தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
வேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 33%
பார்வையிட்டோர்

Share
Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அதிகரித்த ஏடிஎம் சேவைக் கட்டணம்...சமாளிக்க 10 வழிகள்!

on Tue Nov 04, 2014 9:55 am
ஆர்பிஐ அறிவித்த முக்கிய அறிவிப்புகளால், ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கடந்த நவம்பர் முதல் தேதி முதல் புதிய நெறிமுறைகள் அமலுக்கு வந்தன.
இதனால் ஒருவர், மாதத்துக்கு அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மில் 5 முறையும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் 3 முறையும் ஆக மொத்தம் 8 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதற்குமேல் செல்லும்போது 20 ரூபாய் வரை பயன்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்தச் சூழலை சமாளிக்க 10 வழிகள் இதோ...

1. உங்களுக்கான ஒரு மாத செலவுகளைத் திட்டமிட்டு அதற்கேற்றவாறு பணத்தை எடுத்து சரியாக செலவு செய்யப் பழகுங்கள். இப்படி செய்யும்போது இரண்டு அல்லது மூன்று பரிவர்த்தனைகளுக்கு  மட்டுமே ஏடிஎம் கார்டினை பயன்படுத்தும் நிலையை உருவாக்கிக் கொள்ளலாம்.

2. உங்களால் ஒரு மாதத்துக்கான செலவை முழுமையாக திட்டமிட சிரமமாக இருந்தால், ஒரு வாரத்துக்கு ஒருமுறை என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதையும் நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் முதலில் செய்யுங்கள். 

3. தொலைபேசிக் கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்யுங்கள். ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதன் மூலம் உங்கள் நேரத்தையும் தேவையில்லாமல் ஒரு ஏடிஎம் பயன்பாட்டையும் குறைக்கலாம்.

4. இந்த மாதம் இந்த செலவு மட்டுமே என திட்டமிட்டால், அடிக்கடி ஏடிஎம்மை நாட வேண்டிய அவசியம் இருக்காது.

5. அதிகத் தொகையை எடுக்க நேரிட்டால், வங்கிக்குச் சென்று எடுங்கள். இதன்மூலம் ஏடிஎம் கார்டின் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க முடியும்.

6. காசோலைகளைப் பயன்படுத்த கட்டணம் இல்லை என்பதால், காசோலைகள் ஏற்றுக்கொள்ள கூடிய இடங்களில் காசோலைகளைப் பயன்படுத்துங்கள். 

7. அனைவருக்குமே தற்போது சம்பளம் என்பது பெரும்பாலும் நேரடியாக வங்கி கணக்கில் சேரும்படியுள்ளது. உங்கள் சம்பளத்தில் முதன்மை செலவுகள் என்ன என்பதை உணர்ந்து, அதனை செலவு செய்ய ஒரே நேரத்தில் பணத்தை எடுத்து செலவழிப்பது நல்லது. உதாரணமாக வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், கல்லூரிக் கட்டனம், பஸ் பாஸ் போன்றவற்றை கணக்கிட்டு ஒரேமுறையில் எடுப்பது சிறந்தது.

8. கல்லூரி மாணவர்கள்தான் இதன்மூலம் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதற்கு பெரும்பாலும் இன்டர்நெட் பேங்கிங் வசதி இருக்கும். அதனை பயன்படுத்தி தங்களது தேவைகளையும், பயன்பாட்டு கட்டணங்களையும் குறைக்கலாம்.

9.ஷாப்பிங் செய்யும்போது பணத்துக்குப் பதிலாக டெபிட் / கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துங்கள். பெரிய மால்களில் ஏடிஎம்கள் வைத்திருப்பார்கள். அவற்றில் சென்று பணத்தை எடுத்து மால்களின் பல கடைகளில் செலவு செய்யாமல், ஒரு மாதத்துக்கு எவ்வளவு செலவு செய்வோம் என கணித்து, அந்த தொகைக்கு அந்ததந்த மால்களின் கார்டுகளை பெற்று, அதன்மூலம் ஷாப்பிங்குக்காக பணம் எடுத்து செலவழியும் பயன்பாட்டு கட்டணத்தைத் தவிர்க்க பாருங்கள்.

10. மெட்ரோ நகரங்களில் ஏடிஎம் பயன்பாட்டுக்கு குறைவான வாய்ப்புகள் வழங்கப்படுவதால், நீங்கள் இருக்கும் இடத்தில் அல்லது பயணிக்கும் இடத்தில் மெட்ரோ எல்லைக்குள் அல்லாத ஏடிஎம்களைப் பயன்படுத்தினால் உங்களது வாய்ப்புகளை மிச்சப்படுத்தலாம்.

இந்த பத்து வழிகளை பயன்படுத்தி தேவையில்லாத பயன்பாட்டு கட்டணத்தைக் குறைக்கலாமே!

-ச.ஸ்ரீராம்
avatar
ariyalursam
புதியவர்
புதியவர்
Posts : 23
Join date : 11/03/2013
http://www.freechrismo.wap.sh

Re: அதிகரித்த ஏடிஎம் சேவைக் கட்டணம்...சமாளிக்க 10 வழிகள்!

on Thu Nov 06, 2014 8:56 am
எனக்கு ஒரு கல்லூரி மாணவனிடமிருந்து வந்த whatsapp செய்தி: (மாணவர்களாகிய)நாம் பணம் தேவைப்படும்போது நேரடியாக வங்கிக்கு சென்று வெறும் 100 ரூபாயாக பலமுறை எடுத்து கடுப்பேற்ற வேண்டும். இப்படி பலர் பலமுறை செய்தால் இந்த புதிய திட்டம் விரைவில் வாபஸ் பெறப்படும். மாணவர்களாகிய நம்மால் எதையும் சாதிக்கமுடியும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum