தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
பழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
2 Posts - 40%
பார்வையிட்டோர்
 கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் Empty கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்

on Sat Jan 03, 2015 7:43 am
தினமலர் செய்திகள் 19.12.2014
****************************************************
புதுடில்லி: 'தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 - ஏ பிரிவு, உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி, இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், தகவல் தொழில்நுட்ப ஊடகங்களான, மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ - மெயில் போன்றவற்றில், ஒருவர் தெரிவிக்கும் கருத்து, பதிவு செய்யும் விஷயங்கள், ஒரே நேரத்தில் பலரையும் சென்றடைகின்றன. அத்தகைய கருத்துக்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள், அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததும், தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66ஏ -யின்படி, கருத்து தெரிவித்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர். 'இவ்வாறு கைது செய்யப்படுவது, அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது' என, சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில், மத்திய அரசு, நேற்று முன்தினம் தன் கருத்தை பதிவு செய்தது.

நீதிபதிகள் செலமேஸ்வரர், எஸ்.ஏ.போப்டே ஆகியோரை கொண்ட அமர்வு முன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசு தரப்பு வாதத்தை எடுத்து வைத்து, மேலும் கூறியதாவது: சமூக வலைதளங்களில், தகவல் தொடர்பு சாதனங்களில், தனிநபர்களால் பதிவு செய்யப்பட்ட கருத்துகளுக்கு, அரசியல் எதிர்ப்பு, விமர்சனங்கள் வந்தன என்பதற்காக, அத்தகைய கருத்துக்களை பதிவு செய்பவர்களை கைது செய்வதோ, தண்டிப்பதோ கூடாது என்பது தான் அரசின் இப்போதைய எண்ணம். உதாரணமாக, 'டுவிட்டர்' வலைதளத்தில், 'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேருங்கள்' என, வலைதளங்களில் யாராவது பிரசாரம் செய்தால், அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66ஏ படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையம் என்ற இந்த ஒரு ஊடகம் மட்டும் தான், தணிக்கை இல்லாத ஊடகமாக இருக்கிறது; அது தொடர வேண்டும். சில சமயங்களில், நாட்டின் நலன், பாதுகாப்பு போன்ற விவரங்களில், சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்றக் கோரி, வலைதள நிறுவனங்களை அரசு கேட்டுக் கொள்ளத் தான் செய்யும். அதை தவறு என கூற முடியாது. எல்லா நாடுகளிலும் அந்த நடைமுறை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வலைதள நிறுவனங்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கே.கே.வேணுகோபால், ''அரசியல் காரணங்களுக்காக கருத்து சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது. சமூக வலைதளங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க, அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். கருத்து பதிவு செய்ததற்காக கைது போன்ற நடவடிக்கைகள், சர்வாதிகார நடவடிக்கைகள்,'' என்றார். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 ஏ பிரிவில் மாற்றம், முந்தைய, மன்மோகன் சிங் அரசில் கொண்டு வரப்பட்டது. அதை மாற்ற வேண்டும் என, இப்போதைய மோடி அரசு முனைந்துள்ளது. இதற்கு பின்னணியில், பிரதமர் மோடி தான் உள்ளார் என்ற கருத்தும் தெரிய வந்துள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அந்த பிரிவு நீக்கப்பட வேண்டும் என, பிரதமர் மோடி வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே, மேற்கண்ட முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்பவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திஉள்ளது.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum