தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்...!Today at 9:25 amAdminஇந்த புகைப்படத்திலிருக்கும் வலியை எந்த வார்த்தைகளாலும்Today at 9:14 amAdminஅழகான "கிளிக்ஸ்"Today at 9:08 amAdminஅழகான தெருToday at 8:59 amAdminஉதவி செய்திடுவோம்Today at 8:56 amAdminகொஞ்சம் மாத்திக்கணும்..Today at 8:52 amAdminமுத்ரா திட்டத்தில் எளிதில் கடன் வாங்குவது எப்படி?Yesterday at 10:31 amசார்லஸ் mcவிதவிதமாக "டை" கட்டுவது எப்படி? - காணொளிFri Dec 15, 2017 10:11 amAdminசகோ ரிச்சர்ட் ஆசீர் அவர்களின் சாட்சியை கேளுங்கள்Thu Dec 14, 2017 7:26 pmAdminமூட்டு வலி போக்கும் ஒரே மருந்து Tue Dec 12, 2017 11:39 amசார்லஸ் mcகிறிஸ்துமஸ் பாடல்கள் - 2017Tue Dec 12, 2017 9:25 amAdminமனித இனத்தை அழிக்க இத்தனை இயக்கங்களா?!Tue Dec 12, 2017 9:02 amAdminஇக்காலத்துப் பாடுகள்Tue Dec 12, 2017 8:57 amAdmin"பாவ சஞ்சலத்தை நீக்க...." - பாடல் பிறந்த வரலாறுTue Dec 12, 2017 8:55 amAdmin நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்Tue Dec 12, 2017 8:53 amAdminஉபத்திரவகால சபை - சபையே விழித்தெழுTue Dec 12, 2017 8:25 amசார்லஸ் mcவங்கி சேமிப்புக்கு வரும் ஆபத்து?!Tue Dec 12, 2017 7:49 amசார்லஸ் mcகாலியாக இருக்க வேண்டும்Tue Dec 12, 2017 7:26 amசார்லஸ் mc"கடவுள் நம்முடன் இருந்தால், வேலை கடினமாகாது"Tue Dec 12, 2017 7:20 amசார்லஸ் mcஎன் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!'Sun Dec 10, 2017 6:47 pmAdminமுரண்களை முறிக்கலாமே?Sun Dec 10, 2017 5:42 pmAdminஇந்த இரகசியத்தை நீங்கள் அறியாதிருப்பதால்Sun Dec 10, 2017 5:26 pmAdmin மாம்பழ பாயாசம்Sat Dec 09, 2017 7:53 amAdmin சுவையான சத்தான ஆட்டுக்கால் சூப்.. !!!Sat Dec 09, 2017 7:51 amAdmin'காரத்தோசை...!!!Sat Dec 09, 2017 7:50 amAdmin
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
44 Posts - 59%
Keywords

Who is online?
In total there are 7 users online :: 0 Registered, 0 Hidden and 7 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
December 2017
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
View previous topicGo downView next topic
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16056
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ராண்ட்ஜென் கண்டுபிடித்த எக்ஸ்ரே கதிர்

on Wed Dec 10, 2014 6:23 am

இயற்கை அறிவியலின் அடிப்படையான துறை இயற்பியல். அதில் அணு, மூலக்கூறு ஆகிய அடிப்படையான விஷயங்கள் அலசப்படுகின்றன. எல்லாப் பொருள்களுக்கும் அடிப்படை அணுவே. அணுவின்றி எதுவும் இல்லையே. ஆகவே அந்த அணுவின் அடிப்படைகளை அலசும் அறிவியல் பிரிவுக்கு நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது அதிசயம் அல்ல.
யாருக்கு முதல் நோபல் பரிசை வழங்கலாம் என்று ஆலோசித்தபோது நோபல் குழுவினருடைய மனதில் வந்த பெயர் 1895-ல் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்த வில்ஹெல்ம் கான்ராட் ராண்ட்ஜென். 1901-ம் ஆண்டில் டிசம்பர் 10 அன்று அவர் நோபல் விருதைப் பெற்றுக்கொண்டார். அப்போது அவர் முனிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
ராண்ட்ஜென் கதிர்கள் என அழைக்கப்படும் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்து அவர் இயற்பியல் துறைக்கு ஆற்றிய சேவையைக் கவுரவிக்கும் விதமாக அவருக்கு இயற்பியல் துறையின் முதல் நோபல் விருது அளிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் அவர் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டறிந்தபோது அந்தக் கதிர்கள் மனிதர்களின் சருமத்தையும் துணிகளையும் ஊடுருவும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின. எக்ஸ்ரே குறித்து மனிதர்களிடையே ஒரு மர்மான எதிர்பார்ப்பு உருவாகியது.

1845-ம் ஆண்டு மார்ச் 27 அன்று ஜெர்மனியின் லென்னெப் என்னுமிடத்தில் பிறந்த ராண்ட்ஜென் உலகின் வெளிச்சத்தில் பவனி வந்தவரல்ல. அவருக்கு வெளியுலகத்திற்கு வர நேரமே இருந்ததில்லை. அதிகம் அறியப்படாதவர் அவர். அறிவியல் கருத்தரங்குகளில்கூட அவர் அதிகமாகக் கலந்துகொண்டதில்லை; ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்ததில்லை. எக்ஸ்ரே கதிர்களைக் கண்டறிந்த பின்னரே அவர்மீது ஊடக வெளிச்சம் விழத் தொடங்கியது.

1895 நவம்பர் 8 அன்று அவர் தனது ஆய்வகத்தில், கேதோடு ரே குழாயிலிருந்து எப்படி ஒளி உமிழப்படுகிறது என்ற ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது கேதோடு ரே குழாயிலிருந்து தூரத்தில் உள்ள ஒளிரும் திரையில் ஒரு பளபளப்பு தோன்றியது. அதற்குக் காரணம் கேதோடு கதிர் குழாயிலிருந்து வெளியேறும் ஏதோ ஒரு கதிர் என்று உணர்ந்தார். அதனால் ராண்ட்ஜென் ஆச்சரியத்தில் அப்படியே உறைந்துவிட்டார்.

ஒளிரும் திரையில் பளபளப்பை உருவாக்கும் அந்தக் கண்ணுக்குத் தெரியாத கதிர் எது என்பதைக் கண்டறியும் ஆவலில் பல வாரங்களாக அவர் ஆய்வகத்தை விட்டு வெளியே வரவில்லை. இறுதியில் அதன் காரணம் எக்ஸ்ரே கதிர்களே என்பதைக் கண்டறிந்தார். அவற்றுக்கு அசாதாரணமான ஊடுருவும் தன்மை இருப்பதையும் அந்தக் கதிர்களை போட்டோஎலக்ட்ரிக் தகடுகளில் பதிவுசெய்ய முடியும் என்பதையும் கண்டுபிடித்தார்.

அறியாத எண்ணை எக்ஸ் எனக் குறிப்பிடும் வழக்கம் கணிதத்தில் இருந்தது. எனவே அந்தக் கதிரை எக்ஸ் கதிர் என அவர் அழைத்தார். இப்படி எதிர்பாராதவிதமாக ராண்ட்ஜென் கண்டுபிடித்த எக்ஸ்ரே கதிர் தான் அவருக்கு நோபல் பரிசையே வாங்கிக்கொடுத்தது என்பது ஆச்சரியம் கலந்த உண்மையே.
View previous topicBack to topView next topic
Permissions in this forum:
You cannot reply to topics in this forum