தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து : மத்திய இந்துத்துவ ஆரிய அரசு முடிவு - விரைவில் அமல்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து : மத்திய இந்துத்துவ ஆரிய அரசு முடிவு - விரைவில் அமல்  Empty கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து : மத்திய இந்துத்துவ ஆரிய அரசு முடிவு - விரைவில் அமல்

Mon Dec 15, 2014 4:19 pm
கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து : மத்திய இந்துத்துவ ஆரிய அரசு முடிவு - விரைவில் அமல்  10868171_621625414632574_3356630330583334981_n

கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து : மத்திய இந்துத்துவ ஆரிய அரசு முடிவு - விரைவில் அமல் 

போலோ பாராத மாதாவிற்கு ஊ...!! ஊ ....!!!

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபா தலைவர் மதன்மோகன் மல்வியா ஆகியோரின் பிறந்த நாளை ‘‘சிறந்த ஆளுமை’’ தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

25–ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் மத்திய அரசின் நவோதயா, கேந்த்ர வித்யாலயா பள்ளிகளில் கொண்டாட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க. தலைவர்களின் பிறந்த நாளை சிறந்த ஆளுமை தினமாக கொண்டாடும் நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

25–ந் தேதி அன்று 1 முதல் 5–ம் வகுப்பு, 6 முதல் 8–ம் வகுப்பு, 9 முதல் 10–ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டுரைப்போட்டி, வினா – விடை போட்டி, குறும்படங்கள் திரையிட்டு மாணவர்களுக்கு ஆளுமை தினம், பண்டிகளை பற்றி விளக்கி கூற வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் மத்திய அரசு பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் அந்த பள்ளி குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்ததாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இது பற்றி மற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று பள்ளி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியில் மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் சிறந்த ஆளுமை தினம் கொண்டாட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ மற்றும் கேந்த்ர வித்யாலயா பள்ளிகளுக்கு சுற்றறிக்கை எதுவும் அனுப்பப்பட்டு உள்ளதா என சி.பி.எஸ்.இ சென்னை மண்டல அதிகாரி சுதர்சன ராவ்விடம் கேட்டதற்கு அது பற்றி எந்த தகவலும் வரவில்லை என்றார்.

பொதுவாக குளிர்கால விடுமுறை டிசம்பர் 23 அல்லது 24–ந் தேதியில் இருந்து விடுவது வழக்கம். அந்த விடுமுறை காலத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை அரையாண்டு தேர்வு 23–ந் தேதி முடிவடைகிறது. 24–ந் தேதி முதல் ஜனவரி 1–ந் தேதி வரை அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஜனவரி 2–ந் தேதி தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.


நன்றி: விடுதலை ஈ பேப்பர் முகநூல்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து : மத்திய இந்துத்துவ ஆரிய அரசு முடிவு - விரைவில் அமல்  Empty Re: கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து : மத்திய இந்துத்துவ ஆரிய அரசு முடிவு - விரைவில் அமல்

Mon Dec 15, 2014 4:25 pm
கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து : மத்திய இந்துத்துவ ஆரிய அரசு முடிவு - விரைவில் அமல்  Smrithi_2244989f
அமைச்சர் ஸ்மிருதி இராணி | கோப்புப் படம்
டிசம்பர் 25-ம் தேதியன்று மத்திய அரசு பள்ளிகளுக்கு வழக்கம்போல் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விளக்கமளித்துள்ளார்.
சில ஊடகங்களில் திட்டமிட்டே மக்களை திசை திருப்பும் வகையில், செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் சாடியுள்ளார்.
டிசம்பர் 25-ம் தேதியன்று நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால் அன்றைய தினம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கட்டுரைப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாது எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இச்செய்தி தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்துள்ள ஸ்மிருதி இராணி, டிசம்பர் 25-ம் தேதியன்று மத்திய அரசு பள்ளிகளுக்கு வழக்கம்போல் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது விளக்கமளித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, "பரபரப்பான தலைப்புச் செய்தி வேண்டுமென்பதற்காக, தவறான செய்தி திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தகவல் திரித்து செய்தியாக்கப்பட்டுள்ளதால் நான் விளக்கமளிக்கிறேன். டிசம்பர் 25-ம் தேதியன்று மத்திய அரசின் ஜவஹர் நவோதயா பள்ளிகளில் நடைபெறவுள்ள கட்டுரைப் போட்டியில் பங்கேற்பது மாணவர்கள் விருப்பமே, யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. மேலும், இப்போட்டி ஆன்லைனில் நடத்தப்படவுள்ளது" என்றார்.
இது தவிர தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்மிருதி வெளியிட்டிருக்கும் தகவலில், "கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை. கட்டுரைப் போட்டி ஆன்லைனில் நடத்தப்படும்" என குறிப்பிட்டுள்ளார்

நன்றி: தி இந்து
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum