இஸ்லாமியர்கள் கூறியது என்னவென்றால் "இவன் (மகேர்) எங்களிடம் அவன் வீட்டின் ஜன்னலில் இருந்து பேசினான். இது எங்கள் இஸ்லாமியர்களின் வயதானவர்களை இழிவுபடுத்துவதை போலவும் குழந்தைகளுக்கு தவறான வழிகாட்டுவதாகவும் உள்ளது" என்று ஓர் காரணத்தை கூறினார். (http://www.alwatanvoice.com/arabic/news/2012/07/30/302747.html

அதன் பிறகு வீட்டில் நுழைந்த இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாய் சுட்டனர். சுட்டதில் மகேரின் கண்களில் குண்டு பாய்ந்தது. வீட்டை துவம்சம் செய்த இஸ்லாமியர்கள் வெளியேறியவுடன் குடும்பத்தார் மகேரை மருத்துவமனையில் சேர்க்க முனைந்தனர். ஆனால் அருகில் இருந்த எந்த ஓர் மருத்துவமனையும் அவரை சேர்த்துக்கொள்ள மறுத்தது. கடைசியில் ஒருவழியாக Kasr மருத்துவமனை அனுமதித்தது. இப்போது ஒருகண்ணை இழந்தது மட்டும் அல்லாமல் மிகவும் பார்வை குறைவுடன் காணப்படுகிறார். இவருக்காகவும், இவர்கள் குடும்பத்திர்க்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள். 

http://www.copts-arrivals.com/vb/showthread.php?t=41907

சரி... மகேர் தன்னுடைய வீட்டின் ஜன்னலில் இருந்து மற்றவர்களுடன் பேசியது எப்படி தெய்வ குற்றமாகும்? மகேர் மாடி வீட்டில் வசித்துவந்துள்ளார். அவர் அங்குள்ளவர்களிடம் பேசும் போது மாடியில் இருந்து சத்தமாக பேசுவது தெரிந்தது. இவரை எப்படியாவது கொலை செய்துவிடவேண்டும் என்ற நோக்கில் இருந்த பக்கத்து வீட்டு இஸ்லாமியர்கள் அதற்க்கு காரணம் ஒன்றையும் கண்டு பிடித்தனர். அதாவது மகேர் மாடியில் நின்று கொண்டு பேசுவது அந்த தெருவில் நடந்து வரும் இஸ்லாமிய தாத்தாக்களுக்கு அவமானத்தை கொண்டு வருகிறதாம். இது இஸ்லாமிய குழந்தைகளை தவறான பாதையில் வழிநடத்தி செல்லுமாம். இப்படி ஓர் காரணத்தை கூறி இந்த கொடூரத்தை நடத்தினர். 
http://www.investigativeproject.org/3723/guest-column-ramadan-islam-holy-month

இது மட்டும் அல்ல. இப்படி சாதாரண காரணங்களை பெரியதாக்கி கிறிஸ்தவர்களுக்கு பயத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாமியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன் படி சாதரணமாய் இருக்கும் இஸ்லாமியர்கள் நேரம் வைத்தவுடன் கொடூர எண்ணங்களோடு கிறிஸ்தவர்களை கொலை செய்ய துணிகின்றனர். இன்னொரு நிகழ்வையும் உங்களுக்காக இங்கே பதிகிறோம். 

ஜூலை மாதம். இஸ்லாமியர்கள் தங்கள் ரமலான் மாதத்தில் நோன்பு எடுத்துகொண்டிருன்தனர். அந்நாட்களில் எகித்து தேசத்தில் உள்ள கைரோ மாகாணத்தின் நகர ஒதுக்குப்புறம் "மாண்டி" பகுதி வழியாக கார் ஓட்டுனர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவருக்கு வயது 27. சர்க்கரை நோராயால் பதிக்கப்பட்டு இருந்த இவர் அதிகமான வெப்பத்தால் நாக்கு வறண்டிருந்ததால் தண்ணீரை தேடினார். நமக்கு தெரிந்திருந்தபடி இஸ்லாமிய தேசங்களில் நோன்பு காலங்களில் சாப்பிடும் கடைகளை திறக்க மாட்டார்கள். அதனால் கொஞ்சம் சோர்வுற்ற இவர் அங்கிருந்த தெருவோர தண்ணீர் குழாயை பார்த்தார். 

கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டி இருந்ததால் இறங்கி தண்ணீர் குடிக்க அராம்பித்தார். அவ்வழியாக வந்த இஸ்லாமியர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே கார் ஓட்டுனரை "எப்படி நீ நோன்பு காலத்தில் தண்ணீர் குடிக்கலாம்"? என்று மிரட்ட ஆரம்பித்தவுடன் பயந்து போனவர் தான் ஓர் கிறிஸ்தவர் என்றும், சர்க்கரை நோயாளி என்பதையும் குறிப்பிட்டார். இதன் பிறகு தான் அந்த கொடூர கும்பலின் சுயரூபம் தெரிந்தது. "நீ கிறிஸ்தவன் தானே" என்று கூறிக்கொண்டே அடிக்க ஆரம்பித்தனர். தான் ஓர் நோயாளி என்று கதறியதை யாரும் கண்டுகொள்ளவில்லை. 

இவன் கிறிஸ்தவன் என்பதால் தான் நம்மை இழிவுபடுத்த இப்படி ஓர் காரியத்தை செய்துள்ளான் என்று கூறி கடுமையாக அடித்தனர். கடைசி வரை கெஞ்சியும் விடவில்லை. எப்படியோ ஓடி தன்னுடைய காரை எடுத்து கொண்டு தப்பி விட்டார்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: இரத்தத்தை உறைய வைக்கும் பயங்கரம்

on Sat Feb 14, 2015 10:08 am


உங்கள் மனதை உலுக்க போகும் கண்ணீரில் பதிவுகள்

பெற்ற தாயை புதைக்க வழியில்லை
சொல்லி வளர்த்த தகப்பனை
காப்பாற்ற பலமில்லை
குடும்பத்தை இழந்து
இன்று தெருவில் அனாதைகளாய் 
விடப்பட்ட கிறிஸ்தவர்கள்

காரணம்: ISIS என்ற ஓர் கொடுமையான தீவிரவாத இயக்கம். 
இவர்களின் நோக்கம்: சொந்த நாட்டை மீட்டுக்க போகிறோம் என்று கூறிகொண்டது
http://www.nbcnews.com/storyline/iraq-turmoil/what-life-iraqs-city-mosul-under-isis-rule-n151461
http://www.businessinsider.my/replacing-isis-rule-in-iraq-and-syria-2014-9/#.VE73-Ra5Gno

செய்வது: சொந்த மண்ணை சேர்ந்தவர்களையே கொன்று குவித்து அந்த ரத்தத்தின் மீது இஸ்லாமிய நாடு என்றாய் உருவாக்க போராடுவது.
http://www.bbc.com/news/world-middle-east-28222872
http://www.cbn.com/cbnnews/world/2014/august/isis-swallowing-iraq-theyre-beheading-children-/
http://www.christianpost.com/news/christian-beaten-tortured-and-killed-by-isis-for-refusing-to-convert-to-islam-125779/
http://www.dailymail.co.uk/news/article-2740438/ISIS-turned-northern-Iraq-blood-soaked-killing-fields-says-Amnesty-International-new-evidence-ethnic-cleansing-against-minorities-emerges.html

ISIS படையில் இருப்பது யார்: முதலில் சொந்த ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள் போராடுவார்கள் என்று கூறிவிட்டு இன்று உலகத்தில் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களையும் அழைத்து போர் என்ற பெயரில் கொலைகாட்சிகளை அரங்கேற்றி வரும் ஓர் இயக்கம் 
http://montrealgazette.com/news/national/opinion-its-up-to-muslims-to-defeat-isis-hate-with-love-and-peaceful-dialogue
பள்ளிகூட குழந்தைகள் இந்த தீவிரவாத இயக்கத்தில் உள்ளனர் 
http://www.theguardian.com/world/2014/sep/29/schoolgirl-jihadis-female-islamists-leaving-home-join-isis-iraq-syria

இராக் மட்டும் தான் நோக்கமா? - இல்லை. இவர்கள் ஈராக் தேசத்தை மீட்க்க போகிறோம் என்று கூறிவிட்டு இப்போது சிரியா மற்றும் லிபியாவையும் தாக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இவர்களுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் திரண்டுள்ளதா? - G 20 என்ற குழுவில் இடம் பெற்றுள்ள சவுதி அரேபியா மற்றும் துருக்கி நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த நாடுகள் போரிலோ அல்லது மீட்பு நடவடிக்கையிலோ கலந்துகொள்ளவில்லை. 
சுமார் 40 நாடுகள் இணைந்து ISIS தீவிரவாத இயக்கத்தை எதிர்த்து வருகின்றன.
சுன்னி இஸ்லாமியராய் மாற மறுப்பவர்களை கொள்ளும்படி இந்த தீவிரவாத இயக்கத்தில் இருந்து செய்து வெளிவந்துள்ளது. அதன்படி சில கொலைகளும் உலகெங்கும் நடந்தேறி உள்ளது 
http://www.dailymail.co.uk/news/article-2764736/ISIS-urges-Muslims-kill-disbelievers-calls-Secretary-State-John-Kerry-old-uncircumcised-geezer-latest-audio-release.html 
http://abcnews.go.com/Blotter/isis-recording-urges-muslims-kill-civilians-us-led/story?id=25669372

உலக இஸ்லாமியர்கள் இதற்க்கு இந்த தீவிரவாத இயக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனரா??
ஆம்.... ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்து வந்த பல இஸ்லாமிய வகுப்பை சேர்ந்தவர்கள் / இயக்கங்கள் இவர்களின் கொடுமையான செயல்களை எதிர்த்துள்ளன. http://www.washingtonsblog.com/2014/08/muslims-condemn-isis.html 

குழந்தைகள் வகுப்புகளில் ஜிஹாத் தலைப்பில் கொலைகளை செய்வது எப்படி என்று கற்று தரப்படுகிறது 
http://au.ibtimes.com/articles/570585/20141024/isis-islamic-state-child-soldiers-school-jihad.htm#.VE78URa5Gno
15 வயதுக்கு குறைவானவர்களை படையில் இணைத்து அவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறது இந்த தீவிரவாத இயக்கம் 
http://www.ibtimes.co.uk/isis-child-soldiers-used-suicide-bombers-human-shields-1472026

முக்கியமாக கிறிஸ்தவர்களை கொன்று குவித்து வருகிறது. 
https://www.facebook.com/DiedForChristJesus/photos/pb.367835819997289.-2207520000.1414459069./668471246600410/?type=1&theater
அனாதைகளாக்கப்பட்ட கிறிஸ்தவ குழந்தைகள்
http://shoebat.com/2014/10/26/war-orphans/
http://syrianorphans.org/donate/monthly-sponsorship.html#
https://www.facebook.com/DiedForChristJesus/photos/pb.367835819997289.-2207520000.1414459069./665122120268656/?type=1&theater 

இப்படி அனாதைகளாய் விடப்பட்ட குழந்தைகளுக்கு துருக்கியில் வாழும் கிறிஸ்தவ குடும்பங்கள் அரவணைத்துள்ளது. ஐரோப்பா, மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பல தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கு கூடாரம் அமைத்து உதவி செய்து வருகின்றன. துருக்கியில் உள்ள ஓர் மிகபெரிய பள்ளிக்கூடம் தன்னுடைய நிலத்தை கொடுத்து ஆதரித்துள்ளது. 

இங்குள்ள குழந்தைகள் பல மாதங்களாக பள்ளிக்கூடம் செல்லமுடியவில்லை. இராக் தலைமுறையில் ஒருவருடம் மறைந்துவிட்டது. இங்குள்ள கைகுழந்தைகளை மற்ற சிறுவர்கள் அரவனைத்துள்ளனர். குழந்தைகளை இழந்த பெற்றோர் அனாதைகளாய் விடப்பட்ட குழந்தைகளை அரவணைத்துள்ளனர். இதில் 3 வயது முதல் 15 வயது வரையுள்ள பிள்ளைகள் அடங்குவர். பிசாசு பேயாட்டம் ஆடி கர்த்தரின் குடும்பங்களை சிதறடித்தாலும் இயேசுவின் பிள்ளைகள் ஆங்காங்கே அரவணைத்து குடும்பத்தோடு இணைத்துள்ளனர். அதை பற்றின ஓர் அருமையான காணொளியை இங்கே காணலாம். 
https://www.youtube.com/watch?v=s7V_T5f5Pp0

உங்களின் முழங்கால்களை கண்ணீரோடு முடக்குங்கள். தேவன் செயல்படவேண்டும். இவைகள் கட்சி காலத்தை நமக்கு உச்சரிப்பை கொடுக்கின்றன. நோவாவின் காலத்திலேயும் உச்சரிப்புகளை மறந்து மக்கள் குடித்தும், கொலைகளை செய்தும், மனம் போல வாழ்ந்தும் தேவனுக்கு விரோதமான காரியங்களை செய்து வந்தனர். நோவாவின் மூலம் பல எச்சரிக்கை கொடுக்கப்பட்டும் உலக அழிவே இருக்காது என்று நினைத்தனர். ஆனால் தேவனின் திட்டம் நிறைவேறும் காலம் வந்தது. நோவாவின் குடும்பத்தை தவிர ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை.

இன்றும் பல எச்சரிப்புகள் வந்தவண்ணம் உள்ளது. வேதாகமம் நமக்கு கடைசி காலம் எப்படி இருக்கும் எனவும் எச்சரிக்கிறது. உங்களை கொள்ளுகிறவர்கள் நல்லவர்கள் என்று என்னும் காலம் வரும் என்று வேதாகமம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. அவை தான் இன்று நிறைவேறி வருகின்றன. கிறிஸ்தவர்களை கொல்லுங்கள் என்றும் வாடிகன் நகரில் isis கோடியை ஏற்றுவோம் என்றும், இஸ்லாமியர்களை மாறாதவர்களை கழுத்தை அறுத்து கொல்லுங்கள் என்றும் தீவிரவாதிகள் எச்சரித்து வருகின்றன. இவர்கள் இப்படி சொல்லுவார்கள் என்று வேதாகமத்தில் உள்ளது. உங்களை கழுத்தை அறுத்து கொல்லுவார்கள் என்று வேதாகமத்தின் வெளிப்படுத்தல் அதிகாரத்தில் உள்ளது.

இப்படியாக வேதாகம வசனங்கள் நிறைவேறி வருகின்றன. நீகளோ எச்சரிக்கையாய் இருங்கள். தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: இரத்தத்தை உறைய வைக்கும் பயங்கரம்

on Sat Feb 14, 2015 10:09 am


ஓர் அவசர ஜெபக்குறிப்பு 

அசியா பிபி, பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து இயேசு கிறிஸ்துவின் அநாதி தீர்மானத்தினால் இரட்சிக்கப்பட்ட இவர் அவருக்கு சாட்சியாய் வாழ்ந்து வருகிறார். இவருடைய விசுவாசம், முகத்தில் எப்பொழுதும் இருந்த சந்தோஷம் அங்கிருந்த சிலரை உறுத்தியது. அழகான குடும்பம், போதுமான வருமானம், தேவன் கொடுத்த அருமையான ஐந்து குழந்தைகள் என்று தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்தவரின் குடும்ப சந்தோசத்தை குலைக்க சாத்தான் திட்டம் வகுத்துள்ளான். இந்த திட்டத்தை நிறைவேற்ற வஞ்சகமாய் இரண்டு பெண்களை பயன்படுத்தினான். 

ஜூன் 19, 2009ம் ஆண்டு இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் குவளையில் கிறிஸ்தவ பெண் ஆசியா தண்ணீர் குடித்ததற்க்காகவும், முகமது நபியை கேவலமாக பேசி விட்டதாகவும் இரண்டு வழக்குகளை நயவஞ்சகமாக ஜோடனை செய்து ஓர் அப்பாவி பெண்ணை கொலைகளத்திர்க்கு கொண்டு வந்துவிட்டனர்.

இரண்டு இஸ்லாமிய பெண்கள் அஷியாவிடம் கிறிஸ்தவத்தை குறித்து வாதிட்டனர். இயேசு கிறிஸ்து மனிதன் என்றும், உண்மையான தீர்க்கதரிசி முகமது நபி என்றும் வாதிட்டனர். உலக அறிவு குறைவாக இருந்தாலும் தினமும் வேதாகமம் வாசித்து வசனங்களை மனப்பாடமாக வைத்திருந்தார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தக்க பதில்களை வேதாகமத்தில் இருந்து கொடுத்திருக்கிறார். இதனால் எரிச்சல் அடைந்த இஸ்லாமிய பெண்கள் முகமது நபி தான் சரியான வழியை காட்டியவர் என்று வாதிட்டனர். அதற்கு "எங்கள் ஏசுவே உண்மையான தீர்க்கதரிசி மற்றும் கடவுள் என்று பதில் கூறினார் அஷியா."இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார், ஆனால் முகமது நபி என்ன செய்தார்?" என்ற கேள்வியையும் கேட்டார். இதற்கு பதில் கூற முடியாத இஸ்லாமிய பெண்கள் அங்குள்ளவர்களிடம் அஷியா முகமது நபியை அவமானப்படுத்தி விட்டதாக கூறி அஷியாவை அடித்து காயப்படுத்தி இருக்கிறார்கள். இதை மறுத்து பேசுவதற்கு கூட யாரும் இடம் தரவில்லை. 

அஷியா சிறையில் அடைக்கப்பட்டார். இதை கேள்விப்பட்ட இஸ்லாமிய கூடங்கள் ஒன்று திரண்டு அஷியாவை கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தினர். அசியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போதெல்லாம் இஸ்லாமியர்கள் திறந்து நின்று கொன்று போட கோஷம் எழுப்பினர். மாறாக தீர்ப்பு சொன்னால் நீதிபதிகள் கொலை செய்யப்படுவார்கள் என்றும் மிரட்டினர். 

கடுமையான நெருக்கடியில் இருந்த நீதிபதிகள் இரண்டு இஸ்லாமிய பெண்களையும் நியாயப்படுத்தி ஆசியாவிற்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை லாகூர் நீதிமன்றமும் உறுதி செய்தது. லாகூர் நீதிமன்ற தீர்ப்பின் பொது சுமார் 2000 முல்லாக்கள் நீதிமன்ற வாசலில் நின்று ஆசியாவை கொல்ல கோஷமிட்டனர். 
http://globalpublicsquare.blogs.cnn.com/2014/10/16/pakistan-is-sliding-toward-extremism/

CNN தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செய்தியில் இந்த வழக்கில் போதுமான ஆதாரம் கிடையாது. இரண்டு இஸ்லாமிய பெண்களும் சகோதிரிகள். ஆதலால் சாட்சிகளும் அதிகம் கிடையாது. மற்றும் இந்த வழக்கு கொடுமையான வழக்காக எடுத்து கொல்ல முடியாது என்று கூறியிருந்தனர். 

Bibi's attorney, Naeem Shakir, told CNN on Monday that he would file an appeal once he had received a detailed copy of the judgment. "I have a very strong case, I am sure the Supreme Court will provide us with relief. There is no concrete evidence against Asia Bibi, and the courts are only relying on the statement on those two women," Shakir said.

ஆனால் சட்டத்தை உடைத்துக்கொண்டு இவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதைவைத்து பாகிஸ்தானிய கிறிஸ்தவர்களை பயமுறுத்தவும், கிறிஸ்தவர்களாய் மாறுவதை முழுவதுமாக தடைசெய்யவும் இஸ்லாமிய தலைவர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். இங்குள்ள நீதிபதிகளுக்கே தாங்கள் கூறிய தீர்ப்பு தவறானது என்று தெரியும். ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு பயந்து மரண தண்டனை கொடுத்திருக்கின்றனர். 

இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பி உள்ளது. பல மனித உரிமை இயக்கங்கள் ஆசியாவை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இஸ்லாமிய "ஷரியா" சட்டத்தை ஆராய்ந்து ஆசியாவிற்கு கூறிய தீர்ப்பு தவறானது என்று கூறியும் நீதிபதிகள் தீர்ப்பை மாற்றவில்லை. ஜெனீவாவில் உள்ள உலக மனித உரிமை ஆணையம் தன்னுடைய கவலையை பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது. 

கத்தோலிக்க தலைவர் போப் அவர்களும், மற்ற மிசனரி இயக்க பெரியவர்களும் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் முறையிட்டும், சட்டத்தை முறையான ஆதாரத்தோடு எடுத்து காண்பித்தும் செய்வி சாய்க்கவில்லை. இதனால் இவரின் குடும்பம் உடைந்து போய் உள்ளது. 

பவுல் சவுலாவதர்க்கு முன் இதை தானே செய்து கொண்டிருந்தான் "அப்போஸ்தலர் 8:3 சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்." ஆனாலும் இவர் இயேசுவை விட்டுவிடவில்லை சிறையில் கடுமையான முறையில் நடத்தப்பட்டாலும் எல்லோரிடமும் அன்பாகவே இருக்கிறார். இதை கேள்விப்பட்ட பல இஸ்லாமிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆசியாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். அவரை சென்று பார்த்தனர். இதற்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இயேசு கிறிஸ்துவும் இதனை போலத்தான் காட்டி கொடுக்கப்பட்டார். முத்தத்தினால் காட்டி கொடுத்தான் யூதாஸ். இங்கே தந்திரமாக பேசி ஆசியாவை மாட்டிவிட்டனர் இந்த இரண்டு இஸ்லாமிய பெண்கள்.

இயேசு கிறிஸ்து செய்யாத தவறுக்காக சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டார். ஆசியாவும் அவ்வாரே துன்ப்படுகிறார். இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். ஆசியாவிற்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது.

ஆனால் இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தார். உயிர்த்தெழுந்த ஆண்டவர் இன்றும் நம்மோடு இருக்கிறார். அவரை நம்புகிறவர்களுக்கு நன்மையை செய்யும் தேவன் ஆஷியாவிர்க்கும் நன்மை செய்வார் என்று நம்புவோம். குற்றமில்லாத ரத்தத்தை குடிக்க காத்திருக்கும் ஓநாய் கூட்டத்தில் இருந்து இந்த விசுவாசியை காப்பாற்றி தேவன் குடும்பத்தோடு இணைப்பாராக. 

அஷியாவிர்க்கு மட்டும் அல்ல. அவற்றின் குடும்பத்தை கொள்ளபோவதாக இஸ்லாமிய இயக்கங்கள் அறிவித்துள்ளன. தொடர்ந்து ஜெபியுங்கள். நாட்கள் வேகமாய் நகருகிறது. தேவ ஆவியானவர் அதிகாரிகளின் கண்களில் தயவு கிடைக்க நமக்கு உதவி செய்வாராக. ஆமென்... 

வெளி 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்

இந்த வசனம் நிறைவேறி வருகிறது. மரண பரியந்தம் உண்மையாய் இரு. பிசாசின் பயமுறுத்தலுக்கு மயங்கி விடாதே. வைராக்கியமாய் வாழுங்கள். தேவன் உங்களை பெலப்படுத்துவாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: இரத்தத்தை உறைய வைக்கும் பயங்கரம்

on Sat Feb 14, 2015 10:10 am


வேத வசனங்கள் நிறைவேறி கொண்டிருப்பதை உங்களால் உணர முடிகிறதா?

யோவான் 16:2. அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்

கிறிஸ்தவர்களை கொலை செய்கிறவர்கள் தங்கள் இறைவனுக்கு தொண்டு செய்வதாக நினைக்கும் காலம் வரும் என்று தேவன் கூறியது எவ்வளவு உண்மை. இன்று சிரியா ஈராக் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 

மூன்று வயது குழந்தையை பெற்றோர்களிடம் இருந்து பிரித்து கடத்தி சென்ற இஸ்லாமிய தீவிரவாதிகள். http://blog.godreports.com/2014/08/isis-abducts-three-year-old-from-fleeing-christian-family/

அப்பாவி குழந்தைகளை கொன்று குவிப்பதில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் போட்டி போட்டு கொண்டு முன்னேறி வருகின்றன. 
http://www.dailymail.co.uk/news/article-2798667/kurds-vile-image-baby-girl-beheaded-photograph-recovered-phones-dead-isis-fanatics-kobane.html
http://www.cbn.com/cbnnews/world/2014/august/isis-swallowing-iraq-theyre-beheading-children-/
http://www.cbn.com/cbnnews/world/2014/august/isis-swallowing-iraq-theyre-beheading-children-/
http://www.christianpost.com/news/un-report-on-isis-24000-killed-injured-by-islamic-state-children-used-as-soldiers-women-sold-as-sex-slaves-127761/

மழலை சிரிப்பா? அது எப்படி இருக்கும்? என்று கேட்க்கும் கேவலமான நிலைமைக்கு ஈராக் சிரியா தேசங்கள் வளர்ந்துள்ளன. நாடு கேட்டு போராடுகிறோம் என்று ஆரம்பித்த isis தீவிரவாதிகளின் போலி திட்டம் இன்று நமக்கு வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. 

சொந்த நாட்டை சேர்ந்தவர்களையே வெளியேரே சொன்ன கொடுமை எங்கு நிகழ்ந்துள்ளது. இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகளை கட்டவிழ்த்துள்ளது. இதற்க்கு உலகம் எங்கும் கிளைகளை அமைத்து பல்வேறு தீவிரவாத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

அப்படி பட்ட நாசக்கார பிசாசின் செய்கையினால் தங்களின் பெற்றோரை இழந்த இந்த சிறுவர்கள் இப்போது சில கிறிஸ்தவ தன்னார்வ சகோதிரர்கள் மூலமாய் காப்பாற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்படி எதிர்க்காலம் கேள்வி குறியாக்கப்பட்ட பல ஆயிரம் குழந்தைகள் இன்னமும் இந்த தேசங்களில் அனாதைகளாய் திரிகின்றன. போரின் ஓசையால் தங்கள் வீடு, குடும்பம், ஆசை, பணம், எதிர்காலத்தை இழந்து நிற்கும் கிறிஸ்தவர்களை அதிகமாய் காண முடிகிறது.

இவர்கள் ஒன்றை மட்டும் இழக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசம். மதம் மாறாவிட்டால் கொலை செய்யப்படுவீர்கள் என்ற ஈன குரலுக்கு கிறிஸ்தவர்கள் பதில் கொடுக்க விரும்பவில்லை. இந்த பிசாசின் குரலுக்கு யாரும் பயப்பட தேவையில்லை என்ற உறுதியுடன் இவர்கள் உள்ளனர்.http://christablack.com/2014/08/what-can-we-do-about-the-christian-holocaust-in-iraq/

இன்னொரு சாட்சி:-
Rwaa spoke with the BBC on Friday. When asked about the ISIS practice of forcing people to convert from Christianity or die, Rwaa responded:

“It makes my faith grow stronger because it’s written in the Bible that there will be people will try to kill you and to drive you away from your houses, to throw you away and you they will do this under my name.”

BBC க்கு இராக் நாட்டை சேர்ந்த ஓர் கிறிஸ்தவ பெண் பேட்டி கொடுத்திருக்கிறார். பல நிலைகளில் இவர் கண்ணீர் இழந்தாலும், "இப்படிப்பட்ட கொடுமைகள் எண்களின் விசுவாசத்தை உறுதி செய்கின்றன. ஏன் என்றால் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது போல அவர்கள் உங்களை கொன்று உங்கள் வீடுகளுக்கு புறம்பே தள்ளிவார்கள்" என்று கூறியிருக்கிறார். 

Khiria Al-Kas Isaac, 54, Iraqi Christian: ‘ISIS terrorist held a sword to my throat but I refused to convert’ Khiria said: “I answered [the terrorists] immediately, I was born Christian and if that leads me to death, I prefer to die a Christian.”
கஹிர என்னும் 54ஙு வயது கிறிஸ்தவர் ஒருவர் கூறும் போது "என் கழுத்தில் கத்தியை வைத்து "இயேசுவை மறுதலி" என்று isis தீவிரவாதிகள் வர்ப்புருத்தினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன் என்று கூறி இருக்கிறார். இவர் இப்போது நம்முடைய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 
இவரின் சாதியை பற்று முழுமையாக தெரிந்து கொள்ள 
http://www.catholicherald.co.uk/news/2014/09/11/iraqi-christian-isis-terrorist held-a-sword-to-my-throat-but-i-refused-to-convert/

இப்படி தீவிரவாதிகளின் கொடுமையின் பட்டியலும், சாதிகளின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. பல கிறிஸ்தவர்கள் இன்னமும் இப்படிப்பட்ட கொடுமையான நகரங்களில் மறைந்து வாழ்கின்றனர். அவர்களுக்காகவும் ஜெபித்துகொள்ளுங்கள்.

நீங்களும் இவர்களுக்கு எதாவது செய்ய ஆர்வமா? தனிப்பட்ட முறையில் செய்ய முடியாவிட்டாலும் உங்கள் சபையாக செய்யலாமே? சில வலைத்தளங்களை தருகிறேன்.. முயற்சித்து பாருங்களேன்....
http://www.persecution.com/

http://barnabasfund.org/UK/Persecuted-Christians.html

http://shoebat.com/2014/10/17/rescue-christians-opens-european-headquarters-rescue-iraqi-syrian-christians-first-project-save-hundreds-orphans/

https://www.opendoorsusa.org/

http://www.christianpersecution.info/

நீங்கள் யாராவது உதவி செய்தது உண்டானால் இங்கே அந்த வலைத்தளங்களை பதியலாம். சரியானவே என்று உறுதிசெய்த பிறகு இங்கே கொடுக்கப்படும். உங்கள் சிறு முயற்சிகள் பலரின் கண்ணீரை துடைக்கும். நீங்கள் ஓர் தாயாக, தகப்பனாக இருக்கலாமே.. 

உங்கள் கைகள் இவர்களின் கண்ணீரை துடைக்குமா?

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Sponsored content

Re: இரத்தத்தை உறைய வைக்கும் பயங்கரம்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum